ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

கடவுள் வாழ்த்து

 

 

பதம்

 

1

 

 

வெண்பா

வார்த்தையினா லெல்லாமாய் வார்த்தை மனுவுருவாய்

வார்த்தையே மாங்கிஷத்தில் வந்தது-வார்த்தை நமா

ஞான கருணாகர நராதிப திரியேக நமா

வான ருபி மங்களம் நமா.

 

பல்லவி

மங்கள மங்கள - நமோ நமோ

மங்கள மங்களஞ் - செயா செயா

மங்கள மங்களஞ் - சதானந்தா

மங்கள மங்களம்.

 

சரணங்கள்

1. திங்கள் மேவு வானங்களோடுல

கங்கள் மேவு சீவன்களையுந்

துங்கமா தயை யிலங்கவே செய்து

கனங்களே மிக விளங்கு தெய்வீகா.

மங்

 

2. ஆதி யேவையா டேதமாற நேர்

நீதி யோதிய தாதை சத்திய

வேத போதக நாத தீதவி

வேக ஏக திரித்துவ தேவாதி தேவா.

மங்

 

3. சீருலா வுபகார சிருஷ்டித

பாரா தீத சங்காரா நன்மை

யேருலா வுபதார ஆதி தற்

காரா தயை விழி பாராய் கிருபை கூராய்.

மங்

 

4. ஆதி யந்தமிலா தனந்ததே

வாதி மைந்தனே தாதா தயை

நீத பந்தனம் பூதலந்தனி

லோத வந்த யேசுநாதா பிரசாதா.

மங்

 

5. பூமி யந்தர வான மெண்டிசை

யோர் வணங்கு தேவாதியடர்

நேமியுங் கன பூத மஞ்சவி

சேடம் விண்ட யேசுநாதா பொற்பாதா.

மங்

 

6. ஆய்ந்த வன்பர் கடேர்ந்த புந்தியி

னேர்ந்து கூர்ந்த வானந்தா வருட்

சேர்ந்த செஞ்சுடர்க் காந்தி தற்சுயம்

பானிஸ் பிரித்துச் சாந்தரூப சருவேசா.

மங்

 

7. தேசுலாவிய மேசியா கிறிஸ்

தேசு நாயகர் மீது கன

நேச மெய் விசுவாச நெல்லையின்

வேத நாயகன் பாவ விமோசனா.

மங்

(1802 - வரு.)

 

-----------------------------------

 

2

 

வெண்பா

கண்டருள கண்டர் மொழி கண்டெளிமை கண்டுருவு

கொண்டுரிமை கொண்டடிமை கொண்டுமே-தொண்டடியார்

மாசீர் பெறவந்த மானுவேலே யெனக்கு

னாசீர் வாதந் தந்தருள்.

 

பல்லவி

ஆசீர்வாத மருளியன் பொடு கிருபையதின் படியே யெமை

ஆளுமாளுமையா ஐயையா எமை

ஆளு மாளுமையா.

 

அனுபல்லவி

மாசிலா மரிதரு மேசு நாயக தேவ

வஸ்துவே நசரைப்பதி மேவு கிறிஸ்துவே

வின் மகத்துவ திரித்துவா

தத்தத்தையா மரியிடநல் லோனா தானாதந்திரி

யேவைக் கினித்த கனியின்னா லெரிவானா தந்திரி

சித்திலோன திண்டிடாந்த திடனிட

திரியிலான செவ்வான பரமம்.

ஆசீர்

 

சரணங்கள்

1. ஆத முடனவனின் மாது மகிழ்ந்து தின்ற

ஆலவிடக் கனியினாலுறு மிடர் கெட

வேத மிலாத அனாதி கிருபையாக

ஈட்ட மனது கூடியரு நெறி வளமைகள்

காட்டி மனுவை நாடியொரு திரு மகனையு

மோதிக் கொடுத்தபடி நீதிக்குப் பிணை சொலி

யோங்கி வினை நீங்கி நெறி

தாங்கிய தவிதிரா சாங்க மதுயரவே

வேத நினைத்து நரர் சாதியனைத்து முய்ய

மிகத் திறத்துடன் வானவர் பாடிட

அகத்து நற்கலை ஞானிகடேடிட

மெத்தவு முத்தம விதமுடன் வருதிவிய

மனு மகனே யுனின் - தத்தத்தை -

ஆசீர்

 

2.அந்த முடனமலன் மைந்தன் மரியுதரத்

தாய்ந்த தவவிஸ் பிரித்துச் சாந்து வினாலுருவாய்

வந்து விடையிடை பிறந்த பொழுது தூதர்

மகிழ்ந்து நடனமாடி (தெய்த்தீங்கணத் தோமென)

விணி லதி சய மொடு

புகழ்ந்து சங்கீதம் பாடித் திருமகனிணையடி

சிந்தித் ததிசய மிகுந்திட் டெக்களிப் போடு

தீட்டி நிலை காட்டி யருள்

பூட்டி யுமமலர் விணாட்டிடை யேகவே

சந்தித் திடையர் களிசைந்திட்டுரிமை யாகச்

சாத்திரத்திரி மாத வருந் தொழத்

தோத்திரச் செப வேதியருந் தொழத்

தற்பர அற்புத தயவுடன் வருமொரு

சிறு மதலையே யுனின் - தத்தத்தை -

ஆசீர்

 

3.உதித்த வெட்டாந் தினத்தில் விதித்து சுன்னத்துப் பெற்று

ஒற்றைச் சோட்டுப் புறாவை நற்றிக் கோவிற் களித்துக்

கதித்த சிமியோனன்னா குதித்துச் சோபனஞ் சொல்லக்

காட்சியளித்து மேவிப் பதினிரு வயதுற

மாட்சி மிகுத்து சாவிப் பரிசெயர் களரியை

மதித்து மறைகள் கொடு செயித்து யோர்தானி லேயோ

வானட்சய ஞானத் திறமை ஸ்நா

னத்தையு மானத் தொடு செய

மிதித்த அலகை தலை சிதைத்து வனத்திலேகி

மீண்டு மற்புதமும் மறையும் பனி

மாண்டு பொற்குருசின் கொலையு நனி

விரணத் திரு மரணத் திருவினை கெடவுயிருட

னெழு நசரையனே நின் - தத்தத்தை -

ஆசீர்

 

4. ஞாயிறு வார மதிற்றூய சுடரொளிவாய்

நானில மதிரவும் வான வரிருவர்கள்

மாயமிலா மலர் காய மதிலிருந்து

வந்து கல்லரை நீட சிறையிடு பகைஞர் ப

யந்து சில்லறையோட மரிமகதலை யவன்

நேயமுடனே கண்டன் பாயக மகிழவு

நேர்ந்து களிகூர்ந்து வினைதீர்ந்து வலர்

சேர்ந்தடி தொழவே

ஞாய னெழுந்து வேதநாயகன் பதஞ் சொலி

நடித்திடச் சுர மண்டல மீறியு

மடித்திடப் பரமண்டல மேறியு

நற்திற முற்றினி நடுவிட வருமுய

ரிசறே லினதி பனுன் - தத்தத்தை -

ஆசீர்

(1802 - வரு.)

-----------------------------------

 

3

 

வெண்பா

வேதாட் சரங்களெல்லா மெய்யென் றறிந்துணர்ந்து

வாதாடா துன்னை வசனிக்க-தாதா

கருணாகரமே கா சரணம்

ஒருதா விண்ணாள் குருபதி.

 

பல்லவி

ஒருதா விண்ணாள் குருபதி சரணம்

உலாச சுயாதிப திரி சூரிய கிரணம்

வருதா பரதரணம் குல ஸ்திரி

மரிதாய் காழ் சரணம் தயாளோ.

 

சரணங்கள்

1.கருணாகர மாகுண பதி சரணம்

காவாதி யேவை யிஸ்திரியாந்த கரணம்

பரமே சீயோனரணம் நித்திய

பவனாசா சரணம் தயாளோ

ஒரு

 

2. நசரேத் தழகா நரபதி சரணம்

நடுநிலை தவறா தருள் செயுந் திரணம்

நிசமாய் வரு தரணம் இரட்சியும்

நிறைவா கரசரணம் தயாளோ

ஒரு

 

3. கருத்தா திருத்தாள் சுரர்பணி நித்தா

கானானு தேசாதிப பரிசுத்தா

வருத்தா மல்க்கா தரணம் கிறிஸ்துவே

மனுவேல் மன்னா சரணம் தயாளோ

ஒரு

 

4.வெல்லைமா நகராதி தயாகன் சீர்

நெல்லையம்பதி வேத நாயகன்பா

விமலாகன தரணஞ் சத்துரு

வினைதீர் தின சரணம் தயாளோ

ஒரு

(1849 - வரு.)

-----------------------------------

 

கிறிஸ்துவின் வருகையின் பாட்டுகள்

 

4

 

வெண்பா

கருத்தர் வருகை களி கூருங்காலம்

பெருத்த பிதாவின் கிருபை-வுருத்தாக

ஆர்த்த வுலக மனைத்தும் படைத்த திரு

வார்த்தை மனுடவதாரம்.

 

(இராகம்: சஹானா)

(சாப்பு தாளம்)

 

பல்லவி

மனுடனானதே வார்த்தையும்

மனுடனானதே

 

அனுபல்லவி

மனுடனாதிய தனுட முழுமர

பினுடபவ மறத்தனுட கிருபையால்

மனு

 

சரணங்கள்

1.அடவியதினரர் கெட வினைய மிடு

கொடிய அரவுடபட முடியுடையப்

புடவிய திலதி திட மொடுயர் தவி

துடகுல மதனிடை கடவுடிரு முதல்

மனு

 

2. ஆதியிருந்தத னாதியுடனிருந்

தோதுமறை பரஞ்சோதியென விருந்

தேதும் வனைந்தது சீவனிருந்தது

தீதும் விடிந்தது வேத முடிந்தது

மனு

 

3. தீட்டி முனிவர்க ளேட்டி லெழுதிய

பாட்டின் முறைமன நாட்ட முடனருள்

காட்டி நரர்சிறை மீட்டுவளமை பா

ராட்ட வுலகில் விணாட்டினொரு பொருள்

மனு

 

4. விருக்கத்தடர் வினை நெருக்கத் துயர்படு

நரர்க்குத் தயைமிகு முருக்கத் திருவுளத்

திரக்கத் துடனருள் சுரக்கக் கருணைகள்

பெருக்கத் திவியபர மருக்குப் பிணைசொலி

மனு

 

5. சாதியாவின் மன்றாட்டு நேயகம்

ஆதியானருட் காட்டு தாயகம்

பாதமேகதி சூட்டு மீயகம்

வேத நாயகன் பாட்டு நாயகம்

மனு

(1835 - வரு.)

-----------------------------------

 

5

 

விருத்தம்

சொல்லுதற்கரிய நேசன் தூய சற்குண விலாசன்

வல்லமைக் குரு கிலேசன் மகிமை ஞானப் பிரகாசன்

அல்லுறும் பாவ நாசன் அன்பர் களிதை யவாசன்

பல்லுயிர் தொழும் சருவேசன் பரம ராஜன் வந்தானே.

 

(இராகம்: தோடி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

இராஜனாம் பரம ராசன் தவிது மகா

இராஜன் பதிக்கு வந்தானே

 

அனுபல்லவி

வாசகத்தின்படி யுலாசமாக நீச

வாகன மேற் கொண்டு

சிநேகச் சீயோனுக் கென்று.

இராச

 

சரணங்கள்

1.அண்டர்கள் சேனையும் மிண்டர்கள் தானையு

மண்டிய புத்திரருந் தொண்டர் சமுத்திரமும்

பெண்டுகள் முழக்கமு மெண்டிசையு மதிரக்

கண்டகர் மனங்க லங்க ஆதி செய்

பண்டு வினையு மலங்கக்

கொண்டு வந்து சாஸ்திரிகள் காணிக்கை கொடுக்கக்

கோவர்த்தனர்கள் கும்புகூடி வந்தடுக்கத்

தெண்டனென்று பனிரெண்டு சீடருரை

விண்டு வேதமோத சத்திய போத

சற்பிரசாத இயேசு நாத

இராச

 

2. பெத்தலகேஞ்சிறந்து சித்துருவாய்ப் பிறந்து

முத்தி வழியைக் காட்டி சுத்தக் கிருபைப் பாராட்டி

மெத்தமகிமை நீட நித்தியானந்த சந்தோட

வெற்றிப் பிரவடீகராகச் சமஸ்தமூ

முற்றுமுடித்துச் சிநேக

சத்திய பராபரனின் உத்தமம் விளங்கத்

தவிதின் குமாரனெனச் சகலரும் வணங்க

கர்த்தருடைய நாமத்தில் வருகிற

கிறிஸ்துவென்று வாழ்த்தப் புகழ் சாற்ற

எமைத் தேற்றக் கரையேற்ற

இராச

 

3. கன்னியர் சீயோனே நின்னுரிமைக் கோனே

பொன் மரிமீதேறி உன்னையன்பாய்க் கோறி

துன்னி வருகுதெனச் சொன்ன நெறிப் பிரகாரம்

முன்னும் பின்னும் போறவார கும்புகளுன்

நன்னெறிச் சீடருஞ் சேர

வன்னப் பட்டாடைகள் வழி எங்கும் விரிக்க

மரத்தின் கிளைகளைத் தறித்தெங்குந் தெளிக்க

உன்னதத்தி லோசியன்னா தவிதிசரேல்

மன்னாவென்று பாடப் பிள்ளைகள் கூடப்

புகழ்நீடக் கொண்டாட

இராச

 

4. ஆதி வினைகளற யூதர் பதிகள் பெறச்

சாதியெலா மீடேற நீதிகள் நிறைவேற

தீதலகை களோட மாதவங்கள் கைகூட

தாதையர்க்குச் சங்கீர்த்தனமு மகிமையும்

ஓது செபமுந் தோத்திரமும்

போதவனாதி யிலிப்போதும் எப்போதுமாக

புகழ்ச்சி மகிழ்ச்சியு முண்டாகிப் பிரஸ்தாபமாக

நூதனக் கவிசொல் வேத நாயகனும்

பாதத்தணுகி வாழ்கத் திருவுளமாகத்

திரியேகச் சுவா பீக

இராச

(1831 - வரு.)

-----------------------------------

 

6

 

விருத்தம்

ஆரிலும் வல்லான் வானத் தடங்கலும் படைத்த நல்லான்

காரியந் தமக்கொன்றில்லான் காரணக் காட்சிக் கல்லான்

வீரியக் கிருபைச் சொல்லான் விண்ணவர்க் கொளிறு மெல்லான்

பாரினிற் படர்ந்த வில்லான் பரமநாயகன் வந்தானே.

 

(இராகம்: ஆனந்தபைரவி)

(ரூபகம்)

 

பல்லவி

பரம நாயகர் கருணையாக இப்

பாரில் வந்தாரிதோ பாரும்-இவர்

பத்தா யேசு கிறிஸ்தான மொரு

கர்த்தா வென்றடி சேரும்

 

அனுபல்லவி

சுரர்கள் சேனைகள்

(5 தடவை)

அருமையாய்த் தொழும்

பெருமையின் சருவேசன் கன

நேசன் கிருபை வாசன் இயேசு

ராசாதி ராசன்.

பரம

 

சரணங்கள்

1.விண்டல்லோ இவராசன் மறை

இரண்டல்லோ தரும் வேதம்

வேலல்லோ பெயர் சீயோன் குமாரிக்கு

மாலல்லோ திருப்பாதம் கற்

கண்டல்லோ மொழி தாவி தேந்திரன்

பண்டல்லோ சொன்ன கீதம்

காத லான பாவிகளுக் கெல்லாம்

போதரவான பிரசாதம்

காயாமல் திரு வுளம் காயாமல்

அற நெறி சாயாமல் நரர்குலம்

மாயா மலருளோயாமற் பெய்ய

பரம

 

2. தந்தை யனாதி பிதாவுக் கோரே யொரு

சொந்தமான குமாரன் கன

சல்லா பத்தன வுல்லாசத் துரை

யெல்லாத்துக் கதிகாரன்

முந்தின மாந்தர் நிற்பந்த மெலாமறச்

சுந்தர மேவிய தீரன் அந்த

முற் பிதாக்களெல்லா முற்பனமாய்ச் சொன்ன

நற் பரம வுபகாரன்

முத்தாமே சீவரத்தின முத்தாமே

இஸ்திரியுட வித்தாமே வேத கற்பனைப்

பத்தாமே நம் சம்பத்தாமே யோவா

பரம

 

3. நல்லோராகிலும் பொல்லா தோராகிலும்

எல்லாருமாய் வந்து கூடும் - பல

நாட்டுச் சனங்களும் கூட்டங்களாய் வந்து

ஞானப் பாட்டுகளைப் பாடும்

கல்லா மனத்தையு மில்லாத் தனத்தையுஞ்

சொல்லாமலே விட்டுப் போடும்-மெத்த

காத்திரமாய் வேத சாஸ்திரி நாட்டிய

தோத்திரங்களையுங் கொண்டாடுங்

காட்டாரே பிரபஞ்சக் காட்டாரே

உங்கள் செபம் கேட்டாரே தள்ளிப்போட

மாட்டாரே யுமை மீட்டாரே யோவா.

பரம

(1827 - வரு.)

-----------------------------------

 

7

 

வெண்பா

அனவாதகால மனாதிபிதா வோங்க

மனுடரெலா மகிழ்ந்து வாழ்க-கனமே

தினமே பெருகத் திருவுளமா யிங்கே

யெனதரசே வரவேணும்.

 

(இராகம்: மனோகரி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வரவேணும் எனதரசே

மனு வேலிசரேல் சிரசே

 

அனுபல்லவி

அருணோதய வொளிர் பிரகாசா

அசரீரி யொரே சருவேசா

வர

 

சரணங்கள்

1.வேதா கருணாகரா மெய்யான பராபரா

ஆதார நிராதரா அன்பான சகோதரா

தாதா வுந்தாய் சகலமு நீயே

நாதா வுந்தா பரநல்குவாயே

வர

 

2. படியோர் பவமோசனா பரலோக சிம்மாசனா

முடியாதருள் போசனா முதன்மாமறை வாசனா

விடையார் குடிலிடை மேவி யெழுந்தாய்

விண்ணவரடி தொழு மேன்மையி னெந்தாய்

வர

 

3. வானோர்தொழும் நாதனே மறையாகம போதனே

கானாவின தீதனே கலிலேய வினோதனே

ஞானகரமே நடுநிலை யோவா

நண்பாவுனத நன்மையின் மகாதேவா

வர

 

4. வேதநாயகன் பாட்டிலே மேசியாவொரு காட்டிலே

யூதேயாவெனும் நாட்டிலே யூகமாய் விடை வீட்டிலே

நாதனாயெழும் நம் பெருமானே

நம்பினர் தொழு சரணந் தருகோனே

வர

(1805 - வரு.)

-----------------------------------

 

8

 

வெண்பா

வருத்தப் படுகின்றோம் வன்கவலை மெத்தப்

பெருத்த கருணைப்பிதாவே திருக்கடைக்கண்

பாரீர் பாரீரேழைப் பாவிகளை யீடேற்ற

வாரீர் வாரீரே சையா.

 

(இராகம்: காப்பி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வாரீரே வாரீரேசையா - ஒரே

பால துங்க சீவி.

சரணங்கள்

1.சீருய ரட்சக இஸ்திரி வித்தா

சருவ சீவியர் கர்த்தா

பரம சிந்தை காளாக்கிக் காக்கா

சரணா விந்தத் தாதா பால துங்கசீவி

வாரீ

 

2. ஓ சருவேசுர வார்த்தை நாதா

பரம போதக நீதா

நரக செந்துக்கே தீர்ப்படாத்தோ

நடுவாய் நின்ற ராசாபால துங்கசீவி

வாரீ

 

3. பாதருள் பாதருளாற்றும் நேயா

சிதறு மாடுகட் காயா

கடுக மந்தைக்கே சேர்த்துள் ளாக்கே

மனுவே லெங்கள் ராசா பால துங்கசீவி

வாரீ

 

4. தந்திர மந்திர சற்ப நாசா

தவிது ராச குலேசா

திருநெலன் சொற்பா வாழ்த்துக் கேற்றோய்

அருளானந்த யோவா பால துங்கசீவி

வாரீ

(1851 - வரு.)

-----------------------------------

 

9

 

வெண்பா

மெத்தனவராயுனது மேன்மை கிருஸ்தாசன்

கத்த பத்திலேறி யுன்னைக் காணவே பற்றியிந்த

மார்க்கம் வந்தார் சீயோன் மகளே திருப்பவனி

பார்க்கலாம் வாரும் பரிந்து.

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பவனி பார்க்கலா மாதே சாலேம்

பதிக்கு வாருமிப் போதே-கிறிஸ்தின்

 

அனுபல்லவி

புவனம் யாவும் படைத்தவன் தந்திடும்

பூரணக்கிருபைச் சோதி சிறந்திடும்

கவனமாய்ச் சீயோன் மாது பணிந்திடும்

காதற் கிறிஸ்தாதிப் பிரவ

டீகத் துரையார் வந்திடும்

பவனி

 

சரணங்கள்

1.தீர்க்கதரிசி சகரியாத் தீட்டின

திட்டப் பிரகாரமாய்த்தானே இரண்டு

சித்திரக் கரத்தின் மறியின் மேலேறித்

திருவுளமாக நங்கோனே

பார்க்கு ளெருசலை யூர்க்குளப் போஸ்தலர்

பன்னிரு பேருடன் மானே-கன

பக்தியுடனோசனா வென்று கும்புகள்

துத்தியஞ் சொல்ல வந்தானே

ஆர்க்குங் கிடையாத ஆனந்த காட்சி

ஆற்றுமப் பெண்ணுக் கினி யென்னதாட்சி

மார்க்கமே மன வாஞ்சைக்கித மேயெனின்

மாசற் சனி யென் றோதிய

நேசக் கனியே சென்று முன்.

பவனி

 

2. அந்தமதாய் விருட்சக் கிளைகள் பிடித்

தாரண கீதங்கள் நீடவே - மிக

அட்சய ரோடடர்ந்த திரட் கும்புகள்

வஸ்திரங்களைப் பரவிப் போடவே

விந்தையாய்த் தாவீதின் மைந்தனே ரட்சியும்

என்று சனங்கள் கொண்டாடவே யேசு

மேசியா ஓசியனா வென்று பிள்ளைகள்

ஆசையுடன் குதித் தாடவே

இந்தப் பிரகாரம் புறப்பட்டு வந்தார்

இரட்சிப் பனைத்தையுங் கை நீட்டித் தந்தார்

சந்தோ டமாயிற்று விந்தைக் குயிலே நீ

சற்றுந் தெரியா திங்கே

முற்றும் பிரியாதங்கே.

பவனி

 

3. வேடிக்கையாகவே சால மோன் கட்டின

மேன்மை தேவாலயம் பாரும் அங்கு

மீண்டும் கிறிஸ்து வுலாவின தாம்பிர

மாண்ட மண்டபமு நேருங்

கூடிப் பின் கீத ரோனாற்றுக் கப்பாற் கொல்க

தாமலைச் சார் பினிற் சேரும் ஐந்து

கோல மண்டபங்கள் கூடும் பெதஸ்தாக்

குளத்திற் குளித் தன்பு கூரும்

நீடும் வேத நாயகன் தமிழ் பாடும்

நெஞ்ச முருகிக் கிறிஸ்துவைத் தேடும்

பாடு மரணமும் வாதையும் சீயோனே

பட்டு தவர்க் குன்றானை

விட்டு துயிருந்தானே.

பவனி

 

-----------------------------------

 

10

 

விருத்தம்

பெருமை யினுலகத் தாரோ

பேதகம் பேசு வாரோ

கருமை வல்லிருண் மாகாரோ

கடவுளர் கை விட்டாரோ

அருமை ரட்சகர் வாராரோ

வானந்த சுகந் தாராரோ

வோரு மையின் றேழிமாரோ

வுண்மை யொன்றே சொல்வீரோ.

 

(இராகம்: கேதாரகௌளம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

அருமை ரட்சகர் வருவாரோ எனக்

கனந்த சுகம் தருவாரோ

திருவுளமே பெருவளமே-

தினதுதியே எனை மதியே-என்

 

சரணங்கள்

1.இன்பமில்லா இருள்வாங்க அவர்

இருகையினா லெனைத்தாங்க

துன்பமெல்லாம் விட்டு நீங்க சுப

சோபனமாய் நலமோங்கத்

துணைபுரிந்து பிணைபரிந்து

துயர் பிரிந்து என்பெயர் தெரிந்து.

என் அரு

 

2. முத்தமிட்டென்னை அணைத்தாற்ற

என்முழு இருதயத்தையும் தேற்ற

நித்தம் அவர் பதத்தைப் போற்ற என்

நெஞ்சின் கவலையெல்லாம் மாற்ற

நினை வொடுங்கி மனமடங்கி

நினையுணர்ந்து எனை மணர்ந்து.

என் அரு

 

3. ஆதி வினை யெல்லாம் நீக்கி எனை

ஆனந்த சந்தோடமாக்கி

வேத நாயகன் கவிநோக்கி நின்

மேலான நன்மைக் குள்ளாக்கி

மிக யிகழ்ந்து அக மகிழ்ந்து

மிகப் புகழ்ந்து சுகத்து கந்து.

என் அரு

 

-----------------------------------

 

11

 

விருத்தம்

அந்தகால மேகா சனத் தெழுந்திமையோர் சூழ்க

சுந்தரத் தேழாந் தூதன் றெனிக்கு மெக்காளத்தோடே

மைந்தரை யெழுப்பி ஞாயத் தீர்பிட மகத்துவத் தொன்ற

மெந்தையார் திருக்குமாரன் யேசுநாயகன் வந்தானே.

 

(இராகம்: காப்பி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வந்தானே தந்தைப் பிதாவின்

சுந்தர மைந்தனே

 

அனுபல்லவி

அந்தமாயுருவங் கொண்டு அன்புடன் சீயோனைக்கண்டு

விந்தையில் சல்லாபம் விண்டு மீண்டிரட்சித் தாள வென்று

வந்

 

சரணங்கள்

1.அங்கியு மார் பருகில் பொற்கச் சையுங்கட்டி

அட்சய தேவத் திரவிய ஆரணங்கிட்டி

துங்கமாய் கரத்தில் வான ராட்சிய செங்கோலைநீட்டிச்

சோதிப் பிரகாச சீவரத்தின கிரீடம் சூட்டி.

வந்

 

2. அக்கினிக் கொழுந்த டவாய் கண்களெரிக்க

ஆதித்த னெனவே முகப் பிரவை விரிக்க

மிக்க சிரத்தின் ரோமம் பஞ்சினும் வெண்மை தெரிக்க

மேன்மை யினெக் காளங்கள் கொண்டெழு தூதர் ஆர்ப்பரிக்க.

வந்

 

3. காயும் சொகு சாவுக் கொத்த கால்களிலங்க

கரத்தினிலே எழு நட்சத்திரங்களிலங்க

வாயிலிருந் திருபுறமும் கூர்மைப்பட்டயம் துலங்க

வாருதிச் சலத்தொலியின் வார்த்தை யாலண்டம் குலுங்க.

வந்

 

4. வீரியத்தோடேமேக பத்திராசனத் தெட்டி

மீண்டுலகை யாண்ட வேதனாட்டுக் குட்டி

காரியத்தோடே சீயோன் குமாரியைக் கல்யாணங்கட்டி

கனிந்து கனிந்தூழி யூழி வாழ்ந்திருக்கக் கெட்டி கெட்டி.

வந்

 

5. ஆடுகள் கிடாய்களை வேறாக வடுக்க

ஆக்க வேதநாயகனும் பாக்கள் தொடுக்க

நீடு முலகத்தை ஞாயந் தீர்த்து நிரையம் விடுக்க

நீதிமான்கள் யாவருக்கும் நித்திய சீவனைக்கொடுக்க.

வந்

 

-----------------------------------

 

12

 

வெண்பா

சேடியரேயந்தோ செருசலேம் பட்டணத்துக்

கோடியுங்கள் வேந்தனுதித்தார்-என்றே நீடித்

திட்டமாக முன்சென்று சீயோன் குமாரிக்

கடவாகச் சொல்லுங்கோ மின்.

 

பல்லவி

திடமாய் முன்னாகச் செல்லுங்கோ

செய்திகளெல்லாம்

சீயோன் மகட்குச் சொல்லுங்கோ.

 

அனுபல்லவி

புடவியனைத்தும் மீட்கக்

கடவுளுதித்தா ரென்றிங்

குடனே யெருசலையினிடம் நீர் சேடியரோடி.

திட

 

சரணங்கள்

1.சங்கை வளங்கள் காட்டி பாவிகளுக்

கிங்கிதக் கிருபைக் கைநீட்டித்

துங்கன்றவிது ராசன் வங்கிஷந்தழைக்க வுல

கெங்குஞ் செழிக்க வந்தார் உங்களரசனென்று.

திட

 

2. மாகனத் தோடங்கனேரண்டு நிசமறி

வாகனத் திலேறிக் கொண்டு

ஆகமத்தின் படியுனக்காக மெத்தனவுள்ளோராய்

ஏக தத்துவக் குமாரன் றாகமுற்றெழுந்தாரென்று.

திட

 

3. வேதாளத்தையு மாட்டி அதிநரக

பாதாளத்தையும் பூட்டி

ஆதாங் குலத்தை நாட்டித் தீதாம் பாவத்தை வாட்டி

ஏதோ தயை பாராட்டி

யீதோ வந்தாரென் றீட்டி.

திட

 

4. மோட்ச வாசலைத் திறந்தார் முடிவில்லாத

மாட்சிமை யாகச் சிறத்தார்

காட்சி பெறவே யுன்னைப் பூச்சிய மண முடிக்க

ஆச்சரியமாய் வந்தார் சாட்சி நாங்களே யென்று.

திட

 

5. விந்தைக் கீதங்கள் நீடி வேதநாயகன்

சந்தப் பதங்கள் பாடி

அந்தத்துட னெழுந்த சொந்தத்துரையைக் கண்டு

சந்திப்பதற்கு வாவுன் சிந்தை கலங்காய் என்று.

திட

 

-----------------------------------

 

Table of contents

previous page start next page