ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

வருஷப்பிறப்பின் பாட்டுகள்

 

96

 

(இராகம்: காப்பி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தயை மிகவே அதிசயமாகவே ஓ

சருவ வல்லப பரன் நரனானார்.

 

சரணங்கள்

1.நியமித்துமுனயனுரைத்து

நிருபித்த சுருதியை ஸ்திரப்படுத்த

-தயை

 

2. தையலே வையால் பையவே வந்த

சதிவினை முனை யறக்கதியருள

- தயை

 

3. பெத்தலேகேமில் கர்த்தன் மனுவேல்

பிள்ளையா யெம்மல்லல் கெடச் சொல்லத் தொலையா

- தயை

 

4. முதலுமில்லான் கடையுமில்லான் யாம்

முதல் பெற அனையிடம் அமுதுண்கிறான்

- தயை

 

5. பத்தனெலியா நித்த மொலியா

பதஞ்சொலி இறைஞ்சவும் மனஞ் சகித்து

- தயை

 

-----------------------------------

 

97

 

வெண்பா

சலியாதே மெத்தத் தவியாதே யோடி

அலையாதே யஞ்சாதே யார்க்கு-மலையாதே

நெஞ்சமே யிப்படி நம்மை வகுத்தவனே

தஞ்சமே சஞ்சலம் வேண்டாம்.

 

பல்லவி

மலையாதே நெஞ்சமே யிப்படி நம்மை

வகுத்தவனே தஞ்சமே

 

அனுபல்லவி

அலையாதருள் மந்திர கலையாகம சுந்திர

அருத்தப் பண் கருத்தர்க் கென்

றுருத்திற் கொண்டிருத்திக் கொள்

- மலை

 

சரணங்கள்

1.கருத்தர் கட்டுவதல்லோ வீடு நரர்

கட்டுங் கிரியைகள் வீண் பாடு

வருத்தப் படுவதென்ன கேடு பேயின்

மயக்க மெல்லாம் விட்டுப் போடு

தரித் திரத் திரளிக் கட்டுப் பெருத்தக் கவலைப்பட்டு

சலியாதிரு நலியாதிரு தந்தை யார் சுதன் வந்த நாளிது

- மலை

 

2. எண்ணத் தினா லென்ன கூடுந் தெய்வ

மிட்ட தல்லோ வந்து நீடும்

மண்ணைச் சத மென் றெண்ணிவாடும் மக்கள்

மனதிற் றுயரம் வந்து மூடுங்

கண்ணைத் திறந்து நோக்கு விண்ணைச் சிறந்து ளாக்கு

கருத்தா யிருவுருத் தாயிரு

கருத்த ரானவ ரொருத்த ரே துணை

- மலை

 

3. என்ன கவலைப்பட்டும் நஷ்டமே கிறிஸ்

தேசு பிறந்த துன்ன திஷ்டமே

யுன்ன தன் பண்ணின திட்டமே யுனக்

கொழுங்குப் பிரமாணத் தின் சட்டமே

பின்னப்பட்டுலையாதே சின்னப் பட்டலையாதே

பெருத்த நாளிது கருத்தர் நாளிது

பெலப்பாயிரு கெலிப்பாயிரு

- மலை

 

4. காலம் நிறை வேறின போது யேசு

கருத்தர் வந்தா ருண்மை யீது

ஆலக் கொடுஞ் சற்பத்தின் றீது முற்று

மழிந்து தழிந்து ததின் சூது

சாலத் தவத்திற் செல்லு மூலச் செபத்தைச் சொல்லு

சத்தியத் திரிதத்துவத் திவிய

நித்தியப் பரம வஸ்துவைத் துதி

- மலை

 

5. சத்துரு ப்பேய் விழுந்தானே யேசு

சாமி வெற்றி தருங் கோனே

மெத்தக் கிருபையின் சீமானே கவி

வேதநாயகன் சொன்னானே

பத்தருக் குருக்கம் வைத்ததிரு விரக்கம்

படியுற்றது மிடியற்றது

பாவமற்றது சாபமற்றது

- மலை

(1832-வரு)

-----------------------------------

 

98

 

வெண்பா

ஆண்டாண்டு தோறு மகா அற்புதமாய் காப்பாற்றி

மீண்டா தரித் திரக்க வெள்ளமே-நீண்டதினால்

மாலையிலும் காலையிலும் மற்றையிலும் ஏசு மனு

வேலை மறவாதே மனமே.

 

(இராகம்: காம்போதி)

(அடதாள சாப்பு)

 

பல்லவி

மறவாதே மனமே தேவ சுதனை

மறவாதே மனமே ஒரு பொழுதும் மறவாதே மனமே

 

சரணங்கள்

1.திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து

அறமதாகச் செய்த ஆதிசுதன் தயவை

- மற

 

2. விண்ணின் வாழ்வும் அதின் மேன்மை யனைத்தும் விட்டு

மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை

- மற

 

3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ்க

மட்டில்லாத பரன் மனுஷனான தயவை

- மற

 

4. ஆன பொரு ளனைத்தும் அமைத்துக் காத்தருளும்

வான ராசன் மண்ணில் வந்த சினேகிதத்தை

- மற

 

5. வல்ல பரம சுதன் மாட்டுக் கொட்டிலுக்குள்

புல்லின் மேற் பிறந்த புதுமை தனை யெந்நாளும்

- மற

 

6. கந்தைத் துணியால் சுற்றி கடவுள் முன் னணைக்குள்

நிந்தையாக வைக்கப்பட்ட நிலமை தன்னை

- மற

 

7. அடிமை வேடம் கொண்டனாதிக்கும் நரர்க்கும்

நடுவில் நின்ற யேசு ராச நேசந்தன்னை

- மற

 

8. தேவ கோபம் நடுத் தீர்வை சாபம் நித்திய

சாவு நரகத்தையும் தவிர்த்த கிறிஸ்து வேந்தை

- மற

 

9. ஆவலாகப் பேயின் அடிமைத் தனத்தினின்று

பாவிகளை ரட்சிக்கப் பரம சுதன் வந்ததை

- மற

 

10. காவில் மனுடர் செய்தகன் மவினையை நீக்கிச்

சீவனளிக்க வந்த தேவ பாலகனை

- மற

 

11. கெட்ட பாவியுனைக் கிறிஸ்து மீட்டுக் கொண்ட

மட்டில் லாத் தயவை மரண மரண மட்டும்

- மற

 

12. நீண்ட துன்மையாவும் நீக்கிச் சுகமளித்திவ்

வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும்

- மற

 

13. நித்தம் நித்தம்செய்த நிலையில்லா பவங்கள்

அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை

- மற

 

14. வருஷம் வருஷம் தோறு மறுத்துந் தமதிரக்கம்

பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்கிரகத்தை

- மற

 

15. அன்னை வயிற்றி லுருவாக அமைத்துக் கர்த்தன்

பின்னும் பின்னு முனைப் பேணிச் செய்த தயவை

- மற

 

16. தன் மையான வேத நாயகன் றமிழ்க்கு

நன்மை தருகும் ஏசு நாதர் திரு முகத்தை

- மற

(1810-வரு)

-----------------------------------

 

99

 

வெண்பா

கோடியோ ஆயிரமோ கூற முடியாது னருள்

நீடுங் கிருபை நிரந்தரா-மூடனியான்

ஆ இந்த நன்ற தறியாத தொன் றெனக் குண்

டா வந்தடிமை கொள்ளையா.

 

(இராகம்: சங்கராபரணம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஆ இந்த நன்று யானறியாத தொன்று

 

சரணங்கள்

1.கோவிந்தர்கள் போற்ற மாட்டுக் கொட்டிலுக்குள்ளே சிறந்து

மாவிந்தைய தாய்ப் பரனின் மைந்தன் மனுவான செயல்

- ஆ

 

2. சிந்தை மிகத் தேற நிர்ப்பந்த மெல்லாம் மாற

சொந்தமாகக் கூறத் துயராறக் கரை யேறச் செய்த

- ஆ

 

3. பத்தமில்லா பாதகனைச் சித்தமுடனே இது நாள்

வைத் தளித்த மாதயவை எத்தனைய தென்று சொல்வேன்

- ஆ

 

4. அன்னையிடத் தென்னை யமைத்தன்று முதல் நீ செய் தயைக்

கென்ன பலம் என்ன நலம் என்ன உமக்கீடு சுவாமி

- ஆ

 

5. அநேக நேகமாக அற்புத மிஞ்சுவி வேகச்

சிநேகம் வைத்த கரிசித்த பராமரித்த

- ஆ

 

6. வேதநாயகன் பாட விண்ணவர் வானின்றாட

ஆதி செய்வினை யோட அருள் நீடக் கைகூடச் செய்த

- ஆ

(1814-வரு)

-----------------------------------

 

100

 

வெண்பா

பாவிகளை மீட்க வென்றே பாரி லவதரித்த

தேவபிதாவின் திருமகனே-பூவுலகில்

ஆதார மற்ற அடிமைக் கிரங்குவாய்

வேதா தருணமிது.

 

(இராகம்:இந்துஸ்தானி)

(அடதாளசாப்பு)

 

பல்லவி

தருண மிதுவே கிருபை கூரும்

விழிபாரும் பதம் தாரும் தாரும்

 

சரணங்கள்

1.கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா

அருமை ரட்சகரேசு நாதா உல

கனைத்தும் வணங்கும் சத்திய வேதா உந்தன்

அடியர்க்கருளும் திருப்பாதா சற்பிரசாதா நீதா

- தரு

 

2. கர்ப்பு மரிவயிற்றிலுற்ப வித்துப் பிறந்த

கருத்தவியமே ஏசுராஜா பரி

சுத்த சத்திய உபதேசா எனைக்

கடாட்சித் தருளும் சருவேசா கிருபை வாசா நேசா

- தரு

 

3. வானத் திருந்து வந்த ஞானத் தொளிர்சிறந்த

மகிமைப் பிதாவின் திருப்பாலா ஆதி

மைந்தர்க் கிரங்கும் அனுகூலா கன

விந்தைக்கருணை மனுவேலா மெய்நூலா சீலா

- தரு

 

4. அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலைகுலைந்து

அலகைப் படுகுழியில் வீழ்ந்து தாழ்ந்து

அஞ்சி அஞ்சி நலிந்தேனே அடிமைக்

கஞ்சல் செய்யும் ஏசுகோனே சீமானே தானே

- தரு

 

5. இந்த வருடத் தெமைச் சந்தித்தனுக் கிரகித்த

சொந்தக் கிருபைகள் மாகாத்ரம் அவை

சிந்தித்து முடியாவிச் சேத்ரம் நிற்

பந்த அடியர்களெம் மாத்ரம் பத தோத்ரம் தோத்ரம்

- தரு

 

6. பெத்தலேம் நகரத்திலே கன

பிரியமாய் வரு கருணையாதிப

பேத மில்லாத விண்ணாட்டா சருவ

சாதிகளின் கொண்டாட்டா நெல்லை

வேதநாயகன் பாட்டா என்

தேட்டா சேட்டா

- தரு

(1814-வரு)

-----------------------------------

 

101

 

வெண்பா

ஆதிகாலம் துவக்கி ஆச்சரியமாக இந்த

சோதனை காலத்தும் துணை நின்று-மாதயவாய்

எந்தன் பரமகுரு செய்த உபகாரத்தைச்

சிந்தித்து வந்தனை செய்வேன்.

 

(இராகம்: ரீதிகௌளை)

(ஆதி தாளம்)

 

பல்லவி

எந்தன் பரமகுரு செய்த உபகாரத்தை

ஏற்றித் துதிப்பன் - நானே

 

அனுபல்லவி

தந்தை பரனிடத்தா னந்தத் தொளி விளங்கச்

சத்தமாக நின்ற நித்ய வஸ்துவான

- எந்தன்

 

சரணங்கள்

1.வானத்தமலர் சேனை கிரிகித்து முடியாத

மகிமைப் பிரதாப மிகுத்தோன் அதி

ஞானத் துடனுலகும் பரமுமதில் நிறைந்த

யாவும் நெறியில் பகுத்தோன்

மேன்மைப் பொருளதாக தேவ மகத்துவத்தின்

விளங்கு மனந்த சுகத் தோன் அக்கி

யானத் திருளகலத் தானிப் புவியிலுற்ற

அந்த முடிவில்லாத சுந்தர கிறிஸ்துநாதர்

- எந்தன்

 

2. மிக்க பராபர னோ டொக்க ஒன்றித் திருந்த

முக்ய மனைத்தும் விடுத்து ஏவை

மக்கள் துயரகலத் துக்க உலகமதில்

மானிடவதார மெடுத்து

பட்சமாக அடிமைக் கோலங் கொண்டரும்

பாடுபட்டுயிர் கொடுத்து நரர்

அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து

அந்த காரமற வந்த யேசுகிறிஸ்து

- எந்தன்

 

3. பெத்தலேம் பதியில் சுத்த கன்னியிடத்தில்

புத்திரனாகப் பிறந்து திருச்

சித்தமாக உலகத்தி லெங்கும் திரிந்து

திவ்ய புதுமை சிறந்து

மெத்த வாதையாகச் சத்துருக்கள் தம்மை

மீட்கக் குருசிலிறந்து பின்னும்

மத்தியஸ்தனாக வெற்றி கொண் டெழுந்து

வான மேறி நடு தானே கேட்கவரும்

- எந்தன்

 

4. பாவத்தி கிலறுத்து சாபத்தையும் தொலைத்து

பகைஞன் வினையை நீக்கிக் கொடும்

ஆபத்திலு மடர்ந்த கோபத்திலும் விழுந்த

அடிமைகளைக் கை தூக்கி

தேவத் திரவிய மென்ற சீவ போசனத்தைத்

திருவுள மாயுண்டாக்கி நித்த

மாபத்திரமாய் பிர தாபித்தனுக் கிரகித்து

வைத்துக் காத்த ஒரே நித்ய திரித்வமான

- எந்தன்

 

5. அந்தி சந்தியு மற்றெந்த வேளையுமன்

பாகச் சங்கீதம் படிப்பேன், நெல்லை

சந்த வேத நாயகன் தந்த பதங்கள் பாடித்

தாளத்துடனே நடிப்பேன்

சிந்தை மனமகிழ்ந்து மந்திர செபத்தினாலே

தேடித் தேடிப் பிடிப்பேன், இதோ

இந்த வருடத்திலுந் தந்த சுகத்துக்காக

யேசு வோசனா வென்றோசை யோசையாக

- எந்தன்

(1827-வரு)

-----------------------------------

 

102

 

வெண்பா

ஆண்டு கொண்டோன் எம்மை அரவணைத்தோன் சீவனை விட்டு

மீண்டு கொண்டோன் இம்மானு வேலென்போன் - வேண்டும்

வரங்க ளளித்தான் வருஷ முழுதும்

இரங்கினா னிம்மட்டு மே.

 

(இராகம்: ஆனந்தபைரவி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

இம்மட்டும் சீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த

எண்ணமாய் ஸ்தோத்தரிப் போமாக நாம்

 

அனுபல்லவி

நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த்தந்து

நற்சுக மேவவும் அற்புதமாகவும்

- இம்

 

சரணங்கள்

1.காலம் சொற்போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்

கனாவைப் போலேயும் ஒழியும்

வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்

மண்ணின் வாழ் வொன்றும் நிற்கமாட்டாது

கோலப் பதுமைக்கும் நீர் குமிழிக்கும் புகைக்குமே

கொண்ட உலகதில் அண்ட பரன் எமைக்

கண்டு கருணைகள் விண்டு தயவுடன்.

- இம்

 

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்

பரம பாதையும் தொடர்ந்தோம்

வலிய துன்மையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்

வஞ்சர் பகைக்கும் தப்பிநின் றோம்

கலி என்ற தெல்லாம் விட்டோம் கர்த்தாவின் மீட்பை கண்டோம்

காய்ந்த மனதொடு பாய்ந்து விழுகணம்

ஓய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்.

- இம்

 

3. புசலை வரக் கண்டதாய், பெற்ற குழந்தை தனைப்

பேணித் தற்காக்கும் நேர்மையே

விசுவாசமாய் ரட்சகர், காலில் விழுந்து நோக்கும்

மேன்மை சன் மார்க்கத்தாரையே

நிசமாய்க் கர்த்தாவின் கையே-துன்நாளில் காக்கு மெய்யே

நேயத்தினாலைந்து காயத்தினால் அதி

சேயத்தினால் மிகு ஞாயத்தினாலுமே.

- இம்

 

4. எச்சரிப்பும் விழிப்பும் விசாரிப்புமவர் தாமே

இல்லாவிட்டால் வீணாமே

உச்சிதமாய்த் தினமும் அன்பாய் நவமாய்ச் செய்த

உயர் அனுக்கிரக மெல்லாம் மேன்மை

நிச்சயமாய்ப் புகழும் தோத்திரமுந் துதியும்

நித்திய காலமும் உத்தமமே வளர்

பக்தி யோடே பலதுத்திய மாகவும்.

- இம்

 

5. இனியும் நீர் தாம் நேரிட்டு தமியோர்களை ரட்சித்தே

எல்லா இக்கட்டிலேயும்

கனிவாய்ச் சகாயம் செய்யும் துன்னாளில் நாங்கள் தாழ்ந்து

கலங்கி மிரண்டும் உம்மைச் சார்ந்து

அநியாய லோக வாழ்வை விட்டு நிலைக்கிறதுக்

காகத் திடன் விடுத்து-யூகத்துடன் அடுத்து

நாகப் பகை தடுத்து வேகத்தருள் கொடுத்து.

- இம்

 

6. சன சேதத்துக் குண்டான போர்களுக் கோர் முகிவு

தந்து நொறுங்கினதைக் கட்டி

கன சபையை யாதரித்தன்பாய் ஆசீர்வதித்து

கண் நோக்கி எல்லார் மேலன்றன்று

தினமு மருளுதிக்கச் செய்து தமது தேவ

சிந்தையி னோடதி விந்தைய தாய் உயிர்

மைந்தனினால் எமை இந்த வினோதமாய்.

- இம்

 

7. பொல்லாரைத் தயவாகத் திருப்பியருள் வீராக

புத்தியற்றிருளிலே திரியும்

கல்லா சனத்துக் கொளி வீயும் திக்கற்றவரைக்

காரும் நோவாளிகளைப் பாரும்

எல்லாத் துக்கித்தவரைத் தேற்றும் சாவாரை யேற்றும்

எந்தலாதிப சாந்து தேவர்கை

ஏந்தியே மிகு சாந்தமா யெமக்கு.

- இம்

 

8. பரமதற்கு நேராக வர நடக்கிறதற்காகப்

பலநாளுந் தெய் வாவியாலாளும்

தரம தாலத்தியந்த பணிவதாய்க் கேட்டுவந்த

சகல வரங்களையுந்தாரும்

குரு மாருரையைக் கொண்டு திரமாய் வேத நாயகன்

குணந்தரும் பத மிணங்கவன் பொடு

வணங்கவந் தெமை மணஞ் செய்தன்புற.

- இம்

(1806-வரு)

-----------------------------------

 

103

 

(இராகம்: தீரசங்கராபரணம்)

(ஆதி தாளம்)

 

1.இயேசு திருநாமம்

இய உயர் மய நய ஜெய பெயர்

இயேசு திரு நாமம் எனக்குயிரே;

ஆசிர் வாதந்தா, நின் ஆசிர்வாதந்தா,

ஆசிர்வாதம் தேசுறு பாதம்

மேசியா நீதா.

 

2. விண்ணுலகோர் பாட

மண்ணுலகோர் அடிபணிந் தேற்றிட

பாதாளத்துள்ளோரும் பயந்தோடவே

எந்தன் நடு வா, வா, உந்தனருள் தா, தா,

வந்தனம் சந்ததம் என்றுமே தந்தனம்

உந்தனடிமை யாம்.

 

3. மந்தையாயர் தேடி

கந்தையணிந்த குழந்தைய தாயுனை

கன்னிமரி தாயார் விந்தை மகவாய்

முன்னணையிலே ஓர் பொன்னகரோனே

யேசையா உன் நேசங்கண்டார்

ஆசையா யோடி.

 

4. இந்தச் சபையோரும்

உன் செயலா மிதை நன் றுணர்ந்தே புகழ்

மிஞ்சவே கொண்டாடி என்றும் போற்றவே

நெஞ்சும் வாக்கும் செய்கை ஒன்றித்தே யுன் மீட்பை

சென் றுல கெங்கும் தந்தையுன் னன்பை

நன்று காட்டவே.

 

5. கன்னிகையின் சேயா

காதல் மிகும் மணவாளா நனிதோழா

மன்னவர் நின் தந்தைக் கென்றும் துதியே

விண்ணுயரமே யெம் பண்ணெழும் பவே

என்னில் பாச மேவச் செய்யும்

ஏக ஆவியே.

 

-----------------------------------

 

104

 

வெண்பா

வானின் கீழ் மானிடரில்மற்றொரு நாமமென்

மேன்மற்மீட் பளிப்பதில்லையே-யானதினா

லம்மா வுலக மனித்திய மென்றஞ்சி நினை

யிம் மானுவேலேசு நாமம்.

 

 

(நாமாவளி)

 

பல்லவி

யேசு நாமநினை யேசு நாமநினை - (3)

யேசு நாமநினை.

 

சரணங்கள்

1.பூமியாள் தயாநேமி சீவிய

சேம நீடிய ஆமனாகிய

ஓமனாதி நம் சாமி தேவதா

- நாம

 

2. கருத்தராதி யந்தரத் துலாவிய

பரத்துவமாகிய திரித்துவ தேவசுந்

தரத்து மேன்மைசேர் கிறிஸ்துநாதரின்

- நாம

 

3. ஓசனா கிருபாசனா திரு

வாசனாபவ நாசனா திவிய

போசனா முனா மேசியா மனா

- நாம

 

4. வேதநாயகனோது பாடலின்

மீதுமா பிரியமா தயாபரா

ஆதிமூலமே பாதுகாவென.

- நாம

 

-----------------------------------

 

 

105

 

(இராகம்: காப்பி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

இயேசு அபிதானி தாதா நீபதம்

இயேசு அபிதானி தாதா நீ கிறிஸ்த்

 

சரணங்கள்

1.காசினியிலுனைக் காட்டிலும் வெகுமானி

கண்டிலனே அபிமானி பிரதானி தாதா நீபதம்

 

2. தன்னையே தத்தமாய் தந்தாய் இதோ நீ

நன்னயம் செய்யனந்த ஞானி சுதா நீ தாதா நீ

 

3. சொல்லரிய மேனி துல்லி பத்தானி

வல்ல கலைக்கியானி நல்ல நிதானி தாதா நீ பதம்

 

4. பொன்னகர் தந்தோனே முன்னணை வந்தோனே

என்னை யுவந்தோனே நின்னைப் பணிந்தேனே.

 

5. சாபத்தைத் தீர்த்தவா கோபத்தைப் பேர்த்தவா

ஆபத்தில் சேர்த்தவா தாபித்துக் காத்தவா தாதா நீ.

 

6. சுரர் தொழு பதத் தோனே-ஜோதி மயத்தோனே

சுபதப ஜெபத் தோனே-துதி செய் பதத்தோனே.

 

-----------------------------------

 

106

 

(இராகம்: ஜாவளி)

(ரூபகம்)

 

பல்லவி

இயேச பிதானமே இயேச பிதானமே

மெய் இனிதே இனிதே இனிதே

 

சரணங்கள்

1.தேசு நீடு மனுரூப திரியேக ஜெய தேவ

தாசர் பரா தயைநீள் தயைநீள் தயை நீள்

- இயே.

 

2. வினைமூடி தினந்தோறும் விடமேறு தீனர்க்கு

மன மெழவே மகிழ்வே மகிழ்வே மகிழ்வே

- இயே.

 

3. நரக பாதாளமே நடுக்கமே தீர்க்குமே

கிருபை நிறை கெலிப்பே கெலிப்பே கெலிப்பே

- இயே.

 

4. விசுவாசிகளும் நேரும் விரிவுலகனை வோரும்

விடுதலையே விடிவே விடிவே விடிவே

- இயே.

 

5. மனப்பயம் ஒழிந்ததே வரமுவந் தெலியாவே

யின மிசைக்கே ரசனை ரசனை ரசனை

- இயே.

 

-----------------------------------

 

107

 

(இராகம்: காப்பி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தோத்திர மையா சேயோவா

சுவாமி இவ்வாண்டே காவாவா

சரணங்கள்

1.காத்தி ரட்சித்தாள் மாதேவா

பார்த்துன் பாதமே தாவாவா

- தோத்.

 

2. ஆசீர்வாதம் ஈமெய் ஜெயா

இயேசுவே அல்லேலூயா

- தோத்.

 

3. இந்த ஆண்டில் நேசம் நீண்டு

சந்தோடம் செய் தயாப மூண்டு

- தோத்.

 

4. துர்க்குணத்தை விட்டு நீங்கி

நற்குணந்தா வேன் வாங்கி

- தோத்.

 

5. பாவ மன்னித் தென்னைத் தாங்கி

யாவும் நன்றே செய்ய ஓங்கி

- தோத்.

 

6. தேவ பக்தியை எனக்கு

ஈவளிது தியுனக்கு

- தோத்.

 

7. பூரிப்பாயிவ் வாண்டிலே நான்

சீரடையச் செய் நீ தானே

- தோத்.

 

8. இக்கட்டில் எனையாதரி

சொற்கத்தே சுபம்புரி

- தோத்.

 

-----------------------------------

 

108

 

(இராகம்: பரசு)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தயாபரா இங்கு வருவாயே பரா இங்கு

 

சரணங்கள்

1.தயாபரா சுபமாயிரு பேர் நய

தபமே ஜெபமே புரிய வருவாய்

- தயா.

 

2. கடல் கொந்தளித்துப் படவு அமிழ்த்தப்

படும் போ லுதித்த படியே வருவாய்

- தயா.

 

3. பதினொருவர் நடுவதில் கிருபைகொடு

உதித்தபடி தயவோடு வருவாய்

- தயா.

 

4. நரரின் சகாயம் பெரிதல்ல மாயம்

சரி செய்வது னுபாயம் வருவாய்

- தயா.

 

5. நின்னாசீர் வாதம் மன்னா பிரசாதம்

பின்னு மீயவே இப்போதும் வருவாய்

- தயா.

 

6. இந்த வருட முந்து சந்தோடம்

தந்துகா சுப விசேடம் வருவாய்

- தயா.

 

-----------------------------------

 

109

 

(இராகம்: நவரோஜ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

இராஜ தாவீது குமாரவ தாரா

இயேசு ராஜா துதியே பராசீரா.

 

சரணங்கள்

1.இராஜ வுதாரா தேச வதாரா

நேச கிருபையின் விஸ்தாரா சீரா.

- இராஜ

 

2. தாயின் கருப்பத்தே எனைக் காத்து

ஆயிசு தந்தென்னைக் கண் பார்த்து சீரா.

- இராஜ

 

3. அக்கிரமம் நீக்கினை நற்குண மாக்கினை

உக்கிர நோய்களும் போக்கினை சீரா.

- இராஜ

 

4. சீவனைக் கொடுத்துத் தீ வினைதடுத்து

மேவினை நித்தம் அடுத் தடுத்து சீரா.

- இராஜ

 

5. கிருபைக் கதித்து இரக்க மிகுத்து

திருமுடி சூட்டினை ஸ்தாபித்து சீரா.

- இராஜ

 

6. சகல நன்மைக்கும் தகுபலனளிக்க

வகையிலை சிறிதெனும் தமியனுக்கு சீரா.

- இராஜ

 

7. என்ன நான் செய்வேன் நின்னையே பணிவேன்

பின்னொன்று மில்லை துதியே புரிவேன் சீரா.

- இராஜ

 

8. பலமுறை பரிந்து நல சுபம் புரிந்து

வலது செய் புது வருடம் தெரிந்து சீரா.

- இராஜ

 

-----------------------------------

 

110

 

வெண்பா

வானத்திருந்து மகத்துவமெலாந் துறந்து

ஈனத்தலகையை விட்டீ டேற்றி - தானத்தில்

மாபாதக னெனையே வாழ் விக்க வந்தனையோ

ஆ பூரண கிருபையே.

 

(இராகம்: இங்கிலீஷ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பூரண கிருபையின் மயமே தேவா

பொற்புச் செப்பத் தொப்பற்றதிசயமே

ஆரண சுப செப்ப சொரூபா யோவா

அடியனையே ரட்சித்தாள்.

 

அனுபல்லவி

சீருச்சப் பட்சத்திருமுதலே

சிட்டோர்க்காதரவே யனுசாரி

தீமைக் கட்டற்றுப் பூமக்கட் கொத்துச்

சாமத்தில் பெத்தலேமில் புற்கொட்டில்

மேவுருவா, தேவரூபா-மூ வொருவா சீவவா

தேசருள் வாசநேச சீமா சுரர் பதியே

மாசதிலேசு ராச பூமா நரர் துதியே

தேவ ரெல்லாம் நீடியடி தொழு பரா காவா

தேடருமுன்னிரு சரண் மலர் இணைதுணையே

கா கமகம பதநிசபா மாகா

சக்க சக்க சக்கப்பமகமரீ

 

கா கமகம பதநிசபா மாகா

மகமரிசா நிரிசா

ரீரிர்ரி ரிர்ரி மகரிகசா

சக்கா காரிச மாமக காரி

பாபப்ப பப்பதா தத்த தத்த

நீநிந்நி நிந்நி சா சச்சச்சா

சாதநிபா சாதநிபா சாநிதபா மாதபா

பாதப மாகரீக பாமா கமரிகசா

சாநீ சதா தாநி சரி சநிதபா மாகா

காரிமகரீசநிரிசநீதநிதநிபா.

காகம

 

சரணங்கள்

1.சாதிகளுட பரவசமே நேயா

சத்ய துத்ய சொற்கப்பதி நிசமே

ஆதிவினையற வருசுதா தீயோர்க்

கருமை யினோர் மத்திஸ்தா

மாதத்துவச் சுத்தப்பர வெளியே

வற்றா வாருதியே அசரீரி

வானத்துப் பொற்புக் கானத்திற் கொட்டில்

தானத்தில் புக்க தானுற்றுற் பித்த

காவலவா மாவலவா ஓநலவா மேலவா

மானுவேலாசை யேசையா மீசுரவடிவே

பானு வேநேச மேசியா வாசக முடிவே

மாசதில்லா மூவருமொரு தெய்வமே நாதா

மாயையற உனதருள்புரிதின துதியே.

பூரண

 

2. வானவர்களின் ரகசியமே யேகா

மட்டற்றுச்சப்பக்கிஷத்திரு தயமே

ஞானதிசய மிகுனதமே தூயா

நற்குருவே நற்கர்த்தா

மோனத்துப்பத்தர் கணிகலமே

முட்காடானதின் மோசை முன்மேவும்

மூலத்துச் சித்துச் சீலத்துச் சொக்குத்

தாலத்துட் பட்டுக் கோலத்துத் திட்டத்

தாடினவா நாடினவா தேடினவா ஓடினவா

மூவுலகா ளொரேக நாதா முடிவிலனே

சீவபிதா பிஷேக தாதா திடவலனே

மோசமிலா இயேசிசர வேலதிபா வாகா

மூட மகல உன்னருள்புரிதிருவுளமே.

பூரண

 

3. பாதகன் மன முழுவதுமே லோகா

சைக்குட் புக்கிச் சிக்கிப் பலவிதமே

சூது வினை கவடுகளுமே மேலாய்த்

துயருற வாதைப்பட்டே

மேன்மைச் சொற்றுப் பற்றனு தினமே

வெட்கா பேதையர் பாதையின் மேவி

வீண் லட்சைப்பட்டு வீடற்றுக் கெட்டு

நாணத்துக் குட்சி நாசக் கஸ்திக்குள்

போவதுவோ சாவதுவோ ஆவதுவோ சீவனே

வேதநாயகனோது பாவே பரிசனையே

சீவபிதா வொடாதி தேவே தெரிசனையே

வேறுபடா தேமுழு வருடமுமே நீயே

மேவியுற விலென் னுடனிரு சரணமையா.

பூரண

(1832-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page