காவாவினாவா கடுகவா நின்பாதந்
தாவா சமையம்வா சற்றேவா-நாவினில்வா
வல்லப மேன்மை மகத்துவ வேகத்துவா
சொல்லருமெஞ் ஞானத்துவா.
(இராகம்: உசேனி) | (ஆதி தாளம்) |
சொல்லரு மெஞ் ஞானரே மேன்மைப்பிரபுவே
சொருபத் தருபக்கோனாரே உரை.
வல்லறஞ் சிறந்து மனுவானாரே மணி
இல்லறந்துறந்து குடிலானாரே | - உரை சொல் |
1.மாடாயர் தேடும் வஸ்து தற்காரி
கேடாளர் நாடும் கிறிஸ்து சற்காரி
வையகம் புரப்பதற்கு வந்தாரே அருள்
பெய்து நவமுந் தவமுந் தந்தாரே | - உரை சொல் |
2. அட்சய சவுந்தர அசரிரீ அதி
உச்சித சுதந்தர உபகாரி
ஐயா வல்லாவே மாதேவா ஓ
துய்யா நல்லாவே சேயோவா | - உரை சொல் |
3. சாஸ்திரர் காணிக்கை கொண்டு கண்டாரே
மிகத் தோத்தரித் தடர்ந்து புகழ் விண்டாரே
சம்மன செலாந்தொழ நின்றாரேவலு
துன்மனசெலாம் விழச் சென்றாரே | - உரை சொல் |
4. பாவவினை யாவையுந் தீர்த்தாரே யுயர்
தேவகுலமா யெமைச் சேர்த்தாரே
பக்கிஷத்தால் முகம் பார்த்தாரே பெரும்
பொக்கிஷம் போலெமைக் காத்தாரே | - உரை சொல் |
5. தந்திரக் கணத்தை வெட்டிப்போட்டாரே தம்
சுந்திரச் சனத்தைக்கிட்டி மீட்டாரே
சொந்தடிமையைத் தள்ளமாட்டாரே
சந்தேகம தோசொல்லும் நாட்டாரே | - உரை சொல் |
6. அங்கிஷத்தவிதரசன் செங்கோலேயூதர்
வங்கிஷத்திரள்பணியும் நன்காலே
அட்சய அட்சய திவ்விய மன்னாவேஎமை
இரட்சியும் இரட்சியும் ஓசன்னாவே | - உரை சொல் |
7. தாவீது ராஜனின் மைந்தாவேதமிழ்
பாவேத நாயகன் சொந்தாவே
சந்ததம் சந்ததம் பொங்கார்த்தனமே லட்சம்
வந்தன வந்தனம் சங்கீர்த்தனமே | - உரை சொல் |
(1814-வரு)
-----------------------------------
தன்னிகரில்லாத் தேவன் தரணியில் மனிதனான
உன்னதன் வருகைக்காக உதித்த நட்சத்திரங்கண்டே
பொன்னுடன் றூபவர்க்கம் போளமுங்கொணர்ந்து பெத்லே
முன்னணையடியில் வீழ்ந்து பணிந்தனர் முதன்மையோரே
(இராகம்: பூரிகல்யாணி) | (ஆதி தாளம்) |
தந்தாயுமக்காயிரந்தரங்களே தோத்திரங்களே
சங்கீர்த்தனம் சங்கீர்த்தனங்களே.
1.வானம் புவியும் படைத்த நாதனே அளவில்லாத
மகத்துவமிகும் திரித்துவ தேவனே
ஞானமே நரர் உருவமாகிய இயேசு கிறிஸ்து
நாயகா உமை பூசை செய்கிறோம்
கோனராதிப தவிது வங்கிஷமே மரிய கன்னிகை
குமரனாய் வரும் ஒரு பரம்பரா
மானுவேலுமக் காயிரந்தரமே சங்கீர்த்தனமே
வலிய கிருபை செய்யுமிஸ் தோத்திரமே
ஆறு லெக்ஷண சொரூபா
அனந்த பேரின்பா போற்றி
ஈறில்லா தென் றுந்தானா
இருக்கு மெய்ப்பொருளே போற்றி
பேறுதந் தளிக்க வல்ல
பிதாவினோர் மைந்தா போற்றி
மாறில்லாக் கருணை யானே
மானுவேல் போற்றி போற்றி.
2. தப்பில்லாத சத்திய சொரூபியே பரம ரூபியே
தாவீதரசன் தொழும் பிரதாபியே
ஒப்பில்லாத தயை விசாலமே ஆதிமூலமே
ஒருவனே யுமைப் பூசை செய்கிறோம்
முப் பொருளொரு தேவவஸ்துவே அருள் கிறிஸ்துவே
முதல்வனே யுமக் கோம் நமஸ்துவே
செப்புதற்கரிதான நேசமே பவவிநாசமே
திருவுளஞ் செய்யும் நல்விசுவாசமே
அந்தர சொற்கம் பூமி
அனைத்தையும் படைத்தாய் போற்றி
முந்தின மனுடராலே
முன்னணைக் கெழுந்தாய் போற்றி
தந்தையர்க்கொரே பேறான
தனையசுந்தரமே போற்றி
மைந்தர்கள் வடிவமான
மானுவேல் போற்றி போற்றி
3. சீனா வெற்பினில் எழுந்த காட்சி யேமோசேக் களித்த
திருக்கற்பினையின் இரண்டு சாட்சியே
கோனான் றவிது மண்டலாதிபன் ஆசனத் தெழும்
கொற்றவா உமைப் பூசை செய்கிறோம்
கானான் தேசம் இஸ்ரவேலர்க்கே சுதந்தரமாகி
கருதலரைச் சங்கரித்த கருத்தனே
ஞானதிக்கமே திருவிரக்கமே ஒம்பிரணவம்
நம்பினோம் அருளம்பரா பரா.
ஆதியம்பரனே போற்றி
அளவில்லா சுபமே போற்றி
சாதிகள் நடுவா போற்றி
சருவ காரணனே போற்றி
பேதகமில்லாய் போற்றி
பெத்தலைப்பதியே போற்றி
மாதிடம் வந்தாய் போற்றி
மானுவேல் போற்றி போற்றி.
4. ஆதியி லாதி யோடிருந்த வார்த்தையே மாங்ஷமாகி
அகிலத்தின் பவம் அனைத்தும் தீர்த்தையே
பாத காணிக்கை மூவர்களும் வைத்து தாழ விழுந்து
பரமனே யுமை பூசை செய்கிறோம்
சீத ஒளி நட்சத்திரங் கண்டுமே கிழக்கிலிருந்து
தேடி வந்தனந் திவ்விய பாலனே
சாதி யாவையும் மீட்க வந்தவா
பாதுகாத் தெமை பாதுகாத் தெமை
தாங்கி ரெட்சியும் சரணம் சரணமே
தனி முதலவனே போற்றி தற்சுயஞ் சோதி போற்றி
கனமிகுந்தவனே போற்றி கருணை யாங்கடலே போற்றி
வினைதடுத் தாண்டாய் போற்றி மேசியா வேந்தே போற்றி
மனுடவதாரா போற்றி மானுவேல் போற்றி போற்றி.
(1821-வரு)
-----------------------------------
உச்சிதமதாய்ப் பிறந்த யூதராசாதிபதி
நட்சத்திரங் கிழக்கே நாடியே-தெட்சணையுஞ்
சந்தோடமாய்க் கொணர்ந்து தாவீதின் பட்டணமே
வந்தாரையா சாஸ்திரி மார்கள்.
(இராகம்: தோடி) | (ஆதி தாளம்) |
வந்தாரையா சாஸ்திரிமார்கள் வந்தாரையா
யேசுவைக் காண வந்தாரையா.
அந்தரம் பரமும் பூச்சக்கரமும் யாவும்
ஆறு தினத்தமைத்த மாறில்லாத கர்த்தன்
விந்தை யுடனிரங்கித் தந்த சுதனைக் காண
மேவி யெருசலைக்குச் சாவிச் சாஸ்திரி மார்கள் | - வந் |
1.ஐயனாதி மாந்தர் செய்யும் வினையகல
அன்னை மரியுதரந் தன்னி லவதரித்துத்
துய்ய மனுவுருவாய் வையந்தனி லெரோதே
துலங்க ஆளும் நாளில் நலங்கொள் யூதேயாவிற்
சூட்டியபடியே பெத்தலேகே
மாட்டுக் கொட்டிலிலே பிறந்தபோது
பொய்யனான பேயும் தொய்யப் பரமண்டலம்
புக்குஞ் சேனைகளும் மெய்கும் புகளுரைக்க
நையும் பாவங்களும் நொய்யும்படி யுலைய
நட்சத்திரம தொன்றங்குச் சந்தனி லுதிக்க
நாற்றிசை யோரும் மிடையர்களும்
போற்றி செய்திடவும் கிழக்கதினின்
றுய்யும்படி யெருசலையினதி பனுக்கும்
ஓத அவனும் விண்ட போதப்படி முன் கண்ட
மையவுடு வினொளி வையுங்கண்டு சென்று
வணங்கித் தெட்டணைகள் வைத்திணங்கிப்பதம் பணிய | - வந் |
2. எங்கு செனனம் யூதர் துங்க னெனவுங் கேட்க
எருசலே மியரும் வெருவியே மருளப்
பங்கமா யெரோதே யுங்கலங்கி வேத
பாரகரையுங் குருமார் களனைவரையும்
பரிவுடன் கூட்டிக் கிறிஸ்துற்பத்தி
தெரிவுடன் காட்டித் தருக வெனச்
சங்க முழுதும களங்கள் யூதேயாவைச்
சார்ந்த பெத்தலேகே மோர்ந்து வருவாரென
மங்களம் பலவிதங்களா யெழுதி
வகுத்த தெரிசிகளும் தொகுத்ததிர மிதென்று
வாசக மோதச் சாஸ்திரிகளை
நேசமதாக இரகசியத்தில்
புங்கமாய் அழைத்தினங்க ளோதி நீங்கள்
போயங்கணுகி யெனக் காயிங் கெய்துமென
வங்கையரசன் சொலத் தங்கு முன்னணைக்குள்
மகிழ்ந்து சென்றி றையைப் புகழ்ந் தர்ச்னைபுரிய | - வந் |
3. திட்டமுட னெரோதே யிட்ட மொழிப்படிக்குச்
சென்ற காலையில் முன்னின்ற தாரகையுஞ்
சட்டமாய்த் துலங்கி மெட்ட தாய் குழந்தை
தங்குந்தலம் வரைக்குந் துங்கமாய் நடந்து
தரித்த தைக்கண்டு சாஸ்திரிகளும்
கருத்தினிற்கொண்டு மாட்டகத்திற்
கிட்டியதி பனையு நெஷ்டையுடனு ணர்ந்து
கேண்மையாயி றைஞ்சித் தாழ்மையாகத் தங்கள்
பொட்டணங்கள் திறந்திஷ்டமாக வைத்த
பொன்னுந் தூபமிறா வென்னுங் காணிக்கைகள்
போதவுங் கொடுக்க மறுக வொரு
பாதை யங்கடுக்கப் பரனவர்க்கு
விட்ட தெரிசனத்தைத் தொட்டுப் பதமுரைத்த
வேதநாயகனி னேத மகலச் செய்து
மட்டிலாப் பலனும் தட்டிலாமலிந்த
மனுவேல் தயவை யனுதி னமுந்தினமுஞ் சொல்ல | - வந் |
(1798-வரு)
-----------------------------------
ஞால மதிலெம் மேசுநாதன் பிறந்தவுடன்
மேலுலகின் வெள்ளி யொன்று மேவிற்று-காலமதிற்
சொல்லாய்ந்த சாஸ்திரிமார் தோத்தரித்துப்போற்றவந்தா
ரல்லேலூயா வோசனா.
(இராகம்: இங்கிலீஷ்) | (திச்ரம்) |
அல்லேலூயா வோசனா அல்லேலூயா
அல்லேலூயா ஓசனா அல்லேலூயா
அல்லா ஓசனா, அல்லா ஓசனா, அல்லா ஓசனா. | - அல் |
1.சொல்லுரையின் படியே பெத்லெ மெனும்
வெல்லைமலை யடியே பரி
சுத்தமாய் வளர் வஸ்துவாமொரு
கத்தனான கிறிஸ்துவும் வந்தார். | - அல் |
2. ஆதியுமந்த மிலான் அனாதிதந்
தாதையர் தந்தை சொலான் பவ
மாற வல்லிருண் மாற அன்பர்கள்
தேறவுங் கரையேறவும் வந்தார். | - அல் |
3. அந்தரத்தா லுலகை மயக்கிய
தந்திரப்பேயலகை தலை
அற்கவானவர் சொற்கவாசல்
திறக்க மக்கள் சிறக்க உதித்தார். | - அல் |
4. மைந்தரனுகூலன் மகத்துவ
விந்தை மனுவேலன் திரு
மாலன் மெய்கிரு பாலன் முக்கிய
நூலன் நற்குண சீலனும் வந்தார். | - அல் |
5. வானத் திருந்தருளாய் மகத்துவ
ஞானம்பரம் பொருளாய் திவிய
வஸ்துவான கிறிஸ்துமேவிய
சித்திரமான நட்சத்திரங் கண்டோம். | - அல் |
6. தேவர்கள் அட்சய னைத்தியங்கிய
பாவிகள் இரட்சகனை விச்
சேத்திரமாய்ப்பத தோத்திரமேசெய
நேத்திர மானமுச் சாத்திரர் வந்தார். | - அல் |
7. தூதர்கள் நேசனையே தவீதெனும்
யூதர்கள் இராஜனையே கன
சூசனைக் கிருபாசனைச் சரு
வேசனைப் பத பூசனை செய்வோம். | - அல் |
8. வெல்லைப்பதிப் பெருமான் நவ எரு
செல்லைக் கதித் திருமான்கவி
வேதநாயகன் ஓது தாயகன்
பாதகாத்திரம் எப்போதுமே தோத்திரம். | - அல் |
(1800-வரு)
-----------------------------------
(இராகம்: நவரோஜ்) | (ஆதி தாளம்) |
இராஜா பிறப்பூர் பெத்தலேம் மகிழ் எருசலேம் ஓகோ
முச்சாஸ்திரி மாரோடு யாமொழிவோம் அல்லேலூயா.
1.வாசமே முன்னணைக்காலே வளமை தோள்மேலே. | ஒகோ |
2. இச் செனனம் மா அற்புதம் இமையோர் கதீதம். | ஒகோ |
3. வணங்கவந்து கண்டோர் கோனார் வான்சாஸ்திரர் ஆனோர். | ஒகோ |
4. பொன் தூபம் போளம் இவர்கள் பொழிந்த ஈவுகள். | ஒகோ |
5. இப்பிள்ளை கன்னி புத்திரன் ஏசு தற்பரன் இவர்.
6. மேதினியில் இவரொருவர் விஷந்திண்டாதவர் இவர்.
7. வார்த்தை மாங்கிஷமாய்ப் போனார் மாந்தர் வாழ்வானார். | ஒகோ |
8. ஆரிதை நன்றாய்ப் பாடுவர் அஞ்சலீடுவார். | ஒகோ |
9. துன்மைகேடு நீக்க வந்தார் சுப குணந்தந்தார். | ஒகோ |
-----------------------------------
ஆரியன் பிறப்பைக் கொண்டாஞ்சுகளுமாயர்களும் போற்றத்
தாரகை வழியைக் காட்ட சாஸ்திரிமார் வந்தேற்றச்
சீருடனெட்டா நாளிற் றிருமகன் சுன்னத்தேற்றுப்
பாரிலோர் பனிரண்டாண்டிற் பரிசே யர்களை வென்றானே.
(இராகம்: பூரிகல்யாணி) | (ஆதிதாளம்) |
1.ஆதியான் நரனான நிலைமையே யொருவராலும்
அளவிட அரிதான வலமையே
தூதர்சேனை சோபனங்கள் கூறினார் மந்தையாயருந்
துணிந்து வந்தடி பணிந்து தேறினார்
மூதறி வான முச்சாஸ்திரிமார் வந்தார் கிழக்கிலிருந்து
முடுகி நின்று முக்காணிக்கைகள் தந்தார்
நூதனமான வோர் உடுவைக் காட்டினார்
உலகத்துக்கெல்லாம்
நோன்மையாய் ஞான பிரவை மூட்டினான்.
2. தாரகை சாஸ்திரிமாரைக் கூட்டிற்று குழந்தை இருந்த
தல மட்டும் வழிநடத்திக் காட்டிற்று
நேருடனெருசலேமின் முன் சென்றார் குழந்தையைக் கொல்ல
நினைத்த வஞ்சகன் மனத்தையும் வென்றார்
சீருடன் பொன்னையும் தூபத்தையும் உய்த்தார்
வெள்ளைப் போளத்தை
சிறப்பதாய் முனம் நிரப்பியே வைத்தார்
ஆரியன் அடியை பணிந்து தாங்கினார் கண்ட சொற்பனம்
தடுத்து மற்றொரு தடத்தினீங்கினார்.
3. திட்டத்துலகின் பவங்கள் ஏகவே யுருக்கமாய் வந்த
திருக்குமாரர்க்கு பெருக்கமாகவே
எட்டுதினத்திற் சுன்னத்தாசரித்தார் கிறிஸ்திரட்சகர்
ஏசுவென்ற பிதானமே தரித்தார்
தொட்டு சிமியோன் கரத்திலேந்தினான் அன்னாளுடனே
துதித்து தன் மனக்கவலை நீந்தினான்
சட்டத்துட னாலயத்தை நண்ணினா-னீராறு வயதிற்
சாஸ்திரிகளோடே தர்க்கம் பண்ணினான்.
4. கன்னிமாமரி யன்னை நீடினார் சூசையப்பரும்
கனிந்தலைந் தெருசலையிற் றேடினார்
மன்ன வன்றனை மூன்றாந் தினந்தனிலே சாஸ்திரிகளை
வழுத்தக் கண்டனர் ஆலயத்தினிலே
யென்ன செய்தை என் மகனே நீ என்றார் பிதாவுக்கடுத்த
தியற்ற வேண்டுமன்றோவென்றே நவின்றார்
உன்னதனெழுந்தவரை பின் தொடர்ந்தான்
தந்தை தாயருக்
குடைந்தையாகக் கீழ்ப்படிந்துதான் நடந்தான்.
-----------------------------------
(இராகம்: அபேரி) | (ஏகதாளம்) |
ஐயா வழாதே யேசையா வழாதே
ஐயா வழாதே யென்னப்பா வழாதே
இம்மானுவேலரசே யென்னையா அழாதே
1.மெய்யா மேசையா ஓ மெய்யா மேசையா
மெய்யா மேசையாவே
வேதா வென்னேயாவிண்
மீது சோபனங் கேட்கு தையா வழாதே. | ஐயா |
2. அன்பே யென்னாதா மாவன்பே யென்னாதா
அன்பே யென்னாதா தேவ
அர்ச்சய பொற்பாதா இஸ்
றாவேலையாளுவா யென்னன்பே யழாதே. | ஐயா |
3. வானோர் கோமானே ஓவானோர் கோமானே
வல்லமைக் கோனே
மகத்துவத்தம் பிரானே யென்று
மாறாக் கருணையின் சிமானே யழாதே. | ஐயா |
4. சாலேமின் கோவே யெருசாலேமின் கோவே
தாவீதின் சுதாவே காவே
ஓ கத்தாவே
சறுவ சிவாற்றுமாவின் வாழ்வே யழாதே. | ஐயா |
5. ஆதாமின் பாவமோ ராதாமின் பாவம்
அன்னை செய்து ரோகமதால்
அத்தனிடு சாபமற்
றாசீர்வாத முண்டாகிற்றண்ணாவழாதே. | ஐயா |
6. சங்கீதம்பாடி நற் சங்கீதம்பாடி
வானோர் கொண்டாடிமுச்
சாஸ்திரிகள் காணிக்கை நீடி சரண்
சந்தித்துப் போற்ற வந்தார் சாமியழாதே. | ஐயா |
7. சத்தியப் பிரதாபா மாசத்தியப் பிரதாபா
நித்தியத் தயாபா
சமஸ்த நன்மைச் சொருபா திரி
தத்துவ ஞான தீபா தயாளா வழாதே. | ஐயா |
8. தேவாதி தேவே ஓ தேவாதி தேவே
திவ்விய பிதாவே திரி
யேகத்துவ யோவாவே சுவி
சேட கவி பாடுவான் சீராளா வழாதே. | ஐயா |
-----------------------------------
(இராகம்: அந்தாதிகும்மி) |
1.மனுவேலே நம்மாலே
மானிடனானார் ஏலேலே
ஏலோகிம் பெத்தலேம்
இடையர்கள் விடையடை கொட்டிலே
கொட்டிலிலே புல்லலல்லாற்
குணம் இல்லை நாம் நிசம் வெல்லெல்லாம்
வெல்லா தெல்லாம் வெல்லல்லாம்
மேசியா அருகினார் துள்ளலாம்
மேவி வணங்கிக் கொள்ளலாம்
கும்பிட்டு துதிபல சொல்லலாம்
2. இருபேரே செய்தாரே
யேதனில் யேவை நந் தாயாரே
தாயாலே வந்தாரே
சறுவதயாபர தேவாரே
தேவர்க் கெல்லாந் தேவாரே
சிறுபிள்ளை யானார் வெல்லல்லாம் | வெல் |
3. மூவரும் ஒருவர்தான்
முடிவிலாக் கடவுளர் பிடியரேன்
ஏனோ தான் மனுடர்வான்
ஏறவே தாழ்ந்தார் நன்மைக்கோன்
கோன்குடில் நீடியே
கொற்றவன் வந்தார் வெல்லலாம். | வெல் |
4. நாற்றிசை நரர் யாரும்
நாடியே துதிசெய நலந்தாரும்
தாருமா சீராருஞ்
சம்பனே தம்பமுன் பதஞ் சேருஞ்
சேரவே தேவசிகாமணி
செப்பினன் கும்மி வெல்லல்லாம். | வெல் |
5. ஐந்துபேர் புத்தியுற்றோர்
அங்கையி லொளியுடன் சித்திபெற்றார்
பெற்றாரேயருள் வற்றார்
பேரின்ப முத்தி வினைநற்றார்
நற்றார்பத்தி முற்றவே
நண்ணினர் துன்னினர் வெல்லலாம். | வெல் |
6. ஆறு நகரடைக்கல மென்
றறைந்தனர் வெல்லையிடைத்தலமுன்
முன்வந்தார் பரிசுத்தன்
முக்கிய கிருபை வரிசித்தன்
வரிசித்தனைங் காயமுற
வாதை யுற்றார் நாம் வெல்லலாம். | வெல் |
7. எழு தூத ரெக்காளம்
ஏத்தவே வந்திங்கெமையாளும்
ஆளவே யோரளம்
அகமகிழ்ந்தர்ச்சனை சொலுநாளும்
நாளும் நாளுந் தயைநீளும்
நாதனைநம்பினர் வெல்லலாம். | வெல் |
8. எட்டுபேர் முன் காலம்
ஏகினர் பேழையிலனுகூலம்
அனுகூல மனுக்கோலம்
ஆகினராலே முழுஞாலம்
ஞாலத்தனைவர் கெதிகண்டார்
சீலத்துடனே வெல்லலாம். | வெல் |
9. ஒன்பதாம் மணியமையம்
உயர்குரு சானதிலுயிர் கொலையும்
கொலைந்துயிரத் தெழுந்தசெயம்
கூர்ந்தெமை யாளத்ததி சமையம்
சமையமையா நின்னபையம்
தாழ்ந்தோம் நாமோம் வெல்லல்லாம். | வெல் |
10. பத்துக்கற்பனைச் சீனா
பருவதமேற்றரு தான்றானா
தானானே குடிலானா
சார்ந்திடு மெளியர்க்கிதுவானா
வானேயீய வந்தானா
வந்தான்பற்றி வெல்லலாம். | வெல் |
11. பதினொரு தாசுக்கும்
பணமொன்று கொடுத்தே நேசிக்கும்
நேசித்தே உபதேசிக்கும்
நித்தியன் மாபர நேசிக்கும்
தேசிகனே எமை வாழ்விக்க
தேக மெடுத்தார் வெல்லலாம்.
12. பன்னிருகோத்திரர்
பட்சம் வைத்தே பணிதோத்திரர்
தோத்திர மேத்தினர்
தொகையிலா வான சாத்திரர்
சாத்திரக்கிறிஸ்து விச் சேத்திரர்
சனந்தினம் வாழிவெல்லலாம் | .வெல் |
-----------------------------------
(இராகம்: சங்கராபரணம்) | (ஏகதாளம்) |
பாராளுகோனா நேர்வான் உரியவான்
பாராக்கேனோக் பணிந்தேத்தும் ஆத்ம லெக்கா
பத்தர்தியானா பங்கா துங்கா பரமகானா
இசாமுக்கியா விண்டேலா வேலே விண்டேலா மனுவோல
1.சீராளா பெத்தலேகேம் சிறந்ததாலே யோகம்
செயம் அல்லேலுயா வேகம் திடம்தினம் நரர்க்கேகம் | - பாரா |
2. ஏல்சத்தாசீர் கிறிஸ்தே ஏகா சொக்காதிரத்தே
எட்டாசர் வஞ்ஞசித்தே ஏலோகி மேலா முத்தே | - பாரா |
3. தேவாதி தேவா கன்னி சேயாகவந்த மன்னி
சேனாதி பத்தியமுன்னி சேவை தொழு தொஞ்சென்னி | - பாரா |
4. அம்பரா சத்தியபரா ஆதி நித்திய குமாரா
ஆகமப்பிர சங்கதீரா அஞ்ச லெலியா ஆதாரா. | - பாரா |
-----------------------------------
(இராகம்: சகானா) | (ஆதி தாளம்) |
ஏலேல கூட்டம் வாக்கிலல்லோக் காட்டும்
நல்லார் சர்வத்திரள் யாவருங்கூட்டம்
பொல்லார் அக்கினிக்கணையம்புகளை யோட்டும்.
1.பெத்தலேகஞ் சத்திரத்தில் மெத்த மாடடைகுடிலில்
அர்த்த ஜாம ராத்திரியில் கர்த்தர் பிறந்தார் தரையில். | - ஏலே |
2. வானோர் கணங்கள் பாட வாத்தியங்கள் நீட
கோனார் குதித்தாட கோவர்த்தனர் கூட. | - ஏலே |
3. காணிக்கைகள் நீட கன்னிமரியாள் பீட
தோணக் கூடா நாட துரை பிறந்தார் தேட. | - ஏலே |
4. வாருங்கள் எல்லாரும் வகைவகையலங்காரம்
சேருங்கள் விச்சித்திரம் சிறந்த பொற் பூஷணம். | - ஏலே |
5. தோரணங்கட்டுங்கள் துலங்கக்கொடி நாட்டுங்கள்
வாரணம் பூட்டுங்கள் வட்ட மிட்டாடுங்கள். | - ஏலே |
6. பத்தியுடன் நில்லுங்கள் பராபரனைப் பணியுங்கள்
பதக விக்யானங்கள் இதமுடன் கேளுங்கள். | - ஏலே |
7. வேத சாஸ்திர புராணங்கள் நாதகீர்த்தன ராகங்கள்
ஆதிவார்த்தை ஆரம்பங்கள் ஓதும் வார்த்தை யனந்தங்கள். | - ஏலே |
8. கர்த்தரின் நாமம் கனத்த மகத்துவம்
உத்தமத்தோர் அனைவோருமே வாரும்
சித்தமகிழச் செபம் செய்யச்சேரும்
அத்தனின் ஆசீர்வாதந் திரள்பாரும். | - ஏலே |
-----------------------------------
(இராகம்: தில்லானா)
தந்தனனத் தில்லானத் தோம் தன்னதின
தந்தனன தில்லா னத்தோம் | - 4 |
தந்தனத் தில்லானத்தோம் | - 2 |
தாகிடகிட தீந்தாகிட கிட தீந்
தாகிடகிட தக
வந்தனனம் மல்லா வஸ்தோம் மனுவேலர்
வந்தனனம் மல்லா வஸ்தோம்
ஆ கொடுவிடமே ஏகிட சடமே
வா கொடு கொடுதாம். | -வந் |
1.சொந்த மெனச் சல்லாபமாய் சுரர் பலர்
தொந்த மென கொண்டாடவே
நந்தர் பலர் கூடி நாடவே
வந்த வினைவாடி ஓடவே
கந்தை யுடை யொடு
அந் தோவிடை யிடை
மைந்தர் தொட முடி. | -வந் |
தாதா கிடகிட தாதா கிடகிட
தாந் தாந்தரி கிடதாம் | - 2 |
தாதா கிடகிட தாந்
தாதா கிடகிட தாந்
தாதாகிட கிட. | -வந் |
(சேர்ப்பு) by N.V.D.
2. தந்தனர் இந்தவருடம் நவமதாகத் தந்தனர் இந்தவருடம்
முந்தும் நலங்கள் பெறவும் யேசு நாமத்தில்
எங்கடனைக் கைதந்தெடுத்தாய் அனுதினமும்
வந்த சங்கடங்கள் தடுத்தாய்
நூதனங்கதித்து பூவுலகுதித்த
நாதனை துதிக்க. | -வந் |
-----------------------------------
வானத்தான் பிறந்த செய்தி மகிழ்ந்து மெய் விசுவாசத்தாற்
காணுற்ற மாட்டுக் கொட்டில் கண்டு ஞானத் தாராட்டுத்
தேனொத்த மொழி பொற்சின்னச் சித்திரத்தாலாட்டுச் சொல்லப்
பானொத்த கிரணம் வீசும் பரிசுத்த ரூபி காப்பாம்