தாலலோ தயாள தயா தானா தன்னானே.
1.ஆலேலூ ஆலேலூயா அண்டையா அண்டினேன்
அதிபனீ பாலகனா யாவுமே யாக்கினா
ஆனுவக் கடி பேர்த்தே யழு கிறீரப்பாப்பா
சீராளா வெள்ளிமேனா நீயழாப் பாவானா
அவ்வல் பாவோமேகா தானா தன்னானே. | சீரா |
காவில் விலகுங் கனியினாலே விளைந்த
பாவவினை தீர்க்க வந்த பாலகனே கண்வளராய்
2. சங்கையாமா சாதா சத்துவாமாசாமி
தங்கையா நீ சீவி சாற்றொணா வாமனா
மங்கள நகரனா மாங்கிஷத்தில் வந்தனா. | சீரா |
மாசற்ற ஞான மனுவேலே மனுவேலே
தேசுற்ற யுதர்குலச் சிர்வேந்தே நித்திரை செய்
3. இருண்ட தென்றிவ் வுலகு யேசையா மேசையா
ஏதமோ ஆதாமா லேங்கிறிர் பாலகனா
அருண்ட பவம் போக்கி யழுகிறீரப் பாப்பா. | சீரா |
திருந்தி வினை தீர்க்கத் தேடி யுனையாரும்
வருந்தி யழைக்காமல் வந்த மாதவமே கண்வளராய்
4. சிராடு மேன்பாடு தேட்டெல்லா மாட்டகமோ
ஏரோது கொல்லவுமே யேக்கமாய் கோலுவனே
வீரிடக் கூவவோண்ணா மெய்யான அப்பாப்பா. | சீரா |
தோற்றும் நரக சுவாலையில் வீழ்காமனரர்க
காற்றுதல் சொல்லவந்த ஐயனே நித்ரைசெய்
5. முத்துவான் சேர்ப்பதற்கு மூடவண்ட பாவிகளை
மோட்ச வானேற்பதற்கு மோச மண்டு சாமிகளை
முழு முதனீ பாலகனா முத்தி தரு மெய்க் கோனா. | சீரா |
தேவ கோபஞ்சாபம் தீர்வை நரகஞ்சாவு
பாவ மெலாம் மாற்றவந்த பாத்திபனே கண்ணுறங்காய்
6. வல்லவனைக் காண்பதற்கு வந்தவரோ தாழ்கிழக்கு
துல்லிய அச்சாஸ்திரிகட்கு வெள்ளியொளி நேர் நடைக்கு
முல்லை நிலக் கூட்டமா முன்னணையிற் பாட்டுமா. | சீரா |
சீமானே வானுலகச் செல்வமே யூதர்களின்
கோமானே மாடடையுங் கொட்டிலோ உங்கள்பதி
7. நம்பினோமிக்க மிக்க நாதனீ நாயனா
தம்பநீ வேறாரோ சங்கடந் தீரீரோ
தம்பிரான் எங்கள் பத்தா தாமதமிதேது சித்தா. | சீரா |
கட்டிலுனக்கு மகா கஸ்தியோ தூங்கு மஞ்சத்
தொட்டிலிலும் புல்லுச் சுகமோ சுயாதிபனே
8. விண்ணவர் குமாரனுக்கு மெத்தை புல்லு செத்தையா
எண்ணு மெந்த ஞானிகட்கு மீதறியா வித்தையா
மண்ணும் விண்ணுமியாவுமே வாணனெலியாவுமே.
வந்தன மனந்தந்துதி தந்தனர் நீயே கதி
அவ்வல் பாவோ மேகாதானாதன்னானே. | தால |
-----------------------------------
(இராகம்: மலையாமி) | (திரிசுர தாளம்) |
ஐயா எது வேணும் அருள்பதியே லட்சம்
அனந்த வந்தனம் துதியே.
1.மெய்யா யெனைப் புரக்க வையத்துதித்த பரா
வேண்டும் விண்ணப்பம் வேணுமா
வேணுமா வேணுமா வானோர்
துய்யோனுனைப் புகழும் பொய்யாசுகிர்த செல்வ
சொந்தர சொல் அப்பம் வேணுமா. | ஐயா |
2. கேராபீன் சேராபீன் கின்னரர் கெம்புரர்
கீர்த்திக்கும் புகழ் வேணுமா
வேணுமா வேணுமா இந்தப்
பாரோர் மனந்திரும்பி யாராதனை விளம்பிப்
பணியும் மகிழ்வும் வேணுமா. | ஐயா |
3. சேட்டனேரோதே ராசன் கோட்டையரண்மனையின்
சிறப்பு மகிமை வேணுமா
வேணுமா வேணுமா வெல்லை
மேட்டின்மேற் காட்டிடை மாட்டுக்கொட்டிலுற்ற
மிருதுபுல்சுகம் வேணுமா. | ஐயா |
4. பச்சை வயிரம் ரத்தின மிச்சமதென சித்திரம்
பகல் வாடும் பூ வேணுமா
வேணுமா வேணுமா செயா
அச்சயா முச்சகா தட்சகா ரட்சியென்
றறையுமா அன்பு வேணுமா. | ஐயா |
5. நேசயேசு ராச மேசியா நிசமே
நிறையு மிதையம் வேணுமா
வேணுமா வேணுமா கெட்ட
பாசமுவாசையில் மோசமாயு ழன்றோரின்
பவமுஞ் சிதைய வேணுமா. | ஐயா |
6. அதிபதி யிது ததி நிதநித மருள்கதி
அபையஞ் சமையம் வேணுமா
வேணுமா வேணுமா நல்ல
புதிய உச்சித பத கவி ஞனெலியா வுனைப்
போற்றுஞ் சுமையும் வேணுமா.
(1872-வரு)
-----------------------------------
(இராகம்: நவரோஜ்) | (ஆதி தாளம்) |
சேனைகளின திபதி சுதனே
சிறியேனையாள் திவிய வுனதனே.
1.சேனை சுரர் பணியும் பொற்பதனே
ஜெகத்திலவதரித்த வற்புதனே. | - திவிய |
2. கானகந்தனையே கடுகவந்தனையே
நானையனுனையே நவில வந்தனையே. | - திவிய |
3. மன்னவர்க் கரசே வானவ னொருசே
என்னையாள் விரசே யேசு வென் சிரசே. | - திவிய |
4. தேவா என் மேலே தீர் மனுவேலே
காவா வென் மேலே கடாட்சியன்பாலே. | - திவிய |
5. பாவி நான் தானே பாரில் வந்தோனே
சாவினீ கோனே காகதிவானே. | - திவிய |
6. மெத்தவு மெலிந்தேன் வினைபலபுரிந்தேன்
பெத்தலை யடைந்தேன் பிரபுனைப் பணிந்தேன். | - திவிய |
7. எல்லவற்றினுக்கு மிறைவனின் றனக்கு
சொல்லிய மனுக்குச் சுப மருளெனக்கு. | - திவிய |
-----------------------------------
நேற்றுமின்று மென்றும் நிலையே நின்வல்லபத்தைச்
சாற்றுதற்குத் தாசர் தகமையோ-போற்றுகிறோம்
மைந்தத்தவிது வங்கிஷாதிப யூதாவின்
சுந்ததரச் சிம்மாராசே.
(இராகம்: இந்துஸ்தானி) | (ஆதி தாளம்) |
சுந்தர சிம்மா ராச கிறிஸ்தோம்
சுந்தர சிம்மேறே-ஏரே
1.மந்திர ஞானஸ் நான வரத்தோம்
மைந்தத் தவிது வேரே கிறிஸ்தோம்.
2. தேவசமயத்தாரே ஒரே சுவி
சேட சன்மார்க்கத்தாரே கிறிஸ்தோம்.
3. நீதியில் பெரியோரே இஸ்ரேல்
சாதியில் பெரியோரே கிறிஸ்தோம்.
4. வானத்தானத்தாரே கிறிஸ்தி
யான் மெய் போதத்தாரே. | - சுந். |
5. உண்மைப் பரமனாரே ஈறாந்த
தின்னம் வருவர் நேரே. | - சுந். |
6. வேதநாயகனே தயா
தேவாதி நாயகனே | - சுந். |
(1849-வரு)
-----------------------------------
(இராகம்: மானவந்தி) | (ஆதி தாளம்) |
ஏலேலமடி ஏலேல மடி
ஏலேலக் குயிலே-மயிலே
பூலோகந்தனில் மேலோகந் தொழும்
ஏலோகீம் பிறந்தார் சிறந்தார்-ஏலோகீம் பிறந்தார் | - ஏலே |
1.வெல்லை மலையினிலே ஒரு விடி
வெள்ளியுதிக் குதையா-ஐயையா
மேசையா வெள்ளியுதிக் குதையா
யேசையா வெள்ளியுதிக் குதையா
செல்லமலையெரு செல்லை மலையிலே
சீவனுதிக் குதையா-ஐயையா
செல்லையா சீவனுதிக் குதையா
நல்லையா சீவனுதிக் குதையா | - ஏலே |
2. வானத்திலே | யிருந்து இதோ வெகு |
மானம் வந்ததையா அதிசய
ஞானம் வந்ததையா மெயச்சமா
தானம் வந்ததையா
நானக் குயிலாரே கலிலேய
மேன்மைப் பயிலாரே விசித்திர
நானத் தொயிலாரே கிறிஸ்தேசு
நாதனை வாழ்த்துங்கடி. | - ஏலே |
3. ஆட்டை காணாமல் தேடித்தேடி
அசந்து போனாரடி கோனாரும்
இசைந்து போனாரடி ஓடி ஓடிப்
பறந்து போனாரடி
காட்டுக்குள் ளெங்கும் சுற்றித் திரிந்து
கண்டு பிடித்தாரடி மகிழ்ந்து
தொண்டு பிடித்தாரடி தோளிலே
கொண்டு சுமந்தாரடி. | -ஏலே |
4. சீயோன் குமரியைக் காணாமல் ஐயர்
சிந்தை மெலிந்தாரடி பொன்னையர்
நிந்தை யடைந்தாரடி கண்ணையர்
பந்த மிகுத்தாரடி
ஞாயமுடன் வேதநாயகன் பாட்டுக்கு
நன்மை தருவானடி நிசம் நிசம்
உண்மை தருவானடி நடுவிட
இன்னம் வருவானடி. | - ஏலே |
-----------------------------------
மூசர கலிமுல்லா முன்னோன் சலியுல்லா
ஆசா மற்றொரு மலீமல்ல - ஈசாவே
சொல்லல்லா றூகல்லா சூலேர சூரல்லா
அல்லல்லா யாமவுலா வோ.
(இராகம்: இந்துஸ்தானி) | (ஆதி தாளம்) |
அல்லல்லா யாமவுல்லா ஆசதில்லா யேசல்லா
ஆநலவா மானுவேலா செலவா காவலா
1.சொல்லல்லா றூகல்லா துல்லிப பொற் கோடிகல்லா
துத்திய செங்கோலோலா சத்திய சங்கா பாலா
2. தேவகுரு பூசுரா சீவ பரமே சுரா
திரித்து வத்தராதரா ஒருத்துவப் பராபரா
3. மேன்மைக்குல சேகரா-ஞானக்கருணாகரா
மித்துரு சிங்காராவே சத்துரு சங்காராவோ
4. உச்சித நிதானமே உன்னத வெகுமானமே
அட்செய தியானமே அற்புத மெஞ்ஞானமே.
5. நம்பும் விசுவாசமே ஞானப் பிரகாசமே
நாட்டமேயதி நேசமே யீட்டமே கதி வாசமே.
6. மாட்டுக் கொட்டிலோ உச்சம் ஆட்டுக் குட்டிக்கோ மிச்சம்
வந்தெனமோ லட்சம் உந்தன் மனமோ பட்சம்.
7. மூசா நபி தீட்டினான் ஈசா உனையே காட்டினான்
முகம் அதுமதி கேட்டினால் அகமகித்தனை நாட்டினான்.
8. வெற்றி ஞானப் பாட்டுக்கும் மிக்கவான நாட்டுக்கும்
வேதநாயகனும் நானே மேசியாவும் நீ தானே.
(1824-வரு)
-----------------------------------