நேயனுபாய னியாயன் திருக்காயன்
தாயன் சகாயன் தயவாயன் - ஆயனொரே
வல்லாயன் றாவிதின் வங்கிடச் செங்கோலோச்சும்
நல்லாயன் யேசு ராஜன்.
(இராகம்: பியாகிடை) | (ஆதி தாளம்) |
நல்லாயனேசு சுவாமி ராஜ தாவீ துடு மகவு
ஒரே மகவு ஆட்டுக்கா யுயிர் தாரார்.
1.எல்லார்க்கும் பெரியானெம் பிரான் றம்பிரான்
ஏக வஸ்தொரே யே யோவா மா
தேவ கிறிஸ்து நீ காவா. | நல்லாயன் |
2. மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய
வானப் பரம குமாராவே யதி
ஞானத்திற மிகும் வீராவே. | நல் |
3. விண்ணாடர் முழங்க மண்ணாடர் விளங்க
மேவிவந்த மேசையாவே படு
பாவி சொந்த மேசையாவே. | நல் |
4. மிக்க ஞான சந்தோட குணாவா
மெயச் சுவிசேட மறை நூலா பர
மப் பிரவடீக மனுவேலா. | நல் |
5. சீராட்டுக் காட்டி யெந்தை யார் தந்தையார்
திருக்கடைக் கண்ணாற் பார்த்தாரே வந்து
திரும்பத் திரும்ப வெனைச் சேர்த்தாரே. | நல் |
6. விருத்த சேதன முறைமையை யடுத்தார்
கிறிஸ்தியே செனப் பெயரெடுத்தார் ரெமை
மீட்க விந்த வேடந் தொடுத்தார். | நல் |
7. ஆட்டைக் கூட்டியோர் தொழுவத்திலடைப்பார்
அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பாரன்
பாகத் தோளினிலே யெடுப்பார். | நல் |
8. வேத கற்பனை யேற் பாட்டுப் பெட்டி
வேத நாயகன் பாட்டுக் கெட்டி யுயர்
தேவ செம்மரியாட்டுக் குட்டி. | நல் |
(1820-வரு)
-----------------------------------
வானச் சுரர்க் கன்று வன்னரகக் கூளிகட்கன்
றீன நரர்க் கென்றே யிறங்கினான் - றானே
நரசொரூபத்தை நலமென்று கண்டான்
பர சொரூபத்தின் பதி.
பர சொரூப மே தேவ
பதி மனுவேல் திருவடிவு.
திருப்புகழ் மேவிய சுந்தர
திரித்து வகாரண விந்தைய
ரொருத்தருங்காணாத் தந்தைய
ரொன்றதா முரிமையின் மைந்தா. | பர |
1.அதமெவை பாதக வடமே
அறவொருமா மரியிடமே
சுதனென மேவிய திடமே
சுரர் தொழு தாடின நடமே
சித ஞானாதி சயமே
தேவாதி பதி நயமே
இத முறு நித்திய ஜீவ
இயேசுராஜ மெய்த்தேவ. | பர |
2. அளவிலடங்காத் திரமே
அட்சயப் பரா பரமே
உளமகிழ் ஞானாகரமே
உன்னதத்தரா தரமே
விளம்பரிய கரிசனமே
மேலான தெரிசனமே
வளமிகுங் கிருபை கூரையா
மானுவேலேசு மேசையா | பர |
3. அரிய கிருபை யினுடைய
அதிபதியே சரணெனையாள்
பெரிய வலமையின் மகிமைப்
பிரதாபி சரணெனையாள்
ஒருவருக்கு மெட்டாத
உன்னதனே சரணெனை யாள்
திருநெல்லையான் கவி நேச
திவ்விய யேசு மகராஜ. | பர |
(1828-வரு)
-----------------------------------
ஒன்றான மைந்தா வொருவர்க் கொரு மைந்தா
குன்றாத் தவிது குலமைந்தா-அன்றேழைப்
பாவிகளுக் கென்று பரிந்து பிணை பட்டு வந்த
தேவமைந்தா நீயே செயம்.
(இராகம்: கேதாரம்) | (ஆதி தாளம்) |
தேவ மைந்தா நரர் சொந்த மைந்தா நீ
ஜீவ தாதா தவி தாதிபன் மைந்தா நீ. | தேவ |
1.ஏவைக் கருமை மைந்தா
இஸ்திரி வித்தான மைந்தா
பாவிகளுக்காய் மெய்ப்
பராபரன் றந்த மைந்தனே. | தேவ |
2. தரை மண்டலத்து மனுச்
சாதிகள் தலைச் சன்மைந்தா
பரமண்டலத் தொரு
பராபரனொன்றான மைந்தா. | தேவ |
3. அருவுரு வான மைந்தா
ஆதிக்கனாதி மைந்தா
மரிதரு மொரு திரு
மானிடவதார மைந்தா. | தேவ |
4. மாது வினை யறுத்த
வாக்குத்தத்தத்தின் மைந்தா
வேதநாயகன் பாடும்
விந்தைக்கிறிஸ்து மைந்தா. | தேவ |
(1824-வரு)
-----------------------------------
அவா தவா யோவா அரூபா சொரூபா
துவா திரித்துவா தற்சுபாவா-திவாமேவு
பாவ மாதிந்தம் பஷாப்பெலி யொன்றா லொழித்த
தேவ ஞானந்த சீவா.
தேவ ஞானந்தமே ஆதிந்தமொரே
ஜீவானந்தா சர்ச்சிதானந்தமே
அறிவானந்தமே பரதேவ | தேவ |
1.தாதைக்கதி பிரியமே சத்தியவேத
போதத்துரிய நயமே
புத்திக்கெட்டாத பரிபூரணமே
ஆதி காரணமே வேதாரணமே. | தேவ |
2. அன்பினனந்த சித்ரமே பாவிகட்கெல்லாம்
அற்புதக் கிருபைச் சமுத்திரமே
இன்பப் பரா பாத்திரி யேகாந்தமே
யருணாதாந்தமே பரம வேதாந்தமே | தேவ |
3. ஆதியினின்ற சத்தமே ஆதமேவாளுக்
கட்சயத்திரு வாக்குத்தத்தமே
வேதநாயகன் பாடு மேசையாவே
கிருபாசனாவே யுமக் கோசனாவே. | தேவ |
(1830-வரு)
-----------------------------------
பாருந்திருக் கடைக் கண் பாவிகள் பாலன் பாக
வாருந்துயர மெலா மாற்றிவியுஞ்-சீரருளு
மெம்பிரான் வானத்திறைவன் பரதேவ
தம்பிரானே சுநாதா.
(இராகம்: செஞ்சுருட்டி)
தேவ தேவ தேவ தம்பிரானே ஏசுநாதா
காவந்த பாவ மறக் கடத்தேற்று பாதா. | தேவ |
1.மன்னுயிருக்காய்ப் பிறந்த வல்லமைப் பிரதாபா
தன்னிகரில்லாத பிதாத்தற்சுய சொரூபா. | தேவ |
2. மட்டில்லா மகத்துவத்தின் மானிடவதாரா
கெட்ட மக்களான வர்க்குக் கிருபையின் குமாரா. | தேவ |
3. உன்னதத்திலிருந்து வந்த உத்தம சருவேசா
மன்னவன்தவீது குல மானுவேலி ராஜா. | தேவ |
4. பரலோகம் பூதலம் பாதல விலாசா
நரனாக மேவி வந்த ஞானப் பிரகாசா | தேவ |
5. முத்தி வழி காட்ட வந்த முத் தொழித் திரியேகா
சித்தம் வைத்துக் காத்தருள் வாய்த் திவ்விய சினேகா. | தேவ |
6. அன்றன் றும் வானவர்களர்ச்சிக்கும் வஸ்துவே
யென்றென் றும் பாவிகளை யிரட்சிக்குங் கிறிஸ்துவே | தேவ |
7. பாது காத் தெமக் கிரங்கும் பரம கிருபாசன்னா
வேத நாயகன் றுதிக்கு மேசியா வோசன்னா. | தேவ |
(1824-வரு)
-----------------------------------
அகாரி யுதாரி அசரீரி வானாதி
காரி விசாரி சரீரி-மகாவாரி
பூசார வேதப் புராதன வாரோன் பிரதான
ஆசாரி வந்தா தரி.
ஆசாரி யருமைக் கிறிஸ்துவே நசராபதி
யென் மேலனுக்கிரகஞ் செய்தாதரி
மாசாரித்திரா பரமேசுரா
வான தந்திரி திரித்துவா சரீரி. | ஆசாரி |
1.சீலா திவ்விய தேவ குணாலா செகம்பர
விலாசா விணோர் பரவு காலா கருணை மனு
வேலா விசித்திர விசரேலா சத்திய வேத
நூலா வனாதி திருப்பாலா வெனைப் படைத்த. | ஆசாரி |
2. சீரா தரும மிகுதாரா பொனி நசரை
யூரா தவிது வங்கிஷ வேரா திருமறையி
னேரா வதிக பல வீரா சருவ சங்
காரா பரம குமாரா வெனைச் சிஷ்டித்த. | ஆசாரி |
3. வேதா மெஞ்ஞான மருள் போதா அனந்தவுக்கிர
நீதா திருவரப் பிரசாதா பராபரனின்
றூதா கதியருளும் பாதா அனைவருக்குந்
தாதா வேசுக்கிறிஸ்து நாதா வெனை ரட்சித்த. | ஆசாரி |
4. கானா வரசு புரி கோனா கடாட்ச வபி
மானா வேதாகம நிதானா அளவில்லாத
ஞானா பரப் பிரம தியானா திமிங்கலத்தின்
யோனா மெய்த் தேவ வனுபானா வெனைப் புரந்த. | ஆசாரி |
5. பொய்யா மறையருளும் மெய்யா பவவினைகள்
செய்யாது தவு திருக்கையா புனித மிகுந்
துய்யா நரக மதினையா தருள் செய்யென
தையா கிறிஸ் தெனுமே சையா உனக்குப் புண்ணியம். | ஆசாரி |
6. தேவா திரிதத்துவ மூவா உயிர்த்தெழுந்த
ஜீவா எவ்வுலகுக்குங் கோவா சலப் பிரளைய
நோவா வேதநாயகன் பாவா வோரே யொருயே
யோவா வெனை ரட்சித்துக் காவா வுனைக்கும் பிட்டேன். | ஆசாரி |
7. சேட்டா பரிசுத்தவர்ச் சீட்டா சீயோன் குமாரி
தேட்டா தபோதனர்கள் கூட்டா பரமண்டல
நாட்டா திருச்சபை மன்றாட்டா வேத நாயகன்
பாட்டா பாவிகளின் கொண்டாட்டா வுனக்கபையம். | ஆசாரி |
(1823-வரு)
-----------------------------------
கூடா தென்றாலுங் குருசிலறை யுண்டு
பாடாய் மரித் தடக்கப்பட்டுமே-ஈடாகி
எப்படியும் பாவிகளை யொப்பாவாக்கிக் கொளவே
அற்புதன் வந்தாரிதரி மின்.
(இராகம்: காம்போதி) | (ஆதி தாளம்) |
எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக் கொள்வதற்
கிப் பூவியிலே யுதித்தார் அற்புதந்தானே
மெய்ப்பரம் புவியுந்தந்த
தற்பரனனாதி பிதா
நற்புதல்வனானா யேசு
நாத கிருபாகரனார். | எப்படி |
1.மட்டில்லாப் பொருள் அனைத்துந்
திட்டமாகவே படைத்து
இட்டமாயனுக்கிர கித்த சிஷ்டி கன்றானே
கட்டளையிட்ட கற்பனை
விட்டொரு சற்பத்தின் வாயிற்
பட்டு நரகத்துக் காளாய்க்
கெட்டழிந்த பே ரென்றாலும். | எப்படி |
2. அச்சயன் மோசேயைக் கொண்டன்
றெச்சரித் தெழுதித் தந்த
உச்சித கற்பனை கடந் திச்சையினாலே
துட்சணப் பிசாசைக் கூடி
மிச்சமாய் பாவங்கள் செய்து
நிச்சயங் கெட்டுப் போனார்கள்
இரட்சிக்கக் கூடா தென்றாலும். | எப்படி |
3. நாற்றிசை யுலக மெங்கும்
ஏற்றிய மானிட ரெல்லாம்
வேற்றுமைப் பசாசின் கையில் ஆற்று மத்தையே
தோற்றனந்த னந்த காலந்
தேற்று தலற் றேகிடந்து
சாற்றருந்த யாபரர்க்கு
மாற்றலரானா ரென்றாலும். | எப்படி |
4. தாக்கிய பராபரணுண்
டாக்கிய அனந்த செல்வ
பாக்கிய யங்களனைத்தையும் போக்கடித்துமே
யோக்கியந் தெய்வ புத்திரச
லாக்கிய மெலா மிழந்து
பேய்க் கடி மை யாட்கள் கேட்டை
நீக்குதற் கேலா தென்றாலும். | எப்படி |
5. புத்திய தெல்லா மயங்கி
முற்றிலு மிருளடைந்து
சத்துரு வான சாத்தானின் கொத்த டிமையாய்
நித்திய வாதைக் குணிரை
பத்தில் விழுவோர்க்குங் கூட
இரத்தத்தைச் சிந்தி யானாலுஞ்
செத்துயிர் விடுத் தென்றாலும். | எப்படி |
6. மேட்டிமை யெல்லாந் துறந்து
காட்டுக் குள்ளிருக்கு கின்ற
மாட்டுக் கொட்டிலிற் பிறந்தோ ராட்டுக்குட்டிபோல்
பாட்டுக்கிட மாயுலகை
மீட்டுக் கொண்டனந்த மோட்ச
வீட்டுக்குட் படுத்த வெல்லை
நாட்டுக்குள் மரித்துயிர்த்து. | எப்படி |
7. கல்லது முருகப் பாடும்
நெல்லையின் வேத நாயகன்
சொல்லு தமிழுக் கருளும் எல்லை யொன்றிலா
வல்லமைப் பிதாவி னோரே
துல்லிபக் குமாரனான
செல்வ மனுவேல் தேவசிம்
மாசனாதி பதி தானே. | எப்படி |
(1827-வரு)
-----------------------------------
அந்தன்றி கந்தனனந்த னனாதி யந்தன்
சந்தன சுகந்தன் சதானந்த-னந்தன்
அரு வானுறாவா அலையான் மலையான்
திருவான் பொருளே ஜெயம்.
(இராகம்: இங்கிலீஷ்)
திருவான் பொருளே யறிவின்றந்தா
யொரு மேன் றெருளே நெறியின் சிந்தாய்
பெரு மான்றரு மானுருவங் கண்டா
யரு மானுருவான் சொரூபங் கொண்டாய்
கருணையின் வடிவே யிரு மறை முடிவே கன
கடுவிட மடமன விருள் விடிவே
கதிவரு விதமே மதிதரு சிதமே பர
கடவுளர் வல முயருமுனதமே. | திருவான் |
1.கனவானவர் தானவர் நன்றுங்கா
கலையா ரணர் பூ ரணர் வன் பூங்கா
கனசே கரசா கரன் மன் சங்கா
தவி ராஜ குலேசர் கடன் பங்கா
அனைமரி மகனே வினை தெரி சுதனே மதி
யதி பிரவை யொளிர் கிருபையின் முகனே
யடிமுடி விலனே கடிபடிவலனே யுயர்
அரியவர் பெரியவர் தொழுநலனே. | திரு |
2. அதி வாஞ்சை யினாஞ்சுகள் முன் சென்றே
யருளாய்ந்து றவேய்ந்துற விண்ணின் றே
துதி கூர்ந்த டிசேர் திரு கண் கண்டே
சுப சாந்த விருத்தாந்த பதங்கொண்டே
துறை யுறை மறையே பறையறை முறையே நிறை
சொலிவர மகிழ் பெருகிய விறையே
சுடர் விடிரவியே யிடர் படுறவியேயடர்
துணை யிரு சரண ருளு முதவியே. | திரு |
3. பரமண்டல மந்திரவம் பரனே
பழுதன் றியுயர்ந்த பரம் பரனே
தரை மண்டல மெங்கு நிரந்தரனே
தயை யொன்றிய துங்க துரந்தரனே
தலையதி பதியே கலைமதி நிதியே விதி
தரும நெறி செறி கருணை நதியே
தவ செப மணியே நவ சுப வணியே குண
சருவ மகிமையினரிய பணியே. | திரு |
4. அதமாதி மானிடர் மன்றாட்டா
வறிவான ஞானி கடன் றேட்டா
பத வேத நாயகனின் பாட்டா
பரலோக ராடிய நன் றேட்டா
இத நய சுதனா மத மய வதனா கத
விட ரலகை யொடு பொருது சதனா
இருதிரு நயனா வொரு குரு வியனாசா
ணெனையடுமை புரி திவிய கையனா. | திரு |
டடிடாம் டடிடாம் டடிடண்டண்டாம்4 times
டடிடடி டடிடாம் டடிடடிடடிடாம் டடி
டடிடடி டடிடடி டடிடடி டாம்.
(1818-வரு)
-----------------------------------
யேசுவே தாவீதின் மைந்தனே யிரட்சியுமேன்
ஒசியன்னா உன்னத்துக் கோலமே-தாசர் கணமே
லையா வுனதன்பு கூருந்து ரந்தரா
மெய் யானந்தத் தற்பரா.
(இராகம்: இந்துஸ்தானி)
ஆனந்தத் தற்பரா கடாட்சித்
தன்பு கூருந் துரந்தரா ஒரே
ஆதமேவை தமக்கருளாயே
தொண்டுகா சீரா ஆதாரா
ஞானந் தந்தற் புதா நடாத்தாய்
நண்பா வன்பா நிரந்தரா. | ஆன |
1.உயர்ந்த பத்து வாழ்த்தில்லாத
துன்மார்க்கருக்கே துற்புத்தி
யூக கிறிஸ்தி யானுக்கு மோட்ச
கிரிட தெருட்சி மெயச் சித்தி. | ஆன |
2. நாச ரேத்தூரான் பரமத்துச் சேயா
னென் றிசைத்து வானத்துச்
சுரர் தொழும் பரம ஆர்ப்பினேசான்
நரர் தொழும் தரும திர்ப்பினாசான்
வாசக தீரா பாதாரா.
3. சாதிகள் வேதாகமத்தியானத்
தால் துதித் தோசியன்னா
தவி தொரு குமர சால்மன் ராஜா
நவ யெரு சாலேம் வான் சருவேசா
வேதநாயகன் பாவாசா. | ஆன |
(1849-வரு)
-----------------------------------
அன்னைமரிபா லவதாரமாய்ப் பிறந்த
உன்ன தப்பிதா வினொரு மைந்தா-நின்னபையம்
வெய்யோன் கீழ் கண்ட தெலா மாயையே மெய்யாமே
சையா வுன தருள் புரி.
(இராகம்: மானஜி) | (ஆதி தாளம்) |
ஐயா வுன தருள் புரி
அருமை மேசையா
பொய்யா மருள் வினை செய்யா துல கதி
னையா தடிமை கொள் துய்யா மெய்யா. | ஐயா |
1.ஆதாரமு நீயலதே திருபாதா
சாதாரண வேத வினோத சங்கீதா
காதார வினவு நீதா வெனின் குறை
தாதா பரகுரு நாதா போதா. | ஐயா |
2. அந்தா தியனாதி பிதா வொரு மைந்தா
சிந்தா குலமே தவிர் நீடு சுகந்தா
உந்தா பரமருள் எந்தாய் ஞானபிர
பந்தா வரு சதானந்தானந்தா. | ஐயா |
3. ஈசா நச ரா புரி மேவிய வாசா
பூசா விதி மாமறை புகழுப தேசா
மாசா மிகு பவ நாசா வெருசலை
ராஜா வொரு சருவேசா நேசா. | ஐயா |
4. அத்தா வருணிடிய மா பரிசுத்தா
கத்தா சுவிசேட கவிராய பிரசித்தா
எத்தா மடவுல கத்தா விடர்பட
முத்தா துயர் கரி சித்தா ணித்தா. | ஐயா |
(1850-வரு)
-----------------------------------
எட்டி நடந்தின்றைக்கே தாவீதினூர் மாட்டுக்
கொட்டிலுக்குள் முன்னணைக்குள் கூசாமற்-கிட்டநின்று
பார்க்க முனம் வருவேன் பாதகனைக் கைதூக்கிக்
காக்க வந்த மெய்க்கடவுளை.
(இராகம்: உசேனி) | (திரிசுர தாளம்) |
பார்க்க முனம் வருவேன் நெருக்கத்தில்
பத்திரமாகக் கரிசித்த மேசையாவை
ஆர்க்கு மிரங்கும் பராபரனின் சுதன்
அன்பின் மனுடவதாரத்தைச் சந்தித்து. | பார் |
1.நிச்சய சாதாரண சத்திய வேதனை
அட்சய ஞானவரப் பிரசாதனை
உச்சித வாக்கிய சுவிசேட போதனை
யிரட்சகரெங்கள் கிறிஸ்தேசு நாதனை. | பார் |
2. திரித்துவத்தின் மகத்துவவே தம்
பொறுத்த வுண்மை பரிசுத்த போதம்
மறுத்தவர்க்கு வழங்கிய நீதங்
கிறிஸ்து நாதர் தந்தேவ பொற் பாதம். | பார் |
3. யெருசலே மிசறேலரின் சொந்தம்
பரம சேனைகள் பாடும் பிரபந்த
முருகும் நெஞ்சக் கருணை யானந்தந்
திரு மனுவேலர் பாதார விந்தம். | பார் |
4. முற்பிதாக்கள் விரும்பிய நாட்டஞ்
செப்பு மாதி பிதாவின் சிரேஷ்ட
மெப்புவிக்கு மெவர்க்குங் கொண்டாட்ட
மொப்பிலானின் றிரு வினையாட்டம். | பார் |
5. ஆசைக் கிறிஸ்துண்மை யான நல்லாயனை
ஆற்றும நாயகரான என்னேயனை
பாசவலையிற் கைதூக்கின நாயனைப்
பக்கிஷமாய்க் காத்த முக்கிய சகாயனை. | பார் |
6. ஆச்சரியமான நேசத்தை பாசத்தை
அன்பின் திருமுகத்தை யைந்து காயத்தைக்
காட்சி தருமிரு பாதத்தைப் பாவியைக்
கை தூக்கிவிட்ட கரத்தையு ருத்தாக. | பார் |
7. சித்திர நெல்லையான் பாட்டின் விவேக
நித்திய தேவ பிரிய சினேகப்
பெத்தலேகே மாட்டுக் கொட்டிற்குளேக
அத்தியந்த பய பத்தியதாக. | பார் |
(1833-வரு)
-----------------------------------
பெத்தலேகேமிற் பிதாவின் றிரு வுளத்தா
லித்தரையோர் யாவரு மீடேறவே-சித்தம் வைத்துப்
பண்டுதித்த ஞானந்திர சோதி பாதுகா
அண்ட சக்கராதி பப் பரா
(இராகம்: காப்பி) | (ஆதி தாளம்) |
அண்ட சக்கர ஞானேந் திரசோதி
மனுடனான திட்டாந்தர நீதி.
1.பண்டு படு கொடிய வண்டிடலகை பய
மண்டியழ லெரிய விண்டவதிக செய. | அண் |
2. பொங்கு முலகில் வரு மெங்கள் பரம குரு
துங்க மகிமை தரு சங்கை யரச னொரு. | அண் |
3. அம்பர குருபர உம்பர்கள் சுரநர
ரும்பெற அருடர நம்பினேன் முனம்வர. | அண் |
4. வஞ்ச மடையர் பயமிஞ்சு துனத பையம்
அஞ்சல் புரி சமைய நெஞ்ச மிடு முதையம். | அண் |
5. பொன்ற விழு கழுது சென்று சமரிடுது
நின்று னருள் செய்வது நன்று தருண மிது. | அண் |
6. வெல்லை யினதிதவ நல்லை யனருணவ
சொல்லை யனுடசுப நெல்லையனணி செப. | அண் |
(1850-வரு)
-----------------------------------
அணியா யழகா யாவியான் மெய்யாற்
றணி வாய்ச் சருவேஸ் பரனைப் - பணிவதுவே
பாக்கியஞ் சதா நித்தியம் பாவிகளுக் கெல்லாம்
மனோக்கிய மா ரோக்கியம்.
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
பரனைப்பணிவதுவே பாக்யம் நித்யம்
பாவிகளுக் கெல்லா மனோக்கியம் ஆரோக்கியம்
1.கருணைப் பரம வான காட்சி யனந்த ஞான
பெருமைப் பொருள் நிதான பேறுதரு மொன்றான. | பர |
2. அன்பு தரும் சிநேக ஆற்றும மகிழ் விவாக
இன்ப மிகுந் தெய்வீக ஏகத்துவ திரியேக. | பர |
3. நித்ய மகத்துவதீத நீதிக்கள வில்லாத
சத்ய கிறிஸ்துநாத சமஸ்த நன்மை பிரசாத. | பர |
4. வானம் புவி படைத்த வையத்திருள் துடைத்த
ஞான நன்மை யுடைத்த நரர்க்குக் கிருபை கிடைத்த. | பர |
5. ஈறில்லானைக் கோனை எட்டுக் குணமுள் ளோனை
மாறில்லா தன்பானை மாந்தர்க்கென வந்தானை. | பர |
6. தந்தை இரங்கி தந்த சாதிக்கருள் சிறந்த
மைந்தனெனப் பிறந்த மகத்துவப் பரமானந்த. | பர |
7. மாசில்லாப் பிரகாச மகிமைத் திருவிலாச
நேசமிகும் சர்வேச நித்ய கிறிஸ்துராச. | பர |
8. வெற்றி மிகும் கொண்டாட்டு வேத நாயகன் பாட்டு
முற்று மகிழ்ந்து கேட்டு மோட்சம் தரும விண்ணாட்டு. | பர |
(1828-வரு)
-----------------------------------
தீதடராதே யடியார் தேவ சுரர்களோடுறவே
மாதிடநிடூழிபார் மாதேவா-ஆதியிலே
வேததுராசார நிராதார நராண்மீதசார
நீ தபரா நீ தவறாதா.
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
நீ தவறாதா நீ தாபரதாதா
அத்தா கர்த்தா பத்தா.
சோதி யுன்னதமான நேமி
சுந்தரக் கிறிஸ்தேசு சுவாமி. | நீ தவ |
1.அந்தர சொர்க்கம் அனந்த கோடாகோடி
அண்டமுமுண்டு செய்தா தரித்தாண்டருள்
தந்தையனாதி பிதாவினொரே யொரு
தற்சுயரூப குமார தயாபரா. | நீ தவ |
2. அட்சய தேவ மகத்துவ காரண
அற்புத ஏக திரித்துவமாகிய
முச்சுடரே வந்து ரட்சித்தடிமையை
முற்றினுங் காத்தருள் நித்ய கிருபாகர. | நீ தவ |
3. மங்கள இங்கித லங்கிருத சங்கீத
வாத்திய கீர்த்தனத்தால் தொழுதேற்றிய
துங்கன் தவிதிசறேல் வங்கிடாதிப
துத்திய சுபுத்திர சமுத்திர கிறிஸ்த்துவே. | நீ தவ |
4. ஞானமிகும் பரிசுத்தமும் நீதியும்
நன்மையும் ஓங்குமோ ருண்மைப் பிதாசுதன்
வானவர் பூதலர் பாதலத்தோரும்
மகிழ்ந்து பணிந்து வணங்கும் பராபரா. | நீ தவ |
5. சத்துருவாகிய ஆதிசர்ப்பத்தின்
தலையையுடைத்த சங்கிராம கோலாகலா
மெத்த மெத்த வேதநாயகன் பாடிய
மெய்யான யேசுக்கிறிஸ்து மேசையா. | நீ தவ |
(1828-வரு)
-----------------------------------
மனுட குமாரா மானிடவ தாரா
தனுட கிருபை தவறாதா-எனுடனிரு
சத்திய நாதா நர வதார சருவே சுரா
உத்தம போதா ஒரு பரா.
ஒரு பரா பரகா ரண தேவா
உனத வாழ்வரு னித்திய சீவா
1.திரு வுலாவிய தாவிது பாவா
திவியமா கிய வோரே யோவா. | ஒரு |
2. உத்தம பாலா பக்தர் பரி பாலா
வித்தக நூலா வெற்றி மனு வேலா. | ஒரு |
3. அற்புத நாதா சற்பிர சாதா
தற்பர நீதா பொற் புறு பாதா. | ஒரு |
4. உன்னத வாசா பொன் னகராசா
என்னொரு நேசா மன்ன சருவேசா. | ஒரு |
5. நன்மை களோங் கப் புன்மை களேங்கத்
துன்மை கனீங்க வன்மை கடாங்க. | ஒரு |
6. திரு நெல்லை யானே தரு சொல்லை யானே
வரும் வெல்லை யானே யெரு செல்லை யானே. | ஒரு |
(1835-வரு)
-----------------------------------
பாருலகிற் பேய்க் கடிமைப் பட்ட வெனை மீட்கவா
ஆருமுனைப் போலெனக் கன்பா வாரோ-வீரியனே
கீர்த்த னமையா கிறிஸ்துக் கிருபா கரனே
தோத்திர மையா தோத்திரம்.
(இராகம்: கேதாரகௌளம்) | (அடதாளகாப்பு) |
கிருபா கரனே தோத்திர மையாயேசு
கிருபா கரனே தோத்திர மையா
தோத்திர மையா நித்ய தோத்திர மையா என்றும்
கீர்த்தன மையா சங் கீர்த்தன மையா
1.சருவே சுரனே தரும சாகரனே
திரியேக பரா பரனின் றிருமகனே. | கிரு |
2. பரலோ கணியே படியோர் பிணையே
மரியாளருள் மா தவ மா மணியே. | கிரு |
3. யேசு நாயகனே ஏகமா கினனே
மேசியா சருவதரா தலவியா பகனே. | கிரு |
4. தற்பர திரித்து வமே கிறிஸ்து வாந்த வமே
இஸ் பீரித்துச் சாந்துவி னாலயமே ஜெயமே. | கிரு |
5. மூலாதி பாலா மெய் நூலா செங் கோலா மனு
வேலா சீலா அனு கூலா கோலா கலா. | கிரு |
6. ஆதியான வனே அருள்வான வனே
வேத நாயகன் பாடலை மேவு வனே. | கிரு |
7. இப்பார் கொரு சேய் இஸ்ரவேல்க் கரசே
அப்போஸ் தலரா ரிருபேர் சிரசே. | கிரு |
8. அற்புத காரணனே அட்சய ஆரணனே
தற்பர சொரூப தயாபர பூரணனே. | கிரு |
(1799-வரு)
-----------------------------------
ஓ சனா தாவீதின் பாலா வுயர் கிறிஸ்து
மாசில்லா ஞான மனு வேலா-மேசியா
யீசாவி யேசு விராசா சரு வேசா கருணை
நேசா எனையாள் நிதம்.
(இராகம்: தோடி) | (ரூபகம்) |
இயேசு ராஜா எனை ஆளும் நேசா
1.மாசில்லா மணியான முச்சுடர்
மேசியா அரசே மனு
வேலே மாமறை நூலே தேவ செங்
கோலே இங்கெனின் மேலே அன்புசெய். | இயேசு |
2. அற்புதப் பரஞ் சோதியே சீனா
வெற்பில் ஓங்கிய நிதியே எனக்
காக மாதய வாக மானிட னாக
மாமரி யாளிடம் வந்த. | இயேசு |
3. பக்தர்கள் போற்றும் பரா பரா எனக்
குத்தம ஞான தயா பரா
பரமே சுரா சருவே சுரா
கிருபா கரா சனசே கரா திவ்ய. | இயேசு |
4. தாவீத ரசன் மைந்தா நின்
சரணம் சரணம் எந்தாய்
சதா னந்தா ஆனந்தா உவந்தாள் மிக
வந்தனம் வந்தனம். | இயேசு |
5. ஐயா என் மன மாற்றியுன
தடிமை எத்தனைத் தேற்றி குண
மாக்கி வினை நீக்கி கை
தூக்கி மெய் பாக்கியம் கொடும். | இயேசு |
6. சுத்த திரித்துவ வஸ்துவே சுவி
சேட மகத்துவ கிறிஸ்துவே பரி
சுத்தனே கரி சித்தெனை
இரட்சித் தடிமைகொள் நித்தியம் தோத்திரம். | இயேசு |
7. மங்கள மீசாவே வளமிகுஞ்
சங்கையின் இராசாவே நரர்
வாழ்வே மன்னாவே மெய்த்
தேவே உமக்கோ சன்னாவே. | இயேசு |
8. வேதநாயகன் பாட்டை அன்று
விண்ணவ ராடிய ஆட்டைமிக
மெச்சி மகிழ்ச்சி சொலச்சுப உச்சித
மிச்சமிச்சஞ் செயுமட் செயதேவா. | இயேசு |
(1799-வரு)
-----------------------------------
ஆறுமுனையன்றி யெனக் கானவுற வாவாரோ
பாருலரகும் பேயும் பகையன்றோ-காரும்
அடைக்கலமையா அருளேசு நாதா
கடைக்கண்பார் பார் கருணையாய்.
(இராகம்: ஹரிகாம்போதி) | (ஆதி தாளம்) |
யேசுநாதா கடைக்கண்பார் கிருபையாக
யேசுநாதா கடைக்கண்பார்.
1.மாசிலா வஸ்துயர் பிரகாச நேர்முத் திரித்துவ
மேசியா மெய்ப்பரத்து நாசரேத்துக் கிறிஸ்து. | யேசு |
2. காவிலாதத்தின் மங்கை யேவை யாரக்கிரமங்கள்
தேவகோபத்தில் வந்த யாவுமாறப் பிறந்த. | யேசு |
3. ஏவாள் பறித்து கந்த பாவாசையைக் கடிந்த
தாவீதர்ச்சிக்கு மைந்ததேவா செகத்தில் வந்த. | யேசு |
4. உன்னதத்திலே யிருக்கு முன்னதப் பரமருக்கும்
இன்னிலத்து நரருக்கும் பின்னுமுறவைப் பெருக்கும். | யேசு |
5. மண்ணின்மீதே நரரும் விண்ணின்மீதே சுரரும்
புண்ணியா வென்றுருகு மெண்ணிலா நன்மைமிகும். | யேசு |
6. ஆதாம் விழுந்த வினையாலே யழிந்த வெனை
வேதா நடத்துந்துணை வேறார்சொலுங் கருணை. | யேசு |
7. துட்டலகை கெட்ட தலைப்பட்டழிய விட்டரிய
சிட்டர்களுக் கிட்டமருள் மட்டளவில்லா மகத்துவ. | யேசு |
8. மிக்க பரம்புவிக்கும் வேதநாயகன் கவிக்கும்
பக்கிஷ மனவுருக்கப் பரம திருவிரக்க. | யேசு |
-----------------------------------
நன்றி யறியாத நன்மை சற்று மெண்ணாத
வொன்று மனதி லுணராத-கன்றாத
பக்கிஷமிலாத கனபாதகனைக் கைதூக்கி
மிக்கவருள் செய் மேசியா.
(இராகம்: முகாரி)
மேசியா
யேசுநாத யே யோவா
இம்மானு வேலே காவா. | மேசி |
1.மேசியாவாக வன்று மீட்க வருவாரென்று
தாச ரெழுதித்தந்த சாஸ்திரப்படி பிறந்த. | மேசி |
2. செல்லுதற் களவில்லாத தூயபரிசுத்த நீத
வல்லமை தேவப்பிரசாத மகிமைக் கிறிஸ்துநாத. | மேசி |
3. அத்தனை தேவகோப மாற்றியருள் தயாப
வித்தக ஞானதீப மிக்கநன்மைப் பிரதாப. | மேசி |
4. சத்துரு வினைக்கும் வஞ்சம் சற்பினை நினைக்கும் நெஞ்சம்
கர்த்தனே என்பெலன் கொஞ்சம் காப்பாற்றுவா யுன்தஞ்சம். | மேசி |
5. வானில் விளங்குமன்னா வடிவத பரஞ்சிபொன்னா
ஞானமிகு விற்பன்னா நாளுமுமக் கோசன்னா. | மேசி |
6. பாவியை முகம்பாரும் பக்கிஷமாக வாரும்
ஆவலா யென்னைச்சேரும் ஆசீர்வாதந் தாரும். | மேசி |
7. வேதநாயகன் பாட விண்ணவரெல்லாம் கொண்டாட
நீதியின் வழியைநாட நித்திய மகிழ்ச்சிசூட. | மேசி |
(1811-வரு)
-----------------------------------
வந்தித்திடையர் வணங்க முச்சாஸ்திரிமார்
சந்தித்துப் போற்றுஞ் சரணமே-தந்தான
வியாபகமா யெங்கும் விளங்கும் பரம
தயாபர தேவா சுவாமி.
தயாபர தேவ சுவாமி
கிறிஸ்தாதி மைந்தா.
1.சயா நிறைவாகர சதாசிவ சேகர
மெய்யான மனோகர வியாப கருணாகர. | தயா |
2. அந்தரவான சுந்தரஞான
தந்தைநிதான மைந்தன் மெய்யான. | தயா |
3. மிக்க பரிபூரண வேதவுதாரண
அக்கிரம நிவாரண அற்புதாதி காரண. | தயா |
4. மேன்மைச் சருவேசா விண்ணவர் விலாசா
ஞானப் பிரகாசா நசரேசு ராசா. | தயா |
5. வந்தெனைப் பாரு மந்தையிற் சேரும்
நிந்தனை தீரும் நின் கிருபை கூறும். | தயா |
6. வேதநாயகன் பா மேவு பேரின்பா
ஆதரி நண்பா அருள் கிறிஸ்தன்பா. | தயா |
(1838-வரு)
-----------------------------------
அளவில்லா ஞான யளவில்லா நன்மை
அளவில்லா வல்ல பத்தினாலே-வளமையா
எல்லாம் படைத் தாளித் திரட்சிக்கும் வல்லவா
அல்லாயி யேசு மகராசே.
(இராகம்: கியால்)
அல்லாயி யேசு மகராசே
கிறிஸ்து பரதீசே பல
கர்த்த ருரைத்த மோசே.
சொல்லாந்த வாரி சுந்தர சிங்காரி | அல் |
1.சருவாந்திரியாமி தயவுசெய் நேமி
சற்சிதானந்த குருசாமி பல. | அல் |
2. தற்சுய சொரூபி சருவ வியாபி
சத்திய பரிசுத்த ரூபி பல. | அல் |
3. ஆரணப் பிரகாசா அக்கிரம வினாசா
பூரணக் கிருபை விலாசா பல. | அல் |
4. பக்தர் பரிபாலா பத்த ரனுகூலா
கத்தா கருணை மனுவேலா பல. | அல் |
5. மூவா முதல்வா முன்னவா பின்னவா
காவா சீ வா வொரே யோவா பல. | அல் |
6. காத்தருளுமையா காரணக் கிருபையா
தோத்திரந் தோத்திர மேசையா பல. | அல் |
7. வேதநாயகன் பா வோத வருளன்பா
மேலான மோக்கிஷ பேரின் பா பல. | அல் |
(1849-வரு)
-----------------------------------
சித்தமுருகிச் செபஞ் செய் தழுகிறேன்
நித்த முன் பாதத்தி லென் கண்ணீர் சொரியுங்-கத்தா
எருசலைத் தாவீ திறை குமார வேக
பர குமரா கண் பாரை யா.
பரகுமாரா யெருசலைத்
துரைகுமாரா ஓ குமரையா
1.கருணைஞான வாருதியனற்
கம்ப மேவிய சம்பிரமஞ்செறி
கடற் கலங்கிட வடிக்கு மிங்கித
முனி வணங்கிய சரண பங்கையா. | பர |
2. இருளற வருநர பராபர
யேசு நாதனே யுயர்ந்த
யெந்தையாபர சொந்த மைந்தனம்
மங்கை மா மரி தந்த சுந்தரம். | பர |
3. அதிசய சுய சருவ வல்லப
ஆரணப் பிரகாச வர்ச்சய
துதிமுழங்கிய நசரையம் பதி
தனில் விளங்கிய தவிது வந்தனம். | பர |
4. சீவியக் கிருபாசனந் தனிற்
சிறந்து வீற்றிருந்து கந்து வானவர்
ஓவியமாய் வேத நாயகனும் பா
உன்னத மங்களஞ் சொன்ன சங்கீர்த்தனம். | பர |
(1849-வரு)
-----------------------------------
வந்தன மையா வணங்கிறோம் பாதார
விந்தந் துணை யல்லால் வேரில்லை-யந்தந்தோ
ஆகாத பாவிகளை யன்பாகக் கா கா கா
ஓ கோ கோ துங்க சீவி.
ஓ ஓ ஓ துங்க சீவி பரிசுத்த
ஓ மகத்துவ தேவா.
சீரங்க பரம காட்சி திவ்விய
நித்திய குமாரா. | ஓ |
1.மேலோக வானந்த பரமனீ
பூலோக மீதிரங்கி இஸ்திரி
மாமரி சந்த மாதா மைந்தனாக வந்தவா
ஓலமோலமே யுனது சரணங்கா
உனத வஸ்துவாகிய திவ்விய ரூபஞான
உலாச சருவ வுலகொரு மத்திஸ்த
இயேசு ராசா மனுவேல். | ஓ |
3. வேதாக மங்களி னுருவ நீ
தீதான பாதகங் களற்ற வஸ்
தாதி யானந்த நாதா சொந்த வாதி மைந்தனே
நீதி யாசனா நெறியின களங்கா
நிமல கிறிஸ்து நாயக நித்திய யேயோவா
நிதான சமஸ்த பூலோக ரட்சகா
நீயேசு ராசா மனுவேல். | ஓ |
4. வானோர் கணந்தொழு மரசனீ
கானானு தேச மெங்கும் விஸ்
தார சனங்களோடே யஞ்சல் கூறுந் தஞ்சமே
ஞானாதிக்கமே நசரைப் பதியின் கோ
நாமகீர்த்தன வேதநாயகன் பா
தானான திரித்துவ யேகத்துவா சரி
சாமி யேசு ராசா நி புணா. | ஓ |
(1849-வரு)
-----------------------------------
வையக மெலாஞ் செழிக்க மானிட ரெலாம் பிழைக்க
உய்யு முயிர் யாதுந் தழைக்கவே-செய்யுஞ்
சருவாதி பத்திய தரும சருவேசா
கிருபா தயாப கிறிஸ்து.
கிருபா தயாப சத்திய ராசா
மெஞ் ஞான சத்திய ராசா
இயேசு கிறிஸ்து ராசா.
1.சருவாதி பத்தியமே தப்பிலா நித்தியமே
சரணஞ் சரணமேசு திரித்துவமே. | கிரு |
2. உத்தம திரு வாசன சுத்த ஞானப் போசனா
உன்னத பத்திரா சனத்துக் கோசனா. | கிரு |
3. சேனையின் கத்தாவே சீவ ஞானப் பத்தாவே
திரியேக வஸ்து மகத்துவ பிதாவே. | கிரு |
4. பாவிகளீ டேறவே பாதகங்கள் மாறவே
பாதார விந்த மிளைப் பாறவே. | கிரு |
5. மைந்தர்கள் பிழைக்கவே வையகஞ் செழிக்கவே
வந்தனம் வந்தனம் இரட்சியுந் தழைக்கவே. | கிரு |
6. வேத நாயகன் பாட்டா மெய்ச்சபை கொண்டாட்டா
விந்தை யானந்தந் திரு விளை யாட்டனே. | கிரு |
-----------------------------------