நேம வேத விதிப்படி மேசியா
நீடிப் பாவிகட் காயு யிரீயவே
சீமன் சிரேனய னோடு நடந்துமே
செல்லுங் கொல் கதா வீதியிற் பாரமாம்
வாமநீள் குருசைச் சுமந் தேங்கியே
வாடிப் போகுந் தடத்திற் புலம்பியே
சாமியைப் பின்றொடர்ந் தெரு சால் மின்
சங்க மாதர் தவித்தனர் சாலவே
(இராகம்: முகாரி) | (ஆதி தாளம்) |
இயேசு சுவாமி ஐயா சிலுவை யோடு
எவ்விடம் செல்வதையா சிலுவை யோடு
எங்கே சொல் தயையா மிக
ஏங்கியே துயர் தாங்கியே பறந்
தேங்கிய நடையாய்.
1.மாசில்லாத பரா பரப்பிரம
மன்னாயே யோவா ஆதி
மாந்தர் செய்வினை தீர்ந்தகலவோ
நேர்ந்த பாதை யந்தோ | - இயேசு |
2. சீ மோன் சிரேனையனோ சரிநடை
சேர்ந்து சுமப் பானோ திகழ்
பூமி அந்தரவான மெண்டிசை
பூரணனுன் சுமையை | - இயேசு |
3. கொல்கதாப் பாதையிலே பகலின்
கொடூர வெயிற் பொழுதில் சுமை
கூனியே கொண்டு சோரி மண்டிது
வண்டிடச் சென்றிட வே | - இயேசு |
4. வெட்ட வெளியினிலே பொடிச் சுடும்
வீதி கொதிப் பினிலே திட
மேனி வெம்பி விடாய் நிரம்பி
தளம் பியே துன்புறவே | - இயேசு |
5. மாத ரழுது வர எருசலை
மக்கள் கலக்க முற முகம்
வாடியே வழிக் கூடியே எமைத்
தேடிய பாதை இதா | - இயேசு |
6. சிந்தை நடுங்குதையா எம்பாதகந்
தீர்த்திட வேதனை யோ முழுத்
தேகம் யாவும் அநேக நேகமாய்ச்
செந்நீர் ஒழுகு தையோ | - இயேசு |
7. நீதி நிறை வேறப் பிதாவின்
நெடுந்தீர்ப் பானதுவோ படு
மேதினி பவச் சாதியார் துயர்
பேதித்த கற்றிடவோ | - இயேசு |
8. சங்கை மகராஜா கிருபையே
தங்குங் கதிவாசா கவி
தாசன் எலியா பேசு மேசியா
மாச காயா நேயா | - இயேசு |
-----------------------------------
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
சரணே மகத்துவ தேவா சரணா திந்தமே
அருணோ தயப் பரம சீவா அருளானந்தமே
1.திருவாசகப்படி தேவா திபனார் மைந்தனே
குரு சானதில் கொலை யானார் நரர் பாவங்களே | - சர |
2. கரமே துளைத் திருப்பாணி இரு பாதங் களே
சிரமேவு முண்முடி வாதை பர தாபங்களே | - சர |
3. தலையான கள்ள னென்றாற்றிச் சதிக் காரர்க் குழாங்
கொலை பாதகர்க் கிடையாகக் குரு சேற்றச் செய்தார் | - சர |
4. எரிபோ லெரிந்து பொல்லாதார் எதி ராக்கிரம மாய்ப்
பரிகாச நிந்தை சொன்னாரோ குருவே சையனே | - சர |
5. அழியாத நித்திய சீவன் அருளாதித் தனே
பழுதான தொன்று மிலாத பரனே அம்பரா | - சர |
6. முழு லோகத்தின் பவந்தீர்க்க முதல்வா வந்தனம்
பழி காரனைக் கதி சேர்த்த பரிவே தஞ்சமே | - சர |
7. கள்ளனைக் கதி சேர்த்தையே கருணாம் பரமே
பிள்ளை கணாங்க ளல்லவோ பிழையே பொறுப்பாய் | - சர |
8. கொலைகாரர் கொடுத்தகாடி குடித்தானந்தமாய்
தலை சாயத்துயிரை விட்டீரோ தயவே அம்பரா | - சர |
9. சீவனைத் தந்த தெய்வமே திரியேக த்துவமே
பாவியோ டொப்புர வாகும் பரமானந்தமே | - சர |
10. உலகத் தினுயிர் வாழ்க உயிரே தந்தவா
கலகத்தின் வலி நீக்கிக் கதி சேரும் பரா | - சர |
11. குத்துண்ட இதயத் தெழும் இரத்த முந் தண்ணீருமே
பத்தர் பவத்தை நீக்கவே பரிந்தாளையனே | - சர |
12. அடைக் கலமைந்து காயம் அடியார் சொற்கமே
படைக்கும் பகைக்குங் காப்பாய்பத தோத் திரமே | - சர |
-----------------------------------
(இராகம்: ஆரபி) | (ஆதி தாளம்) |
ஆதி வேதனே பிராண நாதனே
அந்த நந்த வனப் பாம்பு வந்துனைத் தீண்டலாச்சோ
1.ஆ என் பாவமோ தேவ கோபமோ
அத்தனே முனாதி சர்ப்பம் கொத்தின கொடூரந் தானோ | - ஆதி |
2. எங்கே ஆறுவேன் மனந்தேறுவேன்
இந்த உலகந்தனில் மடிந்துயிர் பிரிந்த கோனே | - ஆதி |
3. ஆவி போகுதே மனம் நோகுதே
ஐயனே சிலுவைதனில் உய்த்ததென் பாவந் தானோ | - ஆதி |
4. ஆலப் பாம்புனின் காலைக் கீறு மென்று
அத்தனார் உரைத்த வாய்மை இத்தகை முடிந்ததன்றோ | - ஆதி |
5. மேசியா மனா இயேசு நாமனா
வேதநாயகன் புலம்பல் பாதகி மனங்கலங்க. | -ஆதி |
-----------------------------------
(இராகம்: ஹரிகாம்போதி) | (ரூபக தாளம்) |
ஏதன் காவடர் தீதை நீக்கவோ
ஏத மற்ற பரன் இணை யொன்றிலன்
நரன் சொரூபன் பரனே
ஏகியே ஏகியே மரித்தார் குருசிலே
யாவரும் உய்யவே. | - ஏதன் |
1.காலைக் கொத்தின ஆலச் சர்ப்பத்தால்
காலம் வந்ததையோ இறந்தனையோ
கடும் தயையோ பரனே
காதலா காதலா எனை மீட்க வந்த
கருணைக் கிறிஸ்தையா | - ஏதன் |
2. ஏது செய்துய்வேன் பேதையாளினி
எவ்விதம் பிழைப்பேன் உயிர் தழைப்பேன்
மனஞ் சகிப்பேன் பரனே
ஏங்கிறேன் ஏங்கிறேன் எனின் பிராண நாதனே
இரட்சியும் இரட்சியும் | - ஏதன் |
3. பொன்னைச் செய்தொழில் விண்ணை யாளுமா
பொன்னையா பின்னையா ரெனக்கன்னையா
இரு கண்ணையா பரனே
பூபதி பூபதி எருசாலே மா நீதி
பொன்றினதே கதி | - ஏதன் |
4. மாதனை பவம் வேதனைக் கிடம்
வைத்து நேர் பலித்தோ அருள் கருத்தோ
தயை மிகுந்தோ பரனே
வாடியே வாடியே குரு சூடிறந்தனை
மன்னவா முன்னமா | - ஏதன் |
5. வாரடியுடன் முண்முடி வைத்திவ்
வாரடித் தனரோ படுத்தினரோ
வதைத்தனரோ பரனே
மட்டிலான் மட்டிலான் மூன்றாணி யிற்றொங்க
வந்த தோமா விதி | - ஏதன் |
6. கொல்கதா விலே ஒல்கியே யுயிர்
கொல்ச் செய்தனரே ஆசாரியரே
வேத பாரரே பரனே
கோபமா கோபமா அடமே மிகுத்திந்தக்
கோரணியோ கொண்டார் | - ஏதன் |
7. ஆறவும் மனந் தேறவும் வழி
ஆரிடம் பெறுவேன்
தயை மறவேன்
உலகு றவேன் பரனே
ஆசையாய் ஆசையாய் எனை மீட்க வந்தமா
அம்பரா உன் சரண் | - ஏதன் |
-----------------------------------
(இராகம்: பைரவி) | (ஆதி தாளம்) |
கர்த்தனே காவுனதா விடப்
பாம்பு கொடுந் தீம்பு திருக்
காலை வருந்தினதா.
சித்தமாய் இவ்வுலகில் உற்ற கிறிஸ்து வேதா
தீ வினையோ வினையோ எனமோ ஐயோ
பாவி என்மேல் தயையோ இதுவேதான்.
1.கடிவினை கொடி தாகவே ஏவை
இடத்தில் பட படத்துக் குடி
கெடுத்த அதக்கிரம-கடிவினை கொடிதாகவே
படுசாப மியாவுந் தீர்க்க
இடு பலிக் கும்மைத் தாக்க
பத்தர் பவத்தை யகற்றி மகத்துவ
முற்ற திரித்துவ கிறிஸ்து மரித்தையோ | - கர்த் |
2. அண்ணலே அருமை மணியே ஆக
மஞ்ச மணில் துஞ்ச வரும்
வஞ்சவினை தணியே - அண்ணலே அருமை மணியே
கண்ணாற் காணொண்ணா தேவா
புண்ணா மைங்காய யோவா
புண்ணிய பாவமோ எண்ணிலா நேசமோ
விண்ணையு மீயவோ மண்ணிலே மாண்டையோ | - கர்த் |
3. ஒன்றான தேவ குமாரா உல
கடுத்து வினை தடுத்து தயை
கொடுத்து திடத்து பரா - ஒன்றான தேவ குமாரா
என் றுனையான் பார்த்துய்வேன்
சென்றாயினி என் செய்வேன்
எங்குபறந்து செல்வன் எவ்விடந்துயர் துலைப்பன்
இதுக்கோ மனு உருவம் எடுத்து மடிந்தாய் ஐயா | - கர்த் |
4. குருசேறி இறந்தாயோ புவி
குலுங்கக் கடி கலங்க நடு
விளங்கத் துயர் பட்டையோ - குருசேறி இறந்தாயோ
மரண கஸ்திகள் சூழ்ந்து
இரண முதிர மெய் பாய்ந்து
மாயவு மானிரோ தூயனே நேயனே
ஆயனே சொல் எலியாவின் சகாயனே | - கர்த் |
-----------------------------------
(இராகம்: ஹரிகாம்போதி) | (ஆதி தாளம்) |
பாடிப் புகழ் சொலவே பதம்
நாடி மகிழ் கொளவே
பட்ச மிச்ச இரட்சகனேசுவை
பாடிப் புகழ் சொலவே.
கூடி யிசைவாக அருகோடி நிசமாக
கோதை மேதை வதை சிதைய வே | - பாடி |
1.தலையே நீ வணங்காய் தலை முண்முடி வாதையினால்
தலையாம் துற்பவம் போக்கும் தலைவனை
தலையே நீ வணங்காய் | - பாடி |
2. கண்காள் காணீர்களோ - கண்ணால் பேதுருவைக் கனிந்து
கண்மணிபோல் கண் காணித்த கண்ணணை
கண்காள் காணீர்களோ | - பாடி |
3. செவிகாள் கேளீர்களோ செபித் தேற்றும் அருள் வோமெனும்
சிவஞான நித்திய சீவ வசனத்தை
செவிகாள் கேளீர்களோ | - பாடி |
4. மூக்கே நன்மணமே ஈசாக்கு ஏசா அறிநேர்
முக்காலத் தபிஷேக மதலையாள்
மூக்கே நன் மணமே | - பாடி |
5. வாயே வாழ்த்துரையே மனவாக்குணர் மெய் நினைவால்
மாயா மெய்க் கிறிஸ்தாயனை வாய்மையாய்
வாயே வாழ்த்துரையே | - பாடி |
6. தோளில் சிலுவை தொட்டார் நம் தோள் சுமை நீக்கிவிட்டார்
தோழனாகத் தோன்றலுமானார்
தோளில் சிலுவைத் தொட்டார் | - பாடி |
7. கரனேரேறெடு மேகரும் பேய்வல் வினைதணிய
கரங்கால் ஆணிகடாவச் சகித்தோனை
கரனேரேறெடுமே | - பாடி |
8. முழங்கால் படியிரோ முனங் காவிலிறைஞ் சினனை
முணங்கா முழங்கா முனங்கா வெனவே
முழங்கால் படியிரோ | - பாடி |
9. உள்ள முருகிரோ குருசில் உள்ள நம் வள்ளலுக்கே
உள்ளதுள்ள துன்னதன் உண்மையே
உள்ள முருகிரோ | - பாடி |
10. தெண்டனிட்டே தொழுவீர் நரக தெண்டனைக் கேனழுவீர்
தெண்டமு முண்டோ தொண்டருக் கென்றென்றும்
தெண்டனிட்டே தொழுவீர் | - பாடி |
11. தேகமும் ஆவியுமே திரியேகனைத் தாவியுமே
சினேகமாயலோக அநேக சீர்
சொல் லெலியாவுமே | - பாடி |
-----------------------------------
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
ஒரே மைந்தனே பரன் மகனே
கண்மணியே ஞான மணனே.
1.சொந்தனை வழி நடத்தி
துஷ்ட துரோகியர் கொலை புரிந்தார்
அந்தர வெளியினில் அருங் கொடுங் கானலில்
அற்புத நற்பெலிக் கொப்புடன் எழுந்த | - ஒரே |
2. அந்தர சொற்கம் படைத்தோய் பாழ்
அகிலத் தோர் பவத்தாலே
ஆக்கினை வாரடி அறையு மீழ் நீர்க் கறை
யாவையும் சகித்தே அனைத்தையும் பொறுத்த | - ஒரே |
3. மண்டலம் தன்னையாண்ட
தவிது மைந்தனாக வந்தானே
மாண்டு ரட்சித் தடிமை மீண்டு கொள அன்பாக
நீண்ட துயர்கள் பல பூண்ட கிறிஸ்து வென்ற | - ஒரே |
4. சென்னியில் தைத்த முடியை
அவர் சிலுவையே மோதி வருத்த
சீருடன் செருசலை வீதி சென்று பதேசம்
செய்துதம் செங்குருதி சிந்தி மடிந்த | - ஒரே |
5. கொல்கதா மலைப் புறத்தே
சுமை குனிந்தே புயத் தெடுத்தே
குரூர நிந்தையின் குரு சாணி யிலறைந்து
கொன்றவர்க்காக மன்றாடுதல் தெரிந்த | - ஒரே |
6. சுந்தரக் கன்னிமாது அப்போ
துன் பவா ளுருவிப் பாய்ந்து
தோற்ற அரிய பிதா ஆற்று தீர்ப்பிதுவோ குலை
துடிக்கு தென் னெஞ்சம் பதைக்கு தென்றழுத | - ஒரே |
-----------------------------------
(இராகம்: பைரவி) | (ஆதி தாளம்) |
போய்வாறேன் பிள்ளைகளே
நானும்மை விட்டு
1.போய் வாறேனா னும்மைவிட்டுப் புன்மரத்தில் பாடுபட்டு
மாய் வாய்ச் செந்நீர் சொரிந்திட்டு
மாண் டெந்தை தலத்துட் பட்டு | - போய் |
2. சீடர்களே நாமன்பாகச் - சேர்ந்திருந்தோமே சிநேக
மோடு விடை தாரும் போக மோட்சத்திற்கு நானேக | - போய் |
3. கொஞ்ச நேரம் உங்களோடு
கூட இருக்கின்றேன் பாடு
மிஞ்ச நீங்க ளென்னைத் தேடு
வீர்கள் முஸ்திப்பாக்க வீடு | - போய் |
4. நானன்பாயிருந்தாப் போலே
நட் பொருதர் ஒர்தர் மேலே
மேன்மையாய் நீர் வைப்பதாலே
மெய்ச் சீஷராவீர் மென் மேலே | - போய் |
5. அப்போஸ்தலரே நீர் வெம்பி
அஞ்ச வேண்டாம் என்னை நம்பி
இப்போ திருங்கள் விசும்பில்
ஏற்றுக் கொள்ளுவேன் திரும்பி | - போய் |
6. பேதுருவே பேய்கனன்று பேச வேண்டினே னுழன்று
பேதலிப் பாய் என்னை இன்று
பின் செலாய் பின் செல்லாய் யின்று | - போய் |
7. மாது பெரும் போது துக்க
மாவாள் சேய் பெற்றால் முழுக்க
வாதை மறப்பாள் நீர் மிக்க
மனங்கலங்க வேண்டாம் நிற்க | - போய் |
8. நீங்களேங்கித் துக்கிப்பீர்கள்
நேமியோர் சந்தோஷிப்பார்கள்
நீங்கவே மகிழ்வாம் சூர்கள்
நித்தம் சுபமாய் வாழ்வீர்கள் | - போய் |
-----------------------------------
மானிட வடிவங் கொண்ட மானுவேல் வலிய ஞானஸ்
நானம தேற்றி ஸ்பிரித்துச் சாந்து வாலே வப் பட்டுக்
கானகத் தூடு சென்று கடுந்தவம் புரிந்தங்குற்ற
ஈன வேதாளந் தன்னை இடரற ஜெயங் கொண் டானே
(இராகம்: அரபி) | (திச்ரஏகதாளம்) |
1.தேவ மைந்தன் யோவான ருகேகியே
தீட்சை பெற்று யோர்தானதியைக் கடந்
தாவலாயுப வாசிக்கச் சென்றனர்
ஆரணி யத்திலே மகா கொடும் ஆரணியத்திலே.
2. சிங்கம் யாழி புல்வாய் பல்லுகங்களும்
சிந்துரம் புண்டரீகம் செந்நாய்களும்
சங்கமாய் தழங்கும் பழு வந்தனில்
தந்தையா ரெழுந்தார் தவஞ் செய்யத் தந்தையா ரெழுந்தார்.
3. வானரங் கொஞ்சி மந்திமேல் சாயவும்
மந்தி கெஞ்சி யருங் கொம்பில் பாயவும் | கன |
கான மான்களும் மான் களு மேயவும்
அகண்ட வனத் தெழுந்தார் கிறிஸ்து ஒரகண்டவனத் தெழுந்தார்.
4. வன்ன மாடப் புறாவின மேவிய
மஞ்சையும் குயிலும் நின்று கூவிய
அன்ன மாட வனக் கிளி பாடிய
ஆரணியத் துற்றார் கிறிஸ்து ஓர் ஆரணியத்துற்றார்.
5. வண் டினங்களி சைந்து பண்ணீடிய
வானம்பாடி நின்றானந்தம் பாடிய
கண்ட துஷ்ட விலங்குகள் கூடிய
கானகத் தெழுந்தார் தவஞ் செய்ய கானகத் தெழுந்தார்.
6. நாதனா ரிரவு பகல் நாற்பது
நாளதாயுப வாசித் திருந்த பின்
வாதையாய்ப் பசி தாப முண்டானதால்
வாடியே யிருந்தார் வனத்திடை வாடியே யிருந்தார்.
7. அப்பொழுது பராபரன் மைந்தனீ
யாகிலிக் கலை அப்ப மியற்றெனத்
தப்பிதத் தலகை வந்து சாற்றவே
தந்தையார் சொலு வார் மறு மொழி தந்தையார் சொல்லுவார்.
8. மாந்தன் அப்பத்தினாலல்ல வானவன்
வார்த் தையா லும் பிழைப்பனென் றோதவே
யேந்திரமான ஒருப் பரிகையின் மேல்
ஏற்றிற் றண்ணலையே அலகை கொண் டேற்றிற் றண்ணலையே.
9. ஏற்றித் தேவ குமார னெனிற் குதி
யிங்குன் காலிட றாப்படிக் காஞ்சுகள்
ஆற்றித் தாங்கிக் கொண்டே கக்கற்பிப்பர்
அனாதி யானென்றதே ஒன்றான அனாதியா னென்றதே.
10. என்று தீட்டினதா மெனப்பேய் சொல
இயேசு உன் பரனாகிய கர்த்தனை
சென்று சோதனை செய்யத் தகா தெனத்
தீட்டி வைத்த தென்றார் திரும்பவும் தீட்டி வைத்த தென்றார்.
11. பின்னு முன்னத மாமலை ஒன்றிலே
பேறு ளானைப் பிசாசு கொண் டேற்றியே
இந்நிலத்தினில் ராட்சியம் வல்லமை
யாவுங் காட்டினதே கணத்தினில் யாவுங் காட்டினதே
12. காட்டித் தாழ விழுந்தெனை யேத்தினால்
காணும் யாவு முனக் களிப் பேனென
மேட்டிமைக் குணமான பொல்லாதவே
தாளங் கூறியதே துணிந்து வேதாளங் கூறியதே
13. அக்கணங் கிறிஸ் தத்துடனே போசாத்
தானே யேக பரா பரனைப் பணிந்து
ஒக்க அர்ச்சனை செய் யென்றியற்றின
துண்மையா மென்றனர் வரைந்த தீ துண்மையா மென்றனர்.
14. என்ற அக்கணமே கணம் விட்டகன்
றேகிற்றும் பர்கள் சேர்ந்து வந்தையனுக்
கொன்றவே பய பக்தியினால் மிகுத்
தூழியம் செய்தனர் கிறிஸ்துவுக் கூழியம் செய்தனர்.
-----------------------------------