ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகை பாடல்கள்

 

176

 

வெண்பா

தோன்றச் சிலுவை தனிற் றொங்கி மரித்தின்று

மூன்று நாள் வார முதற்றினமே-யான்ற

தொழுஞ் சுரர் வந்தார் தோத்திரமையா

எழுந்தருளுமேசு சுவாமி.

 

(இராகம்: வாவி)

(சாப்பு தாளம்)

 

பல்லவி

எழுந்தருளுமேசு சுவாமி

 

அனுபல்லவி

விழுந்தலகை யழிந் தொழியத்

தொழுஞ் சுரரும் வரலாச்சே-

எழுந்

 

சரணங்கள்

1.இஸ்திரிகள் கந்த வர்க்கம்

எடுத்தேந்திப்பிரே தலங்கா

ரத்தின் முறை தேடியிதோ ஆசரிக்க வந்தார்-

எழுந்

 

2. மகதலாவூர் மரியூ

மகிழ்ந்து தெரிசித் தேற்ற

அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற-

எழுந்

 

3. பாடுபட்டு மரித்தடக்கப்

பட்டதின மூன்றாச்சு

ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடிந்தாச்சே

எழுந்

 

4. பரதபித்து சீடரெல்லாம்

படுந்துயரங் கொஞ்சமல்ல

விரசாக ஞாயிறதில் வெள்ளியுதித்தாச்சே

எழுந்

 

5. முத்திரையுங் காவல்களும்

மூடிய கல்லதும் நீங்கிச்

சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங்கலங்க-

எழுந்

 

6. வேதாளம் நடுங்கி விழ

விண்ணோர்கள் திரண்டு தொழ

பாதாளமிடிந்து விழப் பராபரனே யெழுந்தருளும்-

எழுந்

 

7. சத்திய வேதந் தழைக்க

சகல உலகுஞ் செழிக்க

நித்திய சீவனையழிக்க நேசருளங் கழிக்க-

எழுந்

 

8. விஸ்தார உலக மதில்

மெய்யான திருச்சபையி

லிஸ் தோத்திர சங்கீர்தனம் எந்நாளு முண்டாக-

எழுந்

 

9. வேத நாயகன் பாடி

மெய் சபைகள் கொண்டாடி

காதலுடன் கூடிவந்தார்

கர்த்தாவே எழுந்தருளும்-

எழுந்

(1835-வரு)

-----------------------------------

 

177

 

வெண்பா

மரத்தி லறையுண்டு மரித்தடக்கப்பட்

டுரத்தில் மூன்றாம்நா ளுயிர்த்துப்-பரத்திற்

றனது திருவாக்குத் தப்பா தெழுந்நர

னெனது பிராண இறைவன்.

 

(இராகம்: சகானா)

(ரூபகம்)

 

பல்லவி

எனது பிராண நாயக னெழுந்தருளினானின்று

எக்களிப்பாய் மனமே.

 

அனுபல்லவி

கனமு மனதினுற் பனமு மறிந்தவன்

கடவுளேசு நாயக சுவாமி

- எனது

 

சரணங்கள்

1.அனைத்துயிர்க்கு மாண்டவனலகை சிறை

யகற்றி ரட்சித்து மீண்டவன்

மனத்திலன்பு நீண்டவன் வான்மகுடம் பூண்டவன்

சினத்துப் பாவிகளுக்குஞ் செபஞ் செய்தாதரித்தவன்

இனத்திற்ற விதிறை குலத்திற் பிறந்தவ

னெழில் கொள் கிருபையாசனத்திற் சிறந்தவ

னினைத்துச் சிலுவையிலறை யுண்டிறந்தவ

னீடும் பரமகவாடந் திறந்தவன்

- எனது

 

2. அப்போஸ்தலர் சொன்னாடுது அன்று மரியாட்

களித்த காட்சி கண்டேடுது

ஒப்பாய் நினைவோடுது உயிர்போய் வந்து கூடுது

எப்போது மவரை யென்னிதையங் கொண்டாடுது

தப்பாதெழும் விசுவாச மேவுது

சாந்தப் பரம சினேகந் தாவுது

முப்போ திசைந்து நன்னாவு கூவுது

முழுது மோக்கிஷ வாஞ்சை யேவுது

- எனது

 

3. பரமராச்சிய ராயன் பராபரனின்

பட்சமொன்றான சேயன்

கருணைபொழியு நேயன் கர்த்தன் கிறிஸ்துநாயன்

பெருமைத் திருவாக்கியம் பேசு மேசுநாயகன்

விரிவு பெருமூலகனைத்துங் காத்தவன்

வேதநாயகன் பாடலேர்த்தவன்

னரிய மறையினி லென்னைச் சேர்த்தவன்

அருமையுடன் மனமகிழ்ந்து பார்த்தவன்

- எனது

 

-----------------------------------

 

178

 

வெண்பா

பொன்னுலகத் தேறுவோம் பூதலத்தை யாளுவோம்

இன்னந்திகாந்தமட்டு மெட்டுவோம்-வின்னமுண்டோ

உன்னதப் பிதாவினுரிமைத் திரிச்சுதனார்

தன்னுயிர் விட்டுயிர்த்ததால்.

 

(இராகம்: பைரவி)

(திச்ர ஏகம்)

 

பல்லவி

தன்னுயிர் விட்டிறந்துயிர்த்தானே

யேசு நாயகன் சிறப்பாய்

 

சரணங்கள்

1.வன்ன மலர்க் காவிற்பாம் பாற்

றுன்னும் வினையாவுந் தீர

முன்னனையிலே பிறந்த

உன்னதன்றன் திருவுளத்தால்-

தன்னு

 

2. முந்து நரர் செய்தபவத்

துந்தும் வினையாவுந் தீரப்

பொந்திப்பிலாத்திறை முன்பாக

நித்தனைப் பாடடைந்தன்பாக-

தன்னு

 

3. தோன்று கிருபையின் சிநேகச்

சூரிய பிரகாச மாக

ஆன்ற மகிமைத் திரியேக

அட்செயக் கிறிஸ்து மெய்யாக-

தன்னு

 

4. ஆதி முதல் வாரத் தன்று

அக்கிரமப் பசாசை வென்று

மாதவர் பன்னிருவர் போற்ற

மகதலா மரி கண்டேற்ற-

தன்னு

 

5. தீர்க்கத் தெரிசனங்கள் தீட்டி

மார்க்கமுடன் விரித்துக் காட்டி

யார்க்குங் கிருபையைக் கைநீட்டி

பராக்கிரமத் தேவாட்டுக்குட்டி-

தன்னு

 

6. தூதரிரு பெயர் துலங்கக்

காதக ரெல்லாங் கலங்க

வேத மறையே முழங்க

மெய்ச் சபை மென்மேல் விளங்க-

தன்னு

 

7. அக்கிரமத்தின் பாவ கட்டு

நிர்க்கிரகங்களாகிக் கெட்டு

துர்க்கிரிகைப் பிசாசை விட்டு

நற்பிரியர் களாக்கப்பட்டு-

தன்னு

 

8. தேவசமாதானம் நீடச்

செந்தழற்க பாட மூட

மேவுங் கிருபையே கைகூட

வேத நாயகன் பண் பாட-

தன்னு

(1831-வரு)

-----------------------------------

 

179

 

வெண்பா

வேதாள மோடி விழுந்தலறித்தீ நாகப்

பாதாள மட்டும் படிந்ததே - காதோரே

ஓ மோமனாதி யுயிர்த்தெழுந்தார் வெற்றி கொண்டார்

ஆமா மனல் லேலூயா.

 

(இராகம்: இங்கிலீஷ்)

 

பல்லவி

ஆமனல் லேலூயா மகத்துவத் தம்பராபரா

ஆமனல் லேலூயா செயஞ் செயம்

அனந்த கோடி நரா

 

அனுபல்லவி

ஓமனாதி தந்தார் வந்தாரிறந்

துயிர்த் தெழுந் தாரே யுன்னதமே

- ஆம

 

சரணங்கள்

1.மன்னவன் வந்து பிறந்தது பெத்தலேம்

வளர்ந்து சென்றது நாசரேத்திஸ்தலம்

உன்னதப் பாடுகள் பட்ட தெருசலே

முயிர்த்துச் சென்ற துயர் பரமண்டலம்.

- ஆம

 

2. வெற்றிக் கொண்டார்ப் பரித்துக் கொடும்வே

தாளத்தைச் சங்கரித்து முரித்துப்

பத்திராசனக் கிறிஸ்து மரித்துப்

பாடுபட்டுத் தரித்து முடித்தார்

- ஆம

 

3. வேதம் நிறைவேற்றி மெய்த் தோற்றி

மீட்டுக் கரை யேற்றிப் பொய் மாற்றிப்

பாவிகளைத் தேற்றிக் கொண்டாற்றிப்

பத்திராசனத் தேற்றி வாழ்வித்தார்.

- ஆம

 

4. சாவின் கூரொடிந்து மடிந்து

தடுப்பு சுவரிடிந்து விழுந்து

சீவனே விடிந்து தேவாலையத்

திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்து

- ஆம

 

5. தேவ கோபந்தீர்ந்து தலகையின்

தீமையெலாஞ் சோர்ந்து துலகமே

ஆவலுடன் சேர்ந்து பணிந்து கொண்

டாடுங்களி கூர்ந்து மகிழ்ந்து.

- ஆம

 

6. யேசுபவநாசர் கிறிஸ்துவே

யென்னாற்றும நேசர் மகாசத்திய

வாசர் கிருபை வாசர் உலாசர்

மகிமையின் ராசர் சருவேசர்

- ஆம

 

7. ஞானத் திருக் கூட்டுக் கவிவேத

நாயகன் பாட்டு நற்றேட்டு

வானப் பரனாட்டுக் குட்டிக்கு

வாச்சது கொண்டாட்டு மன்றாட்டு

- ஆம

(1835-வரு)

-----------------------------------

 

180

 

வெண்பா

தூதன் வந்தான் கல்லைத்திறந்தான் மரியாளும்

மாதர்களுஞ் சீடர்களும் வந்து கண்டார்-பேதுருவு

மேசியா பாவ விமோசனரிம் மானுவே

லேசுயிர்த்த ஞாயறதிலே.

 

(இராகம்: பைரவி)

(ரூபகம்)!

 

பல்லவி

மேசியாவெனு மேசுநாதர் வென்றுயிர்த்தாரே

அலகையைக் கொன்றுயிர்த்தாரே

 

அனுபல்லவி

மேசியா வெனுமே சுநாதர்

வென்றுயிர்த் தெழுந்தன்று மரியாளுக்

காசீர் வாதமளித்துச் சீமோனுக்கும்

அப்போஸ்தல மாருக்கு மெய்ப்பாய்க் காட்சிக் கொடுத்

தாதத்துட தீதற்றிடவே யகந்தரு

பூதக் கணம் வாதைப்படவே திரண்டெழு

நேசப் பரிவாகப் பலமாபக்தர்களோ தித்தரு

நீதிப் படி பாடிச்சபை கூடிக்களி கூர

வாசச் சுவிசேஷப் புகழ் வீசிப் பலராகத் தொடு

வானத்திற லோர் மெச்சிட மாபட்சமதாக

- மேசியா

 

சரணங்கள்

1.கோதை மகத லாவூர் மரியுங்

குலயக் கோபின்தாய் மரியுடன்

மாதர் பலருஞ் சாலோ மேயும்

வாசவர்க் கங்கள் பரிமளம் பல

போதக் கொணர்ந்து நேசத்து டனே

பூசித்த பிஷேகஞ் செய்தருள

வேதச் சடங்கின் சாபதானதில்

வேலை யொழிந்தங் கிருந்து வாரத்தின்

மேலச்சனி போய் மற்றமுனாள் விடிந்ததி

காலத்தினில் மாவற்புதமா யதிர்ந்திட

வேதின் புவிவானந் தரு தூதன் குழிவாயின் சிலை

மீளும்படியே வந்ததின் மேனின் றொளி வாலங்

கோ தும்புகலால் மங்கையர் தேகந் தெளிவாயிங்கித

மோடுஞ் செலமா வஞ்சகர் சோபங் கொடு வீழ்க

- மேசியா

 

2. கந்த வர்க்கங்கள் கொணர்ந்த மாதர்கள்

கலங்கித் தவித்துக் கல்லறைப் புறத்

தந்தமாக நடந்துவந் தெமதாதியுடற் காணாமற் றேடியுஞ்

சிந்தனைப் படவந்த தூதனுந் தேற்றிய வரையாற்றி மிகவு

முந்தி யுரைத்த கலிலே யாவுக்கு

முடுகுவா ரெனத்திட மெலாஞ் சொலி

மோசப்படு ராயப்பரையுந் தொடர்ந்து நன்

நேசத்துடனே நற்றியுமே பயந்தனில்

மூழ்கித் திகையா திக்கணமேகிப் பல சீடர்க்கிதை

மூரிப்புயர் பூரிப்புடனே பற்றிடுவீ ரென்றிட

முன் கொண்டொரு பெண்சென்று பணிந்தன்புறவும் பங்கய

முங் கண்டடியுந் தெண்டனிடுஞ் சங்கையின் மேவி

- மேசியா

 

3. தூய பங்கய பாதவ தனஞ்

சூரியப் பிரவை வீசவே திருக்

காய மைந்தது மேதுலங்கவே

கதித்த வானவர் துதித்தங் கேற்றவே

மாயவலகை தீயதலயை மடித்து மனுவைப் பிடித்துத் திடத்தி

ஆயும் நன்றமிழ் வேதநாயகன்

ஆரணப் பதமனைத்தும் விளங்க

ஆகத்தில் விவேகத்துடனே யதிகச்சி

னேகப் பரிவாகத்திடனே யளித்தியல்

பாகத் திருவாய் மைப் பல சீடர்க்கருள் போதித்ததி

காரத்தொடு லோகத்தினிலேகிப் புகழோதச் சொலி

அர்ச்சித்துயர் இரட்சிப்பை முடித்துப் புவிவிட்டுப் பர

மப்பர்க்கு வலத்திற் புகவெற்றிப் பிரவாக

- மேசியா

(1800-வரு)

-----------------------------------

 

181

 

வெண்பா

ஆதிகுமார அகிலநரர் செய்த கொடுந்

தீத கற்ற மாகுருசிலே சீவித்-தாதரையுள்

நீயடங்கி மூன்று நாள்நீடித்து வெள்ளியுதித்

தாயிற் றெழுந்தருட் கண்பார்.

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பாரா யேசு மெய் கோனே யுனின்

பாதத்தை நாடி வந்தேனே

 

அனுபல்லவி

வீராயதி காலை பூரணனேயுந்தன்

விந்தையு யிர்த்தலைச் சந்திக்கவே வந்த

நேரான பாவி யென் பாரா நிர்ப்பந்த

நீங்கிடவே ஈங்குடனே பாங்கடைய கண்கொண்டு

- பாரா

 

சரணங்கள்

1.தாயட வாயெனைத் தாங்க இந்தத்

தாரணி யோர்க்கருளோங்க மிக்க

நேயமாய் நின்னுயிர் நீங்க நெஷ்

டூரப் பிசாசு பின் வாங்க

ஞாயறு வாரத்தெழுந்த சீமானே

நம்பிக்கையாய்ப் பதம் வந்தனம் நானே

மாயப் பிசாசை வென்ற சிமசோனே

மட்டடங்கா துட்டர் வினை விட்டகல இட்டமுடன்

- பாரா

 

2. அண்ட மதிர்ந்திடக் குதிக்கத் தூதர்

அஞ்சலி செய்துனைத்து திக்க

மண்டலத் தோர்க்கருளுதிக்க மகத

லாமரியாட் குரை விதிக்க

எண்டிசையு மடங்கானே யிப்பூமி

எப்படித் தாங்குங் கிறிஸ்தேசு சாமி

தொண்டரை யாட் கொண்டடிமை கொணேமி

சுத்த பரிசுத்தாங்க நித்தியனேயித் தருணம்

- பாரா

 

3. கத்தனே நின்னுயிர்விடுத்து மலைக்

கல்லறைக்குட் புகப்படுத்து

இத்தனையா யெனையடுத்து நயந்

தேயுன் றிருக்காட்சி கொடுத்து

சித்தம் வைத்துந் தனடியான் தேவ

சிகாமணியுன் பதஞ் சேவித்துச் சீவ

னுற்றுயிர் வாழ்க நற்பதமேவ

உச்சிதமாய் நிச்சயமாய்ப்

பட்ச முடனிச் சணமே

- பாரா

(7-4-1855)

-----------------------------------

 

182

 

(இராகம்: பியாக்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

சதாபதி கிறிஸ்தை சதாபதி கிறிஸ்தை துதி கிறிஸ்தை

தயாபதி ஆதிபன் மனமே துதி கிறிஸ்தை

 

சரணங்கள்

1.கதி பெற நாடிக் கனி வுறத் தேடி

- சதா

 

2. அண்ட பிண்டம் யாவை

உண்டு செய்த தேவை

- சதா

 

3. கெட்டலைந்த பாவி

கிட்டி வந்து கூவி

- சதா

 

4. மரித்துயிர்த் தெழுந்தார்

பரத்தினிற் சிறந்தார்

- சதா

 

5. ஓய்ந்ததே பேய்கள் கோரம்

வாய்ந்ததே மா கெம் பீரம்

- சதா

 

6. எலியா வின் கவி கொண்டு

சொலி தினம் புகழ் விண்டு

- சதா

 

-----------------------------------

 

 

183

 

(இராகம்: சங்கராபரணம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வந்தனம் வந்தன மெந்தை பராபரன்

மைந்தனெம் சுதனே

 

சந்ததம் சந்ததமார்த்தனங் கோவே

அனந்த அனந்த சங்கீர்த்தனம் தேவே.

 

சரணங்கள்

1.தந்தையதம் செய்யகந்தை யறும்படி வந்து பூதலமே

நிந்தையுடன் கொலைப்பட்டு மடிந்தார்

உந்து தினம் திரியத்தி லெழுந்தார்.

- வந்

 

2. தேவபரன் சுதன் மானிடர் பாதகம் தீரவே பெலியாய்

சீவனை விட்டடக் குண்ட மூன்றாம் நாள்

செங்கதி ரென்ன உயிர்த் தெழுந்தாரே.

- வந்

 

3. ஆதித்த வாரத்தில் பூமியதிர்த்தல தாயதிர்ந்திடவே

சோதிப் பிரவையாகக் கிறிஸ்து உயிர்த்தார்

பூத பசாசைத் துணித்து செயித்தார்.

- வந்

 

4. மிக்க பராபரன் தூதன் ஒரு தன்விண் மேலிருந்துலகில்

மின்னலைப் போலுருவ முன்னவெழுந்தான்

மின்னுமுடை வெண்மையென்ன அணிந்தான்.

- வந்

 

5. கல்லறை வாயிடை மூடியிருந்த கனத்த கல்பிரட்டி

அல்ல லற்றங்கதின் மீது ளுக்கார்ந்தான்

புல்லர் பயந்து விழச்சுரன் சேர்ந்தான்.

- வந்

 

6. விம்மி விம்மிச் சில மாதர் துயருற மேவி நிற்கவுமே

எம்மிறைவன் முதலே யெழுந்தானே

என்று சம்மனசு தான் மொழிந்தானே.

- வந்

 

-----------------------------------

 

184

 

வெண்பா

தந்தலகையின் கொடிய சங்கட விடங்கள் கெட

வந்தொரு மரந்தனில் மடிந்துயிரைத் - தந்தருளி

வேத முழுது நிறைவேற்றி வெற்றி கொண்டு

நீதியின் ராசா வுயிர்த்தாரே.

 

பல்லவி

நீதியின் ராசாவுயிர்த்தார்

நித்தியமும் அல்லேலூயா.

 

அனுபல்லவி

வேத நிறை வாகக் கண்டு

வேதாளத்தைச் செயங் கொண்டு.

- நீதி

 

சரணங்கள்

1.பொந்தி பிலாத்து முன்னின்று

பொறுமை யொடுகருணைகள் கொள் கடவுளர் (பொந்தி)

புருவை யெனவடர் கொடியதுய ரெழப் (பொந்தி)

போதத் துயர் வேதப்படி பல

வாதைப்பட நீதிக் கிணை சொலப் (பொந்தி)

பூதலத் தோர் வினைக்கென்று

நிந்தையின் குழியிற்சென்று

நீடு ஞாயிற் றினன்று.

- நீதி

 

2. மாதர்கள் வந்தனமாக

மனதி னிடை வலுகவலை பெருகிட (மாதர்கள்)

மருகி யெருசலை நகரியதின் வழி (மாதர்கள்)

வந்தொப் பொடு யர்ந்தப் பரிமள

கந்தப் பொடி தந்திட்டடி தொழ (மாதர்கள்)

மாசில்லான் கல்லறைக் கேக

தூதர்களறைந்து போகச்

சோதியாய்க் காத்தோர் முன்பாக.

- நீதி

 

3. சீடர்க தெரிசித் தேற்றத்

திடவினொடு புடவிய துமகிழவே (சீடர்கள்)

செயமுமுயர் கன பெருமை நிறையுள (சீடர்கள்)

செங் கோற்றிற மங்காக் கடனவ

சங்கோர்க்கு மடங்காப் பொருளென (சீடர்கள்)

தேவ சம்மன சோர் போற்ற

நாடகர் பதங்கள் சாற்ற

ஞாலத்தின் சாபத்தை மாற்ற.

- நீதி

 

4. வேத வாசகங்கள் நீட

விமல னொரு திரு முதல் வனருளிய (வேத வாசக)

மிகவு மதுர கிருபையின திரச (வேத வாசக)

மேலாம் பதமே தருமிங்கித

நூலாங் கலையாகம சங்கீத (வேத வாசக)

வேதநாயகன் பாப் பாடப்

பாதகர் தீ தெல்லா மோடப்

பரம நன்மை யாவுங்கூட.

- நீதி

(1799-வரு)

-----------------------------------

 

185

 

வெண்பா

ஆதி சர்ப்பத்தால் விளைந்த யாவையுந் தீர்த்தார் நரக

வேதனையெலாந் தொலைத்தார் வெற்றி கொண்டார்-போதிவித்தார்

நேசித்தாரா தரித்தார் நீடுலகெலாங் காத்தா

ரேசுக் கிறிஸ்து நாதர்.

 

பல்லவி

யேசு கிறிஸ்து நாதர் வென்று உயிர்த்

தெழுந்தாரா தி சர்ப்பத்தைக் கொன்று

 

அனுபல்லவி

நேசப் பரத்தின் மிக்க நீதிச் செயல் கதிக்க

நேரு மூன்றாந் தினத்திலேருசலேம் பட்டணத்தில்

நிரலுறும் ஞானக் கதிரொளி வதனச்

சுரரிரு வானவர்கள் வரக் கல்லறை

நிலை தப்பி விழவுங் காதகர் திடனே

மலையப்ப ரெனுஞ்சம் பேதுருவுடனே

நெஞ்சக மிஞ்ச விறைஞ்சியும் நின்றிட

விஞ்சையரஞ்சல் செயஞ் செயமென்றிட

 

தாந்தாந்தக செந்தரி கிடதரி

திரிந்தார தில்லானா திரி திரி

தந்திரி திரி தானாதிரி நாதிரி

தகதின்னா திரி தில்லானா திரி

வதனி தாந்தனி தாந்திர தாதரி

தகதரி கிடதக தில்லானா திரி

தகதின்னா திரிதானா தந்திரி.

- யேசு

 

சரணம்

அப்போஸ்தலர்க்குக் காட்சி கொடுத்தார்

கிருபையாகப் பரமதி சினேகப் பிரவை மிக (அப்போ)

முனம் அடர்ந்து மறை தொடர்ந்து மனுவுருவென

நடந்து வழிக் கடந்து சிறந் தெழிலாய் (அப்போ)

மகதல்லா மரியடி பற்றிட விரசா

யுல்லாசம தொடு கிட்டவுமவள் பாற்

சல்லாப மதுரை யிட்ட திவளமைகள்

வல்லாமைகள் சொல மெய்த்துளமகிழவே (அப்போ)

தேவ வருமைத் திருவாக்கினறிவுயர் மறுமொழி

யறையப் புக னோக்கி னுடல் புளகமதுற

உரிமைத் தவமுனிவர்கள்

பயமொடு கதவு கடனை யடை பட

வொளி யக்கிரக மதிடை

சடுதியினடு வினிலதிசய மொடுவர

பெருமைப் பரனாகக்

கன மகிமைகள் மிகு புதுமைகள் செயவே

பிரியத்து டனடி

பணியவுமுது மறைகளிலுரை சொலியே (அப்போ)

மிகவே யாக மதிடை சந்தேகமதுறு

பனிருவரி லொருவர் சந்

தோமையருடனேர் மைகளாக

விரலொடு கையை யெனின் விலாவதிலிடுவாய்

அவ்விசுவாச மதகலென வுரைசொல

குலாவியும வனோ

அரிய பராபரனெனவு மர்ச்சனை செய

ஆசைக்கித மித்தனு தினம் நலமே

பேசிப் பினுமைக் கடலுறு தலமே

 

சக்கிய விணக்க சலக்கரணைக்கட

லக்கண மிக்க செயற்கள் விளக்கமு

றக்கன லிற்கறிவைக் கருசிக்கவ

னுக்கிரகமுக்கிய பக்கிஷமளிக்கவே (அப்போ)

 

மறு உரு வாகப் பரமவடி வெடுத்தார்

மெய்ப்பாய்த் தெரிசனை பத்திப்பான்மையாயளித்த

வேதநாயகன் பதமோத மனங்களித்த

மேசியா நசராதிபன் கிறிஸ்

தாசில்லா மனுவேலி ரட்சகன்

வித்தகன் பரிசுத்த திரித்துவ

கர்த்தனெங்கள் மகத்துவ தேவன் - தாந்

- யேசு

 

-----------------------------------

 

Table of contents

previous page start next page