ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

கிறிஸ்து பரமண்டலங்களுக்கேறின பண்டிகை

 

186

 

வெண்பா

ஆண்ட வெனதையனருமைக் கிறிஸ்தாசன்

மீண்டுலகெலாங் காத்த மெய்த் தேவன்-நீண்டமறை

ஆக மெலாங்கைக் கொண்டனைத்தும் நிறைவேற்றியபின்

மேகம தேறிச் சென்றான் விண்

 

(இராகம்: கேதாரகௌளம்)

(அடதாளசாப்பு)

 

பல்லவி

மேகம தேறி வினூடிறை போனார்

 

அனுபல்லவி

வாகுறு தூதர்கள் சேனைகள் சூழ்கப் பரன்

வலத்திற் சென்றிருக்கச் சங்கிதத்துப் பண்படிக்க

- மேக

 

சரணங்கள்

1.விந்தைகள் தோண மைந்தர்கள் காண

அந்தர மீதே சுந்தரன் நீடப் பேயை

அடித்துச் சங்கரித்துத் திண்

பொடித்துச் சொன்முடித்துப் பின்

- மேக

 

2. வேதங்கள் சூடக் கீதங்கள் பாட

மேளங்கள் கூடத் தாளங்கள் போட அதி

விதத்துக்குச் சிதத்தும் பர்

நடித்துச் சஞ்சரிக்கப் பொன்

- மேக

 

3. மங்களமாகச் சங்கையதாக

வந்தனமாகச் சந்ததமாகக் கன

மகத்துவங் கொடு பரத்தின் படை

துதித்துங்கழல் மிகுத்துந் தொழ

- மேக

 

4. அர்ச்சயர் பார்க்க முச்சகமார்க்கச்

சற்குண மார்க்க ரைக்கதிசேர்க்க அதி

சயத்தின் கடை யுகத்தின் முடி

விடத்தினடு விடப் பின்வர

- மேக

 

5. தூய மெய் வேதநாயகனோத

ஓய்வதிலாத நேயவதீத கன

உரத்திட்டம் பரத்தைப்பங்

கடக்கிக் கொண்டிடச் சென்று

- மேக

 

-----------------------------------

 

187

 

வெண்பா

வானத்துக் கேறி மகத்துவப் பிதாவினுடன்

மேன்மைக் கிருபாசனத்தில் வீற்றிருக்கும்-ஞானப்பா

நேச தயாபரனே நித்திய கிருபாகரனே

யேசு ராசா அபையமே.

 

(இராகம்: தோடி)

(திச்ர ஏகம்)

 

பல்லவி

இயேசு ராஜ நேசதயாபரனே ஆ ஆ

கிருபாகரனே ஆ மகா

 

சரணங்கள்

1.மாசில்லாப் பிரகாசவானத் தொளிவே

ஆமனத் தெளிவே ஆமகா

 

2. வல்லப மகத்துவப் பிதாவின் மகனே

ஆ கிருபை முகனே ஆமகா

 

3. உலக முழுதும் காக்குமுரிமைத் தெவே

ஆ எனைக்காவே ஆமகா

 

4. பொறுமைக் கிருபைத் தேவ செம்மறியாடே

ஆ எனைத் தேடே ஆமகா

 

5. பாபம், சாபம், மரணம் தொலைத்தபதியே

ஆதயா நிதியே ஆமகா

 

6. மகிமை மேகாசனத் தெழும் மனுவேலே

ஆமறை நூலே ஆமகா

 

7. இடுக்கணுற்ற நின் சபைக்கிரங்கு மற்புதனே

ஆ பரன் சுதனே ஆமகா

 

8. வேதநாயகன் பாட்ட கர்க்கருள் நயனே

ஆ அதிசயனே ஆமகா

(1834-வரு)

-----------------------------------

 

188

 

வெண்பா

சங்கையிற்பட்டந் தரித்துத் தங்கு நற்பொற் பின் சிரத்துப்

பொங்கு செப்பத்தன் பளித்துப் புங்க முற்றிட்-டங்கே

வரத்தின் மிகு தூதர் வளைந்த மேகத்திற்

பரத்திலெழுந் தார் பரமர்.

 

(இராகம்: காப்பி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பரத்தின் முகிலினா சனத்தி லெழுந்தனர்

பரம கிறிஸ்து நாதரருள் மிகுநீதர்

 

அனுபல்லவி

உரத்த வலபத மெடுத்து நலமுடன்

உயர்த்த அதிரொலி யதிர்த்து மிக வெழ

உண்டே மங்கள மெங்கு முழங்க

கண்டா கண்டனினன்பு விளங்கவிண்

- பர

 

சரணங்கள்

1.சிரத்தின பரஞ்சியின்றிட்ட மவர்

திருக் கண்களு மெரிந்த செங்கதி ரோனிட்டங்

கரத்திந்தற் சீசினி ரத்தினச் சட்ட மேசு

கருணை யிரட்சக ரென்ற அபிதானப் பட்ட

முரைத் தான் மனோவாக்குக் கெட்டாத ஞாய

முயர்ந்தாதர அடைக்கலத் தைந்து காயம்

நரர்க் காகவே துடங்கியமிகு நேயம்

நவ சேனைகள் வணங்கிட நயத் தேயம்

நம்பு தவத்தினர் நெஞ்சு களிக்க

ஞான பரிசுத்தாவி யளிக்க

அன்பு மிகுந்த வரங்க டெளிக்க

ஆகடியக் கடியஞ்சி யொளிக்க.

- பர

 

2. யூதாவின் கோத்திரச் சிங்கஞ் சாஸ்திர

முயர்ந்த கிருபைச் சுவிசேட பிரசங்கம்

ஆதார மோக்கிடத் துங்கம் அரு

ளானந்த தைந் நூறு சீடரொரு சங்கந்

தாதா வுன்பாத மேதஞ் சமென்று

தாழ்ந்தே பணிந்தார்கள் வளைந்து நின்று

வேதாந்தனு மாசீர் வாதங் கணன்று

மிகுத் தேயளித் தெழுந்தாரு யர்ந் தகுன்று

விபுதர் வளைந் தொரு மேகங் கொண்டும்

வீணைகளுஞ் சங்கீதந் தண்டும்

செப தவம் விண்ட சம்பிரதாயங் கண்டும்

தேவன் மகிழ்ந்து மதிசய முண்டும்

- பர

 

3. அன்னை மரியம்மாள் பாலன் மனுட

னாகப் பிறந்து பெலியான அனுகூலன்

மன்னன் செங் கோனித்திய காலன் சீயோன்

மகளடி பணிந்திடுமோ ஞானசீலன்

உன்னத மான பராபரனின் வலத்தின் மேவ

ஊழியு மூன்று லோகத் தோருந் தோத்திரங் கூவத்

தன்னிகரில் லான் சிஷ்டி யாவுக்கு மேற்றாவச்

சக்கரா திபதியாக முக்கிய மோடு தேவ

சற்குரு தற்பர சத்திய சித்தன்

விக்கிரகத்தை யழித்த மனத்தன்

துற் கடியுச் சிமிதித்த பதத்தன்

உக்கிர மிகுத்த மகத்துவ கர்த்தன்.

- பர

 

4. தக்கணத் தேவ சகாயன் ஞான

சாஸ்திரக்கவி சொல் வேதநாயக சேயன்

பக்கிஷமாய்த் தொழு தூயன் தேவ

பரமண்டலாதிபதி பர ரோக நாயன்

முக்கிய வேத வாக்குத்தத்தங் களெல்லாங் கூறி

முத்தியி லுயர் பரிசுத்த வெண்ரூபு மாறிச்

சக்கிய மொடு சொலு துத்திய மிக மீறிச்

சருவ மகிமை யொலி வேற்றுமலை யிலேறித்

தண்டமிழ் கொண்டு மகிழ்தெழு சந்தன்

வண்டர் மிரண்டு பணிந்திடு தந்தன்

தொண்டர்கள் கண்டு தொடர்ந்த அனந்தன்

மண்டலம் விண்ட பரன்றிரு மைந்தன்.- பர

(1804-வரு)

-----------------------------------

 

189

 

(இராகம்: ஹரிகாம்போதி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

சொற்கத் தான முறுதுங்கத் தேசையா

சொற் பாட்டுக் காசனா

துன்பப் பெருக்காறுதலே மேசியா

துணையாய் வாகோனா.

 

சரணங்கள்

1.சர்ப்பத்தீய தலை சங்கரித்துமே

தர்காத்த வாஞானா

சத்திய பரமே வரமே திரமே

தருவாயோ சன்னா

- சொற்

 

2. வான்வானத்தே யெல்லார்க்கு மேலா

வல்லாச லாமேயா

ஞானதற் பர பிரானே நற்கோ

அலே அலேலூயா

- சொற்

 

3. கர்த்தா கிறிஸ்தே ஞானாதிக்க

வித்தியாதரர் சித்தே

கல்வாரித் தரமே குருசு மேரா

பதந் தாசனானே

- சொற்

 

4. அகம தடக்கே அருள் கொடு நோக்கே

அடியனை யாளாக்கே

பகவான் குமாரா பணிந்த சீரா

பாவியைக் கை தூக்கே

- சொற்

 

5. அல்லா அல்லாவே யேயோவாவே

அரிய அரிய வாழ்வே

வல்லாசலா மோம் ஓம்பரா பர

வஸ்தோ மேகாவே

- சொற்

 

6. இயேசுகிறிஸ்தே பரமே சுரர்க்கே

சரி சாயலா மேற்கோ

ஆசைக் கவிவேத நாயகனடி யேன்

அருள் செயென பராக்கோ.

- சொற்

 

-----------------------------------

 

190

 

வெண்பா

வானத்திலேறி மகிமை பிதாவினுட

தானத் திருத் துலகைத்தற்காக்கும்-ஞானத்தின்

ஏசையா ஆசியளித் தெங்களையாளுங் கருணை

மேசையா மிக்க சலாமே.

 

(இராகம்:இந்துஸ்தானி)

(திச்ர ஏகம்)

 

பல்லவி

மேசியா மிக்க சலாமே

பரலோகஞ் செலும் ராசே

 

அனுபல்லவி

யேசிச றேலாதி பனே

யென் றுமே யெமை யாண்டருளே.

- மேசி

 

சரணங்கள்

1.பரதேவா நரரூபாவருள் கூர்நசரை நபி

கருணாகர சொரூபி நித்திய சங்கீர்தனமே.

- மேசி

 

2. அடியாராதரவே யேசைய ரேபரமரபி

மிடி தீவினையறவே ரட்சியுங்கர்த்தா சரணே.

- மேசி

 

3. பரனோ டோதியுமே பாதகா மேற் கருணை புரி

சரணா விந்த மடைந் தோங் கருணாம் பரமே.

- மேசி

 

4. சருவா திக்கர சே யுக்கிரமனே சக்கிரபதி

கிருபாசன துரையே யெங்கள் பாவந் தவிரே.

- மேசி

 

5. ஆதியானந் தபரா வந்தனமே சந்ததமே

வேதநாயகன் சொலிய இங்கித சங்கீர்த்தனமே.

- மேசி

(1836-வரு)

-----------------------------------

 

191

 

வெண்பா

பரமவனாதி பிதாப் பரிசுத்தாவி

இருவருஞ் சென்றெதிர் கொள-வரிசையாய்த்

துன்னிய தூதர் தொழ யேசுநாதர்

உன்னதத்துக் கெழுந் தாருய்து.

 

(இராகம்: தோடி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

உன்னதத்துக் கெழுந்தாரே சுநாதர் மெய்யாக

 

சரணங்கள்

1.மன்னவன்றவிது வங்கிஷத்திந் நிலம் புரக்க வந்த

அன்னைமரி கன்னியிடம் அற்புதமாய் உற்பவித்த

மனுடவ தாரனதி காரனுபகாரன் கனதீரன்

மாதாவு கந்து தொழும் வேதானந்தக் குமாரன்

வந்தனமென்றதி சுந்தர விந்தையின்

மைந்தர் மகிழ்ந்து புகழ்ந்து பணிந்திட

வரிசை வரிசையுடனரு கினிரு புறமு

முரிய வலமை மிகு பரம சுரர் பரவ

வாகாய் மகத்துவ மீறி மேகாசனத்திலேறி.

- உன்

 

2. சத்துரு பசாசை வென்று வெற்றிமுடி சூடியே

எத்திசை யுளோரும் வாழ்த்தச் சித்த மிக நீடியே

தரும குணாலனிரு நூலனனு கூலன் மனுவேலன்

தாதைப் பராபரனா ரொரு நீதிக் குமார மனோலன்

தற்பர சிற்பர மெய்பர அற்புத

முப்படி யொப்புருவப் பெருமைப் பொருள்

சருவ வலமை செறி பொறுமை மிகு பெரிய

கிருபையுடையவ ரோடுறு தியினிலுறையத்

தானே யுயிர்த்து மீளவானே சயத்திலாள.

- உன்

 

3. அண்டமுங் குலுங்கப் பரமண்டல மிலங்கவே

கண்டகர் கலங்க நெறி கொண்டவர் துலங்கவே

அதிசய வானே யருளானே மறையானே யிறையோனே

ஆதிசுயம் பிரகாச நீதிப் பரம கோனே

அஞ்சலி நன்செப விஞ்சையர் நெஞ்சக

மிஞ்சிய சஞ்சல மெஞ்ச விறைஞ்சவும்

அதிக வலமையொடு துதிகள் மிகுதியெழ

விதியினெருசலை யிலுதைய மிடிரவிபோ

லைநூற்று வரும் போற்ற விண்ணாற்றிற் கரையேற்ற

- உன்

 

4. தந்தையு மரூபியாரும் வந்தெதிர் சந்திக்கவே

பந்தி பந்தியாய்ச் சுரர் பணிந்தடி வந்திக்கவே

சரா சரியாகத்திரியேக வல பாகத்தினி லேக

சாலோக பதங்கட்கும் மேலான பரலோக

சங்க முழங்கிய துங்க மிகுங்கன

மங்கள விங்கிதலங் கிரு தங்கொடு

தரு சத்திய முனிவர் தெரிசித்தடிபணியப்

பரிசுத்தரூ பிதனை வரிசித்தருள் பொழிய

சாதியெலாங் கொண்டாட வேதநாயகன் பாட

- உன்

(1837-வரு)

-----------------------------------

 

192

 

வெண்பா

சுற்று மகிமைச்சுடர் கேரூபினஞ் சாதோ

கத்த வந்தான்வாய் விட்டுக் கத்தாதோ-முற்றுமுடித்

தேகனங் கொண்டாதியானந்தா பரத் தேறமுகில்

வாகனங் கொண்டா ராகையால்.

 

பல்லவி

வாகனங் கொண்டாரே ஆதியானந்தா

வைய நரருய்ய வருள் பெய்யவோர்

துய்ய கேரூபின்.

 

அனுபல்லவி

மாகன மேன்மையாக ஏகனொரு தெய்வீக

வானிலுயர் சிநேக ஞானமெய் மனுஷீக

மாசறு மபிஷேக தேசுறுஞ் சுபதேக

மாமறை வீதியூக சாமியுமே பூலோக

மண்டலம் யாவும் வாழ்க மதவெறி

கொண்ட பிசாசு தாழ்க சதாசிவ

மங்களாஞ்சுகள் பாட எங்கள் வாஞ்சைகள் நீட

வளமிகு மாதவ ரோதி வழுத்திய நீதிப் பிரகாரம் தன

துளமகிழ் தாவீதாதி மகத்துவ சோதித்திர வதாரங் கொடு

மனுடர் கணேந்திர பர்த்தா வாயொரு

கனிவினை தீர்த்தருள் கர்த்தா வாயிரு

மறியின் மேவிய தந்தைச் சொரூபன்

நெறியுலாவிய விந்தைக் கேரூபின்

- வாகனம்

 

சரணங்கள்

1.சுந்தர சவுந்தர சுயாதி பத்திய ராசன்

அந்தர மகண்டபரி பூரண விலாசன்

மந்திர ஜெபங்களின் மகத்துவப் பிரகாசன்

தந்தையர் பரம்பர தயாபர சருவேசன்

சுயம்பனாதி யொன்றான சயம்பெலன் திறம் ஞானம்

துத்திய மிகுத்த கருணை வாரி

நயந்தருந் தேவநீதி பயங்கரமான சோதி

நன்மைப் பரம உபகாரி

மயங்கொள ருபாரூபி வயங்கு சத்தியப் பிரதாபி

மாறாத வஸ்தொர சரீரி

புயங் கொள் பராக்கிரமத் தோ

வியங் கொள் சக்கராதி பத்திய

பூரண கடாட் சவதிகாரி

சூட்டி விட்ட னேகம் வானோர்

கூட்டமும் பரம் புவியும்

தோன்றும் பொருளும் படைத்தானே

வாட்ட மற்றறு தினத்தில் நாட்ட முற்றிருக்க வென்று

மண்ணினால் அதத்தை யெடுத்தானே

யீட்ட மாயவன் விலாவில் பூட்டிய

அஸ்தி யொன் றெடுத்

திஸ்திரியைச் செய்து கொடுத்தானே

மேட்டி மையதாய்ச் சிங்காரத் தோட்டமொன்று

போட்டிரண்டு, விருட்சத்தை நாட்டியடுத் தானே

துய்ய பரிசுத்தத்தினை யன் விலக்ககத்தி

னையுங் கனி தின்றத்தின்

மை யும் வலு சர்ப் பத்தின்

கொடிய சோதனை செய்யவு மேலே

முடிய மாதெனு மேவையினாலே

தொடர்ந்த கடிவினை உல கெங்கு மூடியே

அடர்ந்த மரணமும் நரர் பங்கினீடியே

சுற்றிய பா வத்துயரா நித்திய காலத்திலுமே

பற்றியே வத்துடகோ பத்த முன் மூழ்கத்திடமே

சூழ்ந்த சஞ்சல மோய்ந்த ழிந்து முன்

வீழ்ந்த மைந்தர்கள் வாழ்ந் தெழும்படி

சூதாக மங்களற வேதாக மங்களுட

நாதா மகிழ்ந்துமரி மாதா வினுந்தி யிடை

துங்க மிலங்க பிரா மின் வங்கிஷ

சங்கை மிகுந்த வி தோங்கலன் புற

விங்கித லங்கிருத பாங்குடன் செய

மங்கள மெங்கனு மோங்க வுங்கன

துரித மொடெருசலை அரசென முர செழ

வரு மரியின ரொரு பரம கேரூ பின் முகில்

- வாக

 

2. மண்டல மெலாம் புகழு மன்னவன் றவிது

கண்டபடி ராஜகுல கன்னி மரிமாது

தொண்டு செய வேகடவுள் சொன்னது பொய்யாது

பண்டு வினை தீர மறை பன்னிருவரோது

வாசகப்படி யூதேயா தேசமதிலே பெத்தலேம்

மாநகர் வனத்திடை வந்தானே

ஆசதில்லான் பாவிகண் மேல்

நேசமாய் முன்னணை யினில்

ஆவடை கொட்டிற் குட் பிறந்தானே

தேசுறும் வானோர் களெல்லாம்

ஓசையாய் கீதங்கள் பாடி

சேணடைந்து ரைக்க மகிழ்ந்தானே

பாசமாய் முல்லைத் தலைவர் ஆசையோடிரவில் வந்து

பாத மலர் காண உவந்தானே

மாற்ற மற்றுக் கிழக்கதில் தோற்றிய நட்சத்திரங் கண்டு

சாஸ்திரிகள் வந்திக்க வந்தாரே

போற்றியே பொந்தூப மிறை யாற்றிய முக்காணிக் கைகள்

தேற்றமாகச் சந்திக்கத் தந்தாரே

சீற்றமா யெரோ தே கொடுங்கூற்றமாய் அவன் சனமும்

வேற்றுமை பொருந்தி யிருந்தாரே

நாற்றமா முலக வாழ்வை யேற்றமா யெண்ணிக் கொண்டொரு

ஆற்றுமத்தின் வாழ்வை மறந்தாரே

வையம் புரக்க வந்த

ஐயன் குருதி சிந்த

நொய்யுஞ் சுன்னத் தடைந்த

மெய்யுந் தெரியமுந்த

வளமை யாலைய மங்கன மோங்கி

வலிமையாகவு நன்புகழ் தாங்கி

மகிழ்ந்து சிமியோனங் கோடி வந்து கூடியே

மிகுந்த வயதினன்னாளும் வந்துபாடியே

மங்களமாய் இங்கிதமாய் நன்குறுமா

சங்கிதரா கங்களினாலுங் கனமாயங்கவரோ

துங்கலையோ

வாழ்த்துறும் பல கீர்த்தனம் படு

தோத்திரங் களை யேர்த்து வந்தருள்

வாரி மகத்துவ சரீரீ பரத்தினா தாரி

செகத்தினுதாரி பிரதா னாசாரி

வஸ் தொரு நித்திய பூர்த்தியாரண

துத்திய மகத்துவ கீர்த்தி காரண

பத்தர்கள் முத்தர்க ணேத்திரமாகிய

சத்திய கிறிஸ் தென வேற்ற மேவிய

மறைதுறை நெறிமுறை குறையற நிறைவுற

வெறிசிறை பெறுகுறி பொறை செறி இறையவர்

- வாக

 

3. சங்கையுங் கனங்களும் பெலன்களும் விளங்க

சங்க வான வரங்கமான தளங்களு முழங்கப்

பங்கமோ டெழுங்கண மடங்கலும் நடுங்க

பஞ்ச பாதகங்களும் நரகங்களு மொடுங்கச்

சட்டமாய்ப் பன்னிரண்டாண்டில்

இஷ்டமாய் தேவாலயத்தில்

சாஸ்திரி களோடு தற்கித்தானே

திட்டமாய் யோர்தானதியில்

சிஷ்டகன் யோவானிடத்தில்

தீட்சை முப்பதாண்டினிற் பெற்றானே

துட்டலகை யானதுகள் கிட்டியே வனாந்திரத்தில்

சோதனை செய்ததுஞ் செயித்தானே

அட்டதிசை யெங்கனும் போய்

மட்டிலாப் புதுமை செய்து

அற்புத சுவிசேஷம் விதித்தானே

தாரணியில் பன்னிரு குரு

மார்களையப் போஸ்தலரென

சாட்சியாகக் கட்டளை யிட்டானே

பாருலகின் பாவமெல்லாம் தீரவே யாற்றும சரீர

பாடுகளனைத்தையும் பட்டானே

வாரினால் பிலாத்துவின் முன் கோரமாயடிக்கப்பட்டு

வாதை முண்முடி யதுந் தொட்டானே

மேரெனுங் கொல் கதாவினில்

பாரமாங் குருசிலேற்ற

வீரமாக ஜீவனை விட்டானே

சங்கை பிரேதலங்காரம்

துங்கப் போளச் சிங்காரம்

அங்கோர் சுக்கிர வாரம்

நங்காய்த் திட்டப் பிரகாரம்

தரவே கல்லறை யானது சார்ந்து

இருபேர் நல்லறி வாளர்க டேர்ந்து

சடம் வைத்துக் கண் மூடிப் போனதற் கப்புறமே

திடமுற்றுச் சொன்னீடித் தான் விசித்திரத் தரமே

தங்கு பாதலங்களுடி றங்கியாதியின் குமாரா

தங்கள் சேனை பொங்கு வானிலங்கி வாழ்கவுங் கிருபையாக

 

தாண்டிவன் சிறை மீண்டெழுந்தருள்

பூண்டுயர்ந் தெமை யாண்ட நாயகர்

சாபங்களும் பரம கோபங்களுந்திகிலும்

பாவங்களும் படுபர தாபங்களுந் தொலைய

சத்துரு சற்பனை வாதடி யோடற

வெற்றி மிகுத்த மராடி மெய் மாமறை

முற்று முடித்த வராய் வளமேவிய

நித்திய மகத்துவ ராஜ சிமேரென

சய பிரவை க ளொளிர் மயசுரர் தொழ நரர்

தயவருள் குருபர ஜெய ஜெய ஜெய வென

- வாக

 

4. பாடுற மரித்தடக்கப் பட்டாதித்த வாரம்

நீடு முதையத்தின் முன்னிருக்கு மந்த நேரம்

பீடுற வெழுந்த பிரஸ் தாப அதி வீரம்

சீடருக்குக் காட்சி தந்த திவ்விய விஸ்தாரம்

பாருல கதிர்த்தலாக வீரியச் சுரரிருவர்

பரத்திலிருந்து வந்த சீலம்

சீருடன் கல்லறை காத்த காரியச் சேவகரெல்லாம்

செத்தவர் போலே விழுந்த கோலம்

போரிடும் பசாசை வென்று

நேருடன் பிரஸ்தாப மாகப்

பூபதி கொண்ட செயத்தனு கூலம்

சூரிய பிரகாசமாக ஆரிய னெழுந்த மேன்மை

தோற்றுதற் கானந்த விசாலம்

பத்து விசைபல விடத்துத்தம தெரிசனைதம்

பத்தர் கட்கலொம் பகுத்தானே

சித்தமாக நாற்பதுநா ளித்தரையிலே யிருந்து

திவ்விய பிரசன்னம் மிகுத்தானே

சுத்தசுவி சேடமதை விஸ்தரித்துல கெங்கும் போய்

சொல்லுமென்று வேதம் வகுத்தானே

பெத்தானியா மட்டும் சென்று முற்றினும் ஐந்நூறு பேர்க்கு

பேரின்ப வாழ்வு தொகுத்தானே

பம்பைகள் மேளதாளம் உம்பர் குதிதி தெக்காளம்

கெம்பித் தெழும் சிம்மாளம் சம்பிரத் தோடண்ட கோளம்

படவே உன்னத மானவு லோலம்

இடவே பொன்னகர் மேவிய கோலம்

பாவாரும் வீணைகள் ஆயகுழல் மூழவே

தேவாதி தூதர்கள் கோடி புடை சூழவே

பள்ளமுறு கள்ளலகை யுள்ளலறி யெள்ளி விழ

வள்ளல்திரு வுள்ள மகிழ் கொள்ள மறையுள்ளபடி

பாங்குடன் பரமண்டல மேறி

யோங்கியும் புகழ் கொண்டுரை கூறி

பாரா பரத்தினோ டோரா சனத்திலே

சுராடு திக்கவே நாராள் குதிக்க மலர்

பாதமே கதி நீடி மகிழ்ந்தவர்

வேதநாயகன் பாடலுகந்தவர்

ஆதி கால முனாக இருந்தவர்

நீதியாதி பதி யொரு சுந்தரர்

படருலக முடிவினடு விட வருபவர்

கடவுளு டனுலவ திடமொ டொளி விண்முகில்

- வாக

(1827-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page