ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

பரிசுத்த இராப்போஜனத்தின் பேரிலே

 

229

 

வெண்பா

சீலத்துனதத்திவிய போசனாமனா

ஓலத்தோ டோலமுமக் கோசனா-ஞாலத்தே

மன்னுசதா நித்திய சுபசோபனா மகிமை

யின்னற் கிருபாசனா

 

(இராகம்: நீலாம்பரி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

மன்னு நித்திய சுபசோபனா

மகிமையின் கிருபாசனா

உன்னதத் திவிய போசனா

ஓலமோல முமக் கோசனா

 

சரணங்கள்

1.பொன்னகர்ச் சருவேசனே

பூரணப்பரம நேசனே

யென்னையாளுனது தாசனே

யேசு மானுவே லிராஜனே

மன்னு

 

2. ஒப்பிலாதுயர் சிநேகமே

உச்சிதத்திரு விவாகமே

தப்பிலாத தெய்வீகமே

தரும ஜீவப்பிரவாகமே

மன்னு

 

3. பத்தனைப் பதிய நாட்டுவாய்

பரம மோட்ச வழி காட்டுவாய்

சித்தமா யருள் பாராட்டுவாய்

தீமை யாவையும் விட்டோட்டுவாய்

மன்னு

 

4. பரதபிக்கு தெனின் நெஞ்சமே

பாவ மாயப் பிரவஞ்சமே

தருணமீ தருள்செய் கொஞ்சமே

தாசனானுனது தஞ்சமே

மன்னு

 

5. தயவு செய்யு மதிகாலமே

சருவ நன்மையின் விசாலமே

மயமுலாவு மனுகூலமே

மானுவேல னாதிமூலமே

மன்னு

 

6. பாதுகாத்தருள் சிங்காரனே

பரம ராட்சிய அதிகாரனே

வேதநாயக னுதாரனே

மேசியா நசரை யூரனே

மன்னு

(1832-வரு)

-----------------------------------

 

230

 

வெண்பா

ஆதிசுதன் பாவிகளுக்காய்க் கொடுக்கப்பட்டவன்று

தீதற்ற தஞ்சரீரம் சென்னீரும்-மாதவர்க்கு

வற்கத்துப் போசனமும் பானமுமென வழங்க

நற்கருணை யிஸ்தாபித்தார்.

 

(இராகம்: உசேனி)

 

பல்லவி

நற்கருணை யிஸ்தாபித்தார்

நம் மேசு நாதர்

நமக்குத்தமைக் கையளித்தார்

 

சரணங்கள்

1.சொற் கத்திருந்து வந்த சுருதிப் பரம தந்தை

சுந்தரமிகுந்திலங்கும் மைந்தன் கிறிஸ்து நாதர்

வர்க்கத்துடன் தமது சரீர முதிரத்தையும்

வகுத்தப்பம் பானமென்று பகுத்து திருவுளமாய்

தத்தி தக்குகு செஞ் செஞ்

தகசெஞ் செந்தரி கிடதக

தித்தா ததிமித கிடதக

தீணுத சணுதா

சாசாசா சநிநித நிசரிச

சநி நிததப மமபம

தாந் தாந் தீம் தீம்

தகணக செகணக கிணநக

தளங்குதக ததிங்கிணத்தோம்

 

2. மைந்தர் பரத்துறத் தந்தையார்

வந்தன்புடன் மானிடனுரு

புந்திப் புவிதனி லெளியோ

ராகவுந்திரிந்தே மாபாடாய்

மடியவும் வருமோர் இரவினில் அதிசயமுடன்

வாகாய்த் தஞ்சீடரோ

டெனதுட சரீர முதிரமென

அப்பமோடரிய ரசமதின்

நற்கருணை

 

3. ரீரீ நீசாச நிசரிகா பமகரிசா

தப மகரிச ரீரீ நீசாச

நாதன் அன்பாக யேருசாலேம் நகருறவே

நரகதிருது நாதன் அன்பாக

ரீரிச நிச ரிச ரிகமபர

த பர மகரிச பமககரிச ரீரீ நீசாச

நானில மது மிக மகிழுதே

பிசாசலறுதே நலம் வளருது நாதன் அன்பாக

நிநிநித தபம நிததப மபமபா

காம கம கக ரிரிசா

நீச காரி காம பாமா

தப மகரிசா ரீரீ நீசாச

நன்னைத்திருவடி நடை துரிதம்முடனே

பாடுபட மிகமனதாய்

சீடரோடு வாரபோதே

நமதருமையின் நாதன் அன்பாக

சாசாநித சநித சநித சநிநித தப

பசநித தபமா பமபம கரிசா

நிசரிச சரிக ரிகமக் கமப

மபதப் பதனித் தனிசாசா

பதபம பாபாபா மகரிச ரீரீநீசாச

நாவால் வழிமுடிய மறை நெறிகளே சொலியும்

விடுதியின் மடமோர் குருதி னமதிலே

இரவிற் புதுமைப் படமெய்த் திடம்வைத்

துறுதிச் செயலொப் பொடுபாஷா

முறைமை செய்தானாப் போலுரிமையின்

நா

 

பேதகமற்றுப் புது உடன்படிக்கைப்

பெருமை ஞானத் திரவியமாக

பிசகாமற் றம்மைச் சிந்தனை செய்ய பிரியத்தோடு

வேதநாயகன் பாடிக் கொண்டாடும்

மேசியா மெய்க்கிறிஸ்து பிரதாபன்

மேதினி மானிடர் கொண்ட தீதற

மேன்மைத் தேவரகசிய

ஞான போசன மென தத்தி

நற்

 

-----------------------------------

 

Table of contents

previous page start next page