ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

பாவக்கேட்டின் பேரிலே

 

231

 

வெண்பா

பேய் கலைக்க நாய் குலைக்கப் பேதைமனமே சலிக்கத்

தீயலைக்க வேமலைக்கச் சேய்வேனோ-வாயுலைக்கத்

தந்திர சற்பத்தின் றரத்தைக்கனன் றுதைத்த

சுந்தரப் பொற்பாதந்துணை.

 

பல்லவி

சுந்திரப்பாத விந்தத் தந்தத் தெந்தனைப் பரிவாயே

சொந்தத் தேவ சிந்தைச்சாதை முந்தப் புரிவாயே

 

சரணங்கள்

1.தந்திரத்தாதி மைந்தர்க்கான

விந்தைப் பரம போதா

சந்தச் சாந்திஸ் பிரீத்துக்கிறிஸ்துச்

சாமி யேசுநாதா

சுந்.

 

2. அஞ்சிப்பாவி கெஞ்சப்பேயும்

மிஞ்சக் கறுவிச் சீறுதே

அங்கத் துரோகர் சங்கத்தோ

டிணங்கத் துறுவிக் கூறுதே.

சுந்.

 

3. அன்பற்றுலகந் துன்பப் படுத்தி

அடங்க நடுங்கத் தூற்றுதே

யலங்கக் கலங்க மலங்க அசங்க

தங்கணிபங்கள் சாற்றுதே.

சுந்.

 

4. தொடுத்துக் கொந்தளித்தடுத்து மேதையும்

துயரத் துயரப் படுத்துதே

சூட்டி யாசையப் பூட்டி விழுக்

காட்டிச் சாட்டிக் கெடுத்துதே.

சுந்.

 

5. வீட்டுக் கவலை போட்டியாய் குரங்

காட்டப் படுத்தி வாட்டுதே

வேலைப்புறத் தோரோலைத் துரும்பு

போலக் கொதித்திட் டோட்டுதே.

சுந்.

 

6. புத்திரர் மித்திரர் களத்திரம் யாவருஞ்

சத்துருவாஞ் சந்தைக் கூட்டமே

பொங்கித் திரண்டு பிரண்டுருண்

டொழிந் தோடிப்போம் நீரோட்டமே.

சுந்.

 

7. சொற்ப உலகை மெய்ப்பென பிர

மிப்பதாகக் கண் டேங்கினேன்

றொந்த சாரத் தந்தகாரத்

தெந்த நேரமும் தூங்கினேன்.

 

8. மேசியா உனதாட்டைக் காட்டிலே

கூட்டித் தோளிலே போட்டுக்கோ

வேதநாயகன் பாட்டுக்காயினும்

கேட்டுக்கோ வெனை மீட்டுக்கோ.

சுந்.

டம் டம் டாரி டம் டம் டாரி

டம் டம் டாரி டாரி.

- 2

 

-----------------------------------

 

232

 

வெண்பா

சத்தியத்தைப் பேசு தரும வழியே செல்லு

பத்தியினா னொந்து செபம் பண்ணு-புத்திகெட்

ஆலமகள் வாழ்வை அனித்தியத்தை நாடி மனு

வேலர் திரு நாம மிகழாய்.

 

(இராகம்: பைரவி)

(அடதாளசாப்பு)

 

பல்லவி

மனுவேலர் திருநாம மிகழாதே மனமே

சாகும் மனுடர் தமை மகிழ்ந்து புகழாதே.

 

அனுபல்லவி

கனமும் சங்கையுமங்க நிகழாதே நித்திய

காட்சிதரு பரமாச்சரிய வான

ராட்ச்சிய வலமையின்

மோட்சா தனபதி.

மனு

 

சரணங்கள்

1.அழியு முலக வாழ்வை மதியாதே அதில்

அறிவு கெட மனது பதியாதே

பழிகொள் பாகாலின் வீட்டைமிதியாதே கன

பாதகமாய் மன வாதைகளே படு

சோதனை மேவியும் நீதிகெடாதே.

மனு

 

2. பாவிகளின் வழியில் நில்லாதே தீயர்

பண்ணும் யோசனைகளில் செல்லாதே

கோவிகளாசனமும் பொல்லாதே சற்

குருவை வந்தனைசெய் சர சகந்தையிலோர்

தரையும் நிந்தனைகள் படிறு சொல்லாதே.

மனு

 

3. வேதநாயகன் பாட்டைப் படிப்பாயே யேசு

மேசியாவைக் கண்டு பிடிப்பாயே

நாத கீதங்கள் பாடி நடிப்பாயே பவ

நாசரதி பிரிய நேசரி சரவேல்

ராஜரொரு சருவேச ரருள் பெற.

மனு

 

-----------------------------------

 

233

 

வெண்பா

முத்திதரும் ஞான முழு முதலை யொன்றான

நித்தியனைச் சற்றும் நினையாமற்-புத்திகெட்டுப்

போனேனே பேயைப் புகழ்ந்தேனே பொல்லாதா

னானேனே மா பாவியான்.

 

(இராகம்: முகாரி)

(திரிபுடை)

 

பல்லவி

பாவியானேன் நானே மா கெட்ட

பாவியானேன் நானே.

 

அனுபல்லவி

தீவினையிலே யலைந்து

ஜீவனிலையே கொலைந்து.

பாவி

 

சரணங்கள்

1.ஆதிபர னோது மொரு வேத நெறி யேதவறி

வாதைபுரி சூதலகை பேதமையை நாடி.

பாவி

 

2. யேசு பரனேச விசுவாசமறவே சிறுகி

மாசதுறு நீசவுல காசை தலையேறி.

பாவி

 

3. வங்கைமிக சங்கத மதங்கொண் மடமின்கடரு

வங்கண மிணங்கி மதி மங்கி மயல் பொங்கி

பாவி

 

4. தந்தையிவர் மைந்தரவர் பெந்ததுகள் சொந்தமென

அந்தி பகலுந்தியினினைந் திருகி வெந்து

பாவி

 

5. நஞ்சரவின் வெஞ்சினமுடன் சதிசெய் குஞ்சி நவ

வஞ்சமன நெஞ்சரை யிறைஞ்சியடி தொஞ்சு.

பாவி

 

6. ஓடி யுற வாடி வலு பேடிகளைநாடி யிசை

பாடி வெகு கோடிவினை மூடி முகம் வாடி.

பாவி

 

7. நல்ல வழி தேடி வேதநாயகன் பதங்கள் பாடி

வல்ல பரனைக் கொண்டாடி வழுத்தாமல் மனம் வாடி.

பாவி

(1800-வரு)

-----------------------------------

 

234

 

வெண்பா

சென்மச்சுபாவத்தின் தீவினையினால் மெலிந்து

வன்மப் பசாசால் மயங்கின்றேன் - நன்மை செய்வாய்.

மாசிலா நூலா மனுவேலா வோலோலா

யேசு பாலா வபையமே.

 

(இராகம்: கலியாணி)

 

பல்லவி

யேசு பாலகனே நான் பாவி

யென்னையாளுமேவி- யேசுபாலகனே

 

சரணங்கள்

1.ராஜதவிதா சன கிரிடா திபனே தேவ

ராக்கினி மரிதந்த பிரதாபனே

நேச மனதோடு மனு வாகியெனை யாளவந்த

நித்தனே கிருபை வைத் தெனை

முற்றிலு மாண்டு கொள்ளையா.

யேசு

 

2. பாவ மீறுதே சென்மச் சுபாவப்

பாதக மயக்கந் தலை மீதிலேறுதே

காவில் முந்த மேவி வந்த தீவினைப் பசாசு பயங்

காட்டுதே போராட்டங்கள் பா

ராட்டுதே கோட்டி கொள்ளுதே.

யேசு

 

3. வஞ்ச வையகம் பகைக்குதே மாங்கிஷத் திச்சை

வாதை செய்வதால் மனமெல்லாந் திகைக்குதே

அஞ்சலஞ்சல் காவென் றுனைப்

பஞ்சரித்துக் கெஞ்சுகின்றேன்

ஆச்சரியமாக வந்துன்

காட்சி தந்தனுக் கிரகிப்பாய்.

யேசு

 

4. ஆதிதந்த மாவிசித்திரமே தவீது வங்கிஷ

ஆண்டவா கிறிஸ்துக் கிருபா சமுத்திரமே,

வேதநாயகன் பதங்கொண்

டாதரித் தெனையெந்நாளும்

மிக்க சொற்பிரவைக் கண்ணோக்கும்

பக்கிஷக் கிருபைக் குள்ளாக்கும்.

யேசு

(1821-வரு)

-----------------------------------

 

235

 

வெண்பா

போன காலத்தைப் புறம் விட்டுப் பொல்லாங்க

னானகாலத்தையு மாராயாமல்-மனமாய்ச்

சித்தம் வைத்துக் காப்பாய் திருவுளமே யான்செய்த

குற்ற மெத்தத் தனையுங் கொண்டு.

 

பல்லவி

குற்ற மெத்தத் தனையோ அத்தனையும் பொருத்து நீயென்

குறை தீர்த்துத் தற்காத் தெனக் கருள்புரிவாய்.

 

சரணங்கள்

1.நித்திய தத்துவத்துயர்ந்த

முற்றொழித் திரித்துவ தேவே

அர்ச்சயப் பிதாவினுக்கோர்

உச்சிதத் திருக்குமாரா

பொஸ்தகத் துரைப் பிரகாரம்

பெத்தலைப் பதிக்குள் வந்த

பூரணக் கிருபை சிறந்த

காரணக் கிறிஸ்துவே என்

குற்றம்

 

2. அச்சமற்ற தக்கிரமித்த

துச்சணக் கிருத்துவமான

அக்கிரமத்தின் மக்களுக்குள்

விக்கிரகத்திடத்தி லோடிப்

பச்சிலைத் தளிர்களிட்டு

லட்ச லெட்சங் கற்சிலைக்கும்

பட்சம் வைத் தலைக்கழிந்த

லச்சை கெட்ட பாவிநானென்

குற்றம்

 

3. துற்குணத்தி லுற்பவத்த

ழுக்கறத் துடைத்துன் வேத

சொற்றிரத்து நற்குணப்ப

டுத்தியற்புதப் பிரகாரம்

முற்பவத் தருக்களித்தி

ருக்கனைத்தையுந் தொலைத்து

முக்கியப் பிரதாப மாயுன்

பக்கிஷக் கிருபையளித் தென்

குற்றம்

 

4. சிஷ்டி யாவையும் படைத்த

மட்டிலா மகத்துவ தேவே

கெட்ட மாந்தர் வாழ்க மாட்டுக்

கொட்டிலிற் பிறந்த கோவே

திட்டமாய் வேதநாயகன்

கட்டிய பாவுக் கன்பாவே

இஷ்டமே யெனக்கு நல்ல

திஷ்டமே சிரேஷ்டமே யென்

குற்றம்

(1836-வரு)

-----------------------------------

 

236

 

வெண்பா

பாவவுலகும் பசாசும் பகை செய்யுதே

பாவிக் குடலுழற வல்லவே-ஓகோ

தரணந் தரணந் தயாபர தேவா

கருணைவைத் தெந்தனைக் காவா

 

(இராகம்: சங்கராபரணம்)

(வில்லேந்தித் தாளம்)

 

பல்லவி

கருணைவைத் தெந்தனைக்

காக்கவேணும் சுவாமி

 

சரணங்கள்

1.அருணோதயச் சொரூபா

ஆதிஞானப் பிரதாபா

திருவருள் பிரசாதா

தேவ கிறிஸ்து நாதா

ரீரி ரிகமபசா பா மகரிச (2)

சாரி கமபரீகா மபதகாமா பதநி

மாபா தநிச

ரிகரி நீரிச நீசரி பாதநி

சாதபம பாமகரி காரிசரி

கரு

 

2. தேவா அதிசய யோவா திரிமுதற்

செல்லா பரம வுல்லா சதிப

நல்லா வளமை வல்லா வெனது

சிந்தைகொ டந்தியுஞ் சந்தியும் விந்தையிற்

தேவரீரையே பணிவன் ஆவலாக கருணை

மாமா பமகரிசரிகா ரீப்பமக சரிக

(2)

பாவங்கெடுக்கு தென்னிறையே பாதமலர் துணையே

(2)

பாப்பா மகரிசரீ ரிகம ரிகசரிக மாமா

பாரோர் பகைசெயுதே

அலகைகள் கதறுது பாவம்

மகரிச பமகரி தபமக

சநிதப மகரிச நிசரிக

மாமா

 

படிறுட னெனது சடலமிடு

நடல கெருவித தீவினை மெத்தப்-பாவம்

பா தபமமா பமககா மகரிசா ரிகம

(2)

பமதப சநிரிச பதநீச

பா மகரிசதா நிசரிக-மாமா

 

பாசமரு ளாசையெனு மாசணுகி மோசமிகு

பலவித கவலைகள் துயர்செறி

வாதனைப்படவோ முடியலை

பாவம்

 

சாநிதபமக ரிகமபா

சாரி காமா பதநி

- (2)

சாரிக காரிச நீசரி ரீசாநி

தாநிச சாநித பாதம பதநி

சாரிச நீசநி தாநித பாதப

மாபம காமக ரீகரி சாரிக

மாமா

 

பாதகனென வொருமலையோ

வேதனை மிஞ்சுதையோ

பாவித்தைங் காயத்திலே வைத்து வந்தெனை

நீடித்து நேசித்து முற்று மடிமைகொள்

பத்தியறத்தை யழித்த தமத்தொரு

மித்திதையத்தை வதைக்குது சத்துரு

பாவம்

 

தேவ குமாரா கிருபாகரா

(2)

செகத்திலுதித்த மனுடவதாரா

நாவல நெல்வேலி தேவசகாய வேத

நாயகன் கொண்டாடிக் கொள்ளும்

நம்பரா பரா ரீரி கருணை

(1825-வரு)

-----------------------------------

 

237

 

வெண்பா

மருவியுலகம் மயக்குது பேயுந்

திரியுது கெற்சிக்கச் சினந்திங் - குரிய

சரணதஞ் சந்தா தயவோடெனைக்கா

பரமவுல்லா சாதிபா

 

(இராகம்: பிலகரி)

 

பல்லவி

பரம வுல்லாசா நின்பாத

தஞ்சந் தாநேசா

 

சரணங்கள்

1.நரர் சுரர் யாவரும் பணியும் மிகு

நன்மைக் கிறிஸ்தேசு ராஜ

சாரிக சரிகப்ப மககரி ரிசநித

சரிக சரிக பமக சரிகபா

தாப மகபத சரி கபதச பதசா

ரிகரி ரீச நீத பாமா கரிச

பரம

 

2. பராமுகமென எனதருமையி னொருதிரு

மகிமைப் பிரபல சுதனுனதடி

பாவி தினமே மனதுருகவுமே செபமே

பணிந்திறைஞ்சி வாழ்கப் பாராய் தயவாய்

பரம

 

3. சாரிகக்க ரீக காரி பாத சரிகா

ரீகப்பமக ரீககாரி பாதநிசரிகா

(2)

ஏதுக்கென்ன இந்தவாதை செய்கிறாய் சாமி

எந்தையே நீ எந்தநாளும் வந்துன் கிருபைகூர்

ரிரிகப் பமக ரிககரிசநி பாதசாரிகா

பதநிப தசச கபப சரிக பதரி

சாநிதபத பாமகரிச

சாரி

 

இறையே யெனது கொடிய பாவம் சாபந்தீரவே

இச்சணமே கிருபையுடனே உனது திருவைங்

காயமதனில் ஆதரியையா

ஏது

 

தாப பமக கரிரி சநித

பாத சரிக பமக கப்பா

(2)

சரீ சக்கா ரிபக ததரி

நீதப் பத மாக ரிசரி-

சாரி

 

யேவை விலகுங் கனிதின்பவ

மாற மரியு தரமதிலே

(2)

உல்லாசத் தாவிதின் மகனென

மேவிய கிறிஸ்தாதி பாசரண்

பரப்பா ப்பம காக்கா க்கரி

ரீக சாரி பாத சா பாதசா பதசா

ரிபகததரி சாநிதப்ப பகரிசரி

சாரி

 

ஈசா சுவிசேடா பரத்தாதி காரணாதிப

நன்னேச பரம ராஜசுபவி

சேட தயாப சொரூபி

ஏது

 

ககப்ப மகரி கம்ம கரி

சரிக ரிசனி தபமக பதசாசா ரிகபாபாதரி

சாநிதப மாகரிசரி

ககப்ப மாக பதசநீத சரிகசாநீ தபாதசா

நிதக ரிமக கரிரிச பத

ரீசா நிதா பாமா கரிச

சாரி

 

இடி குமுறிய படிகதறிய

அலகைகள் கொடிய பகையுடன் றாவிவைது

மிகு கோபமுடன் சீறிச் சீறி மயக்கியெனை

மிகவடர்ந்து சமர்தொடர்ந்து

வினைபுரிந்து விகாதமே

செயவுல குடலது மெதிர்த்தெனை

தூஷித்திடத் துயர் வருத்தி

ஏது

 

மாது வித்தான உபதேசா

மாசில்லா நன்மைப் பிரகாசா

வேதநாயகன் பாடும் மேன்மைச் சருவேசா

மேசியாவே யென்னாற்றுமம்

விரும்பி யிருக்கும் வாசா

சாரி

(1828-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page