ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

இயேசுவைச் சினேகிக்கிறதின் பேரில்

 

253

 

வெண்பா

காலம் பொல்லாதாற் கருணை செய்வாரற்றதினால்

சாலத் துயராற்ற விக்கிறோம்-ஓலமே

தாசனைக் கண் பாருந் தயை கூருங் கர்த்தாவே

ஆசை நேசர் மேசியா

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஆசை நேசரேசு மேசியாவே ஓ கர்த்தா

 

அனுபல்லவி

தாசனைத் தயவாகப் பாரும் பிதாவே ஓ தாதா

ஆசை

 

சரணங்கள்

1.அந்தகாரத் தலகை யினடியானே நான்தானே

ஆனந்த மோக்கிஷ பரம சீவானந்த மோக்கிஷ

வாழ்வை நாடிவந்தேனே ஓ கோனே

ஆசை

 

2. சந்த தந்த மியார்குளது நிர்பந்தம் ஆதிந்தம்

வேதாந்த முதலே ஒரு வழி வேதாந்த முதலே

அருள் பாதார விந்தம் ஆனந்தம்

ஆசை

 

3. அருமைக் கிருஸ்துவே கிருபாசன்னா ஓமன்னா

ஆகாத பாவி நானுமக்காகாத பாவி

ரட்சியு மோசன்னா ஆமன்னா

ஆசை

 

4. அபையமே தவிதாதிபன் றிருமைந்தா பாதந்தா

ஆதாரம் நீயே அடியவர்க்காதாரம் நீயே

ஆசீர்வாதந்தா ஓ சொந்தா

ஆசை

 

5. எம்மையாள வந்தயே யோவாவே ஓகோவே

ஏகாதி தேவே திரித்துவ யேகாதி தேவே

வேதநாயகன் பாவே ஓ வாவே

ஆசை

(1834-வரு)

-----------------------------------

 

254

 

வெண்பா

பொன்னையா கண்ணையா பூதலத்தின் வாழ்க்கை யெல்லாம்

என்னையா குப்பை யல்லா லேதையா-என்னையா

ஓசையா மேசையா வுன்னதத்தையா உன்மேல்

ஆசையானே னேசையா.

 

பல்லவி

ஆசையானேனையா மேசையா மெத்த

ஆசையானேனையா நின்பாதத்துக்

காசையானேனையா

 

சரணங்கள்

1.நேச கிருபாலா யேசு மனுவேலா

நின்றாள் சரணந்தா பரன்மைந்தா

ஆசை

 

2. பத்தர் தொழும் நேசா நித்திய சருவேசா

பண்பா யிருக்கண்பா ரொரு நண்பா

ஆசை

 

3. நித்திய சகாயா உத்தம நன்நேயா

நின் பாலெனை யன்பாய் வரவும் பார்

ஆசை

 

4. மாறுதலிலானே யாறுதல் நீதானே

வாகா திரியேகா நீயே கா

ஆசை

 

5. மேவும் வினை நீங்க தேவ கிருபை யோங்க

மெய்த் தேவ கிறிஸ்தே கரிசித்தாள்

ஆசை

 

6. வேதநாயகன்பா வோத வருளன்பா

வேதா பரமதாதா யேசுநாதா

ஆசை

(தோரை)

7. நித்திய சங்கீத ராகங்கள் பாடி

நின்றிரு நாமப் புகழை நிதங்கொண்டாடி

நீடியே யருள் தேடியே சாமி

யுனை நாடியேயுற வாடியே மெத்தஆசை

(1829-வரு)

-----------------------------------

 

255

 

வெண்பா

ஆசை கொண்டேனுன் மீதென்னாற்றும நேசா பரம

வாசா பிரகாசா மகாராசா-ஈசாவே

முந்த வாதி தந்த பாவ நிந்தை மாற நந்தர் காண

விந்தையாக வந்த மேசையாவே

 

(இராகம்: மாஞ்சி)

(அடைதாள சாப்பு)

 

பல்லவி

விந்தையாக வந்த மேசையாவே உந்தன்

மீதிலாசை கொண்டேனேசையாவே

 

அனுபல்லவி

தந்தை மனுடர்கணிற் பந்தமகலத் தந்த

தாவீதரசன் றொழுந் தேவ திருக்குமாரா

- விந்

 

சரணங்கள்

1.உலக மயக்கத் தினிலடுத் தேனே யெனக்

குற்ற நாளெல்லாம் வீண்விடுத்தேனே

நிலை கெடாதெனைக் கண்பாரு மிகுமுதாரி

நீயே யென்னுபகாரி நீயே கிருபைவாரி.

- விந்

 

2. பேயுலகுடல் மூன்றும் பகை செய்யுதே யென்மேற்

பெலக்க அக்கினிஅம்புகளை யெய்யுதே

நேய மிகுந்த வெனதாற்றும் மணவாளனே

நித்த முனதிரக்கம் வைத்தாள் கிருபையாளனே

- விந்

 

3. கொடிய தீவினைக் கெந்தனைக் காருந்தேவ

கோபஞ் சாபமனைத்தையுந் தீரும்

அடலுக்கஞ்சிக் கெஞ்சிப் பஞ்சரிக்கு தென் னெஞ்சம்

அஞ்சல் செய்யுமுமக்கபைய மபையந் தஞ்சம்

- விந்

 

4. தங்கு கிருபையினுத்தம நேசா வானோர்

சங்கம் கனஞ்செய்யும் சங்கையின் ராசா

துங்க இசறாவேலர் வங்கிஷப் பிரவடீகா

துலங்கு தெய்வ சொரூபா மிலங்கு மற்புதவாகா

- விந்

 

5. சாதியனைத்து முய்யவரும் நீதா எங்கள்

சருவ சீவ தயாபர நாதா

வேதநாயகன்றன் பதத்தைக் கேட்டிம் மாத்திரம்

மேன்மை செய்யும் எந்த நாளுமுமக்கிஸ் தோத்திரம்

- விந்

 

-----------------------------------

 

256

 

வெண்பா

பாருந்திருக் கண்ணாற் பார்த்திரங்கித் துன்பமெல்லாந்

தீரும் அருள் கூருந்திருவுளமே-சீரருளும்

தம்பமே திவ்விய சரணம் சரணமே

நம்பி வந்தேன் மேசையா.

 

(இராகம்: பியாகிடை)

(ஆதி தாளம்)

 

பல்லவி

நம்பி வந்தேன் ஏசையா நான் நம்பிவந்தேனே திவிய

சரணம் சரணம் சரணமையா நான் நம்பி வந்தேனே

 

சரணங்கள்

1.தம்பிரா னொருவனே தம்பமே தருவனே வரு

தவிது குமரகுரு பரமனுவேலே நம்பி வந்தேனே

- நான்

 

2. நின்பாத தெரிசனம் அன்பான கரிசனம் நித

நிதசரி தொழுவதித மெனவு முறுதியில்நம்பி வந்தேனே

- நான்

 

3. நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் அதி

நலமிகு முனதிரு திருவடியருளே நம்பி வந்தேனே

- நான்

 

4. அட்செயத்தைங்காயம் அற்புதத் திவிய நேயம்-நினை

வறிவுடனிருதய மகிழவு முழுவதும் நம்பி வந்தேனே

- நான்

 

5. தேடினேன் பாதமே நாடினேன் வேதமே ஓகோ

திருவுளமே கைவிடா தேயுமையா நம்பி வந்தேனே

- நான்

 

6. பாவியிற் பாவியே கோவியிற் கோவியே கன

பரிவுடனருள் புரிஅகல விடாதே நம்பிவந்தேனே

- நான்

 

7. ஆதி ஓலோலமே பாதுகா காலமே உன

தடிமைகள் படுதுயரவதிகள் மெத்த நம்பிவந்தேனே

- நான்

 

8. சுவிசேட தோத்திரி கவிவேத சாஸ்திரி துதி

சொலிய பதஉனத கவிதைகள் பாடி நம்பிவந்தேனே

- நான்

(1834-வரு)

-----------------------------------

 

257

 

வெண்பா

சீவாகமத்தின் திடனே திரித்துவத்தின்

மூவாளிரண்டா முதன்மையே-காவாவா

ஏவாள் பொருட்டா லெமைப் புரக்க வந்தஒரே

தேவா பரமகிறிஸ்து.

 

பல்லவி

தேவா பர கிறிஸ்து

தேவா பர தேவா பர

 

சரணங்கள்

1.சீவா தற்பர யோவா அற்புத

சிந்தைப் பிரானேசா

மூவாளொத்த சொரூபா பாவா

காவா நசரேசா கிறிஸ்து

- தேவா

 

2. நேசக் கிருபாலா யேசிசரேலா

தாசர்க்கனு கூலா

ஆசைக்கணாளா அன்பா தோழா

நண்பா மணவாளா கிறிஸ்து

- தேவா

 

3. வானத் திறைவன் மேன்மைப் பரமன்

சேனைத் திரளோனே

ஞானக் குரவன் நசரேத்தானே

நம்முட பெருமானே கிறிஸ்து

- தேவா

 

4. நித்தா ஞானப்பர்த்தா கர்த்தா

நித்திய பரிசுத்தா

அத்தா தேவதத்தா சீர்பா

தத்தா கரிசித்தாள் கிறிஸ்து

- தேவா

 

5. நித்திய சீவன்நீயே பாதையும்

நீயே சத்தியமே

பத்தனையுத்தம சித்த மிகுந்தே

வைத்தாதரி நயமே கிறிஸ்து

- தேவா

 

6. மட்டில்லா வானச் சேனைகளும்

பூதலர் பாதலருஞ்

சிட்டும் பாடுது திருநெல்லைப்பதி

யானும் பாடுகிறான் கிறிஸ்து

- தேவா

(1832-வரு)

-----------------------------------

 

258

 

வெண்பா

உன்னத மெஞ்ஞானமே ஒப்பிலா வுண்மையே

அன்னை வயற்றுற்ற வனாதியே-மன்னா

உருக்கத் தயவாலுயர்ந்ததே உச்சத்

திரக்கப் பராபரமே

 

(இராகம்: மனிரங்கு)

(ஆதி தாளம்)

 

பல்லவி

இரக்கமே பரமே யுனதமே

யிரக்கமே பரமே

 

சரணங்கள்

1.செருக்குலாவு பரப் பிரமாதி

திருக்கு மாரனான மேசியே

இரக்க

 

2. நூலே கோலே இம்மானு வேலா

ஞாலப் பிறவைய தான மேசியா

இரக்க

 

3. சாதாரண மறை போதா தாதா

நாதா குருவடிவான மேசியா

இரக்க

 

4. வானக் கருணை மெஞ்ஞானத் திரவிய

மேன்மைத் திருவவதார மேசியா

இரக்க

 

5. தந்தையா திருவுள விந்தைய தோ

என கந்தைய தோ குடில் வந்தது மேசியா

இரக்க

 

6. வேதநாயகன் ஓது பாடலின்

மீது லாவிய யேசு மேசியா

இரக்க

(1823-வரு)

-----------------------------------

 

259

 

வெண்பா

ஆண்டு கொண்டதற் குன்னடிமை சிறை நீக்கி

மீண்டு கொண்டதற்கு மிக்க கிருபை-நீண்டதற்கு

சந்ததமே கோடி தரமே தயாபரமே

வந்தனம் வந்தனமைய்யா

 

(இராகம்: ஆனந்த பைரவி)

(சாப்பு தாளம்)

 

பல்லவி

வந்தனம் வந்தன மேசையா

கிறிஸ் தேசையா

 

அனுபல்லவி

சந்ததஞ் சந்ததந் துத்தியம் வந்தனந் தானுமக்கே

சுந்தரமாய்க் கொண்டருளும் தந்தை திரு மகனே

எந்தாயகனே வியாபகனே கிருபை முகனே

கிருபை முகனே கிறிஸ் தேசு நாயகனே

வந்

 

சரணங்கள்

1.அந்தரம் புவியுஞ் சுந்தரமுட னமைத்த

அட்சய தேவ திரித்துவம்

முந்து மனுடர் கணிற்பந்த மகல வந்த

முக்கியப் பிரதாப மகத்து வம்

தந்தைப் பிதாவினுட விந்தைக் குமாரனாகத்

தானே யுதித்த சத்துவம்

மைந்தர் மேல் கருணை வைத்த நிந்தையனைத்துஞ் சயித்த

இந்த உலகிலுதித்த

எந்தையார் வாக்குத் தத்தம்

பிரிய சித்தம் உரிமைப் பத்தம் மாபரி சுத்தம்

மாபரி சுத்தம் வானவன் சத்தம்

வந்

 

2. சாதியாலுண்டாகும் பேதகங்களு மன

வாதையு மெளி தாமோ

பாதகப் பசாசின் சோதனையில் மெலிந்து

பரதவிக்கவும் போமா

மாதர் மக்கள் பிரவஞ்ச வாழ்வனைத்தும்

மாயமல்லோ சீமா

வேதப் பொருளே கோமா நீதித்தவிது பூமா

போதத்துரிய சேமா தாதை யேசு நாமா

உபத்திரமா மிக வருமா பராமுகமா

பரா முகமா பராபர வஸ்தோம் நமா

வந்

 

3. தாயின் கருப்பத்தெனை நேயமாகக் காத்து

தாங்கிக் கருணை யூட்டி

மாய வுலகினாலும் பேயினாலும் வந்த

வறுமை யனைத்து மோட்டி

ஞாய நெறியோ டெனைத் தூய சபையில் வேத

நாயகனென நாட்டி

ஆயனாகக் கூட்டிப்போய் நல்வழியைக் காட்டித்

தீய பகையை மாட்டிச் சகாயமாய்த் தீட்டி

சீராட்டிக் கிருபைப் பாராட்டி முடிசூட்டி

முடி சூட்டி வைத்த முதல்வா மூவுலகாட்டி

வந்

(1833-வரு)

-----------------------------------

 

260

 

வெண்பா

மருகி மருகி மனக்கிலேசத்தால்

உருகி உருகி உலைந்தேன் - திருவுளத்தாற்

பூமி புரக்க வந்த புண்ணிய கிறிஸ் தேசு

சாமி யுந்தன் தயைபுரி

 

(இராகம்: காம்போதி)

 

பல்லவி

சாமியுந்தன் தயை புரிவாயே

சருவலோகாதி (தாதா) பதிநீயே

 

சரணங்கள்

1.நாம கீர்த்தனப் பிரதாப

நரதயாபர பரம ராச

தாந்தாந் தக தீந்திங்கிட

தரிகிணநகதக திமித்தோந்

தசாப் பதாப்ப மா கரிசா

ரிகம பதா பதரிசரி

தகாதிகி ததிங்கிணத் தோம்

சாமி

 

2. மூவாளொரு தெய்வந்தனில்

முதல் சுரர் தொழும் பரமபிதா

பரேசுரா பராபரமே

பரசொரூபி திருவுளமே

தயாபரா சரணடியேன்

சாமி

 

3. காகாகா மககரி சாசா

ரிசனி பாதசரி காகாகா

மாதேவா வுனதருள் கூராய்

மருகி வாடுகிறேன் மாதேவா

காகாகா ரிக்கக்கரி சாரீரீரீ

சநிப்பத சாசாசா

ரிக்கரி ரிக்கரி சனிபதசரி

காகா

 

மாதின் தீ தாலம் புவியில் வானோரே

மகத்துவ மென்றன்பாய்

புகழ்ச்சி செப்பவும் வரும் பரம்பர

மாதேவா

காகமகரீரி ரிகரிசசா சரிசனிபா பதசரி

மாமறைமுனி வோரெழுதிய நேரொருகனி மாமரி தரும் மாதே

காமக காரிச ரிக்கரி ரீசனி

பா தசரிக் கரி சனிபாதசரி

காகா

மாசணுகா விசரேலர் குலாதிப

தாவிது சேயென உலகங்க டொழும்

மாதே

காமக ரிக்கரி சாரி சனிப்பத

பாதசரிக்கரி சானிபதசரி

காகா

மாசிலா ஆசிலா ஏசிலா யேசலா

வாசலா நேசவுலா சலா ஓசலாம் மாதே

வேதநாயகன் சங்கீதா

மிகுத்த நேச மகத்துவராச தாந்

சாமி

(1838-வரு)

-----------------------------------

 

261

 

வெண்பா

ஓஓஓ அப்பப்ப அண்ணண்ண ஐயாவோ

காகாகா கத்திக்கதறுகிறோம்-வாவாவா

பான்மைச் சினேகப் பரமானந்தக் கடலே

மேன்மைக் கிருபை மேசியா

 

பல்லவி

மேசியா யேசையா நாதா

மேன்மைக் கிருபையா

 

அனுபல்லவி

நீ சினேகமென்ற வாரிக் கடலே

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

மேசி

 

சரணங்கள்

1.தப்பில்லாச் சத்தியப் பிரகார

முப்பொருட்டி ரித்துவமாக

இப்புவிக் கனுக் கிர கிக்கு

மப் பப் பப் பப் பப் பப் பப் பா

மேசி

 

2. கண்ணிற் காணத் தோணக் கூடா

எண்ணுதற் கெட்டாத ஞானப்

புண்ணிய சொரூப தேவா

அண்ணண் ணண்ணண் ணண்ணண்ணண்ணா

மேசி

 

3. நாட்டமே தென்னெல்லை வேத

நாயகன் சங்கீதப் பண் கொண்

டாட்டமே யேசுக் கிறிஸ் தென்

னையை யை யை யை யை யை யா

மேசி

(1851-வரு)

-----------------------------------

 

262

 

வெண்பா

சத்திய சொரூபதயாலுவே தாவீதின்

வித்தில் வெளியான மனுவேலரசே-பத்தனையா

ளாதிநரர் பாதகத்தாலாக் கொட்டிலிற் பிறந்த

நீ தயைச்சே தேவனே நீ

 

பல்லவி

நீ தயைச் சே தேவ

நித்தியானந்த காட்சி நீ

 

அனுபல்லவி

நாதப் பரமானந்தரசே

கிருபை வர நீ

 

சரணங்கள்

1.பரசொரூபானன

ஸ்பர கிறிஸ்தீசா

பரத்தியான நேசகிரு

பான்மையா கிருபை வர-நீ

 

2. திருமறை வாசன

திவ்விய மனுவேலா

வரச்சுயாதி காரமன்

வாஞ்சையா கிருபைவர-நீ

 

3. கலை வேதநாயகன்

கவிக் கனுகூலா

தலைச் சினேக நேசகுரு

சாந்த வாகிருபை வர-நீ

(1850-வரு)

-----------------------------------

 

263

 

வெண்பா

சோதனையை நீக்கித் துன்மைகளைப் போக்கி

வேதனையாவும் விலக்குவா-யாதிக்

கிருபையினையா கிறிஸ்தேசு நாதா

வரிய பரம சீவனா.

 

(இராகம்: நாட்டகுருச்சி)

(ரூபகம்)

 

பல்லவி

பரம சீவனா

பவ விமோசனா சீமா

 

அனுபல்லவி

கிருபை யாசனா கிறிஸ்

தருள்செய் ஓசனா

தருமிங்கித நிறை சுந்தர

திரவிய சம்பன்னா சீமா

- பரம

 

சரணம்

நாத கீர்த்தன ஞானசாஸ்திர

இஸ்திரியேவை நேத்திரா

ஞாபகசே முயர்சரித்திர தவிதிறைபுத்திர

வேதநாயகன் றமிழ்க்குரிய தாயகா

மேசியா குருபரநிர்மல இயேசுராசசந்நுதா- பரம

(1851-வரு)

-----------------------------------

 

264

 

வெண்பா

அனவாத காலத்தனாதி பிதாவானோர்

தனது கிருபையாற்றந்த-வினிய

மனுடவதார மகா புத்திரனை

மனசே மறவற்க நீ.

 

(இராகம்: அட்டானா)

(ஆதி தாளம்)

 

பல்லவி

மனசே மாதேவ புத்திரனை

மறவற்க நீ சிறக்க ஓ ஓ மனசே

 

அனுபல்லவி

முனமொட்டின ஒட்டின பாவக்கிரமம்

முடியாத பிரமம் படும்வாதை சிரமம்

அகில காட்சிக்கே ஓ

- மனசே

 

சரணம்

அத்தியந்த தாட்சி மாட்சி மிகுதியின்

கத்தவிய கிறிஸ்தே சுவினாலிங்கே

எத்துயரமே போம் தென்னெல்லையான்

இஷ்டக் கவிக்காம் இயேசு ராஜனினால்

- மனசே

(1831-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page