ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

செபத்தின் பேரில்

 

265

 

வெண்பா

என்னருமை நீ யறிவாய் யானுமுனையறிவேன்

நின்னையல்லா லென்னை நினைப்பதார்-பொன்னுலகத்

தந்தை சருவேஸ்பரனே உந்தன் மகன் யேசுவுக்காய்

எந்தன்முகம் பார்த்திரங்குவாய்.

 

(இராகம்: உசேனி)

(ரூபகம்)

 

பல்லவி

தந்தை சருவேஸ்பரனே உந்தன் மகன்யேசுவுக்காய்

எந்தன்முகம் பார்த்திரங்குவாயே

இம் மாத்திரம் நீயே

எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

 

சரணங்கள்

1.அந்தமதிலா அகாரி

சந்ததமுமே விசாரி

விந்தையருள் மேவும் அசரீரி

மெய்ஞான வாரி

- தந்தை

 

2. ஞானபரனே யொருத்துவ

மான முதலே திரித்துவ

மேன்மை வடி வான மகத்துவம்

மேலான தத்துவம்

- தந்தை

 

3. விற்பன விவேகநூலா

அற்புதம தானசீலா

நற்பரம லோக அனு கூலா

நன்மைக் கிருபாலா

-தந்தை

 

4. ஆதிமுதலான நேசா,

வேதமறை மீதுலாசா

பேதகமில்லாத சத்தியவாசா,

ஞானப்பிரகாசா

- தந்தை

 

5. வந்த வினை யாவுந் தீரும்

நிந்தை யணுகாமல் காரும்

சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும்

சீர் பாதந் தாரும்

- தந்தை

 

6. ஏட்டுத் திரளாகக் கூட்டி

நீட்டுப் புகழாகத் தீட்டிப்

பாட்டுச் சொல்லும் வேதநாயகன்

கொண்டாட்டுக் கிட்டு

- தந்தை

(1813-வரு)

-----------------------------------

 

266

 

வெண்பா

என்னையா சும்மாயிருந்தால் நடக்குமோ

பின்னையா ரெங்கள் பிணையாளி-எந்நாளும்

இஸ்தோத்திர சங்கீர்த்தனம் யேசுக்கிறிஸ்துவே

வஸ்தனாதிப் பரா வா.

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(திச்ர ஏகம்)

 

பல்லவி

வஸ் தனாதிப் பரா எங்கள் மெய்த்தேவனே

ஐயா வா வா ஓ பானுவே

 

சரணங்கள்

1.விஸ்தார சங்கா கிறிஸ்தே இரங்காய்

ஸ்தோத்திர சங்கீர்த்தன பொற்பாதமே

ஐயா வாவா ஓசன்னாவே

- வஸ்

 

2. தேவாதி தேவா மூவா சொரூபா

காவா தயாபா இந்நற்காலமே

ஐயா வா வா ஓரட்சகா

- வஸ்

 

3. ஓரேயே யோவா ஈரெசு பாவா

பாரேயன் பாரே கண்பார் அம்பரா

ஐயா வா வா ஓ மானுவேல்

- வஸ்

 

4. ஞானப் பிரவாகா மேன்மைத் திரியேகா

வானத்திலே வந்த தேவத்தனே

ஐயா வா வா ஓகர்த்தனே.

- வஸ்

 

5. நின்பாதம் தாராய் வன்பாவம் தீராய்

அன்பா யென்முன்பே செலும் தந்தையே

ஐயா வா வா ஓ தம்பமே

- வஸ்

 

6. வேதநாயகன் பாவா காவா

ஆதி மூலமே தற்கோலமே

ஐயா வா வா ஓ லோலமே

- வஸ்

(1834-வரு)

-----------------------------------

 

267

 

வெண்பா

வாதையுல கூடெனது மாதுயரம் நீக்கின் மிகும்

சேதம் வருமோ கருணை செய்யாயோ-பாதகருக்

காவலுறு மேசுநாதையா மேசையா மெய்த்

தேவபரன் சேயா செயா

 

(இராகம்: தன்யாசி)

(ஆதிதாளம்)

 

பல்லவி

தேவபரன் சேயா கன

சேதமென்னையா எனையாள்

வாய் கிருபையாய் மேசையா

அனுபல்லவி

ஆவைமரியிட மேவு மேசுநாத

ஆண்டவா ஞானேந்திரா அடிமையை

மீண்டு காப்பதலோ உனதுடகடன்

- தேவ

 

சரணங்கள்

1.ஆதிபரம ஞானி பிரதானி

ஆகம கலைக்கியானி மிகும்

ஆவலாகினேன் உன் மீது

பாவியைச் சித்தம் வைத்துப்பார்

- தேவ

 

2. வானாதிகாரா ஞானவுதாரா

மானிட அவதாரா யூதர்

மன்னவா மனுவேலரசே எனை

வின்னமாய் நினையாதுன தருள்புரி.

- தேவ

 

3. மதுர உபாய வசன சம்பிரதாய

வளரும் தேவசகாய நேய

மைந்தன் வேதநாயகன்

மகிழ்ந்தடி சிறந்துபாடும்.

- தேவ

(1819-வரு)

-----------------------------------

 

268

 

வெண்பா

சமைய சகாயா தயைமிகு நன்னேயா

வுமையு மடைக்கலத்தைங் காயா-கமைக்கடலே

யுந்தனக் கன்றோ வடியோசியன்னா சீவனே

எந்தை யனாதி வஸ்துவே.

 

பல்லவி

எந்தையே யனாதி வஸ்துவே

ஓசியன்னாவே

இரட்சியும் ஏசுக்கிறிஸ்துவே.

 

சரணங்கள்

1.சுந்தரத் தேவாதி குமரா சுயாதிகாரா

தோற்றிய மானிடவதாரா.

- எந்தை

 

2. ஆறு லட்சண சொரூபியே சருவவியாபி

அனந்த நன்மைப் பிரதாபியே.

- எந்தை

 

3. அம்பரா அனாதி இரட்சகா ஓகோகோ காவா

அகிலத் தொன்றான ரட்சகா.

- எந்தை

 

4. ஆதியிலிருந்த சத்தமே ஆதமேவாளுக்

களித்தத் திருவாக் குத்தத்தமே.

- எந்தை

 

5. அற்புதத் திரித்துவ மெய்த் தேவேயே யேயோவாவே

ஆண்டவா மாதேவா காவாவே.

- எந்தை

 

6. பாவிகட்கிரங்கு மேசையா தேவாதி சேயா

பக்கிஷக் கிருபைக் கண்பார் துய்யா.

- எந்தை

 

7. சந்ததம் வந்தனம் வந்தனம் ஓ நித்தியானந்தம்

சமஸ்த சங்கீர்த்தனம் ஏசுவே.

- எந்தை

 

8. நெல்லை வேதநாயகன் பாட்டை

அடியார் மன்றாட்டை

நித்தியம் கேட்டருள் பாராட்டே.

- எந்தை

(1380-வரு)

-----------------------------------

 

269

 

வெண்பா

மூவா முதல்வா முடிவா முடிவிலவா

கோவா வருவா குருவடிவா-ஜீவா வா

பாவா ஒருவா பரிவா திருவுருவா

தேவா யேயோவா சீவா.

 

பல்லவி

தேவ தேவனே சேயோவா

வா வென் ஜீவனே.

 

அனுபல்லவி

காவலர்க் குப தேசனே கன

பாவிகட்கதி நேசனே உயர்

கர்த்தனேக திரித்துவ ஞான

மகத்துவ ராஜ கிறிஸ்துவே பர

தேவ

 

சரணங்கள்

1.அந்தமேனியே கனம் பெரும் அனந்த ஞானியே

விந்தை மானியே சுதந்தர மிகுந்த தானியே

தந்தை யார்தர வந்தவா பசு

மந்தையூடு பிறந்தவா கதி

தந்த வா சொலு வந்தவா மெய்

சிறந்தவா விண்ணெழுந்த வா திவிய

தேவ

 

2. சத்திய வாசனே யூதர்குல தவீது ராஜனே

நித்தியநேசனே அடியவர் நிலைமை யீசனே

பத்தருக்குப காரனே வளர்

பெத்தலைக்கதிகாரனே கன

பாரனே அதிதீரனே நல்லு

தாரனே பெல வீரனே ஜெய

தேவ

 

3. யேசுநாதனே எளியவர்க்கிரங்கும் நீதனே

மாசிலாதனே திருமறை வகுத்த போதனே

நேச ஒப்பர வானனே உரை

பேசுதற்கரி தானனே தவ

நித்தனே எமதத்தனே பரி

சுத்தனே யொருகத்தனே வல

தேவ

 

4. வானசீலனே மனுவுருவானமூலனே

ஞான பாலனே அதிசய நன்மை நூலனே

பானுவேல் மனுகோலனே திரு

மானுவே லனு கூலனே கன

பத்தியே தரு துத்தியமே நெடு

நித்திய மாய் வளர் வஸ்துவே யொரு

தேவ

 

5. தூதராடவே அனைமரி மாது நாடவே

நீதர் தேடவே இடையரும் பாதைகூடவே

வேதநாயகன் பாடவே கண

பூதகூளிகள் ஒடவே ஒளி

மீட்டவே வழிகாட்டவே அரு

ளீட்டவே மறை தீட்டவே வரு

தேவ

(1811-வரு)

-----------------------------------

 

270

 

வெண்பா

நீதியனைத்தும் நிறைவேற்றிப் பாவிகளைப்

பாதுகாத்தாள வந்த பக்கிஷமே-சோதனையில்

விந்தைக் கிருபை மிக சூடத்தாமதமே

தெந்தைப் பொருண் மேசையா.

 

(இராகம்: கமாஸ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

விந்தைக் கிருபை சூடத்தாம

சமேதுமே சையா

பாமா சமேது மேசையா

தேவா சமேது மேசையா

ஒகோ சமேது மேசையா

 

சரணங்கள்

1.சுந்தரப்பிரகாச னே

துத்திய சருவேசனே

தந்தைக்கதி நேசனே சாமி நீ

கிறிஸ்தேசு ராஜனே

விந்தை

 

2. ஆசை மண வாள னீ

நேசமிகு தோழனீ

ஆற்றுமப் பங்காளனீ ஆனந்த

சுப சுவி சேட நீ

விந்தை

 

3. நித்திய அனுகூலனே

நீதி மனு வேலனே

சத்திய பரிபாலனே தாவிது

ராஜ இசரேலனே

விந்தை

 

4. சித்தமாக வந்தையே

ஜீவனையும் தந்தையே

பத்தர் தொழும் விந்தையே பரம

கடாட்சத் தெந்தையே

விந்தை

 

5. உன்னதப் பராபரா

உச்சிதக் கிருபாகரா

மன்னுயிர்த்த ராதரா மாயதீ

வினையாவும் நிராதரா

விந்தை

 

6. ஜீவனான பூங்காவே

தேவ தேவா திகோவே

வேதநாயகன் பாவே மேசையா

மெய்யான யேயோவாவே.

விந்தை

(1828-வரு)

-----------------------------------

 

271

 

வெண்பா

நெருக்கத்திற் றுன்பத்தில் நெஞ்சம் நடுங்கும்

பெருக்கத் துயரப்பிரவாகத்-துருக்கத்திற்

ஜீவ குருபர கத்தாவும் பத்தாவும்

தேவ சுதனொரு மெய்த்தேவு.

 

(இராகம்: இங்கிலீஷ்)

(ஏக தாளம்)

 

பல்லவி

தேவ சுதனொரு மெய்த்தேவே பர (2)

சிற்பர தற்பர மாவுருவே

சேவடி மிக்கா தினசரணே தயாபரா.

 

சரணங்கள்

1.தாவீதி னெழின் முடியரசே யுவர்

(2)

தானவர் தொழு மதிசயமே

சா லேம் ரா ஜே

தவறா தெனையாள் பிரவை யோனே

தாயுனுரிமையே தூய கிருபையே

ததியுனதருள் புரி.

 

காம பமகரி சஸ்சரி சரி

(2)

கக்கரி மம்மரி காகசரி

காகரி கத்தா பமகரிசா ரிசா சசா

பாத பாமக ரிகம ரிகா கம

(2)

ரி கமபம கரி சரி சா

ரீகா மா பா

மதபா மபமா கம காரி

பா தனிசரிசா ரீ நிசதனிபா

மதபம கரிசரி காம

 

2. ஆதி நரர் கருவத்தாலே தலை

(2)

அற்புத உற்பவ மாய் மரிபால்

ஆரணியத்தே முன்னணையி லோரிராவிலே

வேதிய ரெழுதியபடியே மறை

(2)

மேதினி வரு திருவடி வே

மே சை யா வே

விரசாய் வருவாய் தருவாயே

மீள வெனையுமே ஆள நினையுமே

வெலை நகரதிபதி-காம-தேவ

 

3. வாடி மனதுரு கித்தானே முகம்

(2)

மற் பொரு துற்கடி சோதனைமேல்

வாதை மிகுத்தே எதிரிகளால கோரமாய்ப்

பாடுகள் பட முடிவதுவோ கன

(2)

பாதகர் கொடுமைகள் வலிதே

பாழா காதே

பரமே பரமே அருள் பாரே

பாவி பணிகிறேன் தாவியணைகிறேன்

பரிவுடனருள்புரி-காம-தேவ

 

4. சாதிகளுட மதத்தாலே பல

(2)

சத்திய உத்தம பாதையிலே

சால நடக்கா திடர்புரி வாரனீதமே

ஏதவர் முழு இருதயமே அறி

(2)

யீன நர கிருளின் மயமே

யீடேறார் மேல்

இசரே லரசே கிருபை கூரே

யேர் திருநெல்லையான் நேர்தரு கவியான்

இனி நடுவிட வரும்-காம-தேவ

(1836-வரு)

-----------------------------------

 

272

 

வெண்பா

சிந்தாகுலந்திர திடன்னா செகச்சால

நிந்தாட்சணை யனைத்தும் நீக்குவாய்-அந்தாதி

ஆசிலா மேன்மைமிகும் அட்சய திரித்துவத்தின்

மேசியா மெய்க் கிறிஸ்துவே

 

(இராகம்: இங்கிலீஷ்)

(ஏக தாளம்)

 

பல்லவி

மேசியா கிறிஸ்த னாதியந்தனே

மேன்மை சேர் திரித்துவ சோதிமைந்தனே

நேசமா மகத்துவ வீர பந்தனே

நீடு தேவ சத்துவ தார விந்தனே

 

அனுபல்லவி

ஆசையடர்ந்தும் பாச மிகுந்தும்

அந்தஞ் சிந்தும் சொந்தஞ் செந்து

மாசற வென்றுந் தேசுற நின்றும்

வந்துந்தந் தெஞ் சுந்தரங் கொண்ட

மேசி

 

சரணங்கள்

1.தேவ ஜோதி சுர விண்டல சுந்தரனே

சீருலாவு பர மண்டல மந்திரனே

மூவுலகங்களின் கணெங்கும் நிரந்தரனே

மோசையங்கனம் வணங்கு துரந்தரனே

முந்த உகந்தென் பெந்துறு துன்பம்

முங்குந் திண்டந் திங்குண் றொண்டன்

சந்ததமுந்தன் சுந்தரவிந்தந்

தண் கண்டங்கும் பண் பொன்றுந்தும்

மேசி

 

2. நாடியெனை மனு வாகி மீண்டவனே

ஞானகிருபை தயாப நீண்டவனே

வாடி யொருகுருசேறி மாண்டவனே

மாசிலாத யேசு நாத ஆண்டவனே

வஞ்சகர் நெஞ்சம் பஞ்சக மிஞ்சும்

வண்டுந் திண்டு வம்புந் தும்புஞ்

சஞ்சலமுங் கஞ் சங் களுமஞ்சுந்

தந்திங் குந்தும் தஞ்சங் கஞ்சம்

மேசி

 

3. ஆதி காரண கொண்டாட்ட அம்பரனே

நீதி யாரண விண் டேட்டவும்பரனே

பூத பேய் கன்றன் றோட்டு தம்பரனே

வேத நாயகன் பண்டீ ட்டு சம்பரனே

புங்கவர் சங்கை சங்கைமுழங்க

புங்கம் பொங்கும் பங்குஞ் சிங்கு

இங்கித தங்கத் தங்கமிலங்க

வெங்குந் துங்கந் தங்குஞ் சிங்க

மேசி

டாரி டரி டரி டாம்டாம் ட டடாம்

(4)

 

டம் ட ட டண்டம் டம்டட டண்டம்

டண்டம், டண்டம், டண்டம், டண்டம்.

- 2

(1835-வரு)

-----------------------------------

 

273

 

வெண்பா

உம்பர் தொழும் பரா ஒம்பரா நம்பரா நம்பினோம்

சம்பிர மிகும்பரம - தம்பிரானே

எம்பரா விஸ்திரிமரி குமரனாக வந்த

அம்பரா பரா அருள் பரா

 

(இராகம்: ஸ்ரீரஞ்சனி)

(ரூபக தாளம்)

 

பல்லவி

அம்பரா பரா இஸ்திரிமரி

குமாரா.

 

சரணங்கள்

1.தம்பிரான் சர்வ பூ தலங் கொள்ளாத

சத்திய தேவனே நித் திய ஜீவ சொரூபி

அம்

 

2. பரமேசுரா பக்கிஷ யேசு சுவாமி

கருணாகரா நர ஜீவ தயாபி

அம்

 

3. திரியேகதே வசிநேக ஜோதி

கிருபா கரா எமையாள னாதி

 

4. மைந்தர் வாழ்கவே வந்த தேவசொரூபி

தந்தையாருட தற்சுபாப சொரூபி

அம்

 

5. அதிநேயமே அளவில்லாத ஞானி

ததி யே யிது தய வாயபி மானி

அம்

 

6. வேதநாயகன் விகல் மனோகரா

மேசியா அருள் கூர்தயாபரா

அம்

(1840-வரு)

-----------------------------------

 

274

 

வெண்பா

மதியழிந்து தேவ வசனத்தை யெண்ணா

ததிவிதங்களாக நடந்து - கதியிழந்து

பாவ அந்தகாரப் படுகுழியில் வீழ்ந்தோமே

தேவ சுந்தரா தயவு செய்.

 

பல்லவி

தேவ சுந்தரனே ஜீவனின் கோனே

 

அனுபல்லவி

நாவாலுரை சொல்லக் காணேனே

தே

 

சரணங்கள்

1.தன்னிகரில்லா தயைமிகுஞ் சொல்லா

மன்னன் தவிதொரு வல்லானே

தே

 

2. திரித்துவ தேவா ஒருத்துவ யோவா

கிறிஸ்து மன்னாவே காவாவே

தே

 

3. பாவிகணேசா பரம உல்லாசா

ஜீவப்பிரகாச மகாரசே

தே

 

4. வானவன் மைந்தா மானிடர் சொந்தா

ஞான வரந்தா நந்தாவே

தே

 

5. வெல்லையன்பாவே நெல்லையன்பாவே

மேசியாவே பாதந்தரவே

தே

(1849-வரு)

-----------------------------------

 

275

 

வெண்பா

பூலோகமெல்லாம் புரக்க இரக்கமாய்

மேலோகம் விட்டு விரும்பிவந்த-சாலோக

தேவ தேவொரேகவஸ்து தேவ நாமனாகிறிஸ்து

தேவ னாதி ஓம் ஓம் நம.

 

(இராகம்: புன்கைவராளி)

(ஆதி தாளம்)

 

(பஜனை)

பல்லவி

தேவ தேவொரேக வஸ்து

தேவ நாமனா கிறிஸ்து

தேவ னாதி ஓம் நமா.

 

அனுபல்லவி

ஜீவ ஆவியே யோவா அல்

பாவொமே கா நமஸ்து

தே

 

சரணங்கள்

1.மூவரா யரூபியாய் முன்

ஊழியூழி காலம் வாழ்

பாவ தாழ்விலாவலாப

ராபரா தயாபரா ஒரு

தே

 

2. ஆதியாய னாதியாய்

அரூபரூப ரூபமாய்

நீதிஞாய நேர்மையாய் நீ

டூழியாள் சுயாதிபா ஒரு

தே

 

3. மாசில்லாத கிருபை வாச

மட்டில்லாத நன்மையே

தேசுலாவ னாதி ரட்சகா

சிறந்த உண்மையே

தே

 

4. ஈறில்லா மெய் ஞான ஜோதி

யேயனந்த னந்தமே

மாறிலா தனுக்கிரகஞ் செய்

வருபதார விந்தமே ஒரு

தே

 

5. வெல்லை யூரி னெல்லை மீது

செல்லு மேரு சல்லையா

நெல்லை யூரன் சொல்லிலே

நிரந்தரா வரந்தராய் ஒரு

தே!

சேனையின் கர்த்தாதி கர்த்தா நமஸ்து

நமஸ்தே நமஸ்து

(1848-வரு)

-----------------------------------

 

276

 

வெண்பா

பேயுஞ்சி னத்தெழும்பும் பேதையுலகுமெதிர்த்துப்

பாயுஞ் சடமும் பகை செய்யுமே-யபையம்

தாமதமின்றித் தமியனையாட் கொண்டருளே

சாமி கிருபை நேமி.

 

(இராகம்: காம்போதி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

சாமி நீ கிருபை நேமியென்றிருந்தும்

இன்னஞ் சமையஞ் செய்வது மென்ன

 

சரணங்கள்

1.பூமிநரர் வானவரும்

பூகழெருசலேம் வளர்

புங்கமே யூதர் கோத்திரச்

சிங்கத்துரையே

நாம கீர்த்தனப் பிரதாப

ஓமனாதிக் கிறிஸ்து

நாதனே யிதேதுவாது

பேதகஞ் செய்யத் தகாது

சாமி

 

2. விண்ணீடுந் தேவர்களும்

மண்ணாளும் வேந்தர்களும்

மிக்க பணிவாய்ப் பணியும்

பக்கிஷ பதியே

பெண்ணேவை மக்கள் நாங்கள்

கண்ணீர்க் கணவாயினில்

பெருமூச் செரிந்து சென்று

பரதபிக்கிறோம் நின்று

சாமி

 

3. வேதமே எனக்குனது

பாதமே கதியல்லாது

வேறு தவியா ருமில்லை

தேறுதல் செய்வாய்

தாதையே எந்தனைக் கை

விடாதேயும் கிருபை மேசியா

சந்தத மனந்த னந்தம்

வந்தனம் ஏசு நாதையா

சாமி

 

4. தாயகமா யெண்ணி வேத

நாயகன் சங்கீதம் பாடும்

சத்திய கிறிஸ்தனாதி

நித்திய குமரா

பேயுமே சீறுமுலகும்

பாயுமே மேதையுங் கூட

சாயுமே மூவாசைகளில்

மாயுமே ஞாயமே செய்யும்

சாமி

(1851-வரு)

-----------------------------------

 

277

 

வெண்பா

அனவரத காலா அற்புதனு கூலா

தினமகிமை மேவு ஜெய சீலா - மனுவேலா

உன்னதப் பிதாவின் ஒருமகனே பாவி யெனக்

குன் னபையம் உன் னபையமே

 

(இராகம்: கரகரப்பிரியா)

(ஆதி தாளம்)

 

பல்லவி

உன்னதப் பரமனின் ஒருமகனே அரு

ளொளி விடு திருமுகனே

 

அனுபல்லவி

பன்னிருபிதாக்களும்

முன்னிருமுதாக்களும்

மன்னரும் சீஷாக்களும்

பரிவுட னடி தொழ

எருசலை நகரெழு

பர நர குருபர

உன்னத

 

சரணங்கள்

1.நித்திய அதிசய நேய கிருபையா

நெறி நிறை மறை மேசியா

சத்திய தயா பர

உத்தம குணாகர

தத்துவ மனோகர

தயவு செய் பரிவு செய்

தமியனை யடிமை கொள்

சருவ வல்லப பர

உன்

 

2. தந்திர அலகைகள் சதியறவே வரு

தருபர கதி பெறவே

மந்திர ஜெப தவ

சுந்தர அதிநவ

வந்தனை செய வருள்

மனுடகுமாரனென

அனை மரி யிடம் வரு

மனு வேலட்சய பர

உன்

 

3. மங்கள சுப சுவி சேட கவி நேயா

மகத்துவப் பரம ராயா

இங்கிதப் பிரகாசா

சங்கையின் சர்வேசா

எங்களிதய வாசா

இனி நடு விடவரு

கன வலமை மகிமை

யேசு ஞாயாதி பதி

உன்னத

(1851-வரு)

-----------------------------------

 

278

 

வெண்பா

ஆதாரமா ராதரவா ரடைக்கல மார்

வேதா வுனையன்றி வேரில்லை-தாதாவே

தம்பமே பாதஞ் சரணஞ் சரணமே

நம்பினேன் ஏசு நாதா

 

பல்லவி

நாதா நாதா அட்சய

நாதா நாதா யேசு நாதா நாதா

- (2)

அட்சய நாதா நாதா

 

அனுபல்லவி

வேதாக மத்தி நெறி

நீ தா பதத் தினிறை

யாதார வஸ்தருமைத்

தாதா வனைத் துயிர்க்கும்

நாதா

 

சரணங்கள்

1.முந்தா முதன் முடி வ

னந்தா பரமனெரு

சொந்தா உனதடியார்

சிந்தா குல மடிய

நந்தா வரமருளி

வந்தாதரி பரிசு

கந்தா ஒளிரிருப

தந்தா பரம குரு

நாதா

 

2. அல்லா சொரூப வுரு

வில்லா அனையபொருள்

நல்லா மறையினொரு

சொல்லா தொகை வகையோ

டெல்லா மறியுமன

சல்லா சதிபிரிய

மல்லா திரு மனது

கல்லா கருணைபுரி

நாதா

 

3. முன்பாதி மானிடர் செய்

வன்பேதக முலகர்

துன்பேதமும் மொழிய

நல்லா லருள் சொரிய

வாகா யுலகில் வரும்

மா நாவலர்கள் பணி

நாதா திருநெல்வேலி

தாதா அபயம் அபயம்

நாதா

(1851-வரு)

-----------------------------------

 

279

 

வெண்பா

ஒன்றா மெய்த் தெய்வமே உண்மைப் பராபரமே

நன்றா யிருக்கவரம் நல்காயோ-என்று

மன்பாக கிரீட முடிசூட்ட வந்த

மகி சாதன கத்தனீ.

 

(இராகம்: பிலகிரி)

(ரூபகம்)

 

பல்லவி

மகிசாதன கர்த்தனீ சுவாமி

 

அனுபல்லவி

சுகசகஸ்திர சுபவிசேட புராண நீ பிராணனீ

நாத நீ போத நீ

துரிய வசன திருவாக்கிய மனனீ

மகி

 

சரணம்

துங்க மொக்கிஷ வாசலினேனி

துரித சாகா நீந்திய தோணி

பொங்கிய ஜீவ ஊற்றுட கேணி

பொன்னகருட காணி

சங்கிதச் செபலங்கிருதப் பிரதாப நீ

தயாபனீ சீவனீ தேவனீ

மங்களக் கவி வேதநாயகன்

மாசங்கை ஈசா மகாமணி

மகி

(1854-வரு)

-----------------------------------

 

280

 

வெண்பா

அத்தியந்த செல்வத் தனாதிபிதாவே யுமக்கு

துத்திய நித்திய சுபசோபனமே - கத்தா

எவ்வை வினைதீர்த் தெமைப் புரக்க வந்தாயே

செவ்வை யருள்வாய் திவ்விய சீர்.

 

(இராகம்: கமாஸ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

சீரெருசலை நகர் தேவநமா

செகத குருசமஸ்த

 

அனுபல்லவி

பாரை ரெக்ஷித்த அவதார கிறிஸ்தச ரீரீரீ

பாவ நாச நிசபரம குமர திவிய

சீர்

 

சரணம்

சத்திய சுப சுவிசேட

சருவ கிருபையினுட வசனா தேவா

சாதிகள் மனதிருள் மாறிட நீடுபிரசங்கா

வித்தக உத்தம சக்கிர

நிருப சொருப வச ரீரீ

வேதநாயகனு தாரியே பத்துலெட்ச

சீர்

(1854-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page