நித்தியகாலம் நினையாமற் போவானோ
சித்தமிரங்கித் தயவு செய்யானோ - மெத்த மெத்த
எந்தவினை வந்தாலும் ஏசு பரனுண்டுனக்குச்
சிந்தனைப்படாதே நெஞ்சமே.
(இராகம்: கலியாணி) | (ஆதி தாளம்) |
சிந்தனைப் படாதே நெஞ்சமே உனை ரெட்சித்த
தேவ சுதனிருக் கிறார்
அந்தியுஞ் சந்தியுமாக
யார் பகை செய்தாலு மென்ன
எந்த வினை வந்தும் மயிர்
எண்ணப் பட்டிருக்கையிலே
1.ஐந்து சிட்டு இரண்டு காச
தாக விற்றும் அங்கதி லொன்
றுந் தரையிலே விழாதென்
றுத் தமனுரைத் திருக்கப்
புந்தியில் விசாரமுடன்
போக்கிட மற்றவர் போல
சந்தகத் தினாலுழன்று
தவித்துத் தவித்துக் கொண்டு | சிந்தனை |
2. சோங்கிலுயர் சீடரின் முன்
பாங்குடன் தய வளித்துத்
தாங்கினோன் உனையும் வந்து
தாங்குவானென்ன வந்தாலும்
ஓங்குமி சராவேல் ராசன்
தூங்கவு மில்லையோ சும்மா
ஏங்கி யேங்கிச் சஞ்சலங் கொண்
டே மாந்தே மாந்து நின்று | சிந்தனை |
3. என்ன பொசிப்போம் குடிப்போம்
என்ன உடுப்போ மெனவே
பன்ன விசாரங்கள் கோடி
பண்ணிலும் எண்ணத் தினாலே
உன்னளவுக் கதிக மோர்
முளத்தையுண்டாக்க நீயார்
அன்னைவயிற்றிற் சமைத்த
ஆண்டவன் செத்துப்போனானோ | சிந்தனை |
4. எத்திசையினும் அடர்ந்த
சத்துருவெல்லாஞ் செயங்கொண்
டத்தனின் வலத்தினித்திய
துத்தியத் திருந்தரசாள்
கர்த்தனாங் கிறிஸ்து நாதர்
சித்தமதல்லாமல் வீணில்
தத்தி விழுந்தென்னவரும்
பித்தது பித்தது கொண்டு | சிந்தனை |
5. திக்கெல்லாம் புகழுமேக
சக்கராதிபனுக்கன்பாகத்
தக்கணத் தேவ சகாயன்
சற்குணத்துதித்த சேயன்
முக்கிய வேதநாயகன்
நற்கலைப்பதஞ் சொல் வாயுன்
துக்க சஞ்சலங்க ளோடும்
எக்கரும முங்கைகூடும் | சிந்தனை |
-----------------------------------
வேதம் வெளிப்பட்டு மேசியா பாடுபட்டுப்
பாதகமெலாந்தவிழ்க்கப்பட்டு - சாதிகட்கு
மைந்தனுமானானே வானம் படைத்தவனே
தந்தார் தந்தைப் பதவி.
(இராகம்: ஆனந்த பைரவி) | (ஆதி தாளம்) |
தந்தார் தந்தைப் பதவி சதா
னந்தன் மெய்ச்சுதன் நமக்குதவி சற்சி
தானந்தக் குருநமக் குதவி
அந்தாப் பரமாதிந்த சுதந்தர
சுந்தரச்சித விந்தைத் திருமுதலார் | தந்தார் |
1.ஆதித் தயா கிருபாசன்னா மே
சையா எமக்குப் பிரசன்னா
வேதப் பொருள் முடிவா மன்னா பரஞ்
சோதிக் குணா நதி மன்னா
சாதி யனைத்து முய்யத்
தாமே நடுவராகப்
பாதகமே தொலைத்தார்
பேதகமோ இலை | தந்தார் |
2. மனுக்குலத் துதித் தெமைப் புரந்தார் மேல்
வானத்திருந் துலகில் வந்தார்
அனுக்கிரகித் தனைத்துந் தந்தார் தேவ
னாதி பிதாவின் சொந்தத்தார்,
சனத்திரளே கலங்கிச்
சஞ்சலப் படாதேயும்
தினச் செபஞ் செய்யும் செய்யும்
மனத் துயர் வேண்டாம் | தந்தார் |
3. சேனையின் கர்த்தர் பிறந்தாரே ஒரு
சிலுவை மரத்தி லிறந்தாரே
வானுலகத்திற் சிறந்தாரே மோட்ச
வாசல் நமக்குத் திறந்தாரே
ஆனதெல்லாம் படைத்தார்
யாவும் ஆயுத்த மாச்சு
ஏனினிக் கவலைதான்
ஏழை நராட்களே | தந்தார் |
4. சத்துருக்களை ஜெயங் கொண்டார் தம்
சனத்தின் சிறை யிருப்பைக் கண்டார்
பத்தில்லாத பேயின் தொண்டார் செய்த
பாதகந் திர மறை விண்டார் இஸ்திரி
வித்தவர் எங்கள் குலத்தரசே
எந்தத் துரிதங் கணிற்
பந்தம் வந்தும் பயமென் | தந்தார் |
5. மேசியாவின் விளையாட்டு நெல்லை
வேதநாயகன் சொன்ன பாட்டு
தேசு விளங்கிய மன்றாட்டு நித்திய
ஜீவனுக் கானதே தேட்டு தாசப்
பிரபல நேசத் திருச் சபையே
சந்தப் பிர பந்தம் பாடிச்
சந்தோடங் கொண்டாடிக் கொள்ளும் | தந்தார் |
(1835-வரு)
-----------------------------------
எண்டிசைக்குங் காவலவாவேக சக்கராதிபதி
மண்டலிகர்க்கு மனுவேலா - தொண்டனியான்
நித்தம் விசாரத்தால் நிலைதவறிவாடாதுன்
சித்தம் மகிழ்ந்து ரட்சை செய்.
(இராகம்: ஹரிகாம்போதி) | (ஆதி தாளம்) |
சித்தம் மகிழ்ந்தெனைஇ ரட்சித்தானையா தயாளா
சித்தம் மகிழ்ந்தெனை ரட்சித்தா னையா
1.சித்தரத்தர் பத்தர் சொற்றி
றிரித்துவ தற்பரா அறிவுயர்
வித்தகத்தவக் கிறிஸ்திரக்கமேசியா
மனவிசார நினைவசோர மனுதினம்
எனையிநேர முனது பார மனுசரி | சித்தம் |
தத்தாந்திரி ததாந்திரி த்தில்லானா
தகசெகணக் திமித்தகிட தகசெணு
தசேஞ் சேஞ்திரி செணுத சேந்திர சேம | - 2 |
உதனிதாந்தனி தாந்திர தரதரி
தத்தினந்தத் தொய்யத் தோங்கத் தாந்தசதாகு
தத்தினந்தத் தெய்யதத் தோங்கத்தாம்
நாதிரிதிரி நாதிரிதிரி நாதிரி
தில்லில்லா னாதிரினா தந்திரி
திரிந்தார திரிந்தார திரீந்தக
தித்தில்லான தித்தில்லானத ந்திரி | சித்தம் |
2. அருவேயுருவே குருவே திருவே
அண்டர் சேனாபதியே அருணிறை
வான நன்னி தான வதி ஞானமுதலே | மனவிசார |
3. அண்டரண்டா கண்டா கண்டா
மண்டனீகரா திருமறை
அட்சய விதட்சண விரட்சகப்பரமா | சித்தம் |
4. அந்தரா நிரந்தரா சுதந்தரா அதிகாரா பரமச
வுந்தரா தயாபர பராபரசறுவே சுரா | சித்தம் |
5. சீலாமனு வேலா நூலா
தேவதிருப்பாலா நரர்
சிநேக உருவாகவரும் ஏக சக்கராதிபா | சித்தம் |
6. மேசியா விசேஷ நச
ரேசு நாதராஜே தவிது
வீதம் நிதியோதும் வேதநாயகன் சிபாரிசே | மனவிசார |
தந்தணுத்த செணு ததிமிக்கிடத்த செணு | 2 |
தக்கிடகிடதிக திக்கிட கடதக
தரிகிடகிட திரிகிட கிடதக
தின்ன நன்ன நாதிரி தந்திரி
தித்திலான தித்திலான தந்திரி
-----------------------------------
பாவமென்ன செய்யும் பசாசுதா னென்ன செய்யும்
தேவ கோபங்க ளெல்லாம் தீர்ந்ததே - சாவுக்குஞ்
செந் தீக்கு மஞ்சித் தியங்கோ மனாதி பிதா
மைந்தன் பதத்தைத் துதிக்கிறோம்
(இராகம்: இங்கிலீஷ்) | (ஏகதாளம்) |
மைந்தன் பதத்தைத் துதிக்கிறோம்
மகத்துவப் பெருக்கத் தொருத்துவக் கிறிஸ்து
சுந்தரம்பூண் டுளத்திற் பண்பின்
கருத்திற் கனித்துக் குதித்தெக் களித்து | மைந் |
1.முந்தும் பவத்தைத் தொலைக்கத்தான்
முதற் பொஸ்தகத்துற் பனத்துப் படிக்குத்
தந்தின் கணத்துக் குணத்துப் பாம்
பகத்தைக் கெடுத்துத் தரத்தைத் தகர்த்துச்
சிந்துங் குருதி கடற்குட்டோ யந்
துளத்தில் பணித்துக் குணப்பட்டவர்குச்
சொந்தம் பெறச் சத்துவத்துக் காஞ்
சுபத்தைத் தவத்தைப் பெலத்தைக் கொடுத்து
பந்தந்தான் சிறக்கத்து ன்பந்
தவிர்த்துச் சிதைத்து கதித்துப் பெருத்த
பங்கந்தீர்ந் துயிர்க்கத் தம்பத்
கொடுக்கப் புவிக்குட் டரித்திரத் துதித்த | மைந் |
2. எங்கும் பரத்திற் செகத்திற் சூழ்ந்
தெழிற் சத்துவத் தற்புதத் துட்டிறத்திற்
றங்குந் திரித்துவத் தொருத் துவத்தாண்
டவர்க்குப் பரர்க்குப் புகழ்ச்சி திரட்சிப்
பொங்குங் கனத்துற் பனத்திற்றாம்
புரக்கத் தமக்குட் சிறக்கக் கிறிஸ்துவச்
சங்கஞ் செழிக்கத் தழைக்கக் கோன்
சகத்திற் பிறக்கத் திருப் பொற் பதத்துத்
துங் கந்தான் கருத்துக் கொன்றுஞ்
சமத்து ச்சிதத்த ட்சயத்துச் செயத்துத்
தொண்டன்தீம் பொழித்துப் பொங்குஞ்
சினத்தைத் தணித்துப் பவத்தைப் பொறுக்கும் | மைந் |
3. அண்டம் பரத்தைச் சிருட்டித்தாண்
டடக்கிச் சுபத்தெத்தலத் தெப்பொருட்கட்
கந்தங்கொடுத்துத் திடத்துச்சாந்
தகத்திற் களித்துச் சுசிக்கச் சனத்துக்
கன்பின் சமுத்திரப் பெருக்கத் தோங்
கறத்துத் திருக்கற் தருக்குப் பணித்திட்
டஞ்சுந்த வத்திற் செபத்திற் றீங்
சுகத் திக்கணத்திற் குணப்பட்டொழுக்கற்
தொண்டன் பரங்கியற்றச் சந்தம்
திருத்தித் திருநெல்லை யத்துக்கவிக்குப்
பைம்பொன் பூண்டரிக்கத் தந்தும்
சமஸ்த கிறிஸ்துவச்சபைக்குச் சிதத்து | மைந் |
டம்டம் டடிற்றி டடிற்றி டாம்
டடிற்றி டடிற்றி டடிற்றி டடிற்றி | - 4 |
டம்டம்டாம் டடிற்றி டம்டம்
டடிற்றி டடிற்றி டடிற்றி டடிற்றி | - 2 |
(1832-வரு)
-----------------------------------
பாசவலையுக்குள்ளகப்பட்டுத் தவிக்கிறேன்
ஆசைமயக்கத் தழுந்தினேன் - நேசமே
மேசையா சத்தியமே வேதமே ரட்சியும்
யேசையா நின்னை நம்பினேன்.
(இராகம்: சங்கராபரணம்) | (ஆதி தாளம்) |
யேசையா நின்னை நம்பினேன்
வேதமே ரட்சியும்.
1.ஈசா பரம குமரேசா
இசறாவேலின் ராஜா
அடியர்பவ நாசா
கிருபாகர | யேசை |
2. அந்தா அனாதிபிதாமைந்தா
நித்திய சதானந்தா
தமியனைப்பு ரந்தாள்
தயாபரா | யேசை |
3. சீலா கருணை மனு
வேலா தவிதுசெங்
கோலா மனுடானு
கூலா பரமேசுரா | யேசை |
4. நீதா மெஞ்ஞான சத்திய
போதா அருள் வரப்பிர
சாதா கைவிடாதேயும்
பாதாரவிந்தந்துணை | யேசை |
5. வாகாய் மகத்துவமுடன்
மேகாசனத்தில் வரும்
ஏகாஇன்னேரமே
காகா உமக்கபையம் | யேசை |
6. வண்டர்களை நரக
தெண்டனைகள் செய்துனின்
தொண்டர்களை யுரிமை
கொண்டு காத்த கிறிஸ்த் | யேசை |
7. பரிசுத்த வஸ்து வுனைத்
தெரிசித்தபடி பணியக்
கரிசித்தடிமை கொளும்
வரிசித்த கிருபையே | யேசை |
8. வேதநாயகன்சொல்
ஆதிமூலமேநின்
பாதசரண் மலரெப்
போதுந் தொழவருள் செய்
(1849-வரு)
-----------------------------------
ஆதாரம் நீயே அடைக்கலமும் நீயல்லாத
பாதாளமே நிலையே பாவிகட்கு - தாதாவே
மாசில்லாத் தேவ றொருமைந்தா மெய்யானகிறிஸ்
தேசுவே நீயே நிலை.
(இராகம்: காம்போதி) | (ஆதி தாளம்) |
நீயேநிலை உனதருள் புரிவாயே ஏசு
1.தூய வர்ச்சயர்கள் சூழ்கச்
சீயோன் மாமலையில் வாளுஞ்
சுந்தரக் கிருபை வாரியே
மைந்தர்கட் கனுசாரியே
சோபன சீவி மகிமைப்பிர
தாப அரூபி நித்திய சொரூபி
சோதி ஆதி நீதி யோதி
சுய வலமையின் நரர் திருவுருவெ னவந்த
2. நன்மை நிறை வாகரமே
ஞானப்பிர வாகரமே
வன்மைத் தன்ம சாகரமே | நீயே |
வான சுரர் சேகரமே
மகிமை வந்தனமே அடியார்
துதிகள் தந்தனமே கனமே
வாச நேச யேசுராஜ
மனுடர்களுட கதிதின அருச்சனை துதி | நீயே |
3. வானமும் புவி படைத்த
வலு சர்ப்பம் வினை துடைத்த
ஞான நன்மை களுடைத்த
நரர்க்குக் கிருபை கிடைத்த
நய கிருபாலி யுலகின்
பவ மறு மூலி செங்கோலி
நாடி நீடித் தேடிக் கூடி
நய மருளர சனி தயவுடன் பரிசனி | நீயே |
4. அந்தர விண்ணோர் களாட
ஆனந்த சங்கீதம் நீட
சுந்தரக் கிருபை சூட
சோபனம் நெல்லையான் பாட
துணை செயு மரசே விரசே
பிணை நரர் சிரசே முரசே
சூழ்ந்து வாழ்ந்து சேர்ந்து கூர்ந்து
சுருபமுட னென் நாளும் வருடமுழுது மாளும் | நீயே |
(1849-வரு)
-----------------------------------
அண்டமெலாஞ் சிட்டித் தனைத்தையுங் காத்தளிக்கும்
மெண்டிசையுங் கொள்ளா விறைவனே தொண்டடியேன்
மெய்யா மேசையா வினைதீர் சரணடைந்தேன்
ஐயா வுனது பாதம்
(இராகம்: அட்டானா) | (ஆதி தாளம்) |
ஐயாவுன் றிருப் பாதமே சரணமென்
றடுத்தேன் கவலை விடுத்தேன்
எய்தாதுயிர் கெடும் ஏழைப் பாவி யென்றனை
எப்படியுந் தற்காத்து இரட்சை செய்யுங் கண்பார்த்து
இஸ் பரனான கிருபாகரனே சொல்
பராபர கோசர மீசுர பூசுர
எண்டிசை மண்டிய அண்டர்கள் கண்டடி
தெண்டனிடும் புகழ் கொண்டவகண்டித
எரி நரகலகைகள் சிரமழிபட வொரு
மரிதிரு மகனென வருத விதரசனின் | ஐயா |
1. எந்தை சரீரமிலா நாதனே வஸ்துவென்
றென திதையத்தில் மகிழ்ந்தேனே
சந்ததமுந் தவிது கோனே புகழுஞ்
சங்கீத கீர்த்தன சீமானே சிறந்தானே
தாபரமான தயாபரனே பிர
தாப சுவாப வியாப சலாபதி
சம்பன சம்பிரம வும்பர் பரம்பி நி
ரம்பிய லங்கிருத சங்கை வளங்கொடு
சடமிட லகைபட முடிகட விடுபட
நடனமிடு பரம படையினதிபதி யென் | ஐயா |
2. எருசலைப் பதிகண்ட கண்காட்சி யன்பா
விதையத்தைக் கொண்டருள் விண்ட மாட்சி
பரம பூதல நிறை சருவசாட்சி யன்பா
பாவிகள் மீட்சிப் பரமாட்சி
பாரியுதாரி பராமரி வானதி
காரிய காரி நிதாசரியாதரி
பக்கிஷனுக் கிரமுக்கிய பராக்கிரம
பாக்கிய யோக்கிய வாக்கிய சலாக்கிய
பரம கருணை செறிதரும திருவுரைகள்
அருளியருள் பொழிவு மருமை மேசியாவென் | ஐயா |
3. ஆதியிலே யிருந்த வார்த்தை மனுடவ
தார பராபர யே யோவாவே
வேதநாயகன் பாலே மேசியா மனாவே
மெய்யான வாழ்வருள்செய் கோவே யன்பாவே
மேலவர் நாலவர் பரன்முகம் நூன்முகம்
மேவு சினேக விவேக வியாபக
விற்பன வுற்பன வித்திர விசித்திர
வற்புத தற்பர வட்சய திரித்துவ
விசையசய வரிய வதிககன மகிமை
மிகவுமுடைய வொரு கடவுடிருமகவென் | ஐயா |
-----------------------------------