ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

தேவ தோத்திரப் பாட்டுகள்

 

296

 

வெண்பா

ஒன்று மிலாக் காலமெமை உண்டாக்கிய பாவத்திற்

சென்ற வினை நீக்கித் திடன் தந்தே-யின்றளவும்

நன்றைத் தருமேசு நாயகன் நீ செய்கிருபைக்

கென்றைக்குந் தோத்திரமையா

 

(இராகம்: ஆனந்தபைரவி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

யேசு நாயனே நீர் செய்த கிருபைக் குமக்

கென்றைக்குந் தோத்திரமையா.

 

அனுபல்லவி

மாசில்லாத மெஞ்ஞான

தேவ திரித்துவ ஜோதி

மைந்தனடியவர் சிந்தை மகிழ

மிகுந்த பலனருள் சுந்திர மிகுகிறிஸ்

- தேசு

 

சரணங்கள்

1. ஒன்று மிலாதவக் காலமே இந்த

உலகைப் படைத்தது நற் சீலமே

மனறினிற் கொண்ட மனுக் கோலமே கொடும்

வங்கை யடறு கணங்களிடர்வினை

மங்கவுதவிய சங்கை மணனெனும்

- யேசு

 

2. வஞ்ச அலகையினை வென்றாய் சர்ப்ப

மடியத்த ரமிதித்துக் கொன்றாய்

அஞ்ச லெனப்பரன் முன்னின்றாய் அதிகவு

லாசன் மகிழ்கன நேசன் நெறிமுறை

வாசன் மகிமையின் ராஜ னெனவளர்

- யேசு

 

3. மண்ணிற் பவமனைத்தும் நீக்கியே அன்பர்

மனத்தின் இருளை முற்றும் போக்கியே

விண்ணிற்கதியதனுள்ளாக்கியே உயர்

வெற்றி முடிபுனைக்கர்த்தனருள்மிகு

சத்தியசபை தொழு நித்திய குருவெனும்.

- யேசு

 

4. ஞான நன்மைகள் யாவுந்தந்தாய் வேத

நாயகன் பாடலுக்கு வந்தாய்

மானிடர்க் காய் வந்து பிறந்தாய் சொல

மாற்றமிலதுறு தோற்றநரர்களின்

ஆற்றும் நியம வீடேற்றமெனவுயர்

- யேசு

(1800-வரு)

-----------------------------------

 

297

 

வெண்பா

சீராமதுரா திரு அவதாரா சதுரா

பாராசரா சர பராபரா-வோரரு

மாதந்து ரோக மகற்றுங்கிருபாகரா

பாதம்நம்பினேன் எனைக்கண்பார்.

 

(இராகம்: யமுனா கல்யாணி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பாதம் நம்பினனே கிறிஸ்துவுன்

பாதம் நம்பினேனே

 

சரணங்கள்

1. ஆதி தந்த வேத சுந்தர

மானமைந்தாவே

அஞ்சல் புரிந்தெந்தனைவந்

தாளனந்தாவே

பாதம்

 

2. தேவசற்பிரசாத நித்திய

ஜீவமன்னாவே

மேவும் அற்புதமே பரப்பிரம

மேயோசன்னாவே

பாதம்

 

3. ஞானசங்கைவிலாச சம்பிரம

ஞான ரஞ்சிதனே

பானுதங்கு பிரகாச லங்கிருத

பராபரன் சுதனே

பாதம்

 

4. அரூபரூபசரீரிதற்பர

அட்சயபத்தாவே

சொரூபதேவ சுபாபநற்பரி

சுத்தகர்த்தாவே

பாதம்

 

5. பத்து லட்சண மகத்துவ திவ்விய

பரம ராஜாவே

உத்தம தத்துவ மெய் சத்திய திரித்துவத்

துன்னத ஈசாவே

பாதம்

 

6. வாகா ஜீவா தாதா நீகா

வாவே மாதேவா

யேகாதிபா லாமேலாவே

தாவே யேயோவா

பாதம்

 

7. அந்தானந்தா தந்தாதிந்தா

ஆனந்தா ஆனந்தா

பந்தா சொந்தா சந்தோடப்படப்

பாதார விந்தந்தா

பாதம்

 

8. பண்பாய் வேத நாயகன்றமிழ்ப்

பாட்டுச் சிங்காரி

நண்பாய்வந்தா தரிவிசாரி

ஞானானுசாரி

பாதம்

(1820-வரு)

-----------------------------------

 

298

 

வெண்பா

வேத முதலே வினையறுக்கும் மெய்ப்பொருளே

யோத வடங்கா வொருவனே-ஆதிபரா

மெய்யா பொற்கையாமே சையா மாதுய்யாவே

சையாவே சித்த மிரங்காய்.

 

(இராகம்: தூசாவந்தி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

சித்தமிரங்குவாய் நீயையா யெந் நாளுமுந்தன்

சித்த மிரங்குவாய் நீயையா.

 

அனுபல்லவி

சித்தமிரங்கு வாயையா

நித்திய செங்கோலின் கையா

துத்தியஞ் செய்தேன் மேசையா

கத்தனேயேசு நாதையா

- சித்தம்

 

சரணங்கள்

1. அத்தனார் தந்திருப்பாலா அடியர்களுன்

பத்தர் பரிபாலனுகூலா

சத்திய வேதாகம நூலா தாவீதுராஜ

உத்தம யோக்கிய மனுவேலா

சுத்த சுவிசேடத் தத்துவா

முற்றொ ழிற்றிரித்தவ சத்துவா

புத்திர பரம்பரைக்குக்

கொத்தடிமை நானுமக்கு

- சித்தம்

 

2. அர்ச்சய தேவாதி தேவே அனாதிகால

உச்சிதப பிரமானந்த வாழ்வே

நிச்சய வானத்தின் மன்னாவே நிதான சாலேம்

சற்சன ஆ தீன கோவே

மிச்சமாய் வீண் காலம் போனேன்

துச்சலகை கைக் குள்ளானேன்

பட்சமாய் எனைக் கண் பார்த்து

இரட்சித்துக் கொள்வாய் தற்காத்து

- சித்தம்

 

3. விந்தை சேர் மெஞ்ஞான சாஸ்திரனே வேதநாயகன்

சந்தத சங்கீத கீர்த்தனனே

சுந்தர இஸ்ரவேல் கோத்திரனே சுரர் சிறந்து

வந்தனை புரிந்த தோத்திரனே

தந்தையே யனாதி பிதா

மைந்தனே யென் யேசுநாதா

சிந்தை வைத்துத் தொழுதேனே

எந்தவே ளையிலுந்தானே.

- சித்தம்

(1816-வரு)

-----------------------------------

 

299

 

வெண்பா

வேதா வெனாதா வினோதா வனாதீதா

நீதா சங்கீதா நிலையாதா-போதா

அருள் பரனே யாமேசுநாதா மெய்ச்சீயோன்

தரும் கடினம் பணிபாதா.

 

பல்லவி

அருள் பராபரனெனும் ஏசுநாதா சீயோன்

ஐயை மகிழ்ந்து தினம் பணிபாதா.

 

அனுபல்லவி

தருமறை யுயர் சுவிசேட போதா நித்திய

சயந்தறாஞ் சயம்புரை கயந்திடரே புரிந்து

பயந்துடர் மானிடர்க்கு நயந்தரு மேசியாவே,

 

சரணங்கள்

1. வேதத்தை முற்றும் நிறைவேற்றினையே நரர்

வேடமதாக உரு மாற்றினையே

நிதத்துபதே சங்கள் சாற்றினையே சொன்ன

நெறியுடனொழு கியும் வெறி வினையகலிட

மறியென விடர்படு திரிமுதலவனே

- அருள்

 

2. மெய்யான தெய்வமுனை அடுத்தேனே லோக

விக்கிரகமாயை யெல்லாம் தடுத்தேனே

பொய்யான பேய்களைக் கைவிடுத்தேனே உயர்

புத்தியின் கண் கொண்டுன் வேத சத்தியங் கண் டேனுனக்கு

நித்திய சங்கீர்த்தனமும் துத்தியம் துத்திய முண்டு.

 

3. சூரியனை யணிந்தான் மணவாளா சுடர்

தோன்றும் இருபுறங் கூருள வாளா

வீரியச் சுரர் ஊதும் ஏழெக்காளா திகழ்

விண்டில மாடிய அண்டர்கள் சேனைகள்

தொண்டிடுமா பரமண்டல தேவா

 

4. நன்மை மிகுந் தேவாதி அருள்பாலா வேத

நாயகன் தமிழினுக் கனுகூலா

தொன்மை மெய்ச் சத்தியத்தினுயர் சீலா வெறி

துக்கத்திடர் வினையொக்கக் கெடவருள்

மிக்கப் பரன் வல பக்கத் தணுகிய

- அருள்

(1806-வரு)

-----------------------------------

 

300

 

வெண்பா

சூத்திர மெஞ்ஞான சொருபா தவிதரசன்

கோத்திரத்திலே பிறந்த கொற்றவா-தோத்திரம்

செயா செயா மேசையா தேவா சருவ

தயாபரா யேசு நாதா

 

பல்லவி

யேசு நாதா சருவதயாபர

 

அனுபல்லவி

ஆசிலாத சருவேசுர நரேசுர

அஷ்டக் குணவதார அற்சிட்ட பரமகுமார

யேசு

 

சரணங்கள்

1. திருமனு டவதார செருசலை யதிகார

சிம்மாசனப் பிரதாப இமானுவேல் தயாப

தரும சற்பிரசாத கருணைச் சொரூப ரூபா

தற்சமையமே எனை யிரட்சைசெய் பராபர

யேசு

 

2. சுந்தர சவுந்தர சுதந்திர ஞானேந்திர

சுமங்கள சுயம்பர துரந்தர துலாம்பர

தந்திர மொடுங்கு பயங்கர விணாஞ்சுகள்

சங்கித முழங்க நிறந்தொழு பரம்பர

யேசு

 

3. மாதவப் பிரகாச நேச மாசறு தவீதிராஜ

மட்டிலா வரப்பிரசாத இஷ்டப்பிரவாக தீத

வேதநாயகன் பதம் ஓதிய மனோகர

மெய்ப் பாத்துறு வஸ்துவே சொற்றிரித்துவ கிறிஸ்துவே

 

-----------------------------------

 

301

 

வெண்பா

சதா சிவ சதா கதி சதா பதி சுதா வோ

ததா விருபதா கோதா விதா-பிதாவி

னொரு மைந்தனே காவோ ஓமனா மன்னா

அருணந்தனா வோசனா

 

(இராகம்: ஸ்ரீரஞ்சனி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

அருணந்தனா கிருபாசனா என

தம்பரா உமக் கோசனா

 

அனுபல்லவி

திருவானுலாசா தேவாதி நேசா

உரூபா அரூபா உண்மைச் சருவேசா

அரு

 

சரணங்கள்

1. பத்தர் நேசனே சத்திய வாசனே

பாவ சாப விமோசனே

உத்த தேவனே முத்தர் ஜீவனே

உண்மையாளா நன் மணாளா

நித்தியப் பிரதாபா துத்திய தொளிர் தீபா

நேச ஞான நூலா யேசு மானு வேலா

அரு

 

 

2. எந்த நாளுமே என்னையாளுமே

ஈறிலாத தயாளமே

சொந்த நேமமோ டுந்தனாமமே

தோத்திரமே சங்கீர்த்தனமே

தந்தையாதி தேவே எந்தையே யொவாவே

தவிதோது பாதா சாமியேசு நாதா

அரு

 

3. ஆதிமூலமே ஓலம் ஓலமே

அம்பரா வனுகூலமே

பாதுகாத்தெனை யாதரிக்கவே

பட்சமாய் வரும் ரட்சகா

வேதநாயகன்பா ஓதவருளன்பா

மேசியா வினோதா இயேசு ராஜனுதா

அரு

(1829-வரு)

-----------------------------------

 

302

 

வெண்பா

வேதபதி யிசறாவேலின் செங்கோற்பதிவா

நீதிபதி நித்திய தேவாதிபதி-யாதி

நரபதி மானிடவ தாரக் கிறிஸ்து

சுரபதி நிர்மல சொரூபம்

 

பல்லவி

சுரபதி சுசிர்தா நிர்மல சொரூபா

தோத்திரத் தொளிர்தீபா

 

சரணங்கள்

1. பரம சங்கார்த்தனம்

பத்தர் சங்கீர்த்தனம்

பவத்துலோக நேய தேவ

பாலனே சுமனாச் சரணம்

சுர

 

2. மாதவ மரிதரும் மனுடகுமாரா

வஸ்திருபதார மகத்துவ அதிகாரா

நீதிப்பிரதாப நித்திய விஸ்தாரா

யேதமிலாதவ தீத பராபர

யேசு நாத தவீதா சரணம்

சுர

 

3. ஆரணப் பரம் பொருளருண்மறை நூலா

அற்புதனுகூலா அட்சயத்திசரேலா

காரணக்கிருபாலா கருணைச்செங்கோலா

பூரண சீலகுணால மனோல பூ

லோக ரட்சக வேலா சரணம்

சுர

 

4. வானவர் துதி செயும் வலமையின் கோவா

மட்டிலாத் தயாபா வார்த்தையாமொரு யோவா

மேன்மையின் தேவாவேத சாஸ்திரி பாவா

ஞான நித்திய ஜீவ திரித்துவ

ஞானாதிக்க கிறிஸ்துவே சரணம்

சுர

(1830-வரு)

-----------------------------------

 

303

 

வெண்பா

மூன்றுலகத் தோரு மொழிய முடியாத

தோன்றுதற்கு மெட்டாச்சுயம்புவே-ஆன்றபுக

ழும்பர்தொழுந்தேவே யொன்றான மேசையா

அம்பரமே ஓமனாதி.

 

(இராகம்: காப்பி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

அம்பரமே அம்பரமே ஒரே

மேசையா அனாதி ஒம்பரமே

 

அனுபல்லவி

தம்பிரானே தயாகருணாம்பரமே

- அம்

 

சரணங்கள்

1. மன்னுயிர் க்கிரக்கமே உன்னத உருக்கமே ஒகோ

வானோர்க்கும் அதிசயப் பெருக்கமே

- அம்

 

2. எங்கள் மாசத்துவமே ஏகதிரித்துவமே யென்றுஞ்

சங்கீர்த்தனமு மக்கு மகத்துவமே

- அம்

 

3. சுந்தர விற்பன்னா அந்தரவான் மன்னா

வந்தனம் கத்தா உமக்கோசனா

- அம்

 

4. பாக்கியப்பர தேவா சீக்கிரங்காவாவா மகா

ரோக்கியஞ் செயுமொரே யேயோவா

- அம்

 

5. சாதிகள் வாழ்வே தாவீது கோவே நெல்லை

வேதநாயகன் புகழ்மே சையாவே

- அம்பரமே

(1831-வரு)

-----------------------------------

 

304

 

வெண்பா

அகாரி யுதாரி அதிகாரி யனுசாரி

மகாபர மா சாரி தயாவாரி-ஒகோவிபரி

தீதரி முனேதிரி பராமரி நிதாசரி வி

சாரிய சரீரி சக்கரி.

 

(இராகம்: இங்கிலீஷ்)

(ஏகதாளம்)

 

பல்லவி

அசரீரி சக்கரி அருளுவரி ஆதரி

நிசவிபரி நேசமரி

நேர் திரி யேகபர ஞானகேசரி

அசரீரி சககரி அருளுவரி ஆதரி.

 

சரணம்

அவாபுரி யேசு செம்மரி பராமரி

அருபா தோத்திரமே

பெத்லேகம் பதி ராஜாவும் நீ

சொரூபா தூயனே

திருமறை நிறைவே காத்திரமே

அமரர் பரா பாத்திபா

போத கருரையின் சூத்திரமே

ஆதத்தின் வினையால் நரனானவிச் சேத்திரமே.

பதநீசா பச்சரி சநிசரிகா சாசகா

நிச ரிகமா ரீ கம கா

சாரிக ரீ கரிச நீச நிதபா

பத நீ சா பச்சரி சனிசரிகா சா ச சா

தாபா மகப்ப மகரிசா சாசசா

கமபா பாபா

பச்சபக மா ரீரிரி

ரிகமா மாமமா

கம பம கரிகா சாசசா

சரி சரிகா காககா

பம கரிசா பாபபா

மாகப் பகச ரீகம ரீனிசா சா ச சாஅசரீரி

 

-----------------------------------

 

305

 

வெண்பா

சாதிகளுக் கெல்லாம் சந்தோடமுண்டாகப்

பாதகம் யாவும் பறந்தோட-மாதயவாய்

மேலோக நின்றுலகை மீட்க வந்த மேசையா

ஓ லோல மோல முமக்கு.

 

பல்லவி

ஒ லோலம் ஒலோலம் ஒலமே

 

அனுபல்லவி

மூலமே மெய்க்கதியே மூவுலகாதி பதியே

- ஓ

 

சரணங்கள்

1. ஆதியே அமரர் துதி அட்சயக கிருபாநதி

நீதியே காதிபதி நின்னருள் செய்வாய் ததி

- ஓ

 

2. அம்பரா ஞானாதாரா ஆதரி பரமேசுரா

தம்பிரா னொருகுமாரா தயை செய்கிருபாகரா

- ஓ

 

3. சீவனே ஓசியன்னா தேவ பத்திராசன்னா

பாவமே விமோசனா பக்கிஷக் கிருபாசனா

- ஓ

 

4. பத்தர் தொழ னாதியே பாவநரர் ஜாதியே

முத்திபெரும் நீதியே முப்பொருளொரு சோதியே

- ஓ

 

5. வேதநாயகன் பாவா மெய்யோரே யே யோவா

பாதம் நம்பினேன் காவா பாக்கியப் பரமதேவா

- ஓ

(1839-வரு)

-----------------------------------

 

306

வெண்பா

அருவுருவே நித்தியானந்த வொளியே

பரம பிதாவினொரு பாலா-கருணா

காதிரி யேகத்துவ கருத்தா வடிமை

சரணு சரணு சரணையா

 

பல்லவி

சரணு சரணு சரணையா

 

அனுபல்லவி

கருணாகர நித்திய திரியேகத்துவமே

திருவுருவாய் வந்த பர மண்டலாதிகத்தா

- சரணு

 

சரணங்கள்

1. தவிதிறை வந்தனம் தேவதிசயமே

நவசபை வந்தனமிடவரும் நயமே

பவ மற மனு வுரு வான சினேகமே

திவிய பரமனார் மைந்தன் மனுவேல் ராஜே

- சரணு

 

2. பரமேசுர வொரு கருத்தரே யோவா

மரிய கன்னியாஸ்திரி தருமேசு தேவா

திருவவதாரா எமை ரட்சிக்கவே

அருள் செய்யும் செய்யு மோசியன்னா மானுவேல் மன்னா

- சரணு

 

3.அந்தர சொற்கம் யாவும் தந்த சுந்தரமே

வந்தன கீர்த்தனம் மகத்துவ மந்திரமே

தந்தைப் பிதாவினொரு சொந்தக் குமார வாழ்வே

விந்தைத் திருநெல்லை வேதநாயகன் பாவே

- சரணு

(1844-வரு)

-----------------------------------

 

307

 

வெண்பா

வலமைக் குமாரா மகத்துவப் பிரதாபா

சொல்லரிய நன்மைச் சொரூபா-உலகுக்

கொருதம்பிரானே யுனக்கபையந் தாங்கி

அருளம்பரா வோங்கியான்

 

(இராகம்: பியாக்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

அருளம்பரா வோங்கி

கிருபை யாயிருந் தாங்கி

 

 

சரணங்கள்

1. திரு மனுடவதார திவிய மனுவேலா

பரம சத்திய வேத தரும குணாலா

அரு

 

2. தயாபர கர்த்தா சருவ வியாபி

நியாய பத்திராசன நேய சொரூபி

அரு

 

3. கருணைப் பிரதாபர கடியுக்கிர கோபா

உரிமைப் பொருளனாதி பரமச் சொரூபா

அரு

 

4. வலலமைத் தேவே வானவர் கோவே

நெல்லைக் கவிதுதிக்கும் நித்திய பிதாவே

அரு

(1844-வரு)

-----------------------------------

 

308

 

வெண்பா

தொல்லை வினையொழிந்து துன்பமெலா நீங்கி

வல்ல பரமண்டலத்தில் வாழ்விப்பாய்-நல்ல

சரணிரு பங்கய சித்தம் பரமே

கருணாகர வம்பரம்

 

(இராகம்: சன்னியாசி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

கருணா கரமே அம்பரமே வா

சரணிரு பங்கயமே சித்தம்பர

 

அனுபல்லவி

திரு நர வுருவதிசயமே காரண

பரம தேவ குருவே ஆ

கரு

 

சரணங்கள்

1. அதமேவை தரு தீங்காலுலகதில் வரு

ஆதியினோர் மைந்தா ஓகோ

இதமன மோங்கி நேசமோடு தொழ

எந்தாய் சரணந்தா ஆ

கரு

 

2. சாற்றிய மாமறை ஞானாதிபனே

தயை மேவிய நங் கோ ஓ கோ

ஏற்றிய அடியவர் தம் வினை நீவிய

ஏகா எமையுங் காகா ஆ

கரு

 

3. அருணோதயமே வான் வருமன்னா

ஐ சூரிய சம்பன்னா ஓ கோ

திருநெல்லை வேதநாயக சாஸ்திரி

தேவே ஓ சன்னா ஆ

கருணா

(1844-வரு)

-----------------------------------

 

309

 

பல்லவி

ஓ மனுவேலரசே யுனத தேவே

 

அனுபல்லவி

சாமிநீகாவே காமிய வாவே

ஓ மனு

 

சரணங்கள்

1. சிந்தையினாடி உன்றனைத் தேடி

வந்தனன் ஓடிச் சந்ததம்பாடி

ஓ மனு

 

2. பக்குவ மாக்கே துற்குணம் நீக்கே

விக்கினம் போக்கே தக்க நல்வாக்கே

ஓ மனு

 

3. செம்மறி யாடே நன்மை யினூடே

செம்மையின் வீடே உண்மையிநீடே

ஓ மனு

 

4. ஜாவளி ரூபகதாள முமேவ

தேவ சிகாமணி பாடகர் வாழ்க

ஓ மனு

 

-----------------------------------

 

310

 

(இராகம்: காப்பி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

யேசை யாசரணம் எந்நாளும் தோத்திரம்

எந்நாளும் தோத்திரம் எந்நாளும் தோத்திரம்

 

சரணங்கள்

1. ஆசை மேசையா ஆதிபா துய்யா

வாசகா மெய்யா வான் வழிக்கையா

யேசை

 

2. சீவதேவாகா தினந்துதி யேகா

கோவாசி நேகா கோப்புயர் மேகா

யேசை

 

3. சோதியனாதி சோபன மோதி

மேதினி நீதி விளங்கு பிரக்கியாதி

யேசை

 

4. ஏல்மனுவேலா ஏலோ கீமேலா

சாலனு கூலா தவிது செங்கோலா

யேசை

 

5. பாரி நிதானி பாவலர்க்கியானி

வாரிச மானி மானாபி மானி

யேசை

 

6. தேவ சிகாமணி சீர் கவிக் கண்மணி

ஆவல் நிறையணி அருளி தயங்கனி

யேசை

 

-----------------------------------

 

311

 

(இராகம்: இந்துஸ்தானி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தினந் துதிப்போமே சேர்ந்து துதிப்போமே

திரு மனு வேலனைப் பாடித் துதிப்போமே

 

சரணங்கள்

1. சேனை இமையோர் வானத்தில்

சேவிக்கின்றார் ஏத்தி

வானவர் போலவே

வாழ்த்தி துதிப் போமே

தினந்

 

2. உன்னதத்தி லோசியன்னா

ஓ தவிது சேயனா

என்னாளும் தோத்திர மன்னா

என்றும் துதிப் போமே

தினந்

 

3. தந்தை சுதனாவியர்க்குச்

சந்தத மென்றைக்கும்

வந்தனை சுபமா யுண்டாகத்

துதிப் போமே

தினந்

 

-----------------------------------

 

312

 

(இராகம்: இங்கிலீஷ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தோத்திரி தோத்திரி தோத்திரி தோத்திரி

தோத்திரி யென்னுள்ளமே

தோத்திரி திரியேகனை

துங்கன் வசம் நீ தானே

துதித்து வாழ மென் மேலே

 

சரணங்கள்

1. சிந்தையாய் சிந்தையாய் சிந்தையாய் சிந்தையாய்

தேவ சேவடி தேடு சீவ நேர்வழி கூடு

ஆவலாய்ப் பணிவோடு

அனுதினமும் கொண்டாடு

தோத்

 

2. பெத்தலேம் பெத்தலேம் பெத்தலேம் பெத்தலேம்

பெத்தலேம் பதிகத்தனை யித்தனைக் கரிசித்தனை

வித்தக மதி யத்தனை

நித்தக் கிருபைச் சித்தனை

தோத்

 

3. மங்களம் மங்களம் மங்களம் மங்களம்

மங்களங்கள் முழங்கவே

வந்தனை சந்ததம் விளங்கவே

சங்கை யிங்கிதந் துலங்கவே

தயா பனிங்குமே தங்கவே

தோத்

 

4. ஆதியே யனாதியே ஆதியே யனாதியே

ஆதி சத்திய வாய்மையே அதிசய னுதித்தார் மெய்யே

அருமை ரட்சகர் செய்கையே

யாவரும் புகழுந்தன்மையே

தோத்

 

5. ஜேகோவா ஜேகோவா ஜேகோவா ஜேகோவா

தேவசிகாமணிக்கவி தேவ தேவனைப் புகழ் கவி

தெரிந்து பாட உளஞ்செவி

தினமும் மகிழ்ந்து கரங்குவி

தோத்

 

-----------------------------------

 

313

 

வெண்பா

வானத்தை விட்டிங்கே மாடடையுங் கொட்டிலமை

கானத்தைக் கிட்டி கருணையாய்-ஞானத்தன்

பாவிகளைத் தேடிப் பரிந்து வந்தார் நாமகிழ்ந்து

கூவி வந்தனங் கூறுவோம்.

 

(இராகம்: பியாக்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தோத்திர சங்கீர்த்தன துத்தியமே சதா

துதி புகழ் வந்தனம் நித்தியமே

 

சரணங்கள்

1. காத்திரமான கிருபைசெய் ராஜா

கதி வழி காட்டும் பிரகாசா

நேத்திரம் போலெமைக் காத்த மாநேசா

நிச்சய அச்சய உச்சித வாசா

சதா

தோத்

 

2. தேடிக் கரிசித்த ஜீவ சகாயா

சிறுமை யகற்று முபாயா

நாடியுனின் தயை பாடச் செயோயா

நல்வர மரூடூயா அல்லேலூயா

ஜெயா

தோத்

 

3. மானிடர் வாழ்கவே மாடடை கூடமே

வந்த இவ்வேடஞ் சுவிசேடமே

வானிடம் பாவிகள் ஜீவகிரீடமே

மகிழ்ந்தனர் மனம் பரருகந்த பொற்பீடமே

தோத்

 

4. மேசியா நாதா யேசு நற்போதா

வேண்டுதற் கருள் பிரசாதா

தாசனெலியா பேசு சங்கீதா

சந்தத மெந்தையே சுந்தரப் பதந்தாதா

தோத்

 

-----------------------------------

 

314

 

(இராகம்: இஸ்திரிராகம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

துதிசெய் துதிசீரா கருணா கரனாம்

இஸ்திரி வித்தா நாமனை

 

அனுபல்லவி

துதிசெய் துதிசெய் கிருபா கரனாதனைப்

பதி செய் பதிசெய் பன்மார்க் கர்களெல்லாம்.

 

சரணங்கள்

1. சௌசன்னிய தற்பர அற்புத தவனா

சையோத்திய தருகுரு

தருணத்துப் பிரீதி கனவந்தனனா

தடத்ததி காரா பகர விந்தையினுயர்

தாஷ்டி கத்தயை செய் தரிசித்த நாதனை.

- துதி

 

2. சக்கியா சம்பங்கே நீ தானாக

வானகரோ டெமைக் கொண்டு

தான சட்குண ணோடிசைத்து றவாக்கி

பொருத்த காருண்யருக்கோ புத்ரபாக்ய சீலவ

பூரண வியாபக கோடி தயாளனை.

- துதி

 

3. கர்த்தா கரிசித்தாள் மேல் வானத்தா

காரணத் தாலுல குற்ற

சத்தா சருவாதிப பூரணச் சித்தா

சகத்துயர் கோத்திரா சருவ சங்கீர்த்தன

சாஸ் திரத்தளவில்லா தோத்திர ஞானனை.

- துதி

 

4. அன்பா நினதின் பே சீவாறாக

ஆரோக்கிய மருள்பர

மானாமன்னா வால் தூயவராக்கும்

அனைத் துலகாக்கிய அதிசய நீதனை

ஆரணப் பிரசங்கத் தனுக்கிரக பாதனை.

- துதி

 

-----------------------------------

 

Table of contents

previous page start next page