பாவத்தினாலே பல கவலைக் குள்ளானேன்
ஆபத்ததிகரித் துதையனே-சோபித்தென்
ஓகோ பராபரமே ஓலமுமக் கோலமே
கோ கோ கிருபை கூரும்.
(இராகம்: மோகனம்) | (ஆதி தாளம்) |
கிருபை கூருமையனே பாவியென்
சிறுமை தீரு மெய்யனே
நறுமையே மிருந்த பொருமைத் தேவனே நின் | கிரு |
1. ஆறு லெக்ஷண தேவா அடியர்க்குத்
தேறுதலருள் பாவா திருமறை
கூறுங் கருணை யோவா குறையறப்
பேறுபெறச் செய் ஜீவா பெரியவா
ஈறிலா துயர்ந்த மாறில்லா வஸ்துவே | கிரு |
2. பத்தர் தொழுஞ் சருவேசா பரிந்தருள்
வைத்த சத்திய வாசா மகாபரி
சுத்தக் கிருபையி நேசா சுயாதிப
முத்தொழிற் றருமீசா முழுதுமென்
மத்தியஸ்தனான நித்திய கிறிஸ்துவே யுன் | கிரு |
3. பாவத்தின் வழிநடந்தேன் பசாசுடன்
சாபத்திலே கிடந்தேன் சாதா நித்திய
கோபத்தையே அடைந்தேன் கொடுமையின்
ஆபத்தில் மனமுடைந்தேன் அடிமையை
மாபத்திரத் தொடென் பரதாபத்தைப் பார்த்திரங்கி | கிரு |
4. சரணஞ் சரணம் நாதா தவிக்கிற
தருணம் தருணம் வேதா தயாபர
கிரணமிலங்கு பாதா கிலேசங்கள்
திறணமுறாத நீதா திடுக்கிடும்
மரண வேளையிலும் கரணமயங்கும் போதும் | கிரு |
5. சாதிகள் பகையாச்சு சலித்தது
பேதையர் சொலும் பேச்சு பிரட்டர்கள்
பாதையும் வலுநீச்சுப் பாழிலென்
வாதையின் பெருமூச்சு மயக்கற
வேதநாயகன் சொல் லாதிமூலமே நின் | கிரு |
1833-வரு)
-----------------------------------
உன்னைப் பணியு முனதடிமை யானன்றோ
வென்னைப் பிரியாதே யென்பரா-துன்னு
மரணத்தறுவாயு மற்று மெனக்கான
தருணத்திலுங் காட்சி தா.
(இராகம்: பைரவி) | (திஸ்ர ஆதி) |
தருணமீதுன் காட்சிசால அருளனாதியே திவ்விய
சருவ நீதியே
1. கருணையாசன ப்பிரதாபா சமுக சன்னிதா மெய்
பரம உன்னதா | தருண |
2. பரசுரர் நரர் பணிந்து போற்றும் பரம நாயகா நின்
பத்தர் தாயகா | தருண |
3. உன்னதத் திருந்தென்னை யாளும் ஒரு பரம்பரா நற்
கருணை யம்பரா | தருண |
4. அரிய வல்வினை தீர்ப்பதற் குறவான தட்சகா
ஓரனாதி ரட்சகா | தருண |
5. அலகை நரகை அகற்றி முழுதும்
அடிமை கொண்டவா என
தருமை கண்டவா | தருண |
6. தினந்தினம் நரர்க் கிரங்கும் இரங்கும்
தேவ பாலனே
இம்மானு வேலனே | தருண |
7. பரிசுத்த திரியேக மகத்துவ
பராபர வஸ்துவே
ஆதரி கிறிஸ்துவே | தருண |
8. வேத நாயகன் பாடற் கருளும்
மேன்மைக் கோமானே எனை
மீண்ட சீமானே | தருண |
1823-வரு)
-----------------------------------
சதியுலகும் பேயும் சடமும் எதிர்க்க
வதீகதீக மாயக் கவலைக்கானேன் - கெதியார்
மதியுரவுந் தாவீதின் மைந்தா சரணந்
ததியது தானே தயவுதா.
ததியிது தானே நின்
தயவு செய் கோனே.
கதியுலாவிய சாலேம் நகர்கதி
காரியுதாரி கிருபைவாரி அகாரி | ததி |
1. தாவீதின் குமரா வலியவே
தாளம்படுஞ்சமரா
ஜீவாதிபதி தேவபிதாவுட
திரமே பரமே வரமே சிரமே | ததி |
2. தேவநாயகா நித்திய ஜீவதாயகா
பாவியெனைக் கிருபையாய் முகம்பார் மகா
பக்கிஷமே பொக்கிஷமே முக்கிய வனுக்கிரகமே | ததி |
3. பரமதந்தையே எனக்கெனப்
பரிந்து வந்தையே
நரஜீவதயா பரசருவேசுரா
நம்பிக்கொண்டேபதங்
கும்பிட்டு நிற்கிறேன் | ததி |
4. அருமை ரட்சகா நரர்க்குற
வானதட்சகா
உரிமையாய்வரும் பெருமைத்தேவனே
உன்னையே நம்பினேன் என்னைக் கைவிடாதேயும் | ததி |
5. ஆதிமூலமே உமக்
கபையம் ஓலமே
வேத நாயக னோது மானுவேல்
மேசையா யேசையா மெய்யான என்னையாவே கேள் | ததி |
1832-வரு)
-----------------------------------
சத்துருக்களாலும் சடத்தாலும் பேயாலும்
எத்தனை கோடி இடர்படுவோம்-மெத்தமெத்த
ஏவாளின் மக்கள் இரங்கிநின்று கூவுகிறோம்
தேவா திருக்கடைக்கண் பார்
தேவா திருக்கடைக்கண் பார்
ஐயா வினை தீரையா
கோவாயுலகில் வந்த
யோவாசச்சீதானந்த | தேவா |
1. மேவிய தயை நிரம்பி
ஆவலுடனே விரும்பி
பாவியெனையே திரும்பிப் பாரையா | தேவா |
2. பொல்லாவுலகம் பகை
யெல்லாச் செல்வமும் புகை
வல்லாவுனின் கிருபை கூரையா | தேவா |
3. அந்தி சந்தியும் விடாமல்
தந்திரப்பிசாசெடாமல்
எந்தவிதமுங் கெடாம லாளுமே | தேவா |
4. சற்பினையதாயுலகம்
இப்படித்து ரோகஞ் செய்தால்
எப்படியடிமை கனாயேறுவேன் | தேவா |
5. எத்தனை துயரடைந்தேன்
மெத்தவும் மனதுடைந்தேன்
சித்தமிரங்காததென் மணவாளனே | தேவா |
6. இந்த வருடம் எனக்குத்
தந்த சுகத்துக் குனக்கு
வந்தனமனந்தனந்தந் தோத்திரமே | தேவா |
7. வேதநாயகன்றன் பாவா
ஓதிய ஒருமைத் தேவா
பாதுகாத்தருள் செய் நித்திய ஜீவனே | தேவா |
-----------------------------------
தரும வழி சென்று சற்குணசன்மார்க்கத்
தருமைக் கிறிஸ்துவுக்குள்ளாக-பொருமையா
இன்றைக்கோ நாளைக்கோ இவ்வாண்டோ எவ்வாண்டோ
என்றைக்கோ சாவேனியான்.
(இராகம்: ரீதிகௌளம்) | (திரிபுடை) |
என்றைக்குச் சாவேனோ என்னேசுவை நான்
என்றைக்குச் சேர்வேனோ
ஓன்றாமனாதிபிதா உரிமைக் கிறிஸ்துவுக்குள் | என்றை |
1. இன்றைத்தினமோ நாளையோ
இன்னமோராண்டோ
இரவோ பகலெவ்வேளையோ
துன்றிய வாலிபத்தோ
தோன்றும் முதுமையிலோ
துன்ப வியாதியிலோ
சுகமாயிருக்கும் போதோ | என்றை |
2. வன்மம் பகையில்லாமல்
குறை சொல்லாமல்
மனச்சாட்சி வாதை கொல்லாமல்
கன்மப் பாவஞ் சாராமல்
கற்பனைத் துரோகஞ் சேராமற்
கவலை விசாரத்தினால்
கலங்கி மனஞ் சோராமற் | என்றை |
3. தரும வழியில் நடந்து
தீமை கடந்து
தவசுமுறைமை தொடர்ந்து
பரமகதியை நோக்கி
பலதுற்குணமும் நீக்கி
பாவ மன்னிப்பை நாடி
தேவகிருபையைத் தேடி | என்றை |
4. ஐந்து மெய் திருக்காயமும்
சிலுவைதனில்
அறையுண்டிருந்த நேயமும்
நிந்தையின் முண்முடியும்
நீண்ட இருப்பாணியும்
இரத்தப் பிரவாகமுங்
கண்டுத்துயரங்கொண்டு | என்றை |
5. வேதாகமங்களைத் தேர்ந்து
நன்றாயாராய்ந்து
மிகவும் மனங்களி கூர்ந்து
சாதாய்ச் செம்மரியாடாய்
சன்மார்க்கனாக நீடி
வேதநாயகன் பாட்டால்
மேசியாவைக் கொண்டாடி.
1831-வரு)
-----------------------------------
நாளைக் கிருப்பாரை நாமறியோம் நாமிரோம்
ஏழைத் தனமாயிராதேயும் - காளைகளே
அல்லல் பட்டேனோ மயங்கிறீரொன்று மில்லைக்
கல்லுமல்ல வல்லு மல்ல காயம்.
(இராகம்: காப்பி) | (ஆதி தாளம்) |
கல்லு மல்லவே காயம்
வல்லுமல்லவே மனமே.
வெள்ளி பொன் விலை மதியா
மேரு மல்லவே அப்பா. | - கல்லு |
1. வல்லமை பேசாதே நாளை
வருவதறியாய் ஆதால்
நல்லவழி தேடித் தேவ
நாமத்தைத் தியானி. | - கல்லு |
2. சூரியன் கீழ் கண்டதெல்லாம்
மாயை யல்லவோ சால்மோன்
பாரறியச் சொன்னதை நீ
பார்த் தறியாயோ. | - கல்லு |
3. காற்றடித்த மேகம் புகைக்
கொப்பதாகவே இங்கே
போற்றிய மனுடர் ஜீவன்
போயொழியுமே. | - கல்லு |
4. வேகமாய் வடியு மாற்றுக்
கொப்பதாகவே மாயத்
தேக நரர் நாட்களுஞ்சீக்
கிரங்க ழியுமே. | - கல்லு |
5. இராப் பகலிருள் வெளிச்சம்
மாறும் வண்ணமே ஐயோ
நராட்களின் மகிழ்ச்சிக்குமா
மாறுதலுண்டே. | - கல்லு |
6. பூ மலர் போலே விளங்கி
பூ வதங்குமே அது
போலவே நரருருவம்
மாறி வதங்கும். | - கல்லு |
7. கொஞ்சநாள் செயஞ் சிறப்பான்
பஞ்சை மனுடன் அவன்
கொஞ்ச நோய் வந்தால் கிடப்பான்
தொஞ்சு போவானே. | - கல்லு |
8. மேலது கீழ் கீழதுமே
லாமுருளை போல் நரர்
மேன்மையும் வாழ்வுங்கீழது
மேலு மாகுமே. | - கல்லு |
9. பூவுலகின் மேன்மையென்ன
மாதரித்திரன் போல
யாவரும் வணங்கும் ராயன்
சாவு மொக்குமே. | - கல்லு |
10. எத்தனை கற்றாலுமென்ன
சுத்தப் பேதைக்குச்சரி
யொத்தபடி செத்துப் போவான்
முற்று மண்ணாவான். | - கல்லு |
11. நுன்னிமை ஞானியென்றாலும்
கீர்த்தி பெற்றாலும் ஐயோ
அன்னவன் மலையும் நேரம்
யாவுங்கலையும். | - கல்லு |
12. வெள்ளச் சேதத்துக்கும் பல
விக்கினத்துக்கும் பார்
கொள்ளைக்கும் சடுதியிற் போம்
கூட்டு மாஸ்தியே. | - கல்லு |
13. ஆசனந் துரைத்தனங்கள்
தத்து வங்களும் அர
சாண்ட மன்னரும் ஒரு நாள்
மாண் டொழிவார்கள். | - கல்லு |
14. கொஞ்சநாள் மினுக்கும் நரரின்
சிறப்புகள் செருக்கை
வெஞ்சிறு பூச்சிகளரிக்கும்
வீவழிக்குமே. | - கல்லு |
15. இயாவும் ஓட்டமாகப் பாயும்
யாவுமழியும் மெய்த்
தேவ பத்தியே கெலிக்கும்
ஜீவனிலைக்கும். | - கல்லு |
16. நெல்லை வேதநாயகன் பா
வென்றும் நிற்கும் போல் இனி
நல்ல வரடையும் கதி
நாமடைவோமே. | - கல்லு |
1849-வரு)
-----------------------------------
தீய பிசாசெதிர்ந்து சீறச் சினந்துலகம்
பாயச் சடமும் பகைசெய்யு-தாயனே
காகா சமையங் கனிந்தே னெனைப் பிரிந்து
போகாதே யென்பரா நீ.
போகாதே என்பரா எனைப் பிரிந்து
போகாதே என்பரா தருணம்விட்டு.
பாகா யுருகினேனேகா சரண்வியா
பகனெ கிருபைமுகனே யேசு
நாயகனே சமையம் விட்டு. | - போகா |
1. ஆதி பராபரனின் வார்த்தையே யுல
கனைத்தின் பவத்தையெல்லாந் தீர்த்தையே
வேத மறையிலென்னைச் சேர்த்தையே யென்
மேலே பரராலே மலைபோல பகைவருது. | - போகா |
2. ஐந்து காயத்துயர்ப் பட்டாயுன
தடிமை யென்றனைக் கரந் தொட்டாய்
தந்தை யுனதுயிரும் விட்டாய் சரண்
டஞ்சம் பிரபஞ்சம் கனவஞ்சம் பரதவித்தேன். | - போகா |
3. அல்லும் பகலுமாயை கொல்லுதே நர
கலகை தந்திரத்தினால் வெல்லுதே
வல்லவுலகம் பழிசொல்லுதே யேகோ
வாவே நரர்வாழ்வே ஒரு தேவே யுனக்குப் புண்ணியம் | - போகா |
4. பற்றி யெங்கனம் கரையேறுவேன் எனின்
பரதாபத்தையினி யென்றாறுவேன்
சற்றுங் கவலையற்றுத் தேறுவேன் சீம
சோனே தவிது கோனே கிருபையோனே யுனைக் கும்பிட்டேன் | .- போகா |
5. கன்மவினையின் நினைவோடுது பல
கவலை மிகுந்து மனம் வாடுது
தன்மக் குருவுனைக் கண்டேடுது வுந்தன்
சரண மெந்தன் மரணம் நான்கு கரணமயங்கும்போது. | - போகா |
6. ஐயாவுனக்குச் சொந்த வடிமை யென்றன்
அவதி பவத்தால் வந்த கொடுமை
மெய்யாய்த் தவிரெனது மிடிமை சத்திய
வேதா யேசுநாதாவுந்தன் பாதாம்புயம் பிடித்தேன். | - போகா |
7. நன்மை மிகும் பரமசீரா வேத
நாயகன் றமிழ்க்கு பகாரா
வன்மைப் பர தேவகுமாரா கிருபை
வைத்துக் கரிசித்துவராய் சத்திய கிறிஸ்துவே நீ. | - போகா |
1797-வரு)
-----------------------------------
ஆதி மனுடாவதாரகிரு பாகரா
பாதுகாத்தாளும் பராபரா-பேதையான்
றுன்னுந் துயரந் தொலையாத பாழுலகத்
தின்னுந் துன்பப் படாதே.
இன்னமுந் துன்பப் படாதே
யேகனே காப்பாய் விடாதே.
உன்னதத் தேவகுமாரா
உத்த மனுடவதாரா
உயர் வானுல காவையும் நீடுபரா
சயகோடி சகாய தயா நிதியே
சுய தேவ சுவாப சுயாதிபதி
பயமா யுளமே படும் வாதனையால். | - இன்ன |
1. கவலை மா பொல்லா விசாரம்
காசோதன மோகன காபரணம்
மாசால மினாருறவோ மகரோ
தூசோ மணியோ சுபவாழ் வெனவே
வேசாரி விடாதுடலே மெலியும். | - கவலை |
கருவுந்தி விழுந்தது கால் முதலே
பரு வந் தனிலும் பல மாயையினால்
உரு வந்தமு மாறியுழன் றொழியா
வெரு வந்த மிகுந் துளமே மிடையும். | - கவலை |
கடிய தீமையான கோரம்
பவவினை மகா விஸ்தாரம்
பரமனே காத்தாளுன் பாரம்
பல சத்துரு பண்ணுமு பாதனையால்
உலையிற் படும்வள்ளிய மாயுருகா
திலனுக்கருள் செய்யிச றேலரசே
மலைவுற்று லைவாய் மிக வாடுகிறேன். | - இன்ன |
2. மாய வாழ்வா லெந்த லாபம்
மாதாவிவர் மாதிவர் மக்களிவர்
தாதா தயை நேசரெனத் தழுவி
யேதாதரவே னுமியற்றுவரோ
வேதா விடுமோலை வெளிப்படிலே. | - மாய |
மதி மங்கியழிந்து மருண்டுயிரும்
விதனங்கள் மிகுந்து பிரிந்தவுடன்
கதியங்குற நன்று தவுங்கழலே
யதிதுங்க துரந்தா வம்பரனே. | - மாய |
மாறிலாத மனஸ்தாபம்
தாயினாலே வந்த சாபம்
சாவு தீர்வை தேவ கோபந்
தணியத் தயை வைத்தொரு சித்துருவாய்
மணிலுற்ற மகத்துவ கிறிஸ்தரசே
யிணையப் பிணை முற்று மியற்றியுமே
கணிசத் தொரு மித்தருள் கற்தவியம். | - இன்ன |
3. மோசே ஓரேப் பின் கண்டு தா
மூதாதைய னாபிரகாமுனமே
யாதா முதலாய் வருமாரியர்கள்
யூதாவுடனே யுறவோர் பணியுஞ்
சாதாரண வேதத் தயாபரனே. | - மோசே |
முனைதங்கிய சேனையின் முன்னணியே
வனமெங்கு முலாவிய மன்னவனே
கனசங்கை யோடே யொரு கன்னிமரி
தனையென் கவரும் பிரசன்னதியே. | - மோசே |
மூன்றாளொன்றாய் நின்ற நீதா
மேசியாவென் னேசு நாதா
வேதநாயகன் சங்கீதா
விடையிட்டி சறேலை விடுத்த மார்
படையைக் கடலிற் படவைத் தபரா
கொடுமைக்கு ணெருக்க முறக்குறுகும்
அடுமைக் குடனே யருள் பற்றரசே. | - இன்ன |
1840-வரு)
-----------------------------------