ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

சமுதாய விண்ணப்பம்

 

335

 

வெண்பா

நித்திய வாதைக் குளராய் நீசநரர் போகாமற்

சித்தமிரங்கித் திருவுளமாய்ப்-பத்தரிடம்

வந்தையே மீட்பதற்கு மாறாத் திருக்கருணை

யெந்தயே யிரட்சியு மெனை.

 

(இராகம்: தர்தார்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

எந்தாயிந் நேரம்

இரட்சியும் பா ரம்

 

அனுபல்லவி

தந்தைப் பராபரன்றன்

விந்தைக் கிறிஸ்துவே.

- எந்

 

சரணங்கள்

1. பொன்னுலகத் திருந்திங்

கிந் நிலத்தைப் புரக்கக்

கன்னியு தரத்துற்ற

சின்னத் தெய்வ குமாரா.

- எந்

 

2. எத்தனை சோதனையோ

சத்துருச் செய்யும் நிதம்

பத்தனைக் கைவிடாதே

சுத்தக் கிருபையே.

- எந்

 

3. சிங்கங் கெர்ச்சிக்கும் போல

வங்கைப் பிசாசு சீறு

தெங்கும் புகல தில்லைச்

சங்கைப் பராபரா.

- எந்

 

4. துக்கக் கவலை யொரு

மிக்கக் கெடக் கிருபை செய்

உக்கிரப் பிசாசை வென்ற

சக்கரக் கோர சங்காரா.

- எந்

 

5. போதப் பகைஞர் செய்யும்

வாதைப் படாமல் வந்தெப்

போதைக்கும் உந்த நின்றிப்

பேதைக் கிரக்கஞ் செய்யும்.

- எந்

 

6. ஆறுதலுன்னை யன்றி

வேறொரு வஸ்து வெனும்

பேறு பெறவெனக்குத்

தேறுதல் சொல்லுமோ.

- எந்

 

7. வேதநாயகன்றன் பாவா

சாதிகட்கு இரங்கும் யோவா

நீதியின்றவிது கோவா

பாதுகாத்தருள் மெய்த் தேவா.

- எந்

1821-வரு)

-----------------------------------

 

336

 

வெண்பா

வாகா சினேகா மகா யூகாவா காவி

வேகாதி யாகா மாவிற் பன்னா - யோகா

முருகா பரகுமாரா முக்கிய மனுவேலா

வுருகாய்ப் பரா முகந்தானோ.

 

பல்லவி

பராமுகந்தானோ இன்னம்

பரா முகந்தானோ

 

அனுபல்லவி

தராதரப் பிரதானி யேசு

தயாபரக் கிருபை ஞானி.

- பரா

 

சரணங்கள்

1. பத்தர் வினைக் கொரு முடிவே பரி

சுத்தசனத் திருவடி வே

திருவடியர் கடொழும் வஸ்துவே கன

திட தவிதுட குலக் கிறிஸ்துவே.

இன்னம்- பரா

 

2. பராபரத் தோத்திரா

பரம சற்பாத்திரா

இராச சொற்சாத்திரா விச

றாவேலர் கோத்திரா

இன்னம்

- பரா

 

3. அனாதி தன்மைந்தா

வருள் சதானந்தா

பொனாடெழுந்தா புக

லாய்ச் சரணந்தா

இன்னம்

- பரா

 

4. பவந்தனைத் தீரும்

பரிந்தினம் வாரு

முவந் தெனைச் சேரு முல

கந்தனிற் காரும்

இன்னம்

- பரா

 

5. பாக்கியஞ் செய்யே

பராபரன் கையே

ஆக்கையும் பொய்யே

விடாதருள் பெய்யே

இன்னம்

- பரா

 

6. ஏதிதிப் போதோ

வித்தனை தீதோ

வாதுனக் கீதோ

மாற்ற வொண்ணாதோ.

இன்னம்

- பரா

 

7. வலமையின் கோவே

வான மனாவே

நல மிகுந் தேவே வேத

நாயகன் பாவே.

இன்னம்

- பரா

 

-----------------------------------

 

337

 

வெண்பா

திரியேகனே பரம தேசிகனே வானிற்

பெரியானே ஞானப்பிரானே-கருணா

கரனே வரனே கனத் தோனே தேவ

பரனே திருக் கடைக் கண் பார்.

 

(இராகம்: கௌசிகை)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பரனே திருக்கடைக் கண் பாராயோ - வெந்தன்

பாவத் துயரனைத்துந் தீராயோ

 

சரணங்கள்

1. திரமிலாத வெனை முனையாமல் யான்

செய்த குற்றமொன்றும் நினையாமல்.

- பரனே

 

2. ஆதியந்த மில்லாத சருவேசா நித்திய

அளவிலாத சத்திய வாசா.

- பரனே

 

3. மாய வலையிற்பட்டு சிக்காமல் லோக

வாழ்வில் மயங்கி மனம் புக்காமல்

- பரனே

 

4. அடியன்றனக் கருள் செய்யிப்போது வுன

தடுமைக் குன்னையன்றிக் கெதியேது

- பரனே

 

5. வஞ்சக் கவலை கெடுத் தோட்டாயோ யெந்தன்

மனது களிக்க வரமாட்டாயோ

- பரனே

 

6. தேசுலாவு திரித்துவ தேவே யெந்தன்

சிந்தை மகிழ்த் துணைப் பதந்தாவே

- பரனே

 

7. யேசுவின் முகத்துக் காய் மாத்திர மெனக்

கிரக்கஞ் செய்யுமுமக்கே தோத்திரம்

- பரனே

 

8. வேதநாயக வாணன் பாட்டுக் கென் மேல்

மேன்மையான தயவைக் காட்டு

- பரனே

 

-----------------------------------

 

338

 

வெண்பா

காலங்கொடிது கடியுலகம் பொல்லாது

சாலவுடலு மொரு சத்துருவே-ஓலமே

தம்பிரான் மகாதேவா தாமதமேன் வா வா வா

நம்பரா தேவ நரா.

 

(இராகம்: சங்கராபரணம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தம்பிரான் மகாதேவா தாமதமேன் வா வா

தம்பிராநீ மகாதேவாநீ தாமதமேன் வா வா

தாமதமேன் வாவா கடுகத் தாமதமேன் வாவா

 

அனுபல்லவி

நம்பரா தேவ நரா ஞானச் சிங்காரா

- தம்பி

 

சரணங்கள்

1. ஆதம்வினை தீர நரனான சித்திரமே அதி

தருண மித்திரமே அடியேன்

விண்ணபத்திரம் தாமதமேன் வாவா

- தம்பி

 

2. இசறவேலர்க்கொரு கிறிஸ்துவே

யேசுநாயகா எங்கணும் வியாபகா

எமையேகா சுகமா தாமதமேன் வாவா

- தம்பி

 

3. அற்புதத்தின் கிருபைக்கையா

அருமை மேசையா அதி

பிரியத்துவ நேயா சகாயா அல்லேலூயா

- தம்பி

 

4. ஆதியடி முடி நடுவான சீலமே யருண்

மாவிசாலமே ஓகோகோ ஆதி மூலம் தாபசமேன் வாவா- தம்பி

 

5. கருணைத் தயாபா நீ ஜீவா காரணத் தேவா

வேதநாயகன் பாவா சதாசிவ

கர்த்தா யோவா தாமதமேன் வாவா.

- தம்பி

 

-----------------------------------

 

339

 

வெண்பா

கொஞ்ச மலவென்னாலே கூடாதென செய்குவேன்

வஞ்சவுலக மயக்குது - தஞ்ச

மெதில் மரண மென்றறியேனேழை யடியேன்

ஆதி தருணங் காத்தருளையா

 

(இராகம்: சைந்தாவி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தருணமே பரம சரீரியெனைத்

தாங்கி யருள் கருணை வாரி.

 

அனுபல்லவி

 

உரிமையடி யரனுசாரியுயர்

எருசலை நகரதிகாரி அதி

- தருண

 

சரணங்கள்

1. வரரடி தொழும் வெகுமானி பரன்

மகிமை யொளிர் தேவசமானி

நரர்பிணை யொரு பிரதானி யேசு

நாயகனென திச மானி அதி.

- தருண

 

2. ஆதார முன்னையன்றி யாரே யெனக்

கன் பாய்த்திருக் கண்கொண்டு பாரே

பாதார விந்தங் கதிசேரே இசரேல்

பார்த்தி பன்றவிது வங்கிஷ வேரே - அதி

- தருண

 

3. நித்த நித்தமாக வெந்தன் மேலே வருவ

தெத்தனை துன்பங்களொருக் காலே

அத்தனையு நீக்கு தற்குன் காலே யெனக்

குத்தம துணைதான் மனுவேலே - அதி

- தருண

 

4. கங்குல் பகலுந்துயரங் கோவே மனக்

கலக்க மொழித் தெனைத் தற்காவே

பங்கெனங்குத் தந்த மெய் மன்னாவே யேழைப்

பாவியை யிரட்சியு மேசுதேவே - அதி

- தருண

 

5. ஐயாவுனக் கடிமை நானே யெனை

யாண்ட பரா பரனீ தானே

மெய்யாயனுக் கிரகஞ் செய்கோனே கவி

வேதநாயகன் மெத்தச் சொன்னானே அதி

- தருண

1826-வரு)

-----------------------------------

 

340

 

வெண்பா

தன்னிகரில்லாதசகல நன்மைச் சொரூப

உன்னதப் பராபரத்தோ டொன்றான - மன்னவா

பாவா வரூபாபா சொரூபா பாவியெனைத்

தேவா காவா சேயோவா.

 

பல்லவி

தேவா திதேவா சீக்கிறங்கா

வாவே யோவா.

 

சரணங்கள்

1. தாவீதுடைய புத்திராமுச்

சாஸ்திரி கணட் சத்திரா

பாவிகளுட சீவனே ஞான

பாத்திரா கிருபாச முத்திரா.

- தேவா

 

2. அருமையின் சருவேசா என

தாவிக்குரிய நேசா

திருமறைப் பயனரு ளெனக்குப

தேசா கிறிஸ்தேசு ராசா.

- தேவா

 

3. மாசிலா மறைநூலா

மானிடர்கனு கூலா

தேசுலாவிய மேசியா நரர்

சீலா இம் மானுவேலா.

- தேவா

 

4. எத்தனை தேவ கோபம் என்

பாவத்தால் வந்த சாபம்

அத்தனையுங் கெடவுற்ற வெற்றிப் பிறஸ்தாபம்

உமக்கேன் மனஸ்தாபம்

- தேவா

 

5. வலிய பாதகனானே

மட்டில்லா கிருபையோனே

நலியுங் கலியுஞ் தொலையக் குலைய

நானே பதம் நம்பினேனே

- தேவா

 

6. வேத நாயகன் பதமே

மேசியாவுனக் கிதமே

யோது மாகம நூலெல்லா முன்னுச்

சிதமே ஓகோ உன்னதமே

- தேவா

1829-வரு)

-----------------------------------

 

341

 

வெண்பா

நெருக்கமனுபவிக்கும் நேரம் நமைக் கூவென்று

உருக்கமாய்ச் சொன்னவொருவா - பெருக்க

வுருக்கமிலையோ வுனை யடைந்த வென்மேல்

இரக்கமிலையோ சொல்லேன்

 

(இராகம்: தூசாவந்தி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

இரக்கமிலையோ நீ

இத்தனை சுற்றுகள் கற்றதுமறிவே

இரக்கமிலையோ

 

சரணங்கள்

1. நரர்க்கு தவியாய் வந்தோனோ யேசு

நாயகனென்றது நிசந்தானோ வுன்மே

னாட்ட மதாயா வல்வாட்டு தையா

சுரர்கதிபதியே வரத்திருமதியே

சுந்தரனே ஞானேந்திரனே செப

வந்தனை தந்திடு மெந்தனை யாளவும்

இரக்க

 

2. மனத்துயரிலா மரிமகனே ஞான

மகத்துவனே கிருபையின் முகனே தவிது

மகராசன் குலசத்திய வாசன்

வனத்திலை யாயிரஞ் சனத்தைப் பொசிக்கச் செய்த

மங்கள நித்திய மணவரசே சபை

நங்கையர் துத்திய மிடு சிரசே யுன்

இரக்க

 

3. கப்பலிநீ நித்திரை கொண்டாயோ அந்தக்

கள்ள மெனக்குமிப் போ விண்டாயோ எந்தன்

கஸ்தியெலா நிவர்த்தி செய்வா

யொப் பொரு வரிலாத முப்பொருளே யதீத

உத்தம முற்துயர் வித்தகனே பெலன்

மெத்த மிகுத்த திரித்துவனே யினம்

இரக்க

 

4. லாசர் மரிக்கு முன்னே கேட்டாயே பின்னும்

நாலுநாள் தாமதம் போட்டாயே அந்த

ஞாயமலோவிது பாயமலோ

மாசணுகாத தேவ சேயா சகாயா நேயா

வஞ்சக மஞ்சிய மந்திரனே யென்

சஞ்சல மிஞ்சுது தந்திரமேதோ

இரக்க

 

5. வேதநாயகன் றமிழ்க் கொண்டாயே எந்தன்

மெலிவு குறைகளெல்லாங் கண்டாயே யிவ்

வேளையிலே யொரு நாளையிலே

தீதனைத்து மறுத்துக் கோதனைத்தும் பொறுத்துத்

தீர்ப்பது மிங்கெனையேற்பதும் நெஞ்சொடு

பார்ப்பது மன்பொடு காப்பது முன் கடன்

இரக்க

 

-----------------------------------

 

342

 

வெண்பா

எவ்வை கனி தின்றதாலிஸ்திரியின் வித்தாகி

யவ்விய நெஞ்சத் தழுக் கறுத்த-திவ்விய

பரனே யிவ் வேளையிற் கோபம் பண்ணாயையா

பரிந்திரங்கிப் பாவியைக் கண் பார்.

 

(இராகம்: ஆனந்தபைரவி)

 

பல்லவி

பரனே யிந்த வேளையிற்

கோபம் பண்ணாதே ஐயா

பாவியைத் தயவாகப் பாரும்

 

சரணங்கள்

1. நரர் கரை யேறப் பெத்லேம்

நகரில்த் தவிது ராசன்

மரபிலெழுந்த சுந்தர

மானுவேலேசு மெய்யான

 

சா ககரிச நிநிசா மகரி சநிசா

ப மகரிநி சக கமபா

பதப சாநிச காரிச ரிச நிநிசா

பசா நிதபாம கமாக ரிசாநி சகாமபரனே

 

2. வான நாட மலரு மனுடரினமே

மகிழ்வுடனே துதிதரவும்

மகிமை யாசன மீதில் வளமோடெழுந்த

விவேக விசேட விலாசந ரேச தயாப

பரனே

 

3. பாப்பாம ககமா பமம கரி கா

மகக ரிசநீ சாசநீ சகரிகாம கம

பாங்கான பரமே கருணைவடிவே

பரிந்திரங்கியாள் மாய தீவினையிதோ மிகுது

நிசா கரிநி நீசாநி சரிகமபாபா

தீங்கா மலகை வாங்காய்ச் சமர் தொடுக்க...

பாங்

காககா மககரிச கரிச நிநி

சாநி காரிகா மபாம கரிகமபாபா

ஐயோ வுலகது மேகறுவு தெனின்

மேதையாலுமே பவாசை விளையுது

பாங்

பாபா தபமகமா மாமா பமகரிகா

மப்பம கம கரிகம

பாதபம மாபமக காமகரி ரீகரிநீ

சக்கரிக மப்ப மத பச சநீத பாம கமபாபா

வானோரதி பதியே மாபாதகன டியேன்

திருவிழி யருள் புரியும்

நீடுனது பாடுகளினூடெனது கேடதுக

ளோட வுறவாடி மனதோடு கதி தேடவருள்

பாங்

சாசா சாநிதப தபம ககமா பம

கப்ப மக மாகரி நி

சசாச்ச பபாப்ப மமாமம ககாமகரி

நீசநிச காரிசா மகாரிசா

பமாகரிநீ நீச ககமா

சாசாசச நீச நிசாசத

நிந்நி சக்கரிரி சரி சநிசா சச

பசாச நிதபமபா மபா பமக கரிகா

மப்பம கம கரி கம பாபா

பாழா முலக தனிலொரு நிமிடமாகினும்

நிச்சய மிலா தலைவ

னேது கனமேது வளமேது நலமேது பல

னேதுமிலை யேது மற்ற மாயவுறவே

நோய் பிணிகள் கோடியே விசாரமோ

மகா கொடிது ஆதரியையா

யோவாதி ரியேக பராபர

உன்னதத்திலுயர் கிருபையினாசன

சுயாதிபதி நவமான சீவனருளிருபா

தசரண் மலரிணை துணை

பாங்

சாங்கோ பாங்கமாய்க் கவி

சாற்றும் வேத நாயகன்

றனையுஞ் சபையனைத்தோ

டெனையும் ரட்சியுமையா-சாகரி

பாங்

1829-வரு)

-----------------------------------

 

343

 

வெண்பா

வல்வினையைச் சத்துருவை மாற்றி வறுமைக்கும்

மாய வினைக்குங் கூடஎனை யிரட்சிப்பாய்-புல்லணைமேல்

இந்நிலத்தை மீண்டிரட்சிக்க வந்தோனே

உன்னதத் தானந்தத் தானாரே.

 

பல்லவி

உன்னதத் தானந்தத் தானாரே தயாவாரி

ஆவ னு சாரியங்கிஷத் தாசரரி ஓசனா

 

சரணங்கள்

1. மன்னக் கன்னி மகதேவ வானத்தனாரே

உன்ன

மாசத்துவ சங்கைப் பரரே தயாவாரி

ஆவனுசாரி யங்கிஷத் தாசாரி ஒசனா

உன்ன

 

2. யேசுக் கிறிஸ்திறைவா இராசாதி ராசே

இந்நேரம் வந்தருளையா தயாவாரி

ஆவனு

 

3. ஆசைப் பிரானாரே அன்புக் கண்ணாரே

நேசப் பிரவாகத் துரையே தயாவாரி

ஆவனு

 

4. ஞானத் திருவுளமே காவாவே வேத

நாயகன் சங்கீதப் பிரபே தயாவாரி

ஆவனு

1839-வரு)

-----------------------------------

 

344

 

வெண்பா

அந்தி பகலு மருங்கவலைக் குள்ளானா

லெந்தவிதம் நாங்களீடேறு வோம்-சிந்தை நொந்து

ஏவாளின் மக்களிரங்கி நின்று கூவுகிறோம்

தேவா இரக்கமில்லையோ.

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தேவா இரக்க மில்லையோ யேசு

தேவா இரக்க மில்லை யோ

 

அனுபல்லவி

சீவா பரப் பிரமயே

யோவா திரித்துவத்தின்

மூவாளொன்றாக வந்த

தாவீதின் மைந்தனொரே

தேவா

 

சரணங்கள்

1. எல்லா மறிந்த பொருளே எங்க

னில்லாமை நீக்குமருளே கொடும்

பொல்லா மனதுடைய

கல்லான பாவிகளைக்

கொல்லா தருள் புரியும்

நல்லா யென்னே சுநாதா

தேவா

 

2. எங்கும் நிறைந்த சோதியே ஏழை

பங்கிலுறைந்த நீதியே எங்கள்

சங்கடமான பாவ

சங்க தங்களை நீக்குந்

துங்க இசராவேலின்

வங்கிஷ கிரிடாதிபதி

தேவா

 

3. வேதாந்த வேத முடிவே செக

ஆதாரமான வடிவே ஐயா

தாதாவு மெம்மைப் பெற்ற

மாதாவும் நீயே யேசு

நாதா ரட்சியுமுந்தன்

பாதார விந்தந் துணை

தேவா

 

4. தாயக விண் மன்னாவே வேத

நாயகன் சொன்ன பாவே பொல்லாத

தீய பாவிகளை ஐங்

காயங்களில் மறைத்து

நேயத் தருள் புரியும்

ஞாயக் கிருபை மேசையா

தேவா

1849-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page