வல்விலங்கைப் பூதியத்தை மானிடனைப் பேய்க் கணத்தைக்
கல்லையும் விட்டுக் கடந் தேறச் - சொல்லி
மனமே பரம் புவி யாவும் வகுத்த
வனைப் போற்றுவோம் வாழ்த்து வோம்.
(இராகம்: கல்யாணி)
மனமே பரம்புவி யாவையும் வகுத்த திரியேகத்துவ
வஸ்தனாதி மகத்துவ கர்த்தனை
வாழ்த்துவோம் சாற்றுவோம்
ஏற்றுவோம் போற்றுவோம் | - 2 |
கனமதாய்ச் சதிர்ப்பூ தியங்களையும்
கட்டளை யிட்டிரு மூன்று தினத் தினுற்
பனமதாகச் சமஸ்த சிஷ்டிப்பையும்
பாக்கியமாய்ப் படைத் தாக்கிய நாதனை. | - மன |
1. முந்துந் தினத்தில் வெளிச்சத்தை சிஷ்டித்து
முக்கிய வாகாச விரிவை யிரண்டாந் தினத்
துந்தி மூன்றாந் தினம் பூமி சிங்காரித்
துயர் விருட்சம் நாட்டிப் பயிர் காட்டி
சந்திர சூரிய னட்சத்திரம் நாலாந்தினந்
தாபித் தைந்தில் மட்சும் பட்சி தந்தாறினில்
விந்தை யெறும்பி யெறும்பு கடையாக
வித்தார மாய்த்தந்த பர்த்தாவைக் கர்த்தாவை. | - மன |
2. ஆதமே வாளிரு பேரை யலங்கிருத
மாகத்தஞ் சொந்தச் சொரூப மதாய்ப் படைத்
தே தன் சிங்கார வனத்தினடுவி
லிரண்டு மரம நாட்டி மறைதீட்டி
தீது நன்றறியும் விருட்சத்தை விட்டுச்
சீவ விருட்சத்திலே பொசியு மென்று
போதித்து நான்கு வரப் பிரசாதங்களும்
புங்க மதாய்த் தந்த எங்கள் சருவேசனை. | - மன |
3. நன்றி மறந்தந்த முந்தின மானிடர்
நரகத்துருவான சோகுச் சர்ப்பத்தினால்த்
தின்றத் தகாத விருட்சக் கனியைத் தின்று
தீமையிலே வீழ்ந்து மிகத் தாழ்ந்து
குன்றிக்கிலே சமடைந்தவர்-தங்களைக்
கூப்பிட்டு மேன் ஞாயத் தீர்ப்பிட்டுத் தோட்டத்தை
யன்றி வெளி யிற்றுரத்தின் போதவர்க்
காறுதலின் மொழி கூறுங் கிருபையாளை | - மன |
4. இஸ்திரிக்கு முனக்கு முந்தன வித்துக்கு
மிஸ்திரிவித்துக்கும் நாம் பகையாக்குவோ
மத்தகத்தை யழிப்பாரவர் நீ கொத்து
வாய குதிகாலை யென்ற மறை யொன்றை
பெத்தலே கேமினிற் சுத்த கன்னியாஸ்திரி
பிள்ளை யென்றே வுலகுள்ளவர் யாவர்க்கு
மத்தியஸ்த னெனச்சித்த மதாயேக
மைந்தனைத் தந்து புரந்த வனந்தனை. | - மன |
5. பாவத்தினாற் தேவ கோபத்தில் மூழ்கிப்
பசாசினடுமை யதாகக் பரதபித்
தாபத்தின் றீய கலா பத்தக்கி யானத்தி
னந்தகார மூடுங் குருடாடுஞ்
சாபத்தின் மக்கட்கே கோபித்த சாவையுந்
தாழ்ந்த நரக பாதாளத்தை யுங்கொன்ற
தீபத்தின் மேன்மைப் பிரதாபத்தை நெல்லையான்
தீட்டின மெஞ்ஞானப் பாட்டுகளைக் கொண்டு. | - மன |
(1833-வரு)
-----------------------------------