ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

விக்ரபக்திக் கெதிர் ஞாயம்

 

375

 

வெண்பா

கல்லதுநந் தெய்வமல்லக் கண்டசிஷ்டி யாதுமல்ல

வல்லசுரர் நரர் மற்றாருமல்ல-நல்லோரே

யெல்லாருங் கேளுங்கோ ஈசாவேராசா நம்

அல்லா வொரே நபியாம்.

 

(இராகம்: ஆனந்த பைரவி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

அல்லாவொரு நபியாங்கு மோதுங்

கேடது போடுங்கோ நம் அல்லா.

 

அனுபல்லவி

சல்லாப நூலே நல்லாவியாலே

தருமனு வேலாவே.

- அல்லா

 

சரணங்கள்

1. எல்லாரும் வாரும் பொல்லாத பேரும்

இல்லாத பேருந்தானே

கல்லாதோராரும் நில்லாமற் சேரும்

நல்லாயனம்முட கோனே.

- அல்லா

 

2. அந்தர வானுஞ் சுந்தரவுலகுந்

தந்த வொரு வன்றானே

வந்தானே நந்தாதா அவன்

சொந்தம குணன்றானே.

- அல்லா

 

3. ஈசாவலா மகராசா தயாபர

வேசாறலே தினமே

மாசாலமே விய பூசாரி மார்கள்

பிசாசான பேர்சனமே.

- அல்லா

 

4. பித்தர்கள் சிலைகள் முற்றிலும் வீணே

பேதமையது காணே

கற்றது மிலையோ வானவர் கோனோ

கல்லதிலிருப் பானோ.

- அல்லா

 

5. செம்பதுஞ் சிலையும் நம் பரனாமோ

தேறின ஞானிக ளே

கும்பியில் விழுவீர் வம்பு செய்யாதீர்

குணப்படு மிது நாளே.

- அல்லா

 

6. ஆதாரமே தவர் பாதார விந்தமே

அருயாருட சொந்தமே

தீதான பாதகர் பாதாள வீடது

சேர்வார் கணிற் பந்தமே.

- அல்லா

 

7. நெல்வேலி வேதநாயகன் பாட்டை

நெடுகிலும் பாராட்டே

பல்லூழி காலம் வாழ் மோட்ச வீட்டைப்

பதிய மனத்தை நாட்டே.

- அல்லா

(1837-வரு)

-----------------------------------

 

376

 

வெண்பா

மண்டலத் திருக்குகின்ற மானிடப்பதரே நீவிர்

பண்டுதான் வணங்கி வந்த பலவித வுருக்களெல்லாம்

அண்டர் நாயகனுக் கேறா வருவருப் பென்றே நன்றாய்க்

கண்டறிந் துணர்ந்து பார்த்துக் கதிவழி சேருவீரே.

 

(இராகம்: தூசாவந்தி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

கண்டறிந்துணர்ந்து பாருங்கோ வுமைப் படைத்த

கடவுளண்டைக்குச் சேருங்கோ.

 

அனுபல்லவி

பண்டு நீர் வணங்கி வந்த

பலபல தேவதைகள்

படுத்திய ஆபத்திலுமைக்

கெடுத்து தோ இரட்சித்து தோ அதை.

- கண்

 

சரணங்கள்

1. காத்தவராயன் கறுப்பண்ணன்

கண்ணணூர் மாரியுங்

கல்லுக் கோட்டுச் சூரியும்

வல்ல தேகரி வீரியும்

பார்த்திருக்கக் கொண்டு போம்

பற்பல காட் டேரியும்

பங்கருளுந் தெய்வமோ வென்

றுங்கள் புத்தியின் கண்ணாலே.

- கண்

 

2. காசியெம சேது மட்டுங்

கால் கடுக்க ஓடியுங்

காவடி யெடுத்துப் போய்க்

கடம்பனைக் கொண்டாடியுந்

தாசிகளையாடச் சொல்லிச்

சங்கரனைப் பாடியுஞ்

சற்றெனும் நன்மை தந்ததோ

குற்றங் குறைகள் தீர்ந்ததோ.

- கண்

 

3. பிள்ளையாரைக் குட்டிக் கொண்டு

பெருமாள் கோவில் சுற்றியும்

பேயாடி போலத் திரிந்து

பேச்சியைப் பிதற்றியும்

வள்ளியை நற்றிக் கொண்டோடு

மாயாண்டியை பற்றியும்

வாணாலை மாய்த்துக் கொள்ளாதேயும்

வீணான தெய்வங்களி தாக்கும்.

- கண்

 

4. கண்ட கோவிற் றெய்வமென்று

கையெடுத்துப் போற்றியுங்

களிமண்ணைச் சாணியை வைத்துக்

கர்த்தா வென்று சாற்றியும்

வண்டது போற்கற்றி கற்றி

மலர் பறித்துத் தூற்றியும்

வந்த பலனே தனு முண்டோ

சிந்தையு மிரும்புக் குண்டோ.

- கண்

 

5. சன்னாசி போலுத் திராட்சத்

தாவடங்கள் பூட்டியுஞ்

சாம்பலைப் பெருக்கப் பூசிச்

சடை வளர்த்து நீட்டியும்

வன்னக் காவி வேஷ்டியும்

பின்னனே கங் கோட்டியும்

வம்பைப் பாராட்டியு முன்னச்

செம்பைக் காதில் மாட்டியு மென்ன.

- கண்

 

6. பட்ட ராமம் போட்டுப் போட்டுப்

பகட்டி யிட்டீரே

பாழில் ராமா ராமா வென்று

தோழிலுஞ் சுட்டீரே

மொட்டை யடித்துத் தலங்களெங்கு

முனைந்து கும்பிட்டீரே

முழுது முங்களாஸ்தியெல்லா

மோசமாய்ச் சிலவிட்டீரே.

- கண்

 

7. பொங்கலிட்டாடுகள் வெட்டிப்

பூசைப் போட்டுக் கண்டீரே

போட்டியாகப் பெண்களை வைத்

தாட்டிக் கோரணி கொண்டீரே

சங்கை யற்ற சாஸ்திர

சடங்கிலே துவண்டீரே

சத்துருப் பிசாசு பண்ணுஞ்

சற்பினை யிதென்றே யெண்ணும்.

- கண்

 

8. இரண்டு நினை வாயிருந்து

இரண்டகஞ் செய்யாதேயும்

ஞாய மன்றி யாற்று மத்தை

நரகத்திற் சாயாதேயும்

பண்டது போற் குந்திக்குந்தி

நொண்டி நடவாதேயும்

பராபரனை விட்டு விட்டுப்

பாகாலைப் பணி யாதேயும்.

- கண்

 

9. எத்தனை கோவில்களுண்டோ

அத்தனை யுருவங்களும்

எண்ணிறந்த மடங்களும்

ஏரியுங் குளங்களும்

வித்தையல்லோ நெல்லை வேத

நாயகனைக் கேளுங்கோ

வெண்கலஞ் செம்புங் கருங்கல்

லுங்களி மண்ணுங் காணுங்கோ.

- கண்

(1827-வரு)

-----------------------------------

 

377

 

வெண்பா

சிந்தைத் தடுமாறித் தீ வினைக் குள்ளாகி

யெந்தவி தப்புத்தியையு மெண்ணாம-லந்தந்தோ

வான்ம யங்கா தாளுமொரு வல்ல பிதாவிருக்க

வேன் மயங்குகிறாய் மனமே.

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஏன் மயங்கிறாய் மனமே

யேன் மயங்கிறாய் கான்.

 

அனுபல்லவி

மான் மயங்கிறாப் போல்

- ஏன்

 

சரணங்கள்

1. அந்தரவான் புவிதந்த பராபர

னாரென்ற றிவாலறி யாமல்.

- ஏன்

 

2. கல்லையுஞ் செம்பையு மரக் கட்டைகளையுங்

கருதி யுருகித் தடுமாறி.

- ஏன்

 

3. பரா பரனோ பாகாலோ தெய்வ

மெனப் பகுத்தரிந் தேற்றாமல்.

- ஏன்

 

4. பராபரன் தெய்வமானால் அவரைப்

பணி பசாசானாலதைச் சேவி.

- ஏன்

 

5. மனுடவ தாரஞ் செய்த பராபர

வஸ்துவே கிறிஸ் தென்றறியாமல்.

- ஏன்

 

6. எந்த விதத்திலு மேசுக்கிறிஸ்துவி

லிரட்சிப் படைவதைத் தேடாமல்.

- ஏன்

 

7. மேசியாவின் மன்றாட்டுருக்குது

வேதநாயகன் பாட்டிருக்குது.

- ஏன்

(1849-வரு)

-----------------------------------

 

378

 

வெண்பா

பாரத்து ரோகப் படுபாவி பரத்தைச்

சேரத்தரமோ திருவுளமே-சேர வைப்பாய்

மூவாளொன்றான முதல்வாவ பயமே

தேவா தேவாதி தேவா.

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தேவா தேவாதி தேவா நின் பாதத்தைச்

சேரத்தர மோவும் பர் தேவா

 

அனுபல்லவி

மூவா ளொன்றானயே

யோவா நின் கிருபையை

மூடனு ணர்வேனோ தேவா தேவா.

- தேவா

 

சரணங்கள்

1. அண்ட புவனங்க

ளனந்த சராசரங்க

ளெண்டிசையும் படைத்த தேவா தேவா

கண்ட உருவங்களைத்

தெண்டனிட்டே தொழுவோர்

கடத் தேறக் கூடுமோ தேவா தேவா.

- தேவா

 

2. பத்தியறி விலாத

சத்துருப் பிசாசின் மக்கள்

பரம பதம் சேர்வாரோ தேவா தேவா

எத்தனை யானாலுஞ்

சித்த மிரங்கி யெமை

யிரட்சிக்க வந்த யேசு தேவா தேவா.

- தேவா

 

3. ஆதியின் முன் பாவே

வேதநாயகன் பாவே

அன்பா நண்பா கண்பார் தேவா தேவா

சாதியனைத் துங்கைவி

டாது தற் காப்பாயே

சத்திய கிறிஸ்துவே மெய் தேவா தேவா

- தேவா

(1851-வரு)

-----------------------------------

 

379

 

வெண்பா

கத்தரருளிச் செய்தகற் பினைகளைத் தவறிப்

பத்தியிலா தொழுகும் பாவ நரரள் - முத்தப்

பிறந்தும் விருத்தமே பேதையர் சென்ம

மிறந்தும் வருத்தமே யென்க.

 

பல்லவி

பிறந்தும் வியர்த்தமாச்சே புவியிற் சென்ம

மிறந்தும் வருத்த மாச்சே

 

சரணங்கள்

1. சிறந்த சத்திய வேத

மறிந்தும் நரக வழி

திறந்து பரா பரனை

மறந்து திரியுஞ் சென்மம்

பிறந்

 

2. கருத்தருரைத்த பத்துக்

கற்பினைகளை மீறி

மெத்தக் கெறுவங் கொண்டு

விழுந்து கிடக்குஞ் சென்மம்

பிறந்

 

3. உலகம் படைத்த கர்த்த

னொருவனெனச் சொலியும்

பல பல தேவர்களைப்

பணிந்து திரியுஞ் சென்மம்

பிறந்

 

4. வானத்தின் சேனைகளை

மண்ணிலுள்ள வஸ்துக்களை

யீனப் பசாசுகளை

யேற்றி வணங்குஞ் சென்மம்

பிறந்

 

5. ஆணை சத்தியங்கள் பண்ணி

யச்சயன் தேவ நாமத்தை

வேண விதங்களாக

வீணில் வழங்கும் சென்மம்

பிறந்

 

6. கருத்தரி னோய்வு நாளைப்

பரிசுத்தம் பண்ணாமல்

விருத்த மாக்கிப் பல

வேலைகள் செய்யுஞ் சென்மம்

பிறந்

 

7. தகப்பனை மாதாவைச்

சங்கித்து வாழ் காம

லகத்திற் கெறுவங் கொண்

அசட்டை செய்யுஞ் சென்மம்

பிறந்

 

8. உலைய மனுடரி

னுதிரஞ்சிந்தப் படக்

கொலை செய்யும் பொல்லாத

கொடும் பாதக சென்மம்

பிறந்

 

9. அப காரத்திலய

லான் மனையைத் தழுவும்

விபசாரத்தினத்தின்

வேசித்தனச் சென்மம்

பிறந்

 

10. உளவு செய்து பிற

ருடைமைகளைத் திருடிக்

களவு செய்யும் பொல்லாக்

கடை கெட்ட பாவச் சென்மம்

பிறந்

 

11. மெய்ச் சாட்சிகள் சொல்ல

வேண்டும் பிறனுக் கெதிர்ப்

பொய்ச் சாட்சிகள் சொல்லிப்

பொரியும் புலையர் சென்மம்

பிறந்

 

12. தடுத்துத் தடுத்து மறை

சாற்றியென சொலியும்

அடுத்தவன் வீட்டை யிச்சித்

தலையுங் கொடிய சென்மம்

பிறந்

 

13. அயல் மனை சேடன் சேடி

எருது கழுதை மற்று

மயல் பிடித்திச் சித்து

மயங்கித் திரியுஞ் சென்மம்

பிறந்

 

14. எல்லாத்திலுங் கதிக்க

எந்தை பராபரனை

நல்லாய்ச் சிநேகியாத

பொல்லாத வீண் சென்மம்

பிறந்

 

15. தன்னைப் போற்றன் பிறனைத்

தக்கபடி நேசியாமற்

பின்ன பேதகஞ் செய்து

வின்னமாய்ப் பேசுஞ் சென்மம்

பிறந்

 

16. நெல்லை வேதநாயகன்

நித்திய சங்கீர்த்தனஞ்

சொல்லி பராபரனைத்

தொழுது கொள்ளாத சென்மம்

பிறந்

(1849-வரு)

-----------------------------------

 

380

 

வெண்பா

ஞானிகளே வேதமெல்லாம் நன்றாய் யறிந்தவவ

தானிகளேயோர் வசனஞ்சாற்றுங்கோ-வானளிக்கும்

நன்மை பராபரனை நாடிச்செபஞ் செய்யாச்

சென்ம மேதுக்குத் திறம்.

 

பல்லவி

சென்மமேதுக்குச் செபஞ் செய்யாச்

சென்ம மேதுக்குத் தவஞ் செய்யாச்

சென்ம மேதுக்கு.

 

சரணங்கள்

1. நன்மைப் பிரவாகர

ஞானச் சொரூபத்தை

யுண்மையினாலே

யுணர்ந்து வணங்காத

சென்ம

 

2. வானம் புவியு

மகிழ்ந்து படைத்த மெஞ்

ஞானப் பிரகாசத்தி

நன்றி யறியாத

சென்ம

 

3. தேடிப் பரா பரன்

பாதத்தைச் சிந்தித்து

நாடித் தினந் தினம்

பாடித் துதியாத

சென்ம

 

4. எங்கும் நிறைந்த

பரா பரனில்லை யென்

றங்ககங் கொண்டெங்கு

மலைந்து திரிகின்ற

சென்ம

 

5. இயாவு மறிந்து

நடுத்தீர்க்க வல்லவோர்

தேவனுண்டென்றுளஞ்

சிந்தனை செய்யாத

சென்ம

 

6. தன்னைப் படைத்த

சருவேசுரன்றன்னை

யுன்னி யுணர்ந்து

வுகந்து கொண்டாடாத

சென்ம

 

7. மோசப் பிசாசை

முழுவதும் நம்பியே

யேசுவினா மத்தி

லீடேற மாட்டாத

சென்ம

 

8. ஆவியினா லுண்மை

யாலும ரூபியாஞ்

சீவப் பிரானைத்

தியானித்துப் போற்றாத

சென்ம

 

9. மோகக் கடலில்

முழுகி மயங்கியே

யேக பராபர

வஸ்துவை யேத்தாத

சென்ம

 

10. உத்தம சத்திய

வேதத்தினுண்மையைப்

புத்தியினாற் கண்டு

போற்றிக்கைக் கொள்ளாத

சென்ம

 

11. எத்தனை நீதிகள்

வேதங்கள் கற்றாலும்

பத்தியுந் தேவ

பயமு மில்லாத வீண்

சென்ம

 

12. மாயப் பிசாசின்

மருளற மெய் வேத

நாயகன் பாடிய

நாதனைத் தேடாத

சென்ம

(1849-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page