ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

நரகாக்கினை

 

381

 

வெண்பா

அக்கினிக் கெந்தகத்தினாற் சுடப்பட் டழியாத

துக்க நரக சுவாலையிலே-யக்கா

வருண்டுருண்டு பாவியலறுவா யந்தோ

விருண்ட நித்தியானந்தமே.

 

பல்லவி

நித்திய மாகுதே யிருண்ட நித்திய மாகுதே

ஒகோ நித்திய மாகுதே வேதனை ஐயோ

நித்திய மாகுதே ஒகோ

சாத்தான் தீவினைவாதனை ஐயோ

நித்திய மாகுதே

 

சரணங்கள்

1. பத்துக் கற்பனைப் பிரகாரம்

பாழ் நரகக் குழியே

கிறிஸ்துவைப் பற்றாதவர் வாதனை

யூழி யூழியே

நித்திய

 

2. செத்துச் செத்துச் சாகா

கஸ்திபட்டு வேகாத்

தீயின் மேற் கட்டையாய்ப்

போட்டாட்டி ஒகோ

நித்திய

 

3. அக்கினிக் கெந்தகமே

துக்க சாகரமே

அழுகையும் பற்கடிப்பு

மாறாதே ஒகோ

நித்திய

 

4. அக்கினிய வியாதே

துக்கமுகி யாதே

அரித்தரிக்கும் பூச்சியு

மரியாதே ஒகோ

நித்திய

 

5. மாயாத சோகமே

ஓயாத தாகமே

வன்னிச் சுவாலையின்

வாழ்க்கையே ஒகோ

நித்திய

 

6. பாதாள மாளியே

வேதாள கூளியே

பாய்ந்து கெற்சிக்கும்

பயங்கரமே ஒகோ

நித்திய

 

7. அக்கிரமகாரர்

துற்குணக்கியானர்

யாவரும் நரகத்திற்

சாய்வாரே ஒகோ

நித்திய

 

8. மேசியாவை விட்டோர்

மெய்யாகக் கெட்டோர்

வேதநாயகன்றன்

பாட்டாரே ஒகோ

நித்திய

(1810-வரு)

-----------------------------------

 

382

(இராகம்: இங்கிலீஷ்)

 

ஆதியொரு பரமப் பக்கிட சுப

நன்மைக் கடவுள் சுத்தத் திருவுள-மெய்க்கவே

ஆதியொரு பரமப் பக்கிட சுப

நன்மைக் கடவுள் சுத்தத் திருவுள மெய்க்கவே

 

அச்சத் தொடு செல இரட்சித்தருள்புரி

அப்பப்பா சரண் அண்ணண்னீ சரண்

அத்தத்தா சரண்

ஆதி

சாநிதபமப தப்பப்பமக

பம்ம மகரி மக்க க்கரி சநி

சாநி தப மப தப் பப் பமக

பம் ம ம கரி மக் கக் கரி சக்க சா

சக் கக கரி கப சக் கக கரி கப

பச் ச சாநித பநிநி நீத பத் தத தா தப

(1856-வரு)

-----------------------------------

 

383

 

(இராகம்: இங்கிலீஷ்)

 

ஓ மிக்கா மிக்கா மிக்கா நித சரி

பற்றிப் பற்றிப் பற்றிப் பரி சனி

சொக்கா சொக்கா சுப சிவமே

துரி துன தருள் புரியே

மா மனுவேலா யே யோவா சரண்

மானிடர் பாலா வொரு சொரூபி

மா மனுவேலா யே யோவா

வரமருள் சரணமையா

பசக்கா சக்கா சக்கா பரம கரி

நீர்ரி நீர்ரி நீர்ரி கரி சநி

சக்கா சக்கா சரி க ம பா

மக ரிச கரி சநி சா

சாநி தபா மா கா மா பா தநி

சானி த பாமா கமக மரி

சானி த பாமா க மாப

மக ரிச கரி சநீ சா

பசக்கா

 

-----------------------------------

 

Table of contents

previous page start next page