ஆதியான் புகழைப்பாடும் வேதநாயகனுக் கன்பாய்
வேதசாஸ்திரியா ரென்று வேண்டிய வரிசை செய்து
தீதிலாக் கனங் கொண்டோங்குத் திருச்சபை யோர்கள் வாழ்க
நீதியுனாசீர்வாதந் தந்தருள் நிமலர்தேவே
(இராகம்: ஆனந்த பைரவி) | (ஆதி தாளம்) |
ஆசீர்வாதம் தந்தனுக் கிரகம் செய் ஐயா ஏசுநாயகா
ஆண்டவா உனின் கிருபை கூர் மேசையா
தேசுலாவிய நேச மெய் மறைத்
திருச்சபை யினம் பெருக்க மாகியே
மாசதான தீவினையுறாமலே
மாயோக மதாய் மேன்மைகளே நீடிமெய்யாய் வாழ்கவே | - ஆசீர் |
1. விற்பன உபதேசிமாருக்கும் வாத்திமாருக்கும்
மெய்ச்சபை பணிவிடை உத்தியோகர்க்கும்
சற் குருக்கள் மெஞ்ஞானி மாருக்கும்
தலைமை யோருக்கும் புலமை யோருக்கும்
பற்பல தருமத் துரை மாருக்கும்
பக்கிஷத் துனின் முக்கிய நற்கருணைக்
கனம் பெற மிக்க மிக்கவே. | - ஆசீர் |
2. சத்துருக்கள் தீ வினையடாமலே பசாசுலகுடல்
சதிகளே செய்யும் பகையடாமலே
நித்தம் நோய் பிணி சேர்ந்திடாமலே
நெடுந்து யர்களும் நேர்ந்திடாமலே
சித்தமாக என்னாளும் காத்துமே
சிந்தைக் குண மிகுந்தற் புத
விந்தைப்படி இந்தச் செணம். | - ஆசீர் |
3. மைந்தர் மாதர்கள் மகிழ்ந்து கூடவே சந்ததிகள் நீடவே
மட்டில்லா களிப்பாய் கொண்டாடவே
விந்தை யான சோபனங்கள் சூடவே
வேதநாயகன் பதங்கள் பாடவே
சிந்தையாக வந்தெந்த நாளிலும்
திடத்தி வருவினை கடத்தியருள் பரன்
இடத்தில் நிலை பெற நடத்தி யனுதினம். | - ஆசீர் |
-----------------------------------
தேவசபை வாழ்கத் தேவாலயஞ் சிறக்கப்
பூவுல கெலா மகிழ்ந்து பூரிக்கப்-பாவலரும்
நீத்தாருங் காவலரும் நீளப் பகைமாளக்
காத்தாள் வலகடவுளே.
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
காத்தாள் வல்லவனே சருவேசா
காத்தாள் வல்லவனே.
சாத்தான் கெட்டோடவே, தாரணி கொண்டாடவே | - காத்தாள் |
1. வலராசர் வாழ்கவே மாற்றலர்கள் தாழ்கவே
வலிதந்து காமனு நசரேனா. | - காத்தாள் |
2. போதகர் சிறக்கவே மாதவர் நிறக்கவே
பாதாம்புயந்தாரய் பர தேவா. | - காத்தாள் |
3. திருச்சபை பெருக்கமாய் குருக்களும் நெருக்கமாய்ச்
சீரோங்கக் கிருபை கூரமரேசா. | - காத்தாள் |
4. பந்துசனம் நீடவே சந்ததிகள் கூடவே
பாதார விந்தந் தாபர தேவா. | - காத்தாள் |
5. புத்திரர் செழிக்கவு மித்திரர் களிக்கவும்
பூதலந் தழைக்கவுஞ் செய்திரியேகா. | - காத்தாள் |
6. பாவிகட் கிரங்கியே ஆவியின் வரங்களை
மேவியருளம் பரா மனுவேலா. | - காத்தாள் |
7. மிக்க புகழ் நாட்டு மேன்மை நலங்காட்டு
வேதநாயகன் பாட்டுப் பாராட்டு. | - காத்தாள் |
-----------------------------------