பராபரனுக்கும் பரிசுத்தாவிக்கு
மிராச கிறிஸ்தேசுவுக்குள்-தராதலத்தி
லென்றும் நிலை சேரிடை விடாச் சேம சுப
மன்றல் கமழ் மங்களம்
மங்களம் நித்திய சுபமங்களஞ் செய
மங்களம் நித்திய சுப மங்களம்
துங்க முத்தரோடும்பர் பற்றி
யிறைஞ்சுமர்ச் செயனந்த சத்திய
சுந்தரப் பரமண்டலப் பொருளே | - மங்களம் |
1. வான நாடுல கோடதின் மேவிய
வாருதிச் சிலைவார் வனப்புற
மாருதத்தடர் மானிடத்திரள்
மாமதிக் கண மாவி பற் பொருள்
வானவித்தகர் யாவையும்
ஞான மோடறு வாசர மானதுள
ஞாபகத்துடனேர் மிகுத்த
வினோத வற்புத ரூபமுற்றிட
நாம மிட்டவை மாதிறத்துட
னே படைத்த திரித்துவனே | - மங்களம் |
2. ஏவை மானினியாள் கனியே நுக
ரேத மற்றிடவே தயைக் கிருபை
யாய் நினைத்திருளே விளக்கிய
ஞான சித்திர பரனெனப் புக
லேசு ரட்சக ராசனை
பாவை மா மரியாடனை யாகவே
யாயர் மெச்சிட மூவருச் சித
மே கொடுத் தடியே துதித்திட
வே வெலைப் பதி மாடடைக் குடில்
மீதளித்த வனாதியே | - மங்களம் |
3. தேசுலாவிய தேவ தெய்வீகனின்
சீருளப்படி பூவிலுற்றருள்
சேர் மறைக் கலையோ தியற்புதமே
செய்து த்தம் சீடரைத் தெரி
வாயெடுத் தெழிலாகவே
மாசு மாறிடவே கொல்கதாவெனு
மாவரைக்கருகாக மெத்த
வியாகுலத் தொடுபாடு பட்டெழு
வாசகத்துடன் மா கொலைக் கழு
மேல் மரித்த கிறிஸ்துவே | - மங்களம் |
4. ஆதி வாரத்திலே செய மேவியே
யாரணப் பிரவை யாயுயிர்த்ததி
சீடருக் கருளே யளித்துவி
ணேறியச் சயனார் வலத்தரி
யாசனத்தனை மீதிலே
நீத மோடுல கோர் தணி பாதலர்
நீள் பரத்தினு ளோரு மர்ச்சனை
யே செயப் பெருமை யோடு ரத்தினி
நேர்மை யிட்டிரு தீர்வை யிட்டிட
வே வரச் செய்யும் ரட்சகா | - மங்களம் |
5. ஈறிலாத பரா பரனார்க் குளு
மேசு தற் பரனான சற் குரு
மானு வேற் பவ நாசன் முத்தொழி
னாதனிச் சய ஞான சத்திய
நாயகர்க் குளு மாகியே
வீறு மாறிடவே மனு வோரிட
மேவி யற்புத மாயிடர்களை
யே தவிர்த்தவர் மீதனுக் கிரக
மாய் மனத் தினையே கதுப் பர
வாயமைத்திடு மாவியே | - மங்களம் |
6. ஞான மாதவமே மிகு சீடர்க
னாதனைப் பெலனோடு ளத்தினி
லேதுதித் தொரு நேச முற்றணி
நாவலர்க் கருட் கோவிலுட செப
மே செபித்திடு போதிலே
வான நாடு ணர்வாய் ழல் ரூபமாய்
மா செயற் களையே யியற்றிடவே
யருட் கடலான வற்புத
மா வரப் பிரசாத மர்ச் செயர்
மேனிறப்பு மிஸ்பிரித்துவே | - மங்களம் |
7. தேதநாயகியான சீயோன் மகள்
சீர் மிகுத்திடும் ஞான கற்புட
னே மணப் பதியான நித்திய
தீரனுக்குளே மாதிரட்தி ரட்
சேயரைப் பெறலாகியே
மாவ தீத தயாப மனோகர
வாழ்வு பெற்று மெந்நாளு நித்திய
சோபனச் சுப சோபனத் தோடு
மா மணப் பதி வீடு புக்கி
மகா சிறப் பொடு வாழ்கவே | - மங்களம் |
8. மாதவன் சுவார்ச்சையரும் வாழ்கவே
வானரும் புவி யானருங் கவி
வானரும் பல ஞானருங் குரு
மார்களுந் துரைமார்களும் பெரி
யோர்களுந் தினம் வாழ்கவே
வேதநாயக சாஸ்திரி வாழ்கவே
விந்தையுந் தவமுந் தொடர்ந் தெழு
விம் பசம் பிரம விங்கிதம் செறி
விஞ்சை யஞ்சன பந்து பெந்துகள்
வென்றி தங்கியும் வாழ்கவே | - மங்களம் |
-----------------------------------
(இராகம்: ஹரிகாம்போதி) | (ஆதி தாளம்) |
நேம மந்திர தாயகனக
நீதி ஞாய ராய தூய
நிகரிலா யேசு ராய
நித்திய மங்களம்
1. சாமி சத்திய கோடி மருக
சப்த மங்களம் வேத போத
சமத சுகிர்த கீத நாத
சகஸ்திர மங்களம்
2. தேவாதி தேவாய
திவிய மங்களம் திரித்துவ நேய
பாவ நாச சர்வ லோக
பரம மங்களம்
3. ஆசீர்வாத பூசித உசித
அமிர்த வசன சகித சுகித
மேசியா யேசு நாம
விமல மங்களம்
4. நன்மை சூழ மிருதுள இருதய
செம்மை மிகு சவா சுருதிய
நயன புவன கவன திரிதய
நாளு மங்களம்
5. எங்கு மிங்கித துங்க மங்களம்
எந்த நாளும் வந்தனம் மங்களம்
சங்கை ராஜ கிறிஸ்து மகுட
சர்வ மங்களம்
6. ஆரண கல்யாண சுப
அனந்த மங்களம் தினம் தினம் செய
பூரண யோக பாக்கிய
புனித மங்களம்
7. சீராக வாழ்க சிநேக
தேவ சிகாமணி சீர் நன்றாக
ஏருலாவு மாவை போக
இறைவ மங்களம்
-----------------------------------
சீ ரேசுநாதனுக்கு செய மங்களம் ஆதி
திரி யேக நாதனுக்கு சுப மங்களம்
பாரேறு நீ தனுக்குப்
பரம பொற் பாதனுக்கு
நே ரேறு போதனுக்கு
நித்திய சங்கீதனுக்கு | சீரே |
1. ஆதி சருவேசனுக்கு வாசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கும் நேசனுக்கு மங்களம்
நீதி பரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதியவர் சாலனுக்கு யுவர் மனுமேலனுக்கு | சீரே |
2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானானு தேயனுக்குக் கன்னி மரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்குக் கூறு பெத்த லேயனுக்கு | சீரே |
3. பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களஞ்
சத்திய விஸ் தாரனுக்குச் சருவாதி காரனுக்குப்
பத் தருப காரனுக்குப் பரம குமாரனுக்கு | சீரே |
4. பாதம் நாடிய வீந்தனுக்கு அந்தனுக்கு மங்களம்
பாவு கூறிய சந்தனுக்குத் தந்தனுக்கு மங்களம்
வேதநாயகன் பாட்டனுக்கு மேல வானவர் நாட்டனுக்குச்
சீத ஞானியர் கூட்டனுக்குத் தேவ மோகினி தேட்டனுக்கு | சீரே |
-----------------------------------