ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

399

 

நவ எருசலேம் - (வெளி, 21, 22)

 

பல்லவி

பாராய் பாராய் பாராய் பாராய்

பாக்கிய சீயோனின் கண்ணே

 

அனுபல்லவி

சீராக வேயிதோ நேராய் பரத்தினின்று

சீவ நதிப் பிரவாக மேவு துன்னதமாக

பா

 

சரணங்கள்

1. ஆதி யானுமாட்டுக் குட்டியுமே தங்கும்

ஆசனத் திருந்து வீசும் பளிங்கைப் போலே

தேசு துலங்க வருஞ் சுத்த சீவ தண்ணீரின்

சித்ர நதியது தா னுத்தமியே கண்ணாலே

பா

 

2. வீதி நடுவிலேயும் நதியினிரு கரையும்

விந்தையாகப் பனிரண்டு விதக் கனிகள்

மாதந்தோறும் தந்து சாதிகளுக் காரோக்கியம்

வருத்தும் பத்திரத்தைக் கொண்டு

இருத்துஞ் சீவ விருட்சம்

பா

 

3. நதியினோரத் தினக் கரையு மிக் கரையினும்

நன்று மினிதுமாக நின்று போசனத்துக்

கிதமுங் கனிகளோ யா திலைகளு திராதென்று

மிருக்குஞ் சகல விதத் தருக் களனந் தனந்தம்

பா

 

4. வானத்திருந் திறங்கிப் பரமன் மகிமை கொண்ட

மகத்துவமான பரி சுத்த யேருசலே

மேன்மைப் பட்டண முற்றும் பளிங்குனொளிவு தோன்ற

வெளிச்சம் யஸ் பிக் கற் போல்

பளிச் சென் றொளிர்து சாலேம்

பா

 

5. பெரிது முயரமான மதிளு மாறி ரண்டு

பெரிய வாசல் கண் மேற் சுரர்கள் பன்னிருவருக்

குரிய இசறாவேற் பன்னிருவர் கோத்திரத்துக்

குடைய பெயர் பதித்த

கடவுள் திருநகரம்

பா

 

6. நாலு திக்குகனான மூன்று வாசன்க

ரத்தின் மதிட் பனிரண்டஸ்தி வாரங்களு

மேலு மாட்டுக் குட்டியின்ற னாறிரண்டு

வேதப் போஸ்தலர் நாமம்

தீதப் பிரஸ் தாபங்களும்.

பா

 

7. உன்னதச் சதுரமான பட்டணத்தின்

உயரமகலம் நீளஞ் சரிசமான தூரம்

பன்னீராயிர மிஸ் தாதி றூற்றுநாற்

பத்து நான்கு முழஞ்

சித்திர மதிளுயரம்.

பா

 

8. சுத்தக் கண்ணாடிக் கொக்குஞ் சுத்தப் பசும் பொன்னாகத்

துலங்கும் பட்டண மதிளிலங்குங் கட்டுதல் யஸ்பி

அஸ்தி வாரங்களோ சகல வித ரத்தனங்க

ளாலு மலங்கரித்த

கோல விசித்திரங்கள்.

பா

 

9. ஆதி யஸ்பி நீலக்கல்லே கலக தோனி

அதின் பின்னாக மரகதங் கோமேதகங் கெம்பு

மாதே கிரி சொலித்து பேரில் புஷியராகம்

வயிடூரியம் பத்ம ராகம் மேதிஸ்து.

பா

 

10. ஆறிரண்டு வாசலொவ் வொன் றொரு முத்தான

அரிய பட்டண வீதி தெரிதற் கன்ணாடிபோன்ற

சோதிப் பொன்னே யதிற் தேவாலய மில்லைச்

சூரிய சந்திரனில்லை

ஆரியனின் மகிமை.

பா

 

11. ஆட்டுக் குட்டியதின் தீபமேதிரித்துவ

ஆதியான் மகிமை வெளிச்சமே யதற்குள்ப்

பாட்டுத் திறத்து வேதநாயகனுந் தவீதும்

படித்துப் பரம சேனை

நடித் தெக் களிப்பதையும்

பா

 

-----------------------------------

 

400

 

வெண்பா

ஆற்றும நேசா அருமை மணாளா வெனையீ

டேற்ற வந்த பூலோக ரட்சகா-போற்றிநின்றுன்

வாகை யழகை மகிமையைக் கண்டாசை

யாகினேன் கோவே யியான்.

 

(இராகம்: மோகனகல்யாணி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஆசையாகினேன் கோவே யுமக்

கனந்த ஸ்தோத்திரம் தேவே

 

அனுபல்லவி

இயேசு கிறிஸ்து மாசத்துவத்து

இரட்சகா ஒரே தட்சகா

ஆசை

 

சரணங்கள்

1. வேதா ஞான பத்தா என்

தாதா நீயே கத்தா

பாதார விந்தம் கண்டேன் பர

மானந்தா சச்சிதானந்தா

ஆசை

 

2. கானா னாட்டுக் கரசே யுயர்

வானாட்டார் தொழுஞ் சிரசே

நானாட்ட முடன் றேடித் தேடி

நாடிப் பதம் பாடி

ஆசை

 

3. வீணாய்க் காலங் கழித்தேன் சற்றுந்

தோணாம னின்று விழித்தேன்

காணா தாட்டைத் தேடிச் சுமந்த

கருத்தே எனைத் திருந்தே

ஆசை

 

4. வந்தனம் வந்தனம் யோவா நீ

சந்ததம் சந்ததம் காவா

விந்தையா யுனைப் பணிந்தேன் சத்திய

வேதா யேசு நாதா

ஆசை

 

5. ஆதி மானிடர் தேட்டா மகா

அற்புதமான கொண்டாட்டா

வேதநாயகன் பாட்டுப் படிக்கு

விரும்பி மனந் திரும்பி

ஆசை

(1821-வரு)

Table of contents

previous page start next page