காலையிலே செய்தித்தாள்
கைஎடுத்து Sofa – வில்
ஆவலுடன் நம்நண்பர்
அமருவதை எப்படியோ
அறிந்திடுவார். ஐந்து புலன்
என்றறிஞர் சொல்வார்கள்
நம்மவர் நாயகிக்கு
அதனுக்கும் மேம்பட்ட
உணர்வுண்டு. பாராமல்
கேளாமல் நுகராமல்
தொடாமல் சுவையாமல்
அவர்சற்றே “அம்மா”வென்
றமருவது எப்படித்தான்
தெரியவரும் சமையலறைக்
குள்ளேயே இருப்பவர்க்கு?
Sports page போவதற்குள்
சத்தம்வரும் “சுத்தமாக
நீரில்லை, Motor – ஐ
உடனடியாய் on செய்ய”
Motor – ஐ போட்டுவிட்டு
மீண்டுமவர் Sofa-வை
அணுகிடுமுன் மறுபடியும்
குரலொலிக்கும் “காய்கறிகள்
வாங்கவேண்டும்” அதற்காக
Lock-down-ல் Mask அணிந்து
சந்தைவரை போய்வந்து
பக்கமொன்று திருப்பிடுமுன்
“Motor – ஐ அணைத்திடனும்”
என்றிடுவார் அம்மையார்.
இவ்விதமாய் அமைச்சலுடன்
நிம்மதியாய் செய்திதாள்
படிப்பதற்குள் அப்படி என்பார்
இப்படி என்பார் நீளமென்றால்
குட்டை என்பார் குட்டை என்றால்
நீளமென்பார் தடி என்றால்
ஒல்லி என்பார் ஒல்லி என்றால்
இல்லை என்பார் எவ்வளவு
இடையூறு விளைவிக்க
கூடிடுமோ அத்தனையும்
தளராமல் தவறாமல்
செய்துவரும் அம்மணியை
சிறப்பாக விவரிக்க
வேறெந்த வழிகாணா
அப்பாவி இவ்வரியை
வாய்தவறி சொல்லிட்டார்
உதைபடுவார் நிச்சயமாய்!
____________________________________________