Misc. 112: Heaven Came Down – 2

வாங்க அண்ணாச்சி வாங்க  வணக்கம் உங்களை பார்க்கிறதுல  ரொம்ப சந்தோசம்  பாருங்க .அப்படி ஒரு chorus  கூட இருக்கில்ல. நம்ம Sunday School ல பாடுவாங்களே . ஞாபகத்திற்கு வருது . நீங்க பூமியில இறந்து போய் கொஞ்ச நாள் உங்கள இங்கு காணலேன்னு  ரொம்ப வருத்தப்பட்டேன். ஏதோ நம்ம ஜனத்தோட join பண்ணி தப்பான இடத்துக்கு போயிட்டீங்க போலேன்னு ரொம்ப கவலையா இருந்தேன்.  Praise the Lord எப்படியோ வந்து சேர்ந்திட்டீங்க.
நல்லா சொன்னீங்க  தம்பி.  நானும் கடைசி காலத்துல அது, இதுன்னு வேண்டாத அக்கிரமம் எல்லாம்  பண்ணிகிட்டு கொஞ்சம் மோசம் போயிட்டிருந்தேன். உண்மைதான் . நல்ல வேளை நம்ம போதகர் வந்தாரு. தற்செயலா வந்தாரா சாமி அமி ச்சாரான்னு தெரியல. சாமியா தான் இருக்கணும்.  “இதெல்லாம் விட்டுருங்க அண்ணாச்சி .இந்த குரோதம் கிரீதம் , வீம்பு கீம்பு ,பெருமை கிருமை, பொறாமை கிராமை , சாதி செருக்கு கிறுக்கு, வைராக்கியம் கைராக்கியம்  எல்லாம் நித்தியத்தில் செல்லுபடாது ..இதெல்லாம் நீங்க பண்ணிட்டு இருந்தா தம்படி  பிரயோஜனம் இல்லை. கல்லறை தோட்டம் வரைக்கும் தான் ஆட்டம் எல்லாம். சாமி ஏசு கிறிஸ்துவின் ரத்தத்திலே கழுவ பட்டு பரலோகத்துக்கு போற வழிய பாருங்க” ன்னாரு . அப்படியே புடிச்சுக்கிட்டேன் தம்பி. .ஆவியானவர் தாம் கிரியை செய்திருப்பாரு ன்னு நினக்கேன்..சாமி என்  பாவத்தை எல்லாம் முற்றிலும் கழுவிட்டார்………என்ன சந்தோசம், சமாதானம்.
“ரொம்ப நல்லது அண்ணாச்சி . நீங்க போதகர்  போதகர் ன்னு சொன்னீங்களே அவர் யாரு? அவர் தானே நம்ப ஊரு……? அவரும் ரெண்டு நாளைக்கு முன்னாடி இறந்து போனார்ன்னு  கேள்விப்பட்டேன் ஆனா ஆள காணோமே இங்க.வழி தப்பி போயிட்டாரோ?”
(representative only)
” எங்கேயாவது ஒரு இடத்துல திருவிருந்து நடத்திட்டு இருக்காரோ  என்னமோ? நல்லா பாத்தீங்களா?”
 “நான் தேடுன வரைக்கும் கண்ணுல படல.. அப்புறம் பரலோகத்திலே எதுக்கு திருவிருந்து ? எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கண்ணாச்சி  உங்களுக்கு புத்திமதி சொல்லிவிட்டு அவரே கோட்டை விட்டுட்டாரோ?
நம்ம Bishop  ஐயா எப்படி?”
chance -யே  இல்லதம்பி  உங்களுக்கு ஒன்னு சொல்றேன் நான் வாறப்ப பார்த்தேன் அந்த பரலோகத்தில் வாசல் பக்கம் ஒரு notice  நீங்க கவனிச்சீங்களா இல்லையோ தெரியல English ல போட்டு இருந்துச்சு entry prohibited for bishops and higher order clergy as a general rule
“அது எப்படிங்க.சாமி எல்லா bishop -பையும் wholesale-அ போட்டு தள்ளிடுவாரு அதுலயும் ஒண்ணு  ரெண்டு பேரு ரட்சிக்கப்பட்ட்டு தேறினவுங்க  இருக்கத்தான செய்வாங்க “
(no judgment passed)
” இருப்பாங்க   தம்பி.   சாமி தான் நீ தி உள்ளவராச்சே ஏதாவது ஒரு வழி வச்சிருப்பாரு அவங்களுக்கும்ன்னு நம்புறேன்.ஆனா ரொம்ப கஷ்டம் பாருங்க. பூமியில ஆடி பாடி கொண்டாடி மால  போட்டு  கௌரவ படுத்தி பொன்னாடை போர்த்தி காசு கொடுத்து ஒரு Mercedes காரு  கொடுத்து, பாமர teachers அ  அடாவடியா அங்குமிங்குமா transfer பண் ணி  missionary சொத்து எல்லாம் சரமாரியா வித்து, பேருக்கு ஒரு பிரசங்கம் பண்ணி, confirmation னுக்கு கை  நீட்டி,  appointment க்கு rate fix பண்ணி  இவ்வளவு அட்டகாசம் பண்ணினவு ங்க கதை கொஞ்சம் பரிதாபமாகத்தானே  முடியும். ஆமா தம்பி என்ன பண்றது அவங்க கையில தூக்கிட்டு திரிஞ்ச Bible அ  கொஞ்சம் புரட்டி பார்த்தாதானே. .சாமி அந்த ஆடம்பர பணக்காரன் -ஆண்டி லாசரஸ் உவமை சொன்னாருல்ல!
ஞாபகம் இருக்கா?
_______________________________________________

2 thoughts on “Misc. 112: Heaven Came Down – 2”

  1. Pity that no one from the targeted group will read this especially the parable of the Richman n Lazarus.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *