ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

முத்தோத்திரம்

கட்டளைக்கலிப்பா

1. அந்த ரம்பரம் அம்பர மும்படைத்
தாண்டு காக்கும்அ னாதி பிதாவெனுந்
தந்தை யும்பர்தொ ழுங்கிரு பாசனன்
சத்திய வேதத யாகரு ணாம்பரன்
மைந்த னைக்கொடுத் தேநமை மீண்டவன்
வல்ல பத்தின்ம கத்துவ வஸ்தொரு
எந்தை யேகதி ரித்துவ வர்சய
யேயோ வாசரு வேசர்க்கிஸ் தோத்திரம்

2. ஆதி யேவைசெய் தீவினை தீர்ப்பதற்
காவி யாற்கனி யாஸ்திரி வித்தினில்
நீதி யோடுதித் துப்பிறந் தாரணம்
நீடி யற்புதஞ் செய்துபி லாத்துமுன்
வாதை யாயரும் பாடுபட் டோர்சிலு
வையிற் றொங்கிம ரித்துயிர்த் தேபரஞ்
சோதி யான்வல பாகமி ருந்தினந்
தோன்று மேசுசு வாமிக்கிஸ் தோத்திரம்

3. முத்தி யேகதி ரித்துவந் தன்னிலே
மூன்ற தாண்முது ஞானவ ரத்தினர்
பக்தி யோர்களின் றேற்றர வாளனர்
பார்க்கு மக்கினிக் காட்சியர் பாவிகள்
சித்த மேயுரு கக்குணஞ் செய்பவர்
தேவ னார்சுத னாருடன் மேவுவர்
சத்தி யப்பரி சுத்தவ ரூபியாஞ்
சாந்த னாதிசு யம்புக்கிஸ் தோத்திரம்

Table of contents

previous page start next page