1. சீரு லவுதி ரித்துவ தேவனே
பாரு லாவும்இ யாவும்ப டைத்தவா
நேரு லாவுத வீதிறை நீடிய
ஏரு லாவும்இ றைக்கிறிஸ் தேசுவே
2. அந்த மாதியி லாதப ராபரன்
மைந்த னேநரர் மாங்கிஷ மாகியே
விந்தை யாயெனை மீண்டிரட் சித்தவா
எந்த யாபர னேகிறிஸ் தேசுவே
3. அண்ண லார்க்கும கிமையுண் டாகவும்
மண்ணி லேசமா தானம்வ ளரவும்
நண்ணு நற்பிரி யநரர்க் கெய்தவும்
எண்ண மானஇ றைக்கிறிஸ் தேசுவே
4. கனிய ருந்துக டும்பகை யால்வரும்
வினையொ ழிந்துவிண் வீடது றும்படி
மனுடர் சங்கம கிழ்ந்தெழ வந்தவா
எனையு வந்தஇ றைக்கிறிஸ் தேசுவே
5. வார்த்தை மாங்கிஷ மாய்மனு டர்க்கெலாங்
கோர்த்த பாவக்கொ டூரம னைத்தையுஞ்
தீர்த்தி ரட்சைபு ரிந்ததி றத்தினால்
ஏற்கமீட் பன்இ றைக்கிறிஸ் தேசுவே
6. ஆடு பட்டஅ ருங்கொலை யாகவே
பாடு பட்டுப் பருங்குரு சானதிற்
கேடு கெட்டவ ருங்கிரு பைபெற
ஈடு பட் டிறந் தகி றிஸ் தேசுவே
7. அத்த னார்க்கடி யார்பிணை யாளியாய்
மத்திஸ் தனென வார்த்தைத ரும்படி
மெத்த வாதைய தாயுயிர் விட்டபின்
இத்த லத்தன்எ ழுங்கிறிஸ் தேசுவே
8. உற்ற பாதையும் உண்மையுஞ் சீவனும்
நற்ற வக்குரு வுநல் மேய்ப்பனும்
மற்ற ஞானவ யித்திய னாகவும்
இற்றை நின்றைஇ றைக்கிறிஸ் தேசுவே
9. ஞான நாயகன் நன்மண வாளன்மெய்
யான மைந்தன்அ ருமையி ரட்சகன்
மான தேவம கத்துவ தத்துவன்
ஈன மற்றஇ றைக்கிறிஸ் தேசுவே
10. மேசை யாமிசை யாஇச றாவேலின்
ஆசை யாநசை யாஅசை யாஅருள்
ஓசை யாஉசி யாசுசி யாநச
ரேசை யாஇசை யாகிறிஸ் தேசுவே
11. சாதி யாவையுந் தான் புரந்தாளவே
மாது மாமரி யாளிடம் வந்தவா
வேத நாயகன் பாடலை மேவிய
ஏத மற்றஇ றைக்கிறிஸ் தேசுவே
ஜெபமாலை 8 வரை செய்யுள் 87