ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

5. ஜெபமாலை

தேவமகத்துவம்

திருப்புகழ்

1. ஆக மங்கள் புகழ் வேதா நமோநமோ
வாகு தங்கு குரு நாதா நமோநமோ
ஆயர் வந்தனை செய் பாதா நமோநமோ - அருரூபா
மாக மண்ட லவி லாசா நமோநமோ
மேக பந்தி யினு லாசா நமோநமோ
வான சங்கம் விசு வாசா நமோநமோ - மனுவேலா
நாக விம்ப முயர் கோலா நமோநமோ
காக மும்பணி செய் சீலா நமோநமோ
நாடும் அன்ப ரனு கூலா நமோநமோ - நரதேவா
ஏக மந்திர முறு பூமா நமோநமோ
யூக தந்திர வதி சீமா நமோநமோ
யேசு வென்ற திரு நாமா நமோநமோ - இறையோனே

மாகமண்டலம் = ஆகாயம்; பூமான் = மணவாளன்

எ-து. வேதசாஸ்திரங்கடுதிக்கும் வேதனே தோத். தோத்.
அழகு தங்கிய குரு நாதனே தோத். தோத்.
மேய்ப்பர் ஆராதனை செய்யும் பாதாம்புயனேதோ.தோ.
அரூபா ரூபனே ஆகாய மண்டல விலாசனே தோ. தோ.
மேக வரிசையினுலாசனே தோத். தோத்.
வானோர் சங்கத்தின் விசுவாசனே தோத். தோத்.
மனுவேலா மலை வட்டத்தினுயர்ந்த வழகனே தோ. தோ.
காக்கையும் ஏவற் செய்யும் நல்லொழுக்க மானவனே தோ. தோ.
தேடிய சினேகிதர்க் கனுகூலனே தோத். தேர்த்.
மனுட தேவனே ஒரே மந்திரமுடைய ஏக சக்கராதிபதியே தோத்.
தர்க்க வுபாயங்களின் அதிக செல்வத்தோனே தோ.தோ.
இயேசு வென்ற தேவாபிதானனே தோ.தோ. - கடவுளே

2. அறிவி னுருவா கிய மூலா நமோநமோ
மறைய வாகடே டிய நூலா நமோநமோ
அதிச யபரா பர சீலா நமோநமோ - அருளாளா
பொறிவி னையுறா தச ரீரா நமோநமோ
குறைய ணுவிலா தகு மாரா நமோநமோ
புவன முழுதாள் அதி காரா நமோநமோ - புதுவேதா
நிறைவ ழியின்மே விய கோனே நமோநமோ
முறைக டவறா தவி ணோனே நமோநமோ
நிதிபெ ருகுமா ரச தேனே நமோநமோ - நெறிநீதா
இறைத வீதுபா டிய கீதா நமோநமோ
பறைகள் பலகூ டிய போதா நமோநமோ
எருச லையினீ டிய தூதா நமோநமோ - இறையோனே

பொறி வினை = பஞ்ச பொறியின் தீவினை

எ-து. அறிவின் வடிவாகிய ஆதிமுலமே தோத். தோத்.
சாத்திரிகடேடிய கல்வி நூலனே தோத். தோத்.
அதிசயமான பராபரனுடைய குணா தீதமே தோ.தோ.
கிருபையாளனே பஞ்சந்திரியங்களின் தீவினையடராத சரீரனே தோத். தோத்.
குற்றம் அணுவேனு மற்ற சுபுத்திரனே தோத். தோத்.
உலகடங்கலும் ஆளுமாதிபத்தியனே தோத். தோத்.
புதேற்பாட்டனே நீதிமார்க்கத்தின் மேவிய இராசனே தோத். தோத்.
ஒழுக்கந்தப்பாத வானவனே தோத். தோத்.
நிறைவு பெருகிய வதிரசமே தேனே தோத். தோத்.
நீதிமார்க்கத்தானே தாவீதரசன் பாடிய சங்கீதனே தோத். தோத்.
பல வாத்தியங்களோடிசைந்த ஞான போதனே தோத். தோத்.
எருசலேமிநீடித்த பரம தூதனே தோ. தோ. - கடவுளே

3. பாட்டு விந்தை யது யர்ந்தாய் நமோநமோ
நீட்டு சந்த மதி சைந்தாய் நமோநமோ
பார்க்க அந்த மோடெ ழுந்தாய் நமோநமோ - பரதேவா
மாட்டு மந்தை யிடை வந்தாய் நமோநமோ
காட்டு நிந்த னைய டைந்தாய் நமோநமோ
வாழ்த்து நந்த ரைம கிழ்ந்தாய் நமோநமோ - மனுரூபா
சூட்டு கந்தை யத ணிந்தாய் நமோநமோ
நாட்டு வந்த னைநி றைந்தாய் நமோநமோ
சூட்ச தந்தி ரம றிந்தாய் நமோநமோ - சுவிசேடா
ஏட்டு மந்தி ரமி குந்தாய் நமோநமோ
மீட்டு மைந்த ரையு வந்தாய் நமோநமோ
ஏற்ற தந்தை முனி ருந்தாய் நமோநமோ - இறையோனே

4. கருணை பெருகி யத யாளா நமோநமோ
உரிமை யுளநன் மண வாளா நமோநமோ
கதிர்கள் படர்சு டரின் வாளா நமோநமோ - கலையாளா
பெருமை மகிமை யுள நாதா நமோநமோ
மரிய மதலை தொழு பாதா நமோநமோ
பிரிய முளவெ னது தாதா நமோநமோ - பெரியோனே
அருமை அடிய வர்க ணேசா நமோநமோ
பரம எருச லைவி லாசா நமோநமோ
அறிவி னுடைய சரு வேசா நமோநமோ -அதிகாரா
இருமை வினைபொ டிசெய் சூரா நமோநமோ
தரும நெறியி னுப சாரா நமோநமோ
இருடி யர்களெ ழுது தீரா நமோநமோ- இறையோனே

இருமை வினை = இம்மை மறுமைத் துன்பம்

5. அதிசய மிகுமொரு சொல்லாய் நமோநமோ
கதிருடு வுடன்வரும் வல்லா நமோநமோ
அசடரை நரகிடும் அல்லா நமோநமோ - அசரீரி
விதிமுனி வர்கடொழும் நல்லாய் நமோநமோ
பதிதர்க டமதிடை செல்லாய் நமோநமோ
வெறிகொளு புலையர்மு னில்லாய் நமோநமோ - மிகுநீதா
சதுர்நடு வினிலெழு மெய்யா நமோநமோ
மதிகெட வெனைவினை செய்யா நமோநமோ
தடிமடை யர்களிடை வையாய் நமோநமோ - தவரூபா
இதிமுடி நடமிடு துய்யா நமோநமோ
நிதியமு தருளிய கையா நமோநமோ
இருடிய ரெழுதுமே சையா நமோநமோ - இறையோனே

இதி முடி = பிசாசின் தலை

6. ஆதி யந்த மற்ற திரி யேகா நமோநமோ
சோதி தங்கு பொற்பின் மிகு தேகா நமோநமோ
வாக மங்க ளுக்க திவி வேகா நமோநமோ - அருணீதா
மாதர் வஞ்ச னைகுண் மன நாடாய் நமோநமோ
தாதை பந்து மக்க ளென நீடாய் நமோநமோô
மாசு றுந்து ரிச்சை வழி கூடாய் நமோநமோ - வரதேவா
தீது மிஞ்சு சர்ப்ப வினை தீராய் நமோநமோ
கோது துன்ப முற்று மற வாராய்நமோநமோ
தேவ னுன்றி ருத்தயவு கூராய் நமோநமோ - திரியேகா
ஏத மொன்றும் அற்ற வதி தூயா நமோநமோ
வேத மந்தி ரத்து மணி வாயா நமோநமோ
ஏசு வென்ற கத்த விய நேயா நமோநமோ - இறையோனே

7. திருவச னத்துமது ரத்தாய் நமோநமோ
யுரியசெ பத்துடர சத்தாய் நமோநமோ
திடமிகும் உத்தமவ ரத்தாய் நமோநமோ - திருரூபா
அருண்மிகு சித்தருறை வெற்பே நமோநமோ
பொருளுணர் பத்தர்தொழு கற்பே நமோநமோ
அதிபரி சுத்தமுள பொற்பே நமோநமோ - அருடேவா
ஒருகுறை யற்றதவ வித்தே நமோநமோ
இருகலி லுற்றநெறி பத்தே நமோநமோ
ஒளிர்விடு ரத்தினமணி முத்தே நமோநமோ - உயர்தேவா
எருசலை மக்களின்ம கத்துவா நமோநமோ
பரவெளி யுக்குளுயர் தத்துவா நமோநமோ
இனிமையின் முக்கியதி ரித்துவா நமோநமோ - இறையோனே

8. கட்டான வேதநி தானா நமோநமோ
சிட்டோர்க ளாதிப கோனா நமோநமோ
கற்றோர்கள் போதக ஞானா நமோநமோ - கனயூகா
மெட்டான வானவர் கோவே நமோநமோ
அட்டாவ தானிகள் பாவே நமோநமோ
மிக்கான ஞானிகள் தேவே நமோநமோ - வினைநாசா
தட்டான போதுச காயா நமோநமோ
கெட்டோர்கண் மீதுந னேயா நமோநமோ
தப்பாத வாதிலு பாயா நமோநமோ - சருவேசா
எட்டாத சோதியின் வாசா நமோநமோ
நெட்டான வீதிவி லாசா நமோநமோ
எக்கோடி சாதிந ரேசா நமோநமோ - இறையோனே

9. சருவாதி காரணப ராபரா நமோநமோ
நெறியோது தாரணத ராதரா நமோநமோ
தயைஞான பூரணச ராசரா நமோநமோ - தனிவேதா
குறையாத சீர்மீகுகு ணாகரா நமோநமோ
திரியேக ரானகிரு பாகரா நமோநமோ
குருரூப மாய்வரும னோகரா நமோநமோ - குலதேவா
அறிவான தேவதிரு வாசனா நமோநமோ
வெறிதீதி யாவையும்வி மோசனா நமோநமோ
அழியாதசீ வனுறு போசனா நமோநமோ – அதிநேயா
இறையாக மேவியத போதனா நமோநமோ
சிறியேனை யாளதுகொள் சாதனா நமோநமோ
இசறேலி ராசர்கள்சி மாசனா நமோநமோ - இறையோனே

10. தேவாதி தேவசங்க நாட்டனே நமோநமோ
மூவரணி மீதுதங்கு பாட்டனே நமோநமோ
சீயோனின் மாதுகண்கள் தேட்டனே ந.ந.- திறலோனே
காவாதி சேயர்தங்கள் பாத்திரா நமோநமோ
தாவீதி ராசதந்தை கோத்திரா நமோநமோ
கானானு தேசமென்ற கேத்திரா நமோநமோ - கலிலேயா
மாவேத ஞானமந்திர சூத்திரா நமோநமோ
பாவாண ரோதனந்த சாத்திரா நமோநமோ
வானோர்கள் பாடிவந்த காத்திரா நமோநமோ - மறுரூபா
ஏவாள்செய் பாதகங்க டாத்திரா நமோநமோ
பாவேத நாயகன்சொல் தோத்திரா நமோநமோ
ஏகாதி பாலரெங்க ணேத்திரா நமோநமோ - இறையோனே

கேத்திர = கெடிஸ்தலம் ; தாத்திரம் = கோடாலி

ஜெபமாலை 5 வரை செய்யுள் 52

Table of contents

previous page start next page