ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

10. ஜெபமாலை

அகப்பற்று

1. அறிவே மெஞ்ஞான ஒளிவே விணாடர்
அரசே யனாதி முதலே
குறியா றுநாலு நெறியா றுநாலு
குணதே வதேவ சொரூபி
வெறியா டுபேயின் முறிகா ரனான
வினையே னையாள மனுவாய்
மறியே றிமேவு குருவேசு நாதர்
வரவே ணும்என்றன் அகமே

குறியாறு நாலு = இலட்சணம் பத்து;
நெறியாறு நாலு = பத்துக் கற்பனை

2. ஆதாம் விழுந்த வினையாலு லர்ந்த
அகிலம் புரந்த ருளவே
தீதே யகன்ற மனுவா யெழுந்து
திருவா சகங்கள் சொலியே
வேதா ளம்அஞ்ச நரகங்க லங்க
வெகுபா டடைந்திக லெலாம்
வாதா டிவென்ற குருவேசு நாதர்
வரவே ணும்என்றன் அகமே

3. இதமென் றுமாதா மயல்கொண்டு வாடி
எழுமந்த காரநீ னைவாற்
சதமென் றுவீணுட லைநம்பி நின்று
தவமொன் றெனுந்தொ றுவியே
பதமொன் றிவாழ்க அறிவின்றி மீறு
படுபஞ் சபாத கர்களின்
மதமன் றிநீடு குருவேசு நாதர்
வரவே ணும்என்றன் அகமே

தொறுவு = பயிற்சி

4. ஈராறு சீடர் அடிகண்டு தெண்ட
னிடநின் றுகா னாவிலே
ஓராறு சாடி யுதகம்பிர சஞ்செய்
தொருமுப்ப தாண்ட ளவிலே
பேராறு சென்று திவியதீட்சை பெற்றுப்
பிதாமைந் தன்என்றெ ருசலை
மாராறு கொண்ட குருவேசு நாதர்
வரவே ணும்என்றன் அகமே

உதகம் = நீர்; பிரசம் = முந்திரிகை ரசம்

5. உலகம் பசாசு கடலங்கொ டூரம்
உடனின் றெநேர முமெனைக்
கலகஞ் செய்தாலும் மனமஞ்சி டாது
கழலுண் டெனக்க ருதவே
பலசங் கசேனை தருசங்கை யோடு
பரமண் டலங்க ளதிலே
வலதின் கண்மேவு குருவேசு நாதர்
வரவே ணும்என்றன் அகமே

கழல் = பாதம்

6. ஊழித் துவாந்தத் துரோகப் பசாசுக்
குடன்பட் டழற்கெந் தகத்
தாழிப் பிரவாகத் தழுந்தாமல் மக்கள்
அனைவோ ரும்வான டையவே
ஏழைச் சொரூபத்தோ டேபெத்த லேமுக்கு
ளேயுற்ற கன்னிம ரியின்
மாழைக் குமார குருவேசு நாதர்
வரவே ணும்என்றன் அகமே

துவாந்தம் = இருள்; மாழை = அழகு

7. எட்டாத வானில் உறைகின்ற சோதி
எளியோ ரெலாங்க திபெற
ஒட்டார லூசி குலநாச மாக
உறவா யளித்தசு தனார்
கெட்டோ ரியாவர் பிணையாளி யான
கிருபையா வற்றினு டைய
மட்டேது மற்ற குருவேசு நாதர்
வரவே ணும்என்றன் அகமே

லூசி (இலத்தீன்வார்த்தை) = பசாசு

8. ஏகா மலாவி தடுமாறி நெஞ்சில்
எழமேற் சுவாச மதுற
லோகாசை யாவும் நினைவூடு தாவி
லோடாய மாய்ம னதெலாம்
வேகாமல் வெந்து புலனோ ஒடுங்கி
விழும்அந் தியகால மதிலே
வாகான தேவ குருவேசு நாதர்
வரவேணும் என்றன் அகமே

9. ஐயாறு வெள்ளி விலைகூறி விற்க
அநியாய நிந்தை களுறக்
கையே பிணைக்க வாரா லடிக்கக்
கடுவின் கிரீடம் இடவே
மெய்யே நடுங்கக் குருசூ டிறந்து
விலாவோ துளைக்க உலகின்
மையே தவிர்த்த குருவேசு நாதர்
வரவேணும் என்றன் அகமே

கடு = முள்; மை = இருள்

10. ஒருகாச தேனும் அடியாரை நாடி
உதவா உலுத்தன் உனது
திருவா சகங்கள் படியாத பாவி
ஜெபம்ஓத வுந்தெரி கிலேன்
பரிவாயுன் அன்பை உணராது கெட்ட
படுபாத கன்வி னையற
மரிபா லுதித்த குருவேசு நாதர்
வரவேணும் என்றன் அகமே

11. ஓசைக் கடற்குள் அலைமோதும் வாற
தொழியா விசார மதனால்
வேசைக் குலாமர் களைநாடி வாடி
மிகவே மெலிந்து ருகிமூ
வாசைக் குள்வீழ்ந்த கொடிதான பாவி
அடியேன் அகந்தை அறவே
மாசற்ற தேவ குருவேசு நாதர்
வரவேணும் என்றன் அகமே

12. ஒளவைத் தயாபத் தொரேயொரே யோவா
அனாதி யிலிருந்த வார்த்தை
செவ்வைத் திரியேகத் திரண்டா வதாளன்
திருப்பி தாவின்கு மாரன்
எவ்வைப் பெண்அன்று கனிதின்ற பாவத்
திஸ்திரி வித்தானமு தல்வர்
வெளவப் படாத குருவேசு நாதர்
வரவேணும் என்றன் அகமே

ஒளவை = தாய்; வெளவல் = கொள்ளை யிட்டு.

13. கூகா லம் ஆள வரும்ஆ மனான
அல்பா ஓமேகா வெனுஞ்
சொக்கா திமூல வஸ்தேக தேவ
சுயம்பா யிருந்த ஒளிவு
மிக்கா யுரைத்த கவிவேத நாய
கன்பாடு மேலாம் பொருள்
மைக்கா டறுத்த குருவேசு நாதர்
வரவேணும் என்றன் அகமே

ஜெபமாலை 10 வரை செய்யுள் 111

Table of contents

previous page start next page