1. ஞானா விணாடரதி காராப ராபரனின்
நாவே பிராண நதியே
கானா வாதானகலி லேயாவின் ஆதிபதி
காணாத ஆட தடியேன்
மீனாவி லேவிழுகும் யோனாவின் மேலருள்செய்
வேதா என்ஊழி வினைதீர்
வானாதி தேவகுரு வேயோச னாமனுடர்
வாழ்வே மகத்துவ பரனே
2. வீடே தெழிற்கொள்பல வாழ்வே தினச்சலுகை
வீறே தெனக்கு னையலால்
ஈடே தெனக்கிருபை யாலேவளர்த்தி விடில்
ஏகா உனைப்ப ணியனோ
காடே நடக்கமி சறாவே லருக்குவளர்
கானா வளித்த கரனே
மாடே கிடக்கும்வையின் மேலே படுக்குமனு
வாழ்வே மகத்துவ பரனே
வையின் = புல்லின்
3. நீதான் எனின்சலுகை நீதானென் இன்பநலம்
நீதான் எனின்ச கலமே
பேய்தா னெழுந்துமிக வேசீ றி யுங்கறுவு
பேர்தா னும்இங்கென செய்வார்
தீதான் வளைந்தபொழு தேமூவர் பங்கிலுறை
தேவே யடர்ந்தெ னிடம்வா
வாய்தான் மலர்ந்துமறை நேரேவி ளம்பியமெய்
வாழ்வே மகத்துவ பரனே
4. ஒப்பே தும்அற்றபர மப்போச னத்தையுண
ஒத்தாசை யுற்ற வுறவே
தப்பாத சத்தியமறை முப்போதும் வர்த்தனைசெய்
தற்சோதி யுற்ற மயமே
இப்போது நற்சமயம் இப்போதெ னக்கருள்செய்
இப்போ தெனக்குத வுவாய்
மப்பால் வெறித்தநொவை மிக்காய் வணக்கமிடும்
வஸ்தே மகத்துவ பரமே
மப்பு = மயக்கம்
5. ஒட்டா திடும்பரகம் விட்டோய் வதுங்கடினம்
ஒத்தே நடந்து கதியே
கட்டாக நின்றுபெற ஒப்பார்கள் வம்பரவர்
கற்றாலும் நன்று கருதார்
கெட்டோ னெனுஞ்சுதனை முச்சூடும் அன்புபுரி
கெட்டோர் களின்கி ருபையே
கட்டாய் நெருங்கென்வினை பட்டோட வந்தருள்செய்
வஸ்தே மகத்துவ பரனே
6. எந்தாய் தகப்பனுயிர் தந்தா தரித்தவரு
ளின்றே வசத்திய குருவே
பந்தான் மனக்கவலை மிஞ்சாதி ரக்கமொடு
பண்பாய் நடத்தி யெனையே
உந்தா மரைச்சரணம் அங்கேயி ருத்திமிக
வுங்காத லித்துநி லையாய்
வந்தா ளுனக்கபையம் அந்தாதி கத்தனருள்
மைந்தா மகத்துவ பரனே
7. ஒன்றோ அடர்ந்தவினை ஒன்றோ நெருங்குதுயர்
ஒன்றோ எனின் கவலைதான்
என்றோ துலைந்துவிழும் என்றோ வுனின்கழல்கள்
என்றோ பணிந்து மகிழ்வேன்
அன்றாயர் நன்றயிர்க ளும்பால் கொணர்ந்துபதம்
அன்பாய் வணங்கும் அரசே
மன்றாட அம்பரன்முன் நின்றாள் அனந்தனருள்
மைந்தா மகத்துவ பரனே
8. ஐயா உனக்குமக வையா உனக்கடிமை
ஐயா உனைப் பரவலே
செய்யா திருக்கிலுல கெல்லா மெதிர்க்கும்அருள்
செல்லா திடுக்க னிடுமே
கையே குவித்தனெனை மெய்யா யுருக்கமிடு
கல்லோ உனக்கு மனது
மையார் குழற்கொண்மரி நல்லாய் வளர்க்கவளர்
வல்லாய் மகத்துவ பரனே
பரவல் = வணங்கல்; குழல் = பெண் மயிர்
9. எல்லாம் வனைந்துலகம் எல்லா நிறைந்திதையம்
எல்லாம் உணர்ந்த இறைவர்
பொல்லாத சிந்தனைகள் பொல்லாத நிந்தையுள
பொல்லாத வஞ்சன் எளியேன்
அல்லான் மயங்குபொழு தல்லா வுனின்சரணம்
அல்லா தியங்க வசமோ
வல்லாய் பு ரந்தருள வல்லாய் மிகுங்கிருபை
வல்லாய் மகத்துவ பரனே
10. உன்னா லெனக்குவளம் உன்னா லெனக்குநலம்
உன்னா லெனக்குறுதி யாம்
என்னா லுனக்குறுவ தென்னோபொன் னுக்குதவி
என்னாம் அ தைப்புனை வரான்
முன்னோ ரு ரைத்தபடி நன்னா வ லர்க்குள்வரு
முன்னோன் அ ளித்த பரனே
மன்னா ப ரத்தின்வளர் மன்னா கி றிஸ்தெமது
மன்னா மகத்துவ பரனே
11. நிலையாத மாகொடிய அநியாய வாழ்வதனை
நிசமாக நாடி நிதமே
துலையாத பாவவழி தனிலோடி வாடியுடல்
சுடுதீயில் வீழ்வ தியல்போ
கலையாது நேரடிகள் தவறாது பாடிவரு
கவிவேத நாய கனையே
மலையாது சீவனது பெறநீடு வாய்கருணை
மலையே மகத்துவ பரனே
ஜெபமாலை 11 வரை செய்யுள் 122