அசனச் ஜெபம்
2 அடி
மனுடசீவத் தயாபரனே
வளமாயெமையு மற்றவெல்லாச்
சீவன்களையும் வகுத்தருளி
மாறாத்தயவாய்ப் பராமரித்தே
இனிதாய் நடத்தி வரும்பரம
எந்தாயெமக்கு நல்லீவா
யிங்கணிரங்கி யுவந்தளித்த
இப்போசனத்தா லெங்களுட
தனுலின் சடலஞ் சுகமடைந்து
சால்புற்றோங்கிப் பெலன்கொளவே
தயவா யதையாசீர்வதித்துச்
ஸ்வாமி யேசுக்கிறிஸ்துவுக்குட்
கனமாய் வளைந்த பரமநன்மை
களினாலெமதாற்றும்மதையுங்
களிக்கத் திருத்தி யாக்கியருள்
கருணை வேதத் தொருமுதலே
அசனத்தின் பின் ஜெபம்
2 அடி
அளவுக்கடங்காத் தயாபரனே
அடியோஞ் சனித்த திற்றைவரை
அநேகவித நன்றுகளை யெமக்
களித்த தயைக்கு மிப்போதெம்
உளமே மகிழத்திருத்தி செய்த
உதவியதற்குந் துதியுமக்கே
யுவந்திங்கடியாரார் தினபோ
சனத்தாலெம்பால் உண்டாகும்
வளமைப் பெலன்கள் அனைத்தையு முன்
மகிமைப் பணிக்கென்றனுபவிக்க
வாகாய்ப் பரிசுத்தருபிக்கொண்டு
மகிழ்ந்தொத்தாசை யெமக்களித்து
நளமாயினியும் எங்கடனை
நயந்து தயவாற் பராமரித்தெந்
நாளு மேசுக்கிறிஸ்துவுக்குள்
நடத்தியருளும் ஒருமுதலே
ஆர்தல் = உண்டல்
காலைச் செபம்
4 அடி
எந்தன்பரம தாதாவே
என்னைப்போன ராத்திரியில்
எழுஞ்சே தமும்விக் கினமுமின்றி
இரங்கிக் காத்த நின்கிருபைக்
கேசுக் கிறிஸ்தி ரட்சகரென்
இறைவர் திருநா மத்திலுமை
இஸ்தோத் திரஞ்செய் கின்றேன்யான்
இற்றைப் பகலா திந்தமெனைச்
சிந்தைச் சகல பவங்களுக்குந்
தீங்குகளுக்குந் தற்காத்துச்
சிறியனினைவு சொன்னடக்கை
தேவரீருக் கேற்கவுமென்
செயலையெனதூ ழியத்தைமுற்றுந்
திடவுண்மையினாற் சுறுசுறுப்பாய்ச்
செய்துமுடிக்க வுங்கிருபை
செய்யுமெனதாத் துமஞ்சடலஞ்
சொந்தமெனுமற் றுளதனைத்துந்
துய்யகிறிஸ்து வச்சபையுந்
தொடர்ந்தே யதுவர்த் திப்பதற்காஞ்
சுவிசே டத்தின் கிரியையையுஞ்
சூட்டியுனது திருக்கரத்திற்
றொகுத்தொப் புவிக்கின் றேன்பணிந்து
சூதாய கமும் புறமுமெனைச்
சூழ்ந்த பலசத் துருக்களுட
தந்திர மிகுஞ்சோ தனையதனில்
தமியே னகப்பட் டழியாமற்
றாங்கி யுனதட் சயவான
சம்மன சைக்கொண் டெனைக்காத்துச்
சதாநித் தியசீ வனின்பாதை
தன்னிலுமதா வியைக்கொண்டெனைத்
தயவாய் நடத்தி அருள்புரியுஞ்
சத்திய வேதத் தொருமுதலே
இராச் ஜெபம்
3 அடி
எனது பரம ஐயாவே
என்னைச் சேதம் விக்கினமும்
இல்லா தின்று முழுவதுங்காத்
தியற்று தயைக்கே சுக்கிறிஸ்தென்
னிரட்சகரினா மத்திலுமை
இஸ்தோத் திரஞ்செய் கின்றேன்யான்
வனமா யான்செய் பவமனைத்து
மைந்த னேசுக் கிறிஸ்துவுக்காய்
மறுத்துப் பொறுப்பா யெனதாத்துமம்
வாய்ந்த சடல மற்றவையும்
வளமைக் கிறிஸ்த வச்சபையும்
வருத்திப் பாகுங் கிரியையையுந்
தனதா யுமக்குக் கையளித்தேன்
றயவா யெனையிவ் விரவினிலே
சதிசெய் யெனதுட் சத்துருக்கள்
சகல புறச்சத் துருக்களுக்குந்
தற்காத் துமது தூதர்களைச்
சனுவாயெனக்குக் காவல்வைத்துக்
கனிவ துறநன் னித்திரையைக்
கற்பித் தருளிச் சுகத்தோடே
கடவு ளுமக்குத் துதியாகக்
காலை யதிலென் றனைநீயே
கடாட்சித் தெழுப்பி விட்டருளுங்
கடந்த வேதத் தொருமுதலே
சனு = உதவி
ஆராதனைக் காரம்பம்
2 அடி
கிறிஸ்து மான சகோதரரே
கேண்மோ கருத்த ருடசெபத்தின்
கிரக மெனுமிஸ் தலமிதிலே
கிருபை பெறயாங் கூடிவந்து
திறத்திங் கிருப்ப தானாமித்
திவ்விய தலத்துக் கேறாத
தீய குணங்கள் மேலெழுச்சி
சேர வனைத்தும் விலக்கிவிட்டுக்
குறித்து மனத்தைப் பரவசமாய்க்
கொண்டே காந்த மனதோடே
குழைந்தா வியினும் உண்மையினுங்
கூர்ந்து திருவா சனப்படியே
மறத்த லகற்றி ஒருமனதாய்
வாஞ்சித் தரிய பணிவோடே
மாறாக் கிருபைப் பராபரனை
வணங்கி வணங்கித் துதிப்போமே
ஆராதனைமுன் ஜெபம்
5 அடி
சருவா நன்மை சுபாவதயா
பரராயிருக்குந் தற்பரனே
தமியார்மீத திவிசேட
தயைகூர்ந் துமத்த தியாயபிர
சங்கத் தாலக் கியானவிரு
டன்னிலி ருந்தெங் களையுமது
சத்திய வெளிச்சத் துட்புகுதச்
சாற்றி யழைத்து மெஞ்ஞானஸ்
நான வரத்தா லுமதுதிருச்
சபைக்குட் சேர்த்துக் கொண்டுமது
நிறையின் வசனந் தனையெமக்கு
நிகழ்த்தும் பரிசா ரகராலே
நீடி யெமையெம் மீட்பினுக்கே
நேரின ழைக்கு நின்கிருபை
நெடிய தொனியை அடிக்கடியாங்
கேட்க விடஞ்செய் கின்றனையே
நித்தா விவைகள் அனைத்தையுநீ
நேசித் தெமக்கா யிலவசமாய்
நிருபித் தருள்கின் றாயதனால்
நின்வி சேட சகாயமிதைத்
திறமாய் நாங்கள் மகாபெரிய
திரவிய மெனச் சிந்தைகொண்டு
தேவா வுமது விலைமதியாத்
திருவாய் மொழியைக் கருத்துவைத்துச்
சிந்தை யுறக்கேட் டுட்கொளவுஞ்
சிறியோர்க் கதனால் எழுப்புதலுந்
திரணற் பலனும் உண்டாகத்
தினமு மெமக்குக் கிருபைசெய்வாய்
திடமெய்ப் பரனா நின்னையுநீ
சித்த மிரங்கி யனுப்பினஎம்
இறைவ னேசுக் கிறிஸ்துவையும்
எண்ணத் தறியும் உயிரறிவ
தெங்க ளிடத்தில் உண்டாகி
ஈடாய்ப் பெலன்செய் யவுமதனால்
எழுநித் தியசீ வனைநாங்கள்
இயன்று விழிப்பாய்த் தேடவுநூல்
இசைக்குங் குருமார் தமக்குமவை
கேட்குஞ் சபையாம் எங்களுக்கும்
இன்றே பரிசுத் தருபியைக்கொண்
டிரக்கம் புரியும் ஒருமுதலே
ஆராதனைப்பின் ஜெபம்
4 அடி
எங்கள் பிரதா னாரியருஞ்
சருவ லோக மீட்பருமா
யிருக்கு மேசுக் கிறிஸ்திறையே
இரட்சிப் பெமக்காய் விரித்துரைத்த
எழிலுச் சிதஞா யங்கடனை
இப்போ நாங்கள் கேட்டறிந்தோம்
எனினு மதைக்கேட் கிறவணமே
இயன்று செயும்பே ராயடியார்
தங்கிப் பரம சீவனிற்போஞ்
சாரிக் கதனைக் கைவிளக்காய்த்
தாவிப் பிடித்துச் சுடரொளிவின்
றனைய ரெனவெஞ் சீவனுறுஞ்
சகல நாளு நேரோடே
தரித்து நடந்து வருவதற்குத்
தயவா யெமக்குப் புத்தியையுஞ்
சத்தியந் தனையுந் தந்தருளுன்
றுங்க வசனத் திறத்தால்யாஞ்
சூழ்ந்தெம் பேரில் வருந்துரிதஞ்
சோதனை யிலும் பின்வாங்காத்
துணிவாய் நின்று நாளடவிற்
றொகுப்பீ டேற்றத் தறிவினிலுந்
தோன்றும் விசுவா சத்தினிலுந்
தொடர்ந்தே யுமையும் பிறர்களையுந்
துறுவிப் புரியும் அன்பினிலு
மங்காப் பொறைநம் பிக்கையினு
மன்னா வுமக்குப் பிரியமுள
மற்றுஞ் சகல கிரியையினு
மரணம் வரைவர்த் திப்பதற்கும்
வான நாட்டுக் காளாயாம்
வரவும் பரிசுத் தருபிகொண்டு
வளமா யெமக்குத் துணையருளு
மட்டி லாத ஒருமுதலே
துறுவல் = தேடல்
பள்ளிக்கூடத்தாதிச் ஜெபம்
4 அடி
சகல ஞானத் தறிவினுக்குந்
தனிக்கா ரணமெய்ப் பராபரனே
சற்று மறிவொன் றில்லாத
தனைய ரெமையிப் பள்ளியினிற்
றரிக்க நிறுத்தி நின்மேன்மைச்
சத்திய மறையைக் கொண்டுமையுந்
தமியா ரெமையும் அறியவுமோட்
சத்துக் கடுத்த ஞாயமெல்லாம்
பகுத்தா ராய்ந்து படிக்கவுநீ
பரிவா யெமக்கு நற்சமயம்
பணித்த பெரிய உபகாரப்
பட்சந் தனக்கிஸ் தோத்திரமே
பால ரெமக்குண் டாயிருக்கும்
பழுது விளையாட் டுத்தனமேன்
பாரக் கோடசதி சோம்பல்பினும்
பலதுற் குணங்க ளையுநீக்கி
மிகவே யடியார் படிப்புகளில்
வினாவுங் கருத்துஞ் சுறுசுறுப்பும்
விழிப்பு முடைத்தோ ராயிருக்க
மேலாந் தெளிந்த புத்தியையும்
வீரந் தனையுந் தந்தருள்வாய்
மீண்டு மடியார் உம்மையுமெம்
மீட்ப ரேசுக் கிறிஸ்துவையு
மேவி யறியும் அறிவினிலும்
புகலு மெமக்கு மற்றவர்க்கும்
பிரயோ சனமாம் படிப்பினிலும்
பூரித் துமக்கும் அயலார்க்கும்
போர்ந்த பணிசெய் சமர்த்தர்களாய்ப்
போகும் படிக்கும் அரூபியினாற்
புகலொத் தாசை யெமக்கருளிப்
பொதுவா யெமக்கு நின்னாசீர்
வாதம் புரியும் ஒருமுதலே
பள்ளிக்கூடத்தந்தச்ஜெபம்
4 அடி
அளவுக் கடங்காத் தயவுடைத்த
அரிய பரம தாதாவே
அடியா ருயிர்க்கும் உடற்குநல
மான படிப்பு களைப்படிப்பித்
தருளி னதற்குத் துதியுமக்குண்
டாக யாங்கேட் டுணர்ந்திருக்கும்
அறிவு களைச்சற் றயராதெம்
மதிஞா பகத்தும் இருதயத்தும்
வளமாய்ப் பதனப் படுத்துவுமவ்
வாறே பயபத் தியிற்செலவும்
வலிய துணைசெய் தருளுமிந்தப்
பள்ளிக் கூடத் துன்றயவால்
வறியோ ரெமக்கித் தனையாக
வருநன் மைகள்யா வையுமுனது
மகத்துவ நாமந் துதிபெறவும்
மைந்த ரெமக்கு நலமுறவும்
எளியா ரனுப விக்கநன்றி
யறியு மிதயம் எமக்கருள்வா
யித்தா திந்த நன்மைகளை
எல்லா மடைந்த நாங்களினி
இடும்பாய் நன்றிக் கேடர்களா
யிராம லுமக்கன் புறுமகரும்
எங்க ளுபகா ரிகட்குமகிழ்
வெய்தும் பெயரு மற்றவர்கட்
குளமாய் நன்மா திரிகாண்பிப்
போர்க ளெனவு மொழுகவெமக்
குமது பரிசுத் தருபியைக்கொண்
டொத்தா சைகள்செய் திதற்கான
உரிய வரங்கள் கட்டளையிட்
டுதவு மரிய செபங்கடெரிந்
தொலியாய் வேத நாயகன்பா
வோதும் வேதத் தொருமுதலே
மகர் = பிள்ளைகள்
2. கா. ஜெபமாலை 7 வரை செய்யுள் 98