2. காண்டம்
1. ஒருவழியான் ஒருமறையான்
ஒருகாவில் ஒருதருமேல் ஒருபாம்பைச்சேர்
ஒருகனியால் வந்தபவந் தீர்க்கவொரு
கனிவயிற் றூடுதித் தோரூரில்
ஒருகுடிலில் ஒருநாளிற் பிறந்துயர்ந்தோர்
குருசேறி உயிரொன்றீந்த
ஒருவனையென் னுயிரளவும்
ஒருபோது மறக்காம லோதுவேனே
யோவ. 14:6; எபே. 4:5; ஆதி. 2:8; 2:9; 3:4; 3:6;
லூக். 1:31; 2:5; 2:7; யோவா.19:17,18,19,30.
2. இருநாள் வான்விரிவமைத்
திரண்டுமனு டரைச்செய்திரு மரத்தைநாட்டி
இருபேரைக் கொண்டிஸ ரேலின்சிறைமீட்
டிருவேற் பாடிரு பங்காக்கி
இருஞானத் திரவியந்தந் திருசுவா
பங்களேற் றிருவர்பானின்
றிருமறியிலேறி யெருசலையில்வந்தான்
இருபத்தை இறைஞ்சுவேனே
ஆதி. 1:6-8; 1:27; 2:9; யாத். 4:21; எபி. 9:15,16,17; ரோ. 1:1; 1தீமோ. 2:5.
3. மூன்றுதினத் துலகமைத்து
மூவராய் ஆபிரகாமுன் றிற்றோன்றி
மூன்றுநாள் தாய்தகப்பன் றேடவிட்டு
மூன்றுதர முழங்கானின்று
மூன்றுமுறை மறுத்திவனை
மூன்றுமுறை வழுத்திமூன் றாநாளுய்த்து
மூன்றுமொன்ற தானதிரியேகனை
முத்தமிழினால் மொழிகுவேனே
முத்தமிழ் = இயல், இசை, நாடகம்.
இயல் = இயல்பாயிருக்கிற தமிழ்
இசை = பாடலாயிருக்கிற தமிழ்
நாடகம் = கூத்து
ஆதி. 1:9-13; 18:1,2; லூக். 2:46,48; மத். 26:44; யோவா. 21:15-17
லூக். 24:21; 1 யோவா 5:7
4. நாலுதினத் திரவிமதி யுடுக்களையந்
தரத்திறுத்தி நதிநான்காக்கி
நாலுவிதாக் கிளைகளிட்டு
நாலுவினைமாற்றி நாற்சீவன்போற்ற
நாலுநாள் மரித்தலா சருவையுய்த்த
நாலுசுவி சேடத்தானை
நாலுதிசை எங்கணும்போம்
நாலுநிலச் சாதிகட்கும் நவிலுவேனே
நாலுநிலம் = வழி நிலம், கன்னிலம், முண்ணிலம், நன்னிலம்.
ஆதி.1:16-18; 2:10-14; எசே. 14:21; வெளி. 4:6-8; யோவா.11:39; மத். 13: 4-8.
5. ஐந்துதினநீந்து பிராணிகள் பறவை
களைப்பிறப்பித் தைந்தப்பத்தால்
ஐந்துவிசை ஆயிரத்தாரைப் போஷித்
தைந்துசிட்டா தரவுஞ்சொல்லி
ஐந்துமண்டபக் குளத்தான் றிமிர்நீக்கி
ஐந்துபொஸ் தகத்தான்சொன்ன
ஐந்தடையாளத்தானை ஐம்புலனாற்
சிந்தையினால் அருச்சிப்பேனே
ஆதி.1:20; யோவா. 6:10-12; லூக். 12:6; யோவா. 5:29
6. ஆறுதினம் விலங்குகளூர் வனவுகண்
மானிடரை வகுத்தறுகாலஞ்செய்
தாறுநாள் வேலைசெயக் கட்டளையிட்
டாறடைக் கலத்தூரேற்றி
ஆறுகற்சாடிச் சலத்தை ரசமாக்கி
ஆறாந்தா சறையுண்டோனை
ஆறுசெட்டைக் கெருபீன்கள்
அறுநான்கு மூப்பருடன் அறிவிப்பேனே
அறுகாலஞ்செய் = கார்காலம்: ஆவணி, புரட்டாசி; கூதிர்காலம்:ஐப்பசி,கார்த்திகை; முன்பனிக்காலம்: மார்கழி,தை; பின்பனிக்காலம்: மாசு,பங்குனி; இளவேனிற்காலம்: சித்திரை,வைகாசி; முதுவேனிற்காலம்: ஆனி, ஆடி என்ற ஆறு பருவகாலங்களை ஒழுங்குபடுத்தி.
ஆதி.1:24-27; யாத். 20:9;எண். 35:11-15; யோவா. 2:6-10; 19:14; வெளி. 4:7,8
ஏசா. 6:2, 3; வெளி. 4:4,10,11.
7. எழுதினஞ் சாபதுநாள்
ஏழுபழி காயீனுக்கென்றுந் தீர்ப்பிட்
டேழுசபைத் தூதனுக்கும்
ஏழுநிருபங்க ளுரைத்தேழ் மன்றாட்டிட்
டேழுபிசாசைத் துரத்தி
ஏழுபத்து மூப்பர்கள் சீடரை ஸ்தாபித்தே
ஏழெக்காளந் தொனிக்கும்
ஏழ்வசனக் குருசானை ஏற்றுவேனே
ஏழ்வசனக் குருசானை = சிலுவையில் அறையுண்டிருந்து ஏழு வார்த்தைகளைச் சொன்னவனை: அவையாவன 1. பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறதின்னதென்று அறியாதிருக்கிறார்களே. 2 இன்றைக்கு நீ என்னுடனே பரதீசிலே இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 3. ஸ்திரியே அதோ உன் மகன் சீஷனே அதோ உன் தாய். 4. என் தேவனே என் தேவனே ஏன் நீர் என்னைக் கைவிட்டீர். 5. நான் தாகமாயிருக்கிறேன். 6. முடிந்தது. 7.பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.
யாத். 20:10,11; ஆதி. 4:15; வெளி.1:11; மத். 6:9-13; மாற் 16:9; எண். 11:16-25; லூக் 10:1; வெளி. 11:15; லூக். 23:34; 23:43; யோவா. 19:26,27. மத். 27:46;யோவா. 19:28; 19:30; லூக். 23:46.
8. எட்டு நரரைப் பேழையிற்காத்து
விருத்தசேதனம் நாளெட்டென்
றெட்டு வயதில் யோசியாவரசாய்
நோவை பிரசங்கியெட்டாய்
எட்டளவை தோமையர்க்குக்
காட்சிதரும் எட்டிலக்கணத்தே யோவா
எட்டு வருடத்தனேயா
வின்றிமிரைத் தீர்த்தவனை இறைஞ்சுவேனே
எட்டிலக்கணத்தே யோவா = அளவில்லா ஞானம், அளவில்லாக் காட்சி, அளவில்லா வீரியம், அளவில்லா இன்பம், நாமவின்மை, கோத்திரவின்மை, ஆயுளின்மை, தீவினையின்மை யென்ற எட்டுக் குணமுள்ள ஏயோவா வென்ற நாமத்தானை
ஆதி. 7:13; 17:12; 2 இரா. 22:1; 2 பேதுரு 2:5; யோவா. 20:26,27; அப். 9: 32-34.
9. ஒன்பது மானிட முழக்கட்டிலி னோகைச்
சங்கரித் தொன்பது சீதேக்கியா
ஒன்பதொசையா வாண்டில்
யூதரிஸரேல் சிறையொன்பது நன்றோரார்
ஒன்பது நூறிருப்புரதன் அறமலடிக்
கொன்பது பத்தாண்டிற் கண்பார்த்
தொன்பது தாசினிலுயிர் விட்டிறந்துலகைப்
புரந்தானை உரைசெய்வேனே
உபா. 3:11; 2 இரா. 25:1,2; 2 இரா 17:1; லூக். 17:17,18;
நியா. 4:13-21; ஆதி.18:11,12; லூக். 23:44- 46
10. பத்து நீதியருமிலா நகரெரித்துப்
பத்துக் கோத்திரம் வேறாக்கிப்
பத்துதாலந்தானைப் பரிசளித்துப்
பத்திலைங்கன்னியர் பத்தாவாய்ப்
பத்திலொன்றை லேவி சுதந்தரமாக்கிப்
பத்துக்கற்பனை யுந்தந்த
பத்துலட்சணத்தனைப் பத்துத்தசநூ
லான பாட்டாற் பாடுவேனே
பத்துலட்சணத்தனை, அவையாவன: 1. ஆதியந்தமில்லாதவர் 2. மாறாதவர், 3. சருவத்துக்கும் வல்லவர் 4. எல்லாத்தையும் அறிந்திருக்கிறவர் 5. அளவற்ற ஞானமுள்ளவர் 6. எங்கும் நிறைந்திருக்கிறவர் 7. சத்தியமுள்ளவர், 8. பரிசுத்தமுள்ளவர் 9. நீதியுள்ளவர் 10. நன்மையும் கிருபையுமுள்ளவர்
பத்துத் தச நூலான பாட்டாற் பாடுவேனே. தசம், பத்து = பத்துத்தசம். நூறு வசனமும் பாடலுஞ் சிறிதும் பெரிதுமாய் நூறுநூல் மட்டுஞ் செய்த வேதநாயகசாஸ்திரியின் பாட்டினால் அவரைப்பாடுவேனென்க
ஆதி.19:24,25; 1 இரா. 11:30,31; 12:20; மத். 25:14-28; 25:1; எண் 18:21,28; யாத். 20:1-17
11. பதினொரு தாரகை பணிந்த சொற்பனத்தான்
காதேசு பர்னேயாவில்
பதினொரு நாட்பயண மொரேப்புத்தெலிலாள்
வெள்ளி பதினொருநூறாகும்
பதினொரு சால்மோனாண்டாலய முடிக்கப்
பதினொரு தாசினிலுஞ் சென்று
பதினோரப் போஸ்தலர் காணக்காட்சி தந்த
திருவடியைப் பணிகுவேனே
ஆதி. 37:9; உபா. 1:1; நியா. 16:5; 1 இரா. 6:37,38; மத். 20:6,7; 28:16
12. பன்னிரு கற்றூண்களை யோர்
தானடுவிற் கில்காலிற் பனிரண்டிட்டு
பன்னிரு சீவிய விருட்சக்கனி யெருச
லேம் வாசல் பனிரெண்டாக்கிப்
பன்னிரப்போஸ்தலர் பனிரண்
டாசனத்தில் வீற்றிருந்து பகரஞாயம்
பன்னிரு பிதாக்கடொழும் வெல்லையென்பா
னெல்லையன்பாப் பாடுவேனே
வெல்லையன் = பெத்தலேகேமிற் பிறந்தவர்; பால் = இடம்; நெல்லையன் = திருநெல்வேலியிற் பிறந்தவன் பாப்பாடுவேனே
யோசு. 3:15-17; 4:5,20; வெளி. 22:1,2; 21:13; மத்.19:28; ஆதி.29:32-35; 30:12,14; 35:16-18
2. கா. ஜெப. 1- க்கு செய்யுள் 12