ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

3. ஜெபமாலை

கிருத்தியம்

1. ஆதி யானஅச ரீரி மாகிருபை
யாக வானொடுல காவுமே
ஆறு நாளதனில் ஆடி நேர்மையுடன்
ஆத மேவையிரு பேரையே
தீதி லாதநர ராக வேசெய்தொரு
சீவ காவினிடை மேவவே
சீரி னாலுவர நீடி மேன்மைபுரி
தேவ னார்தயவெ ணாமலே
பேத மானகனி யார் திவாதுறுபி
சாசி னாலழியு நேரமே
பேற தோதியபி ரானின் வாய்மைபிச
காது நீடுபிணை யாளியாய்
ஏத மாறமறை கூறு மூவுலகி
டேற மானிடவ தாரமோ
டேக ஞானமண வாள னாகவரு
மேசு நாயகசு வாமியே

2. உலையி லேகொடிய துரித மேகொடென
துடலு மாவியுமோ ருருவமா
யுரிய தாயுமெனை அருளி னாளுதிர
உளையி லேஜனன உதயமா
யலையி லேசுழலு திரண மாகநிலை
யதுமி லாதுமிகு புலையனா
யவனி யானஅட வியினி லேயுழல
அரிவை மார்களிடும் அழகிலே
வலையி லேயிருக ணயலி லேவதன
மதியி லேசுருளு புயலிலே
வனநி தானவிரு மலையி லேயகலின்
மடுவி லேவிழவும் வசமதோ
இலையி லேதொறுவு கலையை மாறிமுனம்
இருவர் பூணவுரி இடுவனே
ஏக ஞானமண வாளனாக வரு
மேசு நாயகசு வாமியே

உரி = தோல் அங்கி

3. ஞான முற்றவறி வாகரர்க்கு நிகர்
நானெ னப்பெருமை பேசும்வீண்
நாய்க ளுக்கும்விலை மாதருக்கு மிக
நாண மற்றுறவ தாடியே
கான முற்றநரி போல டுத்தவர்கள்
காரி யத்தைவெளி யாகவே
காச லைப்பிரிய ராயு ரைத்துவரு
காமி கட்குமெனை ஆளுவாய்
வான முற்றவதி தூதர் மெத்த
மத மாகியக்கிரம மீறியே
வாது பற்றிநிலை மாறி நிற்க
வலு வானவுக்கிரமிகு கோபமாய்
ஈன முற்றநர கூட மிழ்த்தி
யிக லாலழித்தஎரி நீதனே
ஏக ஞானமண வாள னாகவரு
மேசு நாயகசு வாமியே

4. முடிம லர்க்கமழ்து குழல்வி ரித்திளைஞர்
முழுகொ லைக்கிருபொன் மலையதாய்
முலையெ டுத்தயிலின் விழிமி ரட்டிமதி
முகமி னுக்கிமுர ணிடுகவே
துடிது டித்துவரு குடிகெ டிக்கியர்கள்
சுகம தற்குமுழு மனதையே
சுழல விட்டுநெறி தவறு துற்குணர்க
டொடர்பை நற்றிமதி கெடுவனோ
படியினிற் குசலமரியி னிற்கு கன
ரசமு மிக்கபர வெளியிலே
பரவு சத்தமுகில் பெருச லத்திரள்கள்
பலது மொக்கஒரு குவியலா
யிடியி டிக்கமின லதுமு ழக்கமுனி
னுலக ழிக்கவிடும் இறைவனே
ஏக ஞானமண வாள னாகவரு
மேசு நாயகசு வாமியே

அயில் = வேல்; படி= பூமி; அரி = மலை

5. பற்றி லாதஅறி வற்ற பேயருட
பட்ச நாடியுற விட்டுமே
பத்தி யோடுபுகழ் மெத்த வோதிலவர்
பக்க மேயருள்பி றக்குமோ
கற்ற பேரிடம்அ டுத்த மாதவர்க
ருத்தின் வேலையதி யற்றியே
கற்பி னோடெனது சொற்ப நாளது
கடத்த நேருடன டத்துவாய்
சுற்று மாமதில்உ யர்த்த காமமுறு
துட்டர் சூழுநக ரத்தையே
சுத்த நாசமிட உக்கிர கோபமொடு
சொற்க வானிடைசு டர்களே
இற்று மாகொடுமு ரற்ற லாலழன
மிட்டு நீறிடஎ ரித்தவா
ஏக ஞானமண வாளனாக வரு
மேசு நாயகசு வாமியே

6. பத்தி முத்தியுடன் மெத்த வெற்றியிது
பக்கு வச்சமையம் அப்பனே
பத்தை யெட்டையொரு மித்தெ னக்குதவு
பட்சம் வைத்ததும றப்பையோ
சித்த மித்தனைதி டத்தி லுற்றது
திருக்கெ னச்சொல்லிந கைத்துமே
செப்பும் வித்தைபல கற்ற லப்பிய
திருட்டு மட்டைகள்பி ரட்டிலாள்
சத்தி யத்தின்வழி யுற்ற வர்க்குமிகு
சத்து ருத்தனமி யற்றியே
சட்டை யற்றுநெறி கெட்டு பத்திரமிகு
சக்கி ரிக்குரைவ ழுத்தியே
இத்த ரைக்குளொரு பத்த னர்த்தம்வர
விட்டெ கித்தரைஅ ழித்தவா
ஏக ஞானமண வாளனாக வரு
மேசு நாயகசு வாமியே

சக்கிரி = அரசன்

7. மக்கள் வந்தொருபு றத்தி னின்றழ
மலைத்து மங்கையர்த வித்துமே
மைக்க ருங்குழல்வி ரித்த லர்ந்துவத
னத்த றைந்தலறி நிற்கவே
ஒக்கலும் புறரு மிக்க பண்டிதரும்
உற்ற டர்ந்தொருநெ ருக்கமா
யுச்சி தங்களிட மற்றி னங்களுமு
ரத்த ழுங்குரல்மு ழக்கவே
கக்கி டங்களொடு புக்கி னின்றவுயிர்
கட்ட விழ்ந்தொருக்ஷ ணத்திலே
கஸ்தி தந்தகல விட்டெ ழும்பொழுது
கட்டை யிந்தவுட லுக்குமே
இக்கு வந்ததென அப்பு றஞ்செல
எடுக்கு முன்படிமை யைக்கையாள்
ஏக ஞானமண வாள னாகவரு
மேசு நாயகசு வாமியே

8. காசம் வந்துபல நோய டர்ந்திருகை
காலி ரண்டதும்எ ழாமலே
காத டைந்துவிழி தானி ருண்டுமதி
காடு றைந்துகலை சோரவே
மோசம் வந்ததென நேச மங்கையரை
மோக மைந்தரையு சாவியே
மூட மன்றியறி வாய்ந டந்துகொளு
வீர்க ளென்றுதுயர் மூழ்கியே
ஓசை கொண்டகடை வாய்தி றந்துயிர்பி
னோட வந்தவுற வோரெலாம்
ஓவி நின்றுமிக வேபு லம்புமொரு
நாள்வ ருங்கடைசி நேரமே
ஏச மிழ்ந்தியழி யாமல் வந்தடிமை
ஏழை யென்றுதயை கூறுவாய்
ஏக ஞானமண வாள னாகவரு
மேசு நாயகசு வாமியே

ஏசமிழ்ந்தி = குற்றத்தில் அமிழ்ந்தி

9. கலைம றந்துநினை வறிவ ழிந்துதலை
கடுக நொந்துபக லிரவுமே
கனவு கண்டுபய மிகுதி கொண்டிருக
ழலிநெ டுஞ்சரிவின் முடியவே
சலமங் கள்குழ குழென நின்றொழுகு
தரணம் வன்கடிகள் கறுவியே
சமரி டும்படரில் அணுகி வந்துனது
தயவு தந்தடிமை புரிமுனாள்
மலைபு கைந்தெரியும்அ னல்வ ளர்ந்துபரன்
மகிமை தங்கமின லிடியினால்
வனம திர்ந்துமுர சொலிமு ழங்கநெறி
மறைத ருங்கருணை வடிவனே
இலைம டந்தைகனி திருகி யுண்டபவம்
இழிய வென்றுசிறு மதலைபோல்
ஏக ஞானமண வாள னாகவரு
மேசு நாயகசு வாமியே

10. சிந்தை நொந்திருள்செ றிந்த கங்குல்வழி
சென்று தண்டலையில் வந்துநீ
செஞ்ச லஞ்சிதற வும்ப லன்படு
செபம்பு ரிந்தனைதி யங்கியே
வந்த வஞ்சகர்வ ளைந்த டங்களை
வனைந்து செங்கைகள்பி ணைந்துமே
வங்கை மிஞ்சுகுரு முன்பு சென்றுநட
மைந்த பொந்திமனன் அண்டைபோய்
நிந்தை தந்தவர கந்தை யின்கணிலை
கொண்டு தொண்டனைநி னைந்துமே
நெஞ்சி ரங்கவடு வைந்த டைந்துமர
நின்றி றந்துனுயிர் தந்தவா
எந்தை யுன்றனைஅ டைந்த னன்சரணி
ரங்கி யென்றனையு வந்திடாய்
ஏக ஞானமண வாள னாகவரு
மேசு நாயகசு வாமியே

11. தீதி னாலெரி பேய்கள் தூறுது
சீறி யேசுது லோகமே
சேர வேபகை யான நேசர்க
டேவ ரீர்துணை வேணுமே
வாதி னோடுபொல் லாத மாமிசம்
வாதை யாயெதி ராடியே
மாறு பாடுசெய் தேயெ நேரமும்
வாய்கொ ளாநசை கூறுதே
வேத நாயக வாண னானொரு
மேசி யாஅடி யானலோ
வேறு பாடுக டூர ராடுமி
வேளை நீசம ராடியே
ஏத மேகெடு பாத மேகொடு
ஈடு நீடென்முன் ஓடிவா
ஏக ஞானமண வாள னாகவரு
மேசு நாயகசு வாமியே

நசை = ஆசை; ஈடுநீடு = பிணையாய் வா

2. கா. ஜெபமாலை 3 வரை செய்யுள் 59

Table of contents

previous page start next page